Tuesday, March 30, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 30/3/09

சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக்கை
திருமணம் செய்யப்போவதாகச் செய்தி. அடுத்த மாதம்
திருமணம் இருவரும் துபாயில் வாழப்போகிறார்களாம்.
மேட்டர் அது அல்ல. சோயப் ஏற்கனவே ஹைதையைச்
சேர்ந்த ஆயிஷா சித்திக் என்பவரை மணந்து ஏற்க
மறுத்துவிட்டாராம்.(இந்த பிரபலங்களே இப்படித்தான்
இரண்டாவது மனைவியாக ஏன் தான் சம்மதிக்கறார்களோ!)

சானியா திருமண அறிவிப்பை அவங்கப்பா சொன்னதும்
பத்திரிகை காரங்க, ஆயிஷாவின் குடும்பத்தினரிடம்
போய் கேள்வி கேட்டிருப்பாங்க போல. அதுக்கு
அந்தப் பொண்ணொட அப்பா,” அந்தாளு ஸ்ரீதேவி,
ஹேமமாலினி யாரை வேணாம் கல்யாணம் செஞ்சுகட்டும்”
அப்படின்னு கமெண்டிருக்காரு.

ஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் இப்போது
பெரிதாக நடிப்பதில்லை. இருவரும்
திருமணமாகி குழந்தைகளுக்குத் தாய் எனும் பொறுப்பில்
இருக்கும் போது என்னதான் தன் கோபத்தைக் காட்டுவதாக
இருந்தாலும் அவர்களை வம்பில் இழுக்காமல் பேசியிருக்கலாம்
மிஸ்டர். சித்திக். இது ரொம்ப தப்பு.

ஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் நடிகைகள் என்பதாலே
அவங்களைப் பத்தி இவரு கமெண்ட் அடிக்கலாமா??
நடிகைகள் என்ன பொது சொத்தா??

***************************************************ஒரு படம் பாக்கணும்னு ரொம்ப எதிர் பார்ப்போட
இருக்கேன். அது அல்லு அர்ஜுன்(சிரஞ்சீவியின் மச்சானின்
மகன்) நடிச்சிருக்கும் “வருடு”. அதாவது மணமகன்
என்று பெயர். பாட்டுக்கள் கேட்டுட்டேன் சூப்பர்.
அதுவும் “ஐது ரோஜ்ல பெல்லி” “தலம்பராலு”
சூப்பர்..

திருமணங்கள் 5 நாள் நடக்க வேண்டிய ஒரு
கொண்டாட்டம். அதை இப்ப 2 1/2 நாளுக்கு
சுருக்கிட்டாங்க. இந்தப்படம் தான் இப்ப ஹாட்
டாபிக் இங்க.மகதீரா பேசப்பட்ட மாதிரி இந்தப்படமும்
இருக்கும்னு நம்பறேன். ஏப்ரல் 2 திரைக்கு வருகிறது.

***********************************************

நேத்து சார்மினார் போயிட்டு வந்ததைப் பத்தி
பதிவு போட்டேன். ஓல்ட் சிட்டியில கலவரம்,
144 சட்டம் போட்டிருக்காங்கன்னு பேப்பர் பாத்து
டீவி9 சேனல் வெச்சேன். ஆத்தாடி!!!!!
சார்மினார் கடைகள் மூடப்பட்டு போலிஸும்
மக்களும் அங்குமிங்கு ஓடிகிட்டு இருந்தாங்க.
கலவர பூமியா இருந்துச்சு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்தக் கலவர பூமியில் 10ஆம் வகுப்பு
பொதுத் தேர்வு எழுதும் பள்ளிகளும்,
மாணவர்களும் இருக்காங்க. இந்த நேரத்துல
கலவரம் நடந்ததால் இன்னைக்கு நடக்க
இருந்த பரிட்சையை தள்ளி வெச்சிருக்காங்க.

