Wednesday, March 24, 2010

ஸ்ரீராமா ஸ்ரீராமா..

இது ஸ்ரீராமநவமி சிறப்புப்பதிவுன்னு நீங்க நினைச்சா
அதுக்கு நான் பொறுப்பில்லை. நம்ம அப்பாவி தங்கமணி
தொடர் பதிவு போட்டு கொசுவத்தி சுத்த சொல்லியிருக்காங்க.
பொண்ணு பாத்ததை கொசுவத்தியா சுத்த சொல்லியிருக்காங்க.
(உக்காந்து யோசிப்பாங்களோ)

சரி கொசுவத்திக்குள்ள போவோம்.
நான் +2 படிக்கும் பொழுது சத்யாமாமா(அம்மாவின் பெரிய தம்பி)
கல்யாணம் பழநியில் நடந்தது. பழநிக்கு வந்திருந்த மாமாவின்
நண்பர்களுக்கு ஹிந்தி அல்லது ஆங்கிலம் மட்டும்தான்
தெரியும் என்பதால அயித்தானை அவர்களுடன் போய்வரச்சொல்லி
மாமா கேட்டிருந்தார்.

ஸ்ரீராம் என் அம்மம்மாவுக்கு உறவு.(என்ன உறவுன்னு கேக்காதீங்க.
சொல்ல மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்)

மாமா கல்யாணம் முடிஞ்சு ரிஷப்ஷனுக்காக எல்லோரும்
புதுகை வந்திருந்தாங்க. அம்மம்மாவீட்டுல தண்ணி கொஞ்சம்
தட்டுப்பாடு. எங்க வீட்டுல போர் இருந்ததால மாமாவின் நண்பர்களுடன்
அயித்தானும் குளிக்க எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. பொதுவாவே
ஆண்களுடன் அதிகம் பேசக்கூடாதுன்னு அப்பா கண்டிப்பா
வளர்த்திருந்தாரு. இதுல மாமா நண்பர்கள்னா இன்னும் காத
தூரம் தான் இருந்தேன். அவங்க இருந்த ஏரியாவுலேயே நான்
இல்லை. மோட்டர் மட்டும் போட்டு தண்ணி நிறப்பிக்கொடுத்திட்டு
நான் பாட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு மதிய ஷிப்ட் பள்ளிக்கு
கிளம்பிட்டேன். பேசவே இல்லை. அம்புட்டுதான் இவரைப்பத்தி
தெரியும். அதைவிட இவரின் அக்கா,மாமா குடும்பத்தாரோடு
எனக்கு ரொம்ப பழக்கம். அவங்க தம்பி என்பது மட்டும் தான்.

அந்தக்கதை அப்பயோ முடிஞ்சிடிச்சு. நான் +2 காலேஜ் ஒருவருஷம்
முடிச்சு பாம்பே போய் வேலை பார்க்க ஆரம்பிச்சாச்சு. எங்க அவ்வா
(அப்பாவோட அம்மா)வுக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிழைச்சப்போ
என் ஒரே ஒரு பேத்தியோட கல்யாணத்தை கண்குளிர பாத்திடணும்னு
அப்பாகிட்ட கேக்க 21 வயசுலயே அப்பா ஜாதக்கட்டை எடுக்க
ஆரம்பிச்சாங்க. நான் வேற அப்ப கண்டீஷன் எல்லாம் போட்டிருந்தேனா!

அப்பா திட்டிகிட்டே மாப்பிள்ளை பாத்தாங்க. ஆனா யாரும் என்னை
பெண் பார்க்க வரலை. தாத்தாவீட்டு பங்க்‌ஷனுக்கு வந்த ஒரு குடும்பம்
துருதுருன்னு வேலைப்பார்க்கற என்னை பாத்து பிடிச்சிருக்குன்னு
ஜாதகம் கேட்டு வாங்கிட்டு போனாங்கன்னு மாமா சொன்னாங்க.

