Monday, March 22, 2010

எல்லாத்தையும் இவங்க செய்யறாங்க, பேரு மட்டும் பெண்ணுக்கு :(

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே,
குடும்பத்தின் சந்தோஷம் இருப்பது பெண்ணின்
கைலதான் அப்படி இப்படின்னு காலம் காலமாய்ச்
சொல்லிகிட்டு வர்றாங்க. ஆனா நடைமுறையில் பாத்தா
வேற மாதிரி இருக்கும்.

(இதை ஏதோ பெண்ணீயப் பதிவுன்னு நினைச்சா
மேலே படிக்க வேணாம். என்னோட பதிவுகளில்
கணவன் - மனைவி ஒற்றுமை ரொம்ப முக்கியம்னு
சொல்லிகிட்டே இருப்பேன். அதுதான் நல்ல
சூழ்நிலையை குழந்தைக்குத் தரும்.)

சரி மேட்டருக்கு வருவோம். செய்வதெல்லாம்
ஆண்கள். ஆனா பழி விழுவது பெண்ணின் மேல்.

குமுதம் சிநேகிதியில் நம்ம டாக்டர்.ஷாலினி
(உளவியலாளர்) ஆண்களை ஹேண்டில் செய்வது
எப்படின்னு தொடர் எழுதறாங்க. அவங்க தன்னோட
வலைப்பூவிலும் அதை பதிவிடறாங்க.

சமீபத்திய பதிவு பத்தித்தான் என்னுடைய இந்தப்
பதிவு.


”அவன் அப்பா பொறுப்பானவராய் இருந்து, தன் மனைவி மக்களை சரியாக பராமறித்து, தன் முதுமைக்குள், ”அப்பாடா, இதை நான் சாதித்தேன், இதனால் என் ஜென்மம் சாபல்யமாகிவிட்டது, இனிமேல் மரணத்தை நான் வரவேற்கிறேன்,” என்கிற மனநிறைவை அடைந்தவராக இருந்தால், அவர் மகனின் திருமணம் நிம்மதியாக இருக்கும். இப்படி ஒரு அப்பா சாதித்து, தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்று வையுங்களேன், அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும், குறிப்பாய் அந்த வீட்டுக்கு வாழ்க்கை படும் பெண்ணிற்கு.”

இது டாக்டர் ஷாலினி சொல்லியிருப்பது. மிக சத்தியமான
வார்த்தைகள். தன் சொந்தங்கள், பந்தங்கள் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு கணவனை மட்டும் நம்பி கணவன் வீட்டுக்கு
அடிஎடுத்து வைக்கும் மனைவிக்கு கணவனின் அன்பும்,
அரவணைப்பும் மிக முக்கியம். அதுதான் அவளை பாதுகாப்பாக
வைக்கிறது. மாரல் சப்போர்ட் என்பார்களே அதுதான் இங்கே
அத்தியாவசியத்தேவை.


தனது கணவனை மிகச் சிறிய வயதில் இழந்த தாய்க்கு
3 குழந்தைகள். இதில் 1 ஆண், 2 பெண். ஷாலினி
சொல்லியிருப்பது போல தன் வாழ்வீன் ஜீவாதாரமாக
மகனை நம்பி அவன் மீது பாசத்தை பொழிந்து
தன் மீதும் கண்மூடித்தனமான பாசத்தை வைக்கும்
அளவுக்கு வளர்த்திருந்தாள் தாய். அந்த ஆண்மகன்
வளர்ந்து திருமணமாகி இரண்டு குழந்தைக்குத்
தகப்பன் ஆனபிறகும் தாய்க்கு மகனாக மட்டுமே
இருந்தான்.(அப்படித்தான் இருக்க வேண்டும் என
அந்தத் தாயும் விரும்பினால்) அந்தத்தாயின்
கட்டுப்பாட்டால் நல்ல கணவனாகவோ,
தகப்பானகவோ தன் பங்கைச் செய்யாமலேயே
விட்டுவிட்ட கொடுமை கண்ணாறக் கண்ட நிஜம்.


