யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்
பொன் மாதிரி சானியா கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி
பின்னாடியும் சரி பரபரப்பு நியூஸ்தான். கல்யாணம் ஆகி
ஊருக்கு போய் இறங்கியிருக்காங்க இரண்டு பேரும்.
ரசிகர்கள் கூட்டம் மொய்ச்சு எடுத்து சானியாவை தொட
முயன்றார்களாலாம். போலீஸால கூட கட்டுப்படுத்த
முடியாம திண்டாடி போனாங்களாம்.
இப்படி “டச்சிங்” வரவேற்பு கொடுத்திட்டாங்களேன்னு
அம்மையார் ஒரே புலம்பல்ஸாம்.
*****************************************
நம்ம ஊர்ல கண்ட எடத்துலயும் கரெண்ட் எடுத்து
ஜகஜ்ஜோதியா விளக்கு வெச்சு அநியாயம் செய்வாங்க.
ஆனா அதை யாரும் தடுக்க மாட்டாங்க. ஆடம்பர
விளக்குகள் இல்லாம எளிமையா எந்த விழாவும்
நடக்காது. மைக் செட் அது இதுன்னு கரெண்ட்
கன்னாபின்னான்னு உபயோகப்படுத்துவாங்க.
அதுவும் அநாவசியாமா தனது டாம்பீகத்தைக்
காட்டிக்கத்தான்.
நம்ம பக்கத்து நாடான பாகிஸ்தானில் சோயப்மாலிக்
சானியா திருமண வரவேற்பில் போடப்பட்டிருந்த
அலங்கார விளக்குகளை எடுக்கச் சொல்லிட்டாங்களாம்.
”எனர்ஜீ சேவிங்”அப்படின்னு அரசு அறிவிச்சு
இருக்கும் இந்த வேளையில் இப்படி செஞ்சா அது
தப்புன்னு சொல்லி அலங்கார விளக்குகளை
எடுக்க வெச்சாங்க. சோயப்போட மச்சான்
எவ்வளவோ கெஞ்சி பாத்தும் முடியாதுன்னு
சொல்லிட்டங்களாம். கோவத்தோட அவங்க
அலங்கார விளக்குகளை எடுத்ததா படிச்சேன்.
நம்ம நாட்டுல இது சாத்தியமா!!???
***********************************************
ஆந்திராவில் முதல்வர் ரோசய்யா ஒரு சட்டம்
கொண்டுவந்திருக்காரு. அது வணிக வளாகங்களுக்கு
மின் கட்டணம் அதிகரிப்பு. 10 மணியிலேர்ந்து
இரண்டு மணிவரை அதிகமா தேவையில்லாம
மின் உபயோகம் செய்வது இவங்க. அதனால்
மின் கட்டணம் உயர்த்தப்படுதுன்னு சொல்லியிருக்காங்க.
அலங்கார விளக்குகள், அதுஇதுன்னு இங்கயும்
கரெண்ட் அதிகமாத்தான உபயோகிக்கறாங்க.
அங்க ஏத்தினாங்க சரி, அதை சரிக்கட்ட நமக்கு
கடைக்காரங்க நமக்கு பில் ஏத்திடுவாங்களே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*************************************************
ஏதோ எடுத்துக்குடுக்கச் சொன்னதுக்கு அயித்தான்
”வயசான காலத்துல என்னைய ஏன் வேலை வாங்கற”!
அப்படின்னு சொன்னாரு. “நீங்க யங்காத்தான் இருக்கீங்க,
எனக்குத்தான் வயசாயிடிச்சுன்னு”நான் சொல்ல உடனே
அம்ருதம்மா “இது எந்த ஊரு நியாயம். எந்த பஞ்சாயத்துலயும்
செல்லாது. அப்பா யங்குன்னா நீங்களும் யங்கு” அப்படின்னு
கமெண்ட் அடிச்சாங்க.
உடனே அப்பாவுக்கு செம சந்தோஷம். முகமெல்லாம் பூரிப்பு.
ஆஷிஷ் அண்ணா,”எனக்கு இந்த அளவுக்கு பேசும் தெளிவு
இருந்தா நல்லது!” அப்படின்னு சொன்னாங்க.