அப்ப மும்பைக்கு வேலை விஷயமா வந்திருக்கிற அயித்தான்
(நான் அங்க இருப்பது தெரியாது) சத்யாமாமாக்கு போன் செஞ்சு
பேசியிருக்காரு. சொந்தக்காரங்களுக்கு நலம் விசாரிக்கிற மாதிரி.
(அப்ப அவருக்குத் தெரியலை தனக்குத்தானே ஆப்பு வெச்சுக்கிறார்னு)

ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கன்பார்ம் ஆகியிருந்தது அயித்தானுக்கு.
”வேலை கன்பார்ம் ஆகிடிச்சின்னா பொண்ணு பாத்திர வேண்டியதுதான்”
அப்படின்னு மாமா சொல்ல ”அண்ணா பாக்க ஆரம்பிச்சிருக்காங்க”
சொல்லியிருக்காரு. வீட்டுக்கு வந்த மாமா அம்மம்மாகிட்ட நம்ம
”கலா ஜாதகத்தை வேணாம் கொடுப்போம்” அப்படின்னு சொல்ல
”சென்னை போகும்போதே நானே பேசறேன்னு” அம்மம்மா சொல்லி
ஜாதகத்தை மட்டும் அனுப்பிவைச்சிட்டாங்க.

அதுக்குள்ள எங்க அவ்வா என்னைப் பார்க்கணும்னு வரச்சொல்ல
அவங்களைப்பாத்துட்டு வரும்போது சென்னையில் வழக்கம்போல
அயித்தானோட அக்காவீட்டுக்கு போய் இறங்கி ரெடியாகித்தான்
மும்பைக்கு ட்ரையின் பிடிப்பேன். நான் போன அன்னைக்கு
தற்செயலா(நீங்க இதை நம்பணும்) சென்னையில் மீட்டிங்கிற்காக
வந்திருந்தவர் அக்காவீட்டுக்கு வந்து எதையோ கொடுத்துவிட்டு
போக வந்திருந்தார். அங்கேஇருந்த அந்தேரி தாத்தா என்னை
அறிமுகப்படுத்த “நீ தான் கலாவா?ன்னு கேள்வி” கேட்க
ஆமாம்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டேன்.
(அன்னைக்கு என் பேரைச் சொன்னவர்தான். அதுக்கப்புறம்
பேர் சொல்வதே இல்லை) :))

திருமணத்துக்கு முன்னாடியே டேப்ரிக்கார்டர், டீவி,
வாஷிங் மெஷின், கேஸ் அடுப்பு எல்லாம் வாங்கி
ரெடியா வெச்சிருக்கிறதா அவரைப்பற்றி ஒரே
புகழாரம் சூட்டினாங்க.


அம்மாம்மாவின் பிறந்தவீட்டு உறவுதான் அயித்தான்.
எனக்கு முன்னாடியே ஒரு ஜாதகம் ஆந்திரா பொண்ணு
செட்டாகும் நிலையில் இருந்திருக்கு. ராஜம் பேத்தின்னா
இதுக்குத்தான் முதலிடம்னு அயித்தானோட அம்மா
சொல்லிட அப்படின்னு நம்ம மேட்டர் சூடு பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு.

அவரும் வரதட்சணை வேணாம்னு கொள்கையோட இருக்க,
என் பட்டுப்புடவை கண்டிஷனுக்கு ஓகே சொல்லிட்டாங்க.

அயித்தானும் என்னைப்பாத்திட்டாரு, அவங்க அக்காதான்
எனக்கு முன்னமே பழக்கமாச்சே. இதுல திடும்னு ஒரு நாள்
”பொண்ணு பாக்கணுமாம்! லீவு போட்டுட்டு சென்னைக்கு
வரச்சொன்னாங்கன்னு ”அப்பா போன் செஞ்சதா மாமா
சொன்னாரு. எத்தனை தடவை பாப்பாங்கன்னு கோவம்மாத்தான்
கிளம்பிப்போனேன். ஆனா என்னைப் பாக்கணும்னு சொன்னது
அயித்தானோட அண்ணன் குடும்பத்தினர். அவங்க அண்ணி,
பசங்க இப்படி ஒரு குடும்பம் இருக்காங்க அப்படின்னு எனக்கு
தெரியாது.