இதற்குக் காரணம் கணவனை இழந்து தனிமரமாக
நிற்கிறோமே, தன்னைக் காக்க யாரும் இல்லையே
என்று, தன் மகனை தன்பக்கமே வைத்துக்கொள்ளப்
பார்த்து இன்னொரு பெண்ணின் வாழ்வையும்
நாசமாக்கியதுமட்டுமல்லாமல் பேரக்குழந்தைகளுக்கு
தந்தையின் பாசம் கிடைக்க விடாமல் செய்ததுதான்
கொடுமை. உனக்கு என்ன வேணுமோ நான்
செய்கிறேன்! உங்கப்பாவை தொந்தரவு படுத்தாதே!
என்று சொல்லும் அளவுக்கு மகன் மீது உரிமை
நாட்டிக்கொண்டிருந்தாள்.

திருமணமாகி 30 வருடங்கள் கழித்து தாய் இறந்த
பொழுது மனைவியும், பிள்ளைகளும் அவ்வளவாக
ஒட்டாமல் தனி மரமாகிப்போனதும் கொடுமை.

இவ்வளவுக்கும் காரணம் அந்தப் பெண்ணிற்கு
கணவன் இல்லாததது. அவன் தரும் அரவணைப்பு
கிடைக்காமல் போய் தன் எதிர்காலத்திற்காக
மகனை பகடைக்காய் ஆக்கிவிட்டாள். இது
பல இடங்களில் நடக்கும் நிகழ்வு.

இப்படி பாதிக்கப்பட்ட மருமகள் தன்
மகனை சார்ந்து , அவள் மருமகள்
தன் மகனைச் சார்ந்து என இந்தச் சங்கிலி
தொடரும். எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள்!!!

கணவன் இறந்துவிட்டால் ஒண்ணும் செய்ய
இயலாது. இருந்தும் இல்லாதது போல் இருப்பது
மஹா கொடுமை. சுகி சிவம் அவர்கள் மங்கையர் மலரில்
பெண்கள் பற்றி ஒரு தொடர் எழுதினார். அதில்
ஒரு ஆண் இரண்டு பெண்களை மணந்து குடும்பம்
நடத்தினாலும் அந்த இரண்டு குடும்பங்களையும்
நடத்துவது அந்த பெண்கள்தான் என்று.

ஆண் துணையில்லாமல் குடும்பத்தை தனியே
நிர்வகிக்கும் திறமை பெண்களுக்கு இருப்பதாலேயே
கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம்
கிடையாது. ஆனால் அந்த நிலையில் பெண் படும்
உளவியல் ரீதியான பிரச்சனைகள் கோடானு
கோடி.



தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
பேசுவோம் வாங்க. ஒரு ஆண் தன் மனைவியை
நல்லபடியா பாத்துக்கொண்டாலே பிரச்சனை
தீர்ந்தது. அப்பாவின் ஹஸ்பெண்டிங் திறமை
மிக முக்கியமென இந்த உளவியலார் சொல்கிறார்.

எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்.
எங்கம்மாவுக்கு பிடிச்சாமாதிரி நடந்துக்க!
என் தங்கசிக்கு நல்ல அண்ணியா இரு!
இப்படித்தான் எதிர் பார்க்கிறார்களேத் தவிர
அந்த பெண்ணிற்கும் தன்னிடம் எதிர் பார்ப்பு
இருக்கும். அதை பூர்த்தி செய்ய வேண்டியது
நம் கடமை என ஏன் புரிந்து கொள்ள மாட்டார்கள்???


கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிக்
கூட சண்டையிடலாம்! என்பார்கள்.
மனைவியை நல்ல படியாக வைத்து
காப்பாற்றும் திராணி இருந்தால் திருமணம்
செய்துகொள்ளலாம். இல்லையேல் சந்நியாசமே
மேல். ஒரு பெண்ணின் இல்லையில்லை
இரண்டு பெண்களின் வாழ்வாவது
நாசமாகாமல் இருக்கும். ஏன் இவ்வளவு கோபம் என்று
பார்க்கிறீர்களா! சில சபிக்கப்பட்ட பெண்
ஜென்மங்களைப் பார்த்ததால், அவர்கள்
அனுபவித்த கொடுமைகளைக் கண்ணாறக்
கண்டு, தெரிந்து கொண்ட கொடுமையால்
இதை எழுதுகிறேன்.

தன் காலில் நின்று சம்பாதிக்கும் பெண்ணானாலும்
நல்ல கணவன் வாய்க்காவிட்டால் அவள் வாழ்வு நரகம் தான்.
இந்தக் கொடுமைக்கு அந்தப் பெண் திருமணம் செய்து
கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். பணத்தட்டுப்பாட்டை
விட கொடுமையானது அன்புத் தட்டுப்பாடு.