பொம்பிளை பசங்களுக்கு மெச்சூரிட்டி சீக்கிரம் வந்திடுத்துன்னு
சும்மாவா சொன்னாங்க.
**************************************************
ஆண்டவனோட படைப்புல ஆணும் பெண்ணும் சரிசமம்,
அது இது பெண்ணீயம் எல்லாம் பேசுவோம். ஆனா
உண்மையில் பாத்தா இருவருக்கும் பயங்கர வித்தியாசம்.
பெண்ணைவிட ஆணுக்கு கலோரிகள் அதிகமாக இருக்கணும்.
உடல் எடையிலேர்ந்து எல்லாமே வேற வேற.
சில ரங்கமணிகள் ”என் தங்க்ஸ் எப்பவும் தூங்கிகிட்டே
இருப்பாங்க. எவ்வளவு தூங்கினாலும் பத்தலைன்னு
சொல்வாங்க” அப்படின்னு ஒரே புலம்பல்ஸ்.
இனி அப்படி புலம்பாதீங்க ரங்கமணிகளே. ஏன் சொல்றேன்
தெரியுமா பெண்களுக்கு தூக்கம் அதிகமாத்தான் தேவை.
மல்ட்டி டாஸ்கிங் என்பது பெண்களுக்கு கைவந்த கலை.
அந்த மாதிரி கலைக்கு அவங்க மூளை அதிகமாக வேலை
செய்வதனால அவங்களுக்கு ஓய்வும் அதிகமா தேவை.
அதனால அடுத்த வாட்டி உங்க தங்க்ஸ் தூங்கினா தூங்கட்டும்னு
விடுங்க. அந்த ஓய்வு அவங்களை அதிக வேலை செய்ய
உதவும்.
********************************************
போன மாசம் லீவுக்கும் பசங்களை எங்கயும்
கூட்டிகிட்டு போகலை. இப்பவும் 2 மாசம் லீவு.
அதனால் இன்னைக்கு சாயந்திரம் கூ சுகு சுகுன்னு
மீ த டாடா கோயிங். 1 வாரத்துக்கு கடைகு
லீவு. யாரும் அழக்கூடாது.அழாம நல்ல பிள்ளையா இருங்க.
வெயில்ல சுத்தாமா நுங்கு, இளநின்னு சத்தா
குடிங்க. கூல் ட்ரிங்க்ஸ் வேண்டாம்.
பை பை
24 comments:
மல்டி டாஸ்கிங்.. யாரு.. பொம்பிளைகள்தானே.. சரிதான்.! ஹேப்பி ஹாலிடேஸ்..
பிரியாணி சுவையா இருக்கு. ரங்க்ஸ்களுக்கு சோம்பல் வந்தாலே வயசாயிடுச்சுன்னுதான் சமாளிப்ஸ் பண்ணுவாங்க. house to house doorstep :-)))))
Happy Touring! Have fun!
வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு ஃப்ரெண்ட்,
என்னோட வலைப்பூவுல மீ த பர்ஸ்டா கமெண்ட் போட்டிருக்கீங்களே அதைச் சொன்னேன்.
மல்டி டாஸ்கிங்.. யாரு.. பொம்பிளைகள்தானே.. சரிதான்.! //
நல்லா ரோசிச்சு பாருங்க ஃப்ரெண்ட். பெண்கள் மல்ட்டி டாஸ்கிங்கில் பெஸ்ட்தான். (இதை நீங்க ஒத்துக்கமாட்டீங்க. ஒத்துக்கிட்டா சாமி குத்தமாகிடும்னு எனக்குத் தெரியும்)
ஹேப்பி ஹாலிடேஸ்..
தாங்க்ஸ்
வாங்க அமைதிச்சாரல்,
ருசிச்சதுக்கு நன்றி,
house to house doorstep //
ரசிச்சேன்.
வருகைக்கு நன்றி
தாங்க்ஸ் அநன்யா
//நம்ம நாட்டுல இது சாத்தியமா!!???//
உங்களுக்கே தெரியுதுல்ல!!
//ஆனா
உண்மையில் பாத்தா இருவருக்கும் பயங்கர வித்தியாசம்.//
:-)))
கரெக்ட்!!