எங்க சித்தப்பா ஒருத்தர் வீட்டுல வெச்சு பெண்பார்க்கும்
படலம் நடந்தது. ”பாடெல்லாம் வேணாம்மா, ஈசியா இரு”
அப்ப்டின்னு ஆரம்பிச்ச மாமாவின் அன்பு ரொம்ப நெகிழ்வா
இருந்துச்சு. வரதட்சணை அது இதுன்னு எந்த பேச்சும்
கிடையாது. பொண்ணுக்கு நகை உங்க இஷ்டம் சொளகர்யம்
போல போடுங்க. குறைவோ, நிறைவோ எதுவும் பரவாயில்லை.
பொண்ணை அனுப்புங்க போதும்னு” சொன்ன மாமாவின் நல்ல
மனம்.

நிச்சயதார்த்தம் எல்லாம் கூட நடக்கலை. பாக்கு வெத்தலை
கூட மாத்தலை. திருமணம் பழநியில் நிறைவா நடந்தது.

என் தம்பி தான் அடிக்கடி வருத்தப்படுவான்.
பாவாவுக்கு ஆந்திரா பொண்ணு அமைஞ்சு காரசாரமா
சாப்பிட்டு நல்லா இருந்திருக்க வேண்டியது. உன் கிட்ட
மாட்டிகிட்டாரு!!! அப்படின்னு சொல்வான்.

நாம என்ன செய்ய முடியும். நம்ம கையில என்ன இருக்கு.
எல்லாம் ஆண்டவனருள் :)

தொடர் பதிவுக்கு நானும் யாராயாவது கூப்பிடணுமாம்ல.

இருங்க மாட்டிவிடறேன்.

புதுகை ப்ளாக்கர்களின் தானைத்தலைவர் சுரேகா.

சர்வேசன்

ஹுசைனம்மா

அமைதிச்சாரல்

பொண்ணு பாக்க போனதை, பாக்க வந்ததை கொசுவத்தி
சுத்துங்கப்பா


35 comments:

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம் புரியுது புரியுது. ராமநவமியும் ஆச்சு. அயித்தான் பேரு சொன்ன மாதிரியும் ஆச்சு. ராமநவமி தின வாழ்த்துகள் தென்றல்.

நீங்க சொன்ன்னதையெல்லாம், ரசிச்சுப் படிச்சாச்சு. ஒரு கோஇன்சிடென்ஸ்:)

இந்த மார்ச் 15 'தேவதை' இதழில், நாங்க ரெண்டு பேரும் பார்த்துகிட்டதைப் போட்டிருக்காங்கப்பா.:)))))) முடிஞ்சாப் பாருங்க.

Porkodi (பொற்கொடி) said...

வாசனையான கொசுவத்தி!! :)

பாலாஜி said...

நல்லா கொசுவத்தி சுத்தி இருக்கீங்க

My days(Gops) said...

ennaku thaan vadai ah?

paaarpom :)

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லா கொசுவத்தி சுத்தியிருக்கீங்க!

My days(Gops) said...

unga kadhai nalla irundhadhu :) ..

unga pattu pudavai kolgai super :)

நட்புடன் ஜமால் said...

இப்படித்தான் மாட்டினாரா மாம்ஸ் ...

ரங்கன் said...

அன்று வந்ததும் அதே நிலா..இன்று வந்ததும் இதே நிலா..

இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா..ஆஆஆஅ..இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!!

ஹுஸைனம்மா said...

அதெப்படிப்பா, உங்களுக்கெல்லாம் மட்டும் சொந்தத்துலயே அமைஞ்சுடுது?