தாயன்பு யாரும் கொடுக்கலாம். அண்ணன்,தம்பி
உறவுக்கூட நல்ல புரிதல் இருந்தால் உடன் பிறக்காதவர்களிடமிருந்தும்
கூட இந்தப் பாசம் கிடைத்துவிடும். பெற்றால்தான் குழந்தையில்லை,
தத்தெடுத்தும் வளர்க்கலாம். ஆனால் கணவன்
தரவேண்டிய பாசத்தை, அன்பை, புரிதலை வேறு
யாரும் தந்து விட முடியாதுதானே.

தனக்கான அன்பு கிடைக்காத ஆண்மகண் வேறு இடம் நாடலாம்.
ஆனால் அந்தப் பெண்!!!!?????? கணவன் தரவேண்டிய
அன்பு கிடைக்கவில்லை என்று வெளியிடத்தில் பெறமுடியுமா???
அப்படிபெறச்சென்றால் அவளுக்கு சமூகம் வைக்கும்
பெயர் தான் என்ன???? அப்படிப்பட்ட பெண்ணை
ஆண்கள் பார்க்கும் பார்வையின் விதம்!!!!!

ஆகவே திருமணம் செய்யும் முன் தன் மனைவியை
நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் எனும் திடமான
எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே திருமணம் செய்து
அழகான இனிய இல்லத்தை உருவாக்குங்கள்.

பெண்ணின் வாழ்வு கெடுவது மட்டுமல்ல, அடுத்த
தலைமுறையினருக்கு கிடைக்க வேண்டிய அன்பும்
அரவணைப்பும் சரியாக கிடைக்காமல் தன் சுயநலத்திற்காக
குழந்தையின் மீது தாய் அதீத அன்புக்காட்டி அவனது
நலத்தை குலைக்கும் சம்பவம்தான் நடக்கும்.

23 comments:

settaikkaran said...

என்னை மாதிரி கட்டை பிரம்மச்சாரிகளாக இருப்பதே நிம்மதி!

டாக்டர் ஷாலினி போன்றவர்களின் பதிவுகளைப் படித்தால், திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு, அவர்களைப் பற்றி மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் குறித்தும் கவலைப்பட வேண்டிய ஒரு எதிர்மறையான அல்லது அதிமுன்ஜாக்கிரதையானஅணுகுமுறையே ஏற்படுகிறது என்பது எனது கருத்து.

pudugaithendral said...

வாங்க சேட்டைத்தம்பி,

அவரது தொடரை நான் அதிகம் படிப்பதில்லை. ஆனால் இந்தப் பதிவில் இருக்கும் நிஜம் நான் நேரில் கண்டது. என் தோழிகளிடம் கேட்டது. என்பதால் எழுதினேன்.

Jaleela Kamal said...

புதுகை தென்றல் சரியாக எழுதி இருக்கீங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சரியா சொன்னிங்க புதுகை. இநத மாதிரி கதைகள் இப்போ நெறைய கேக்கறோம். மாறனும், இல்லேன்னா நீங்க சொன்னாப்ல அது பல தலைமுறைகளை பாதிக்கும்

pudugaithendral said...

நன்றி ஜலீலா

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அப்பாவி தங்கமணி

Anonymous said...

//”அவன் அப்பா பொறுப்பானவராய் இருந்து, தன் மனைவி மக்களை சரியாக பராமறித்து, தன் முதுமைக்குள், ”அப்பாடா, இதை நான் சாதித்தேன், இதனால் என் ஜென்மம் சாபல்யமாகிவிட்டது, இனிமேல் மரணத்தை நான் வரவேற்கிறேன்,” என்கிற மனநிறைவை அடைந்தவராக இருந்தால், அவர் மகனின் திருமணம் நிம்மதியாக இருக்கும். இப்படி ஒரு அப்பா சாதித்து, தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்று வையுங்களேன், அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும், குறிப்பாய் அந்த வீட்டுக்கு வாழ்க்கை படும் பெண்ணிற்கு.”//
இத என்னால முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது .... இது ஒரு பெண்ணோட பார்வையில் இருந்து சொல்லப்பட்ட கருத்து...
Even i too saw the same kind of non-senses from both gent's side as well as girls side also...
புதுசா வர்ற பொண்ணு நல்லா இருந்தா ஓகே.... இல்லாட்டி அந்த குடும்பம் படுற திண்டாட்டம் ...அப்பாட சொல்லி மால முடியாது....இத பத்தி யாரும் சொல்லுறது கிடையாது....

