Friday, April 09, 2010

வலையுலகமும் பெண்ணும்

வலையுலகில் என்ன நடக்கிறதென்பதே சமீபமாகத்
தெரியவில்லை. காரணம் நான் அவ்வளவாக
வராதது. சங்கம் வைப்பது குறித்து ஏதோ சச்சரவுகள்
நடக்கிறது என்பது மட்டும் சில நண்பர்கள் சொல்லித் தெரிந்தது.

நர்சிம் அவர்களின் இந்தப் பதிவை இன்று தான்
தாமதமாகப் படித்தேன்.



பெண்ணீயம் பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை.
குழந்தைகளின் வளர்ச்சியை ரசித்து அதை
அழகாக பதிவிட்டு தன் தாய்மையை
காட்டுவதிலும் எந்தத் தவறும் இல்லை.


உண்மையில் சங்கம் வைத்தால் பெண்கள்
வருகிறார்கள் வரவில்லை என்பதில்லை.
பல ஆண் பதிவர்கள் தரும் டார்ச்சர்களால்
இருக்கும் பெண்பதிவர்கள் ஓடிப்போகாமல் இருந்தால் சரி.

இது என்ன புது கூத்து என்று கேட்பவர்களுக்கு இப்படியும்
நடக்கிறது என்பதுதான் நிஜம்.

கண்ணியமாக நடந்துகொள்பவர்களுக்கும், உற்ற
சகோதரியாக நினைப்பவர்களும் நிறைய்ய இருக்கும்
இங்கே சிலரின் தவறான நடவடிக்கைகளும் இருக்கத்தான்
செய்கின்றன. நட்பாக சாட்டிங் செய்து, நட்பை
மட்டுமே பரிச்சயப்படுத்தி உதவும் நல்ல உள்ளங்களுக்கு
என் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக்
கொள்கிறேன்.


இமெயிலில் சாட்டினால் ஜொள்ளுவது, உன் போன்
நம்பர் கொடு என்று அடாவடியாக கேட்டுவாங்குவது,
தர மறுத்தால் “என்னை தவறாக நினைக்கிறாயா”
என்று கேட்பது, பதிவர் சந்திப்புக்கு வர நினைத்தாலும்
தடுக்கும் விஷயம் ஜொள்ளு ஜொள்ளு தான்.


இல்லையென்று சம்பந்தபட்டவர்கள் சொல்ல மாட்டார்கள்.
படிக்கும்பொழுது சம்பந்தபட்டவர்களுக்கு மனசாட்சி
என ஒன்று இருந்தால் “இது நான் தான்!!” என
குத்தும். இதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது.

பல விஷயங்கள் சொல்லலாம். சொன்னால்
பிரச்சனை அதிகமாகும். பிரச்சனை செய்ய
இந்தப் பதிவு அல்ல.

சில பெண்கள் தங்களுக்கு நடக்கும் டார்ச்சர்களை
வெளியே சொல்லி ஆவப்போவதில்லை என்பதால்
வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆகப்போவது ஒன்றுமில்லை, இவைகள் இந்த ரகம்
தான் என ஆண்களின் மீதே வெறுப்பு வரவைக்கும்
ஆட்கள் இருப்பதால் சகித்துக்கொண்டுதான் போக
வேண்டியிருக்கிறது. இந்த மாதிரி நிலை இங்கே
மட்டுமல்ல, எங்கும் பெண்களுக்கு இப்படித்தொல்லை
உண்டு என்பதால் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை
மனதில் பதிய வைத்துகொண்டுதான் பெண்கள்
பதிவர்களாக இங்கே இருக்கிறார்கள்.

பதிவர் ஒருவர் பெண்பதிவர் ஒருவரைப்பற்றி
அடித்த கமெண்டும் அதை சட்டைசெய்யாமல்
தாண்டிவந்த விதமும் பாராட்டுக்குரியது.
சட்டை செய்யாமல் விட்ட காரணம் தான்
மேலே நான் சொல்லியிருப்பது.

ஒருபடத்தில் விவேக் டயலாக் ஒன்று
ஞாபகத்துக்கு வந்தது,”இன்னைக்கு நாம
பேண்ட், ஷர்ட் போட்டுகிட்டு மாடர்னா
வந்தாலும் ஒருகாலத்தில் நாம ஆதிவாசிங்கதானே!!”

என்னதான் காலம் மாறினாலும்
மாட்ர்னானாலும், படித்தாலும் பெண்ணை
போகப்பொருளாகவே பார்க்கும் ஆணின்
அடிப்படை புத்தி மாறாவிட்டால் ஒன்றும்
நடக்கது.

பிறன் மனை நோக்காமல், ஒழுக்கமாக
வாழ்ந்து தன் மனைவியைத் தவிர
மற்றவர் அனைவரையும் சகோதரியாக
பாவிக்கும் எண்ணம் வந்தால் நல்லது.
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே
உதிக்கலாம். ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது.
ஏதோ என் மனதில் பட்டதை, சில அனுபவங்களை
பதிய ஒரு வாய்ப்பாக நினைத்தேன். பதிந்தேன்.


64 comments:

நிஜமா நல்லவன் said...

present!

நிஜமா நல்லவன் said...

/நர்சிம் அவர்களின் இந்தப் பதிவை இன்று தான்
தாமதமாகப் படித்தேன்.

/

too late:)

நிஜமா நல்லவன் said...

/ பெண்ணீயம் பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை./

சரி!

Thamiz Priyan said...

\\\தன் மனைவியைத் தவிர
மற்றவர் அனைவரையும் சகோதரியாக
பாவிக்கும் எண்ணம் வந்தால் நல்லது.
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே
உதிக்கலாம். ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது. \\\\

வருத்தத்துடன் கண்டிக்கின்றோம்... எல்லாரையும் மொத்தமாக குற்றம் சொல்கின்றீர்கள்... :(

pudugaithendral said...

ஆமாம் நிஜம்ஸ் தம்பி நிஜமாகவே லேட்.

pudugaithendral said...

வாங்க தமிழ்ப்ரியன்,

நல்ல உள்ளங்களுக்கு என் தலை தாழ்த்தி வணக்கத்தை பதிவிலேயெ சொல்லியிருந்தேன்.

அனைத்து ஆண்களையும் சொல்லவில்லை. சில ஜென்மங்களைத்தான் சொல்லியிருந்தேன்.

நிஜமா நல்லவன் said...

/
பல ஆண் பதிவர்கள் தரும் டார்ச்சர்களால்
இருக்கும் பெண்பதிவர்கள் ஓடிப்போகாமல் இருந்தால் சரி.
/

அவ்வ்வ்வவ்வ்வ்வ்....இதெல்லாம் வேற நடக்குதா????

pudugaithendral said...

இதெல்லாம் வேற நடக்குதா????//

நல்லாவே நடக்குது. இத்தனை நாள் பேசவேண்