50 வயது நெருங்கும் முன்னரே பல பெண்கள் ஏதோ
தள்ளாத முதுமை வந்துவிட்டது போல இருப்பார்கள்.
ஆனால் 61 வயதில் நாட்டியமாடும் இந்த அய்யங்கார்
வீட்டு அழகுப் பெண்மணி தான் நான் வியக்கும் பெண்மணி.
தனது மகள்களுடன் ஹேமா
DREAM GIRL ஹேமமாலினி தான் அது. இயக்குனர் ஸ்ரீதர்
அவர்களால் நிராகரிக்கப்பட்ட பெண் இவர். நட்சித்திரமாக
தெரியவில்லை என்று நிராகரிக்கப்பாட்டார் இன்று இந்தியா
முழுதும் கொண்டாடும் நடிகை.
நடிகை என்பதை விட சிறந்த பரத நாட்டியக்கலைஞர்
என்பது சிறப்பு. தற்பொது சினிமா தயாரிப்பாளரும் கூட.
ஷோலே ஹிந்தி படத்தில் வாய்மூடாமல் பேசும்
பசந்தி கேரக்டரில் கலக்கியிருப்பார். இந்தபடத்தை
யாரும் ரீமேக்கினால் மற்ற கேரக்டர்களுக்கு ஆள்
கிடைப்பார்கள். இந்தக் கேரக்டர் மட்டும் சான்சே இல்லை.
ஹிந்தி நடிகர் தர்மேந்திராவுடன் காதலாகி கசிந்துருகினாலும்
திருமணம் முடிக்க இருவர் தடை. ஒருவர் ஹேமாவின் தந்தை
சக்கரவர்த்தி. மற்றொருவர் தர்மேந்திராவின் மனைவி
ப்ரகாஷ் கவுர். (சன்னி தியோல், பாபி தியோல் இருவரும்
ப்ராகாஷ்-கவுர் தர்மேந்திராவின் பிள்ளைகள்)
ஒரு பஞ்சாபிக்காரருடன் தன் மகள் திருமணம் புரிவதை
ஒத்துக்கொள்ளவில்லை ஹேமாவின் தந்தை. அவரின்
மறைவுக்குப் பிறகு ப்ரகாஷ் கவுர் விவாகரத்து செய்ய
மறுத்ததால் முஸ்லீமாக மதம் மாறி இருவரும் திருமணம்
செய்து கொண்டார்கள்.
இஷா, அஹானா என இரு பெண்குழந்தைகள். இருவரும்
தற்போது ஹேமாவுடம் சேர்ந்து நடன நிகழ்ச்சிகள்
வழங்குகிறார்கள். இஷா சில படங்களில் நடித்து இருக்கிறார்.
சக நடிகர்கள் ஜித்தேந்திரா(பல பெண்களை அழவைக்கும்
பாலாஜி டெலிவிஷன்ஸ் உரிமையாளரின் தந்தை), சஞ்சீவ்
கபூர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தும்
தர்மேந்திராவை மணந்தார்.
சஹேலி எனும் ஹிந்தி பத்திரிகையின் ஆசிரியர் ஹேமாதான்.
இந்தப் பெண்ணிடம் இத்தனை திறமைகள் எப்படித்தான்
கொட்டிக்கிடக்கிறதோ!!
சமீபத்தில் GOOD HOUSEKEEPING இவரது பேட்டி வந்திருந்தது.
இவருக்கு 61 வயது என்று சொன்ன பொழுது மகள் நம்பவில்லை.
இந்த வயதில் நாட்டியம் ஆடுகிறார் என்றது கூடுதல்
ஆச்சரியம் அவளுக்கு.
பார்த்தால் சத்தியமாகத் தெரியவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு இப்போது சில ஹிந்திப்
படங்களில் நடித்திருக்கிறார். அமிதாப்ஜீ தான் ஜோடி.
ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது திரையில்.
இவரின் சமீபத்திய படத்தில் எனக்குப் பிடித்தது
baagban.
பாரதீய ஜனதா பார்ட்டியின் எம் பீ இவர். தனது திரைப்பட
வேலை, புத்தக வேலை, நாட்டிய வேலைகளுக்கு இடையே
பிசியான அரசியல்வாதியாகவும் தன் பொறுப்பை செய்து
வருகிறார். எத்தனையோ பரதம் ஆடும் பெண்கள் இந்த
வயதில் கிழடு தட்டிப்போய் இருக்க, இவர் இன்றும்
இளமையாக இருக்கிறார்.
பெண்கள் தனக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டுகொண்டு
அதை மேம்படுத்தி தன் உடல் நலனில் அக்கறை உடையவளாக
இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் எனபதற்கு
நம்ம தங்கத் தமிழ் நாட்டில் பிறந்து அகில இந்திய அளவில்
பிரசித்தமாக இருக்கும் ஹேமமாலினி ஒரு உதாராணம்.
7 comments:
mic testing
good post.!
baagbaan எனக்கும் பிடித்தமான படம். அமித்ஜி கலக்கியிருப்பார்.
வருகைக்கு நன்றி ஜீவன்
ஆமாம் அமைதிச்சாரல்,
அதுவும் கணவ - மனைவி இருவரின் பிரிவின் போது அருமையான நடிப்பு
வருகைக்கு நன்றி
உண்மைதான்.நான் வியக்கும் பெண்மணி இவர்.கூடவே ஸ்ரீதேவியையும் சொல்லலாம்.
ஆமாம் ஸாதிகா,
ஸ்ரீதேவி ஒல்லியா இருக்காங்க. ஆனா முகம் கொஞ்சம் முதிர்ச்சியா இருக்கு. ஆனாலும் அதே அசத்தல் அழகுதான்
வருகைக்கு நன்றி
Post a Comment