//இதற்குக் காரணம் கணவனை இழந்து தனிமரமாக நிற்கிறோமே, தன்னைக் காக்க யாரும் இல்லையே என்று, தன் மகனை தன்பக்கமே வைத்துக்கொள்ளப் பார்த்து இன்னொரு பெண்ணின் வாழ்வையும் நாசமாக்கியதுமட்டுமல்லாமல் பேரக்குழந்தைகளுக்கு தந்தையின் பாசம் கிடைக்க விடாமல் செய்ததுதான்
கொடுமை. உனக்கு என்ன வேணுமோ நான் செய்கிறேன்! உங்கப்பாவை தொந்தரவு படுத்தாதே!
என்று சொல்லும் அளவுக்கு மகன் மீது உரிமை நாட்டிக்கொண்டிருந்தாள்.//
இந்த கருத்த கொஞ்சம் அந்த மகனோட பார்வையில் இருந்து பாருங்க.....இப்ப இவன் யாருக்கு சப்போர்ட் பண்ணுறது... அம்மாவுக்கும் சப்போர்ட்ட இருக்கணும்...அதே வேளையில் அவனோட wifekkum சப்போர்ட்ட இருக்கணும்...I am pretty sure, there will big fight between his mother and his wife... here both are women's.....just have a look...
//எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள். எங்கம்மாவுக்கு பிடிச்சாமாதிரி நடந்துக்க!..என் தங்கசிக்கு நல்ல அண்ணியா இரு!..இப்படித்தான் எதிர் பார்க்கிறார்களேத் தவிர அந்த பெண்ணிற்கும் தன்னிடம் எதிர் பார்ப்பு இருக்கும். அதை பூர்த்தி செய்ய வேண்டியது நம் கடமை என ஏன் புரிந்து கொள்ள மாட்டார்கள்??? ///

இந்த மொக்கையான கருத்த எத்தனை நாள் தான் சொல்லுவாங்களோ...எனக்கு தெரிந்த வரையில் நிறைய பேர் மாறிட்டாங்க...அப்படி மாறட்ட அந்த பொண்ணே இவன மத்திடிது.. வேற என்னத்த சொல்ல.....

//தன் காலில் நின்று சம்பாதிக்கும் பெண்ணானாலும் நல்ல கணவன் வாய்க்காவிட்டால் அவள் வாழ்வு நரகம் தான்.இந்தக் கொடுமைக்கு அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். பணத்தட்டுப்பாட்டை
விட கொடுமையானது அன்புத் தட்டுப்பாடு. //

இத நான் ஒத்துக்கிறேன்,....Even i lost my dearest sister due to the above which you told :(

//தனக்கான அன்பு கிடைக்காத ஆண்மகண் வேறு இடம் நாடலாம். ஆனால் அந்தப் பெண்!!!!?????? கணவன் தரவேண்டிய
அன்பு கிடைக்கவில்லை என்று வெளியிடத்தில் பெறமுடியுமா??? அப்படிபெறச்சென்றால் அவளுக்கு சமூகம் வைக்கும்
பெயர் தான் என்ன???? அப்படிப்பட்ட பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வையின் விதம்!!!!! //

அக்கா, நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க....இது எல்லாம் சகஜமா நடக்குது இப்ப.....

Moreover I want to say something about shalini's blogs....ஆண்களை handle செய்வது எப்படி....Gents are not devices or materials to handle...they are living their life in this big world.....அவங்க பதிவ கண்டிப்பா படிப்பேன்...படிச்சிட்டு எனக்கு ஒரே ஒரு நியாபகம் வரும்....
கமல் சார் படத்துல மாதவன் wifekku (sneha ) சிம்ரன் ஐடியா கொடுத்து இவங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் புட்டிகிரும்...... :)

எப்புடீ !!!

இராகவன் நைஜிரியா said...

சரியாக சொல்லியிருக்கின்றீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

// சேட்டைக்காரன் said...
என்னை மாதிரி கட்டை பிரம்மச்சாரிகளாக இருப்பதே நிம்மதி!