நானெல்லாம் எழுதுனா நிறைய ஸ்கிப் பண்ணனும், இல்லை பொய் சொல்லணும். பாப்போம், கொஞ்சம் டைம் கொடுங்க..

புதுகைத் தென்றல் said...

ஆமாம் வல்லிம்மா,

தேவதைக்கு சொல்லிவைக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

நன்றி பொற்கொடி

புதுகைத் தென்றல் said...

நன்றி பாலாஜி

புதுகைத் தென்றல் said...

வாங்க மைடேஸ்,

ஜஸ்ட் மிஸ்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஜமால்,

பாவம் என்ன செய்ய? விதி வலியது :)

புதுகைத் தென்றல் said...

ஆஹா சிச்சுவேஷனுக்கு தகுந்த பாட்டு ரங்கன்

நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி அருணா

புதுகைத் தென்றல் said...

நன்றி மை டேஸ்

புதுகைத் தென்றல் said...

உங்களுக்கெல்லாம் மட்டும் சொந்தத்துலயே அமைஞ்சுடுது//

வெளியிலதான் பாத்துகிட்டு இருந்தாங்க, சொந்தத்துல அத்தைபையன்ஸ் இருந்தும் வேணாம்னு சொல்லிட்டேன். கடைசியில சொந்தத்துலேயே அமைஞ்சிடிச்சு.

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

அநன்யா மஹாதேவன் said...

//வாசனையான கொசுவத்தி!! :)// அதே அதே!

கண்மணி/kanmani said...

ஆஹா...இது என்ன மாதிரி காதல் கதை;)...
நீங்கதான் கலாவா?
ஆமாம் நீங்கதான் அயித்தானா? :))))))))))

மாதேவி said...

நல்லா இருக்கு.

ர‌கு said...

ந‌ல்லா சுவார‌ஸ்ய‌மா சொல்லியிருக்கீங்க‌ :)

இராகவன் நைஜிரியா said...

அப்பனே இரமா...

என்ன சொல்வது...

இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று...

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி அனந்யா

புதுகைத் தென்றல் said...

ஆமாம் நீங்கதான் அயித்தானா? ://

அப்படி எல்லாம் கேட்டுற முடியுமா கண்மணி. கழுத்துல 3 முடிச்சு விழும் வரை ஏதும் நிஜமில்லைன்னு வீட்டுல சொல்லிக்கொடுத்தே வளர்த்துட்டாங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி மாதேவி

புதுகைத் தென்றல் said...

நன்றி ரகு

புதுகைத் தென்றல் said...

இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று...//

ஆமாம். வருகைக்கு நன்றி இராகவன்

ராமலக்ஷ்மி said...

அருமை தென்றல்:)!

ஹுஸைனம்மா said...

தென்றல், நானும் இதுக்கு தொடர்ப் பதிவு எழுதினப்பறம்தான் நீங்க அடுத்த பதிவு எழுதுவேன்னு உறுதியா இருக்கீங்க போல!! எழுதிட்டேன் இங்கே - http://hussainamma.blogspot.com/2010/03/blog-post_28.html.

அதனால சீக்கிரமே நெக்ஸ்ட் ப்ளீஸ்!!

புதுகைத் தென்றல் said...

நன்றி ராமலக்‌ஷ்மி

புதுகைத் தென்றல் said...

படிச்சு கமெண்ட் போட்டாச்சு ஹுசைனம்மா

அமைதிச்சாரல் said...

ரசிச்சு படிச்சாச்சு.. மாட்டி விட்டுட்டீங்களே இப்படி. கொஞ்சம் டைம் கொடுங்க, எழுதறேன்.

SurveySan said...

fyi, http://surveysan.blogspot.com/2010/04/blog-post_14.html

புதுகைத் தென்றல் said...

படிச்சு மீ த பர்ஸ்டா பின்னூட்டம் போட்டாச்சு சர்வேசன்.