Friday, February 12, 2010

WHAT AN IDEA SIRJI???!!!!

IDEA போன் நிறுவனத்தின் இந்த விளம்பரம் எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது.






உண்மையில் மரங்களை அழித்தால் நமக்கு நாமே அழிவுக்கு
பாதை வகுக்கிறோம் என்றுதான் அர்த்தம்.


மரங்கள் இல்லாவிட்டால் மனிதம் இல்லாமல் போகும். எந்த
ஒரு உயிரினமும் இல்லாமலே போய்விடும். அப்போது உலகம்
எங்கே?? பயமாக இருக்கிறது தானே?

மரங்களை வெட்டி வெட்டி மழையை தடுத்துவிட்டோம்.
பூமி வெப்பமாகிக்கொண்டிருக்கிறது. வாகங்களிலிருந்து
வெளியேறும் புகை மாசுயால் சுற்றுச்சூழல் மாசாகமல் தடுக்க
உதவும் மரங்கள் இல்லாததால் அசுத்த காற்றை சுவாசித்துக்
கொண்டிருக்கிறோம்.


மரங்களை வெட்டாமல் என்ன செய்ய முடியும் என்று நாமும்
யோசித்து பார்க்க வேண்டும்.

அந்த விளம்பரத்தில் சொல்லியிருப்பது
போல பேப்பர் இல்லாமல் மொபைல் போனை உபயோகப்படுத்தும்
நிலை வந்தால் மிக நன்றாக இருக்கும். பிள்ளைகள் பொதி சுமந்து பள்ளிக்குச்
செல்ல வேண்டாம். மீட்டிங்கிற்கு கைகளில் ஃபைல்கள் இல்லாமல்
மொபைல், சீடி, பென் ட்ரைவ் ஆகியவை போதும். ரோட்டில்
கசக்கி எறியப்படும் குப்பைகள் இல்லாமல் ஊரே அழகாகிவிடும்.
இப்படி எத்தனையோ கற்பனை செய்து பாருங்கள். (உங்க ஐடியாவையும்
பின்னூட்டமாக சொல்லலாம்)


முடிந்த வரை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை உபயோகிக்கலாம்.
நம்மால் ஆன உதவியாக பில்கள்,ஸ்டேட்மெண்ட்கள் போன்றவற்றை
மெயிலில் பெற்றுக்கொள்ளலாம். தேவையெனில் மட்டுமே
காகிதங்கள் உபயோகிக்கலாம்

வாருங்கள் மரத்தைக் காப்போம், மனித இனம் அழியாமல் காப்போம்.

13 comments:

நாஸியா said...

சகோதரி.. நானும் இந்த விளம்பரத்தை பத்தி எழுத நினைத்தேன்.. எனக்கு இது கொஞ்சம் இல்ல நிறையவே அபத்தமா தெரியுது..

இன்னொரு விளம்பரமும் டிவில வருது பார்த்தீங்களா? ரெண்டு குட்டி புள்ளைங்க வருங்காலத்துல என்னவா ஆகலாம்னு பேசுவாங்க.. அப்போ வருங்காலத்துல மரங்களே இருக்காது, அதனால விலங்குகள் இருக்காது போன்ற கருத்துக்களை சொல்லுவாங்க.. கடைசியில ஃபோன ரீசைக்கிள் பண்ணுன்னு சொல்வாங்க.. நோக்கியா கம்பெனி வெளியிட்டது அது..


காகிதம் பயன்படுத்த மரங்கள் அழிக்கப்படுவது உண்மை தான்.. ஆனா எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் சேரும் குப்பைகளை யோசிச்சு பாத்தீங்களா? இன்னும் பத்து வருஷம் இவங்க இப்படியே உற்பத்திய பெருக்கிட்டே போனா சேரும் பழைய சாதனங்கள என்ன செய்வாங்களாம்? அதுல இருந்து வெளிவரும் லீட் போன்ற பொருட்கள் எவ்வளவு கெடுதி?
ம‌ர‌த்தை வெட்ட‌க்கூடாதுன்னு சொல்வ‌து ச‌ரி, ஆனா அதுக்கு ஃபோன‌ தீர்வா சொல்வ‌து அப‌த்த்தின் உச்ச‌ம்.. இதுவும் அவ‌ங்க‌ளோட‌ வாக் அன்ட் டாக் மாதிரி ஒரு வீணாப்போன‌ ஐடியா தான்.. :)

நட்புடன் ஜமால் said...