டாக்டர் ஷாலினி போன்றவர்களின் பதிவுகளைப் படித்தால், திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு, அவர்களைப் பற்றி மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் குறித்தும் கவலைப்பட வேண்டிய ஒரு எதிர்மறையான அல்லது அதிமுன்ஜாக்கிரதையானஅணுகுமுறையே ஏற்படுகிறது என்பது எனது கருத்து. //

இதுதான் நிம்மதி என்று எதுவுமே கிடையாது. சத்தம் இல்லாத இடத்தில் படுத்தால் சிலருக்கு தூக்கம் வரும். ரயில்வே லயனுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு, அந்த சப்தம் கேட்டால் தான் தூக்கம் வரும். எல்லாம் நம்முள் உள்ளது.

மேலும் டாக்டர் ஷாலினி அவர்கள் சொல்வதை கடைபிடிக்கச் சொல்லவில்லை. அவங்க ப்ரோஸ் அண்ட் காஸ் பற்றி, மனோ தத்துவ ரீதியில் விளக்குகின்றார்கள். நல்லதை, நமக்கு சரி என்று படுவதை எடுத்துக் கொண்டால், எல்லாம் சரியாக வரும்.

Ungalranga said...

இந்த விஷயத்தில் அந்த அம்மாவின் அதீத பாசமே பெரும் தடையாகி போனது கொடுமை.

அதே போல் மகன் இன்னும் விழித்துகொள்ளாமல், தாய்சொல் தட்டாத பிள்ளையாக இருப்பது பலருக்கும் அவதி தான்..!!

சரி செய்துகொள்ளவாரா?

Jayashree said...

இந்த மாதிரி அதீத ப்ரியம் மகன் / மகள்களுக்குமே கெடுதலாதான் முடியும்.அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சு தான்:((

Thenammai Lakshmanan said...

பாசத்துக்கு ஏங்கும் மனைவிகளைப் பற்றியும் நடுவில் குறிப்பிட்டது பார்த்து வருத்தமடைந்தேன் தென்றல்

pudugaithendral said...

புதுசா வர்ற பொண்ணு நல்லா இருந்தா ஓகே.... இல்லாட்டி அந்த குடும்பம் படுற திண்டாட்டம் ...அப்பாட சொல்லி மால முடியாது....இத பத்தி யாரும் சொல்லுறது கிடையாது....//

இதுவும் ரொம்ப காலமா ஆணோட அல்லது ஆண்மகனைச்சேர்ந்த குடும்பத்தினர் சொல்லும் டயலாக் தான். இப்படியும் நடக்குது, அப்படியும் நடக்குது என்பதுதான் உண்மை நல்லவன் கருப்பு

pudugaithendral said...

.இப்ப இவன் யாருக்கு சப்போர்ட் பண்ணுறது... அம்மாவுக்கும் சப்போர்ட்ட இருக்கணும்...அதே வேளையில் அவனோட wifekkum சப்போர்ட்ட இருக்கணும்...I am pretty sure, there will big fight between his mother and his wife... here both are women's.....just have a look...//

யாரோ சரியோ அவங்களுக்குதான் சப்போர்ட் செய்யணும். பயங்கர சண்டைகள் இருக்கும்.

இங்கதான் ஆண் தன் திங்கிங் கேப்பை போட்டுக்கொண்டு நிலமையை எப்படி சமாளிப்பதுன்னு தெரிஞ்சி புரிஞ்சு நடக்கணும். வாழ்க்கை எப்பவுமே ஒரே மாதிரி இருந்துவிடாது. எனக்கு பிரச்சனையே வரக்கூடாதுன்னு சொல்ல முடியாது பாருங்க.

pudugaithendral said...

இந்த மொக்கையான கருத்த எத்தனை நாள் தான் சொல்லுவாங்களோ...எனக்கு தெரிந்த வரையில் நிறைய பேர் மாறிட்டாங்க...அப்படி மாறட்ட அந்த பொண்ணே இவன மத்திடிது.. வேற என்னத்த சொல்ல.....//

தம்பி ஒரு விஷயம் புரிஞ்சிக்குங்க. நீங்க சொல்ற மாற்றங்கள் இப்போது இருபதுகளில் இருக்கும் பெண்களிடம் வேண்டுமானால் இருக்கலாம். 29 - 50 வயது பெண்கள் நான் சொல்லியிருக்கும் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

pudugaithendral said...

அக்கா, நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க....இது எல்லாம் சகஜமா நடக்குது இப்ப.....///

என் முந்தைய பின்னூட்டமே இதற்கும் பதிலாக.

pudugaithendral said...