**************************************
விவல் சோப் விளம்பரத்துல த்ரிஷாவோட
வரும் அந்தப்பொண்ணு (அதான் டல் திவ்யா)
நல்ல களையான முகம். சமீபத்துல இன்னொரு
டீவி விளம்பரத்துல கூட மாடர்னா வந்து
அசத்தது. யார் பெத்த பொண்ணோ... இல்ல
இல்ல எந்த மாநிலத்துப்பொண்ணோ வாழ்க
வளமுடன்.

அந்தப்பெண் பேரு விசாகாவாம்.

இங்க போனா விளம்பரத்தை பாக்கலாம்.
***********************************************
ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் 16 மாவட்டங்களை
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்னு
மத்திய அரசு அறிவிச்சு நிலமையை மேம்படுத்த
நிதி ஒதுக்கியிருக்காம்.

வறட்சி மாவட்டம் பாத்திருக்கோம்,
புயலால் அடிபட்ட மாவட்டம் பாத்திருக்கோம்,
வற்றாத வெள்ளத்தால் அழிந்த மாவட்டம்
பாத்திருக்கோம்.
நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாம்!!!
இங்க ஒண்ணு இல்ல இரண்டு இல்ல
16 மாவட்டங்களாம். ஊர்களின் பெயர்களைச்
சொல்றேன். அடிலாபாத், அனந்தபூர், கிழக்கு கோதாவரி,
குண்டூர், கரீம் நகர், கர்னூல், மேடக், மஹபூப் நகர்,
நல்கொண்டா, ப்ரகாசம், ஸ்ரீகாகுலம், விசாகப்பட்டினம்,
விஜயநகரம்,வராங்கல், நிஜாமாபாத் மற்றும் கம்மம்.

மிச்சம் எந்தெந்த மாவட்டம்னு இங்க போனா
பாக்கலாம்.


************************************************
அரசுத்தொட்டில் திட்டம் அப்படின்னு ஒண்ணு
1992ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகளின்
கதி? என்னன்னு மெசெஜ் ஒண்ணை பதிவர் நண்பர்.ஃபண்டூ
அனுப்பியிருந்தார். படிக்க படிக்க பயமாத்தான் இருக்கு.

முடிஞ்சா நீங்களும் படிச்சு பாருங்க.


25 comments:

Vidhoosh said...

நல்லா இருக்குங்க பிரியாணி.

தொட்டில் குழந்தைகள் :(

புதுகைத் தென்றல் said...

வாங்க வித்யா,

வருகைக்கு நன்றி

அநன்யா மஹாதேவன் said...

அந்த விஷாகா ஒரு தமிழ்ப்படத்துல கூட நடிச்சாங்க. பாவம் செம்ம பல்பு. சமீபமா சன் டைரக்டு ஹை டெஃபனிஷன் செட் டாப் பாக்ஸ் விளம்பரத்துலேயும் வர்ஜின் ஃபோன் (மாத்தி யோசி) விளம்பரத்துலேயும் பார்த்தேன்.

நல்ல வேளை நீங்க ஒரு நாள் முன்னாடி சார்மினார் போயிட்டு வந்துட்டீங்க. இந்த ஊர்ல எப்போ என்ன கலவரம் வெடிக்குமோ தெரியாது. சமீபமா சுஜாதாவின் கர்ஃப்யூ படிச்சப்போ இதே மாதிரி ஒரு பீதீ தான் எனக்கும்!

புதுகைத் தென்றல் said...

வாங்க அநன்யா,
சார்மினார் நான் 1 வாரத்துக்கு முன்னமே போனேன்.

வருகைக்கு நன்றி

வரதராஜலு .பூ said...

//அந்தக் குழந்தைகளின் கதி? என்னன்னு //

:(

ஹுஸைனம்மா said...

ஆமா, யாரா இருந்தாலும், டக்குன்னு வாயில வர்றது நடிக/கைகள் பேருதான்!!

ஷோயப் அந்தக் ’கல்யாணம்’ நடக்கவே இல்லைன்னு சொல்றார்போல!!

ஒரு விஷயம் நோட் பண்ணீங்களா, ஸ்ரீதேவி, ஹேமமாலினியும் கூட ரெண்டாவது மனைவியாப் போனவங்கதான்!!