இண்ட்ரெஸ்டிங் பகிர்தல் தகவலோடு

pudugaithendral said...

வாங்க நாஸியா,

வாக் அண்ட் டாக் மட்டுமல்ல ஐடியாவின் மற்ற எந்த ஐடியாக்களும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த மரம் ஏதாவது கண்டிப்பா செய்தே ஆகவேண்டிய மேட்டர்.

20 வருடமா மிக அதிக அளவில் ப்ளாஸ்டிக் பைகளை உபயோகிச்சு சுற்றுச்சூழலை நாசமாக்கிட்டு இப்ப எல்லோரு “க்ரீன் இண்டியா”ன்னு மஞ்ச பைய எடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.

மரம் வெட்டுவதை தவிர்க்கணும்னு சொல்லியிருப்பதைத்தான் நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கேன்.

நோக்கியாவோட அந்த விளம்பரம் வராட்டி போன்களை மறுசுழற்சி செய்யலாம் என்று பலருக்கும் தெரியாது.

pudugaithendral said...

அதுல இருந்து வெளிவரும் லீட் போன்ற பொருட்கள் எவ்வளவு கெடுதி?//

ஆமாம் நாஸியா ஒவ்வொரு நன்மையிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு தீய்மை இருக்கத்தான் செய்யுது.

கண்டிப்பா ஒருத் தீர்வு வரவேண்டிய நேரம் இது.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

ஹுஸைனம்மா said...

எல்லாத்துலயும் எதாவது ஒரு ஸைட் எஃபெக்ட் இருந்துகிட்டுத்தான் இருக்குது. என்ன செய்யன்னுதான் புரியல. முடிந்த வரை சுற்றுச்சூழல் & மரங்களைப் பாதுகாப்போம்.

Ananya Mahadevan said...

அருமையான பதிவு.. actually , என் வீட்டில் படிக்கும் குழந்தைகள் இல்லை. அதுனால பேப்பரே உபயோகப்படுத்தறதில்லே. கடைசியா நான் உப்யோகப்படுத்தின பேப்பர் - அவசரத்துக்கு ஏதோ ஒரு ஃபோன் நம்பரை ஒரு scribbling padல் குறித்து வைத்தேன். அப்புறம் என் ரெஸ்யூமே. இதான் நான் பார்த்தவை. எழுதும் பழக்கமும் அறவே இல்லை. ஏதோ NHM புண்ணியத்துல அழகழகா இருக்கு எழுத்து.ஹீ ஹீ

ஹுஸைனம்மா said...

அட, உங்க சை பார்ல என் பிளாக் மீண்டும் வந்துடுச்சே!! இனியாவது உங்களை என் பிளாக்லப் பார்க்க முடியுமா? ;-)

சாந்தி மாரியப்பன் said...

கரும்புச்சாறெடுத்தபின் வரும் சக்கையை bagasse என்று சொல்வார்கள். இதை உபயோகித்தும் பேப்பர் செய்யலாம்.செஞ்சுகிட்டிருக்காங்க. இந்தவகை புத்தகங்களை ecobuddy books என்று சொல்கிறார்கள். கரும்பு மாதிரியே பேப்பரும் இனிக்குதான்னு புள்ளைங்க தின்னாம இருக்கணும். :-)))

pudugaithendral said...

நன்றி ஹுசைனம்மா,

கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. அதான் அதிகமா நண்பர்கள் வீட்டுக்கு போகாம இருந்தேன். இனி கணிப்பா வருவேன்

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அநன்யா

pudugaithendral said...

ஓ நல்ல தககவல் நன்றி அமைதிச்சாரல்

சிநேகிதன் அக்பர் said...

நானும் அந்த விளம்பரம் பார்த்தேன். முடிந்த அளவு மரங்களை காப்பதுதான் நம் வருங்காலம் வளமாக வழிவகுக்கும்.