.they are living their life in this big world...//

சேர்ந்து வாழும்பொழுது சில விட்டுக்கொடுப்புக்கள், அனுசரிப்புக்கள் இருவருக்கும் தேவை. அது இல்லாமல் பெரிய உலகத்தில் இருவரும் தனியாக சேர்ந்து வாழ்வது என்பது “தாமரை இலைமேல் நீர் போல்” தான்.

pudugaithendral said...

டாக்டர் ஷாலினியின் பதிவுகள் பெண் என்பதையும் தாண்டி ஒரு உளவியலாளராக பார்க்கப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

அவரின் ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி எனும் படைப்புக்கள் நான் அறிந்தவரையில் பெண்களை ஆண்களுக்கு புரிய வைக்கும் முயற்சி போல என்றே எனக்குத் தோன்றுகிறது.

pudugaithendral said...

சரி செய்துகொள்ளவாரா?//

வாங்கர் ரங்கன்,

பதிவில் சொல்லியிருக்கும் குடும்பத்தில் இனி வாய்ப்புக்கள் ரொம்ப கம்மி. தனது பிள்ளைகளுக்கு பாசத்தைக்காட்டாமலேயே வளர்த்தனால் பிள்ளைகள் ஒட்டாமலேயே வளர்ந்து சிறகு முளைத்து போய்விட்டார்கள். மனைவியோ உன் அம்மாதான் முக்கியம் என்று வாழ்ந்தாயே என்று ஒதுங்கியே இருக்கிறார்.

pudugaithendral said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராகவன்

pudugaithendral said...

ஆமாம் ஜெயஸ்ரீ,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நாம வருத்தப்படக்கூடிய பல சூழல்கள் நம்மைச் சுத்தி நிறைய்ய இருக்கு தேனம்மை. அதில் இது மிக முக்கியமான ஒன்று

வருகைக்கு நன்றி

Anonymous said...

காலம் மாறிவிட்டது என்று சொல்வது எவ்வளவு உண்மை என்று தெரியாது. நான் வசிப்பது மூன்று ஆண்களுடன். ஆஸ்ரேலியாவில் அப்படி வசிப்பதை ஏற்பவர்கள், நான் ஏதாவது இலங்கை பல்கலைக்கழகத்துக்குப் படிக்கப் போய் இருந்தால் அப்படி தங்குவதை எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. நான் விளக்க முற்பட்டாலும் காது இரண்டையும் இறுக்கமாக மூடிக்கொள்பவர்களே பலர். அப்படியே சிலர் கேட்டாலும் ஒரு காதால் கேட்டு மறு காதால் விடும் நிலமை.

ஏன் பலர் மற்றவர்கள் சொல்வதை காது குடுத்து கேட்கிறார்களில்லை? கொஞ்சம் கேட்டுத்தான் பார்ப்பது.

எனக்கென்னவோ எங்களில் இருந்தே மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆண் தான் மாறவேண்டும் என்று பெண்களும், பெண் என்றால் பேய் என்ற ரீதியில் ஆண்களும் பேசுவதும் பிரச்சினைகளை தீர்க்கப்போவதில்லை. ஒரு பதிவர் பெண்கள் வாய் எப்படி நாறும் என்று எழுதி இருந்தார். அதை நகைச்சுவை என்று பல ஆண்களும் தூக்கிப் பிடித்தார்கள். அந்த ஆக்கத்தை ஒரு 20 ஆண்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு மனநோய் இருக்கிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

பெண்களை எவ்வளவு இழிவாக எழுத முடியுமோ அவ்வளவு இழிவாக எழுதும் இரண்டு பதிவர்களை உற்சாகப்பட்டுத்தும் பதிவர்களைப் பார்க்கும் போது வேதனையாகவே இருக்கிறது.

நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் கருத்து சொன்ன ஒருவர் நான் அங்கே எழுதி இருப்பதெல்லாம் எல்லாருக்கும் தெரியும் என்று கூறி இருந்தார். சில விடயங்கள் தெரிந்திருந்தாலும் அடிக்கடி ஞாபகப் படுத்த வேண்டி இருக்கிறதே. பலனிருக்கிறதா என்று தான் தெரியவில்லை. பார்ப்போம். ஆண் பெண் என்று பாராமால் என் மனைவி, என் கணவன், என் மாமியார், என் அம்மா, என் உறவு என்று பார்த்தால் கொஞ்சம் பிரச்சினைகள் குறையும் என்று நினைக்கிறேன்.