ஜாலியா சுத்திட்டு வாங்க!! வெயில் கவனம்!!
//நம்ம நாட்டுல இது சாத்தியமா!!???//
ம். கஷ்டம்தான்
தூக்கம். நான் அப்படித்த்டான் புலம்பிக்கிட்டே இருப்பேன். தூக்கம் பத்தலைன்னு. இப்ப இல்ல புரியுது ;)
happy holidays :)
// மல்ட்டி டாஸ்கிங் என்பது பெண்களுக்கு கைவந்த கலை. //
சரியாகச் சொன்னீர்கள். அக்சப்டட்.
// அதனால அடுத்த வாட்டி உங்க தங்க்ஸ் தூங்கினா தூங்கட்டும்னு
விடுங்க. //
தூங்கும் போது யாரையுமே தொந்திரவு பண்ணக் கூடாதுங்க. எனக்கு தங்கமணி தூங்கினாங்க ரொம்ப சந்தோஷம். அனாவசியாம் நோண்டி நோண்டி கேள்வி கேட்க மாட்டாங்க பாருங்க. அதனாலத்தான்.
கமெண்ட் மாடரேஷன் போயிந்தி... போயே போச்... இட்ஸ் கான்...
நல்ல பகிர்வு மேடம். விடுமுறைப் பயணம் சிறப்புற வாழ்த்துகள்.
//அந்த மாதிரி கலைக்கு அவங்க மூளை அதிகமாக வேலை
செய்வதனால அவங்களுக்கு ஓய்வும் அதிகமா தேவை//
தெய்வமே.... ரெம்ப ரெம்ப நன்றி. இத்தனை நாளா இந்த விசயம் தெரியாம ரங்கமணி என்னோட தூக்கத்த கிண்டல் பண்ணினப்ப எல்லாம் கண் மூடி... சாரி சாரி.. வாய் மூடி பேசாம பொறுத்துட்டு இருந்தேன்... பொறுத்தது போதும் பொங்கி எழு அப்பாவி.... (புதுகை தென்றலே.... மிக்க நன்றி)
வந்தேன் ஹுசைனம்மா,
ஊரு சுத்திட்டு வந்தாச்சு. இனிச் சுடச்சுட பதிவுகள் வரும்ல
:))
ஆமாம் சின்ன அம்மிணி,
இப்பல்லாம் எம்புட்டுத் தூங்கினாலும் பத்த மாட்டேங்குது. பாதி ராத்திரில கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு உக்கார்றதும் நடக்குது. என்னவோ போங்க. மூளை கன்னாபின்னான்னு வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போல. :))
நன்றி இராமசாமி கண்ணன்
அனாவசியாம் நோண்டி நோண்டி கேள்வி கேட்க மாட்டாங்க பாருங்க. அதனாலத்தான்.//
என்ன ஒரு வில்லத்தனம் இராகவன்.
:)
ஊருக்கு போனதால கமெண்ட் மாடரேஷனை எடுத்திருந்தேன். இப்ப வந்திட்டேன் திரும்ப மாடரேஷன் வெச்சிடுவோம்ல
நன்றி சரவணக்குமாரன்
வாங்க புவனா,
(ஒவ்வொரு வாட்டியும் அப்பாவி தங்கமணின்னு டைப்ப கஷ்டமா இருந்துச்சு. )
சாரி சாரி.. வாய் மூடி பேசாம பொறுத்துட்டு இருந்தேன்... பொறுத்தது போதும் பொங்கி எழு அப்பாவி.... (புதுகை தென்றலே.... மிக்க நன்றி)//
நன்றிக்கு நன்றி. அதிருக்கட்டும் நீங்க பொங்கி எழுந்தது பதிவா வரும்ல!!!!
//புதுகைத் தென்றல் Says:
நன்றிக்கு நன்றி. அதிருக்கட்டும் நீங்க பொங்கி எழுந்தது பதிவா வரும்ல!!!!//
ஆஹா... சும்மாவே நம்மள அப்பாவின்னு ஒத்துக்க மாட்டேன்கறாங்க...அதெல்லாம் போட்டா அவ்ளவு தான் போங்க
Post a Comment