இவ்வளவு பெரிசா நக்ஸலைட் பிரச்னையை வெச்சுகிட்டுத்தான், தெலுங்கானா பத்தி பேசிகிட்டு இருக்காங்களா, ஆச்சரியம்!!

அரசுத் தொட்டில்.. ம்.. நல்ல எண்ணத்தோட ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்டது!!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வரதராஜுலு

அக்பர் said...

நல்ல விசயங்கள். தொகுப்பு அருமை.

ஆயில்யன் said...

டல் திவ்யா பற்றிய தகவலுக்கு நன்னி :)

எம்.எம்.அப்துல்லா said...

//வராங்க, //

எங்க வராங்க? யாரு வராங்க??

:))

வித்யா said...

பிரியாணி நல்ல கலவை.

பிரபலமாய் இருப்பதற்கு கொடுக்கும் விலை..

Dr.P.Kandaswamy said...

//ஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் நடிகைகள் என்பதாலே
அவங்களைப் பத்தி இவரு கமெண்ட் அடிக்கலாமா??
நடிகைகள் என்ன பொது சொத்தா??//

நன்றாகக் கேட்டீர்கள். பொது வாழ்க்கையில் இருந்தால் இப்படிப்பட்ட அவதூறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

ர‌கு said...

ச்சே! இந்தியாவுல‌ ஒரு ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்க‌ல அவ‌ங்க‌ளுக்கு...? :(

புதுகைத் தென்றல் said...

வாங்க அக்பர்,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

டல் திவ்யா பற்றிய தகவலுக்கு நன்னி :)//

இப்படி ஏதும் மேட்டர் இருந்தாத்தான் பதிவு பக்கமே வர்றீங்க பாஸ்.

:)))

புதுகைத் தென்றல் said...

//வராங்க, //

எங்க வராங்க? யாரு வராங்க??

புரியலையே அப்துல்லா

புதுகைத் தென்றல் said...

ஆமாம் வித்யா
சில சமயம் பாவமா இருக்கு

புதுகைத் தென்றல் said...

பொது வாழ்க்கையில் இருந்தால் இப்படிப்பட்ட அவதூறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?//

அவங்களும் திரும்ப ஏதும் கேட்டு சண்டை போட்டாங்கன்னா அப்பத் தெரியும். வருகைக்கு நன்றி ஐயா

புதுகைத் தென்றல் said...

இந்தியாவுல‌ ஒரு ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்க‌ல அவ‌ங்க‌ளுக்கு...? :(//

அதானே. சின்ன வயசுப் ப்ரெண்டை நிச்சயம் செஞ்சு ஜனவரிலதான் அதை ரத்து செஞ்சாங்க.

பாச மலர் said...

சானியா விவகாரம்..கேள்விப்பட்டப்போ...
அய்யோன்னு இருந்துச்சு..

ஹுஸைனம்மா said...

//புரியலையே அப்துல்லா//

அவரு உங்க பதிவை ஒரு வார்த்தை விடாம படிக்கிறாராமா,அதச் சொல்றார். புரிஞ்சிக்க முடியலையே உங்களுக்கு?

மாவட்டங்கள் பேர்களில் ‘வாரங்கல்’ என்பதை ‘வராங்க’ன்னு டைப்பிருக்கீங்க, அதான்.

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

இப்பக்கூட இந்த கூத்து எத்தனை நாளைக்கோன்ன்னு தோணுது.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஓ புரிஞ்சிச்சு ஹுசைனம்மா மாத்திட்டேன்.

தாங்க்ஸ்

எம்.எம்.அப்துல்லா said...

//அவரு உங்க பதிவை ஒரு வார்த்தை விடாம படிக்கிறாராமா,அதச் சொல்றார். புரிஞ்சிக்க முடியலையே உங்களுக்கு?

//

:))

புதுகைத் தென்றல் said...

ஒரு முக்கியமான செய்தி வருடு படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகிடிச்சு. அதைவிட முக்கியமான விஷயம் நம்ம் ஆர்யா இந்தப்படத்துல வில்லனா நடிச்சிருக்காரு.