தொலைக்காட்சி பெரியவங்க சின்னவங்கன்னு
பாகுபாடு இல்லாம கட்டிப்போடுது. தொலைக்காட்சி
மொத்தமாவே உதவாத முட்டாள்களின்பெட்டி அல்ல.
பல நல்ல உபயோகமான செய்திகளும் அதில் இருக்கு.
ஆஷிஷ் அம்ருதா அதிகமா டீவி பார்க்காம
இருக்கும் படி பாத்துப்பேன். ஆனா இந்த நிகழ்ச்சிக்கு
மட்டும் ஓகே சொல்வேன். டிஸ்னி சேனலில் வரும்
BACK YARD SCIENCE ரொம்ப அருமையா இருக்கு.
பிள்ளைகளுக்கு உபயோகமாவும் இருக்கு.
சின்னச் சின்ன அறிவியல் பயிற்சிகளை அழகா
செய்வாங்க. அற்புதமா இருக்கும். இதைப் பாத்தா
பசங்க நிறைய்ய கத்துக்க முடியும்.
இது ஆஸ்திரேலியாவில் இருக்கும்
குழந்தைகளுக்கான கல்வி சேனலில் இருந்து
தயாரித்து வெளியிடப்படும் நிகழ்ச்சிகள்.
Dorling Kindersley அவர்களின் புத்தகத்திலிருந்துதான்
இவை தயாரிக்கப்படுகின்றன.
இது பிரிட்டனில் வெளியாகும் தொலைக்காட்சி
தொடர். இதுலயும் பிள்ளைகள் அதுவும்
வரைய, கைவேலைகள் கற்க விருப்பம்
இருக்கும் பிள்ளைகளுக்கு உதவியா இருக்கும்.
ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.
ஒரு முறை காகிதங்களை கசக்கி ஒட்டி
முதலை மாதிரி செய்ததை பார்க்கும் பொழுது
அசந்துட்டேன்.
art attack
இணைய தளம்.
இதன் தயாரிப்புக்கள் மார்கெட்டுகளில்
கிடைக்கிறது. பிள்ளைகள் விரும்புவாங்க.
பெரியவங்க நமக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஒரு மாறுதலுக்கு டிஸ்னி சேனலை
பசங்ககூட உக்காந்து நாமும் பாக்கலாம்.
10 comments:
அட! ரெண்டுமே எங்க family favourite show!
அப்படியா!! சந்தோஷம் அருணா.
ஹேப்பி வீக் எண்ட்
அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ஓ.. டிவியில இதெல்லாம் காட்டுறாங்களா.. :-)
நான் டிவி பார்க்கறதையே நிறுத்தி ரொம்ப நாளாச்சுங்க!
வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன்
ஆமாம் உழவன்,
சில நல்ல விட்யங்களும் இருக்கு.
வருகைக்கு நன்றி
இதோ வந்து பாக்கிறேன் ஸாதிகா
நான் டீவியில் செலக்ட் செஞ்சு பாக்கும் பழக்கம் உடையவள் ரகு.
வருகைக்கு நன்றி
டிஸ்னி சேனலிலும் இதுபோல் நிகழ்ச்சிகள் வரும். அதில் ஒருவர் வீட்டிலுள்ள குப்பைகளை உபயோகப்படுத்தி அப்படி.. இப்படி அரேஞ்ச் செய்வார். ஒரு அழகான ஓவியம் முன்னே நிற்கும்.
Post a Comment