பழைய பாணியை திரும்ப கொண்டுவருவதுதான் இப்ப ட்ரெண்ட்.
ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த பீரியட் ட்ரெண்ட் இப்ப பல படங்களில்
பார்க்கலாம்.
அதுவும் சுப்பிரமணியபுரத்தில் கல் வைத்த டாலர் செயின்,
பெல்ஸ் என அந்த காலத்தை அப்படியே காட்டியிருப்பாங்க.
ஸ்பீக்கர் வெச்சு கட்டின ஆட்டோ, சினிமா விளம்பரம்னு
அப்ப இருந்த வாழ்க்கையை திரும்ப பாத்த மாதிரி இருக்கும்.
அப்போதைய சூப்பர்ஹிட் படங்களை இப்போதைய ட்ரெண்டுக்கு
தகுந்த மாதிரி மாடர்னா ரீமேக்கும் செஞ்சு அசத்தறாங்க.
சூப்பர்ஹிட் பாடல்கள் ரீமிஸாகி வருது.
இந்த நிலமை இங்கே மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் 70,80ல்
இருந்த ஹேர்ஸ்டைல், ட்ரெஸ் ஸ்டைல் எல்லாம் திரும்ப
கொண்டு வர்றாங்கன்னு படிச்சேன்.
பாலிவுட்டிலும் அங்கங்க இந்த பீரியட் சமாச்சாரங்கள்
வருது. பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும்.
இதைப்பத்தி நினைக்கும் பொழுது அப்போதைய
பாடல்காட்சிகள்!!! பிரம்மாண்ட செட்டுகள் போட்ட
பாடல்கள். அதிலும் டீ.ஆரின் பாடல் செட்டுக்கள்.
அருமையா இருக்கும். அரசியல் தான் அவருக்குத்
தெரியவில்லையே தவிர அருமையான கலைஞன்
அவர் என்பது என் எண்ணம்.
வாசமில்லா மலரிது இப்பவும் எல்லோருக்கும் பிடிக்கும்.
“இது குழந்தை பாடும் தாலாட்டு” என்னமா இருக்கும்
வரிகள். ஹேட்ஸ் ஆப்ஃ டு யூ டீ ஆர்.
கண்ணே கலைமானேன்னு ஒரு படம்.(சந்திரசேகர்
ப்ரொடெக்ஷன்ஸ்) ரகுமான் - அமலா ஜோடி.
அமலா டைப்பிஸ்ட் என்பதால் டைப்ரேட்டர் மாதிரி
வடிவமைச்சு பாட்டு இருக்கும்.
பிராம்மாண்ட செட் போட்டு பாடல்கள் எடுப்பதிலேர்ந்து
வித்யாசமா வெளிநாட்டுக்கு போய் படம்பிடிச்சாங்க.
அநேகமாக எல்லாநாடும் படம் பிடிச்சு முடிஞ்சு
போரடிச்சு திரும்ப செட் போடும் நாள் தூரத்துல
இல்லைன்னு நினைக்கிறேன்.
பட்டியாலா சுடிதார் அப்போ பானுமதிம்மா
போட்டு ஆடினதுதான். இப்ப பட்டியாலாதான்
பேமஸ். குட்டைகை, நீட்டகைன்னு ஜாக்கெட்
மாடல்கள் பதினைந்து வருஷத்துக்கு ஒருதரம்
ட்ரெண்டா மறுபடி வருது.
இந்தப் பதிவு என்னைப்போல அந்த பிரம்மாண்ட
செட்கள் உள்ள பாடல்களை ரசிப்பவர்களுக்குள்
ஒரு கொசுவத்தி சுத்தத்தான்.
திங்கள் கிழமை வரவேண்டிய பர்சனாலிட்டி
பதிவுகள் நாளைமுதல் கண்டிப்பா வரும்.
14 comments:
me the firstu!!!
நல்ல கொசுவத்தி. டீ ஆரின் மிக மெமரபிள் சாங் நளினி ஆடும் இந்திர லோகத்து சுந்தரி! நிறைய ஆடி இருக்கிறோம்! நல்ல செட்டிங்ஸ் என்பதாக நினைவு. குலதெய்வத்தின் பாடல்கள் போட்டமைக்கு நன்றி!
anbu thenral, kalaimagalil unga pathivu paRRi vanthirukke:)
vaazththukal ma.
நீங்க தான் பர்ஷ்டு அநன்யா
வருகைக்கு நன்றி
நன்றி வல்லிம்மா,
உங்களுடன் இனைந்து வந்திருக்கிறேனாமே, உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நல்ல திரும்பி பார்த்தல்
//அநேகமாக எல்லாநாடும் படம் பிடிச்சு முடிஞ்சு
போரடிச்சு திரும்ப செட் போடும் நாள் தூரத்துல
இல்லைன்னு நினைக்கிறேன்.
//
கண்டிப்பா நடக்கும் மேடம்...
கலைமகள் பதிவுக்கு வாழ்த்துக்கள்!
தென்றல் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கலைமகளில் உங்கள் வலை பதிவு பற்றி வந்துள்ளது அதைப் படித்தேன் ,நன்றி ராமலக்ஷ்மிக்கு.
கொசுவத்திஅருமை.
புதுகைத் தென்றல் உங்கள் வலைப் பூ பற்றி கலைமகளில் போட்டிருக்கிறார்கள். பார்த்தவுடன் சந்தோஷமாகிவிட்டது. வாழ்த்துக்கள்.
நிறைய கொசுவத்தியை சுத்த வச்சிட்டீங்க கலா
அருமையான பதிவு! பாராட்டுக்கள்! பழைய இனிமை மீண்டும் திரும்பினால் நல்லதே!
அப்புறம், "ஒருதலை ராகம்," படத்தில் வரும் அந்தப் பாட்டின் பல்லவி "இது குழந்தை பாடும் தாலாட்டு" அல்லவோ? காதலில் தோல்வியுற்ற கறுந்தாடிவேந்தர்களின் தேசிய கீதமாயிற்றே அந்தப் பாடல்? :-))
வருகைக்கு நன்றி வசந்த்
நன்றி அருணா
நன்றி கோமதி அரசு
நன்றி ஜெயந்தி
நான் இன்னும் புத்தம் பார்க்கவில்லை. ஹைதையில் சொல்லிவைத்தால் தான் கிடைக்கும்.
ஆமாம் தேனம்மை
கண்டிப்பா ஒரு இனிய நினைவுகளுக்கு போய் வந்திருப்பீங்கல்ல
"இது குழந்தை பாடும் தாலாட்டு" //
ஆமாம் தம்பி,
மறந்துட்டேன். மாத்திடறேன். நன்றி
Post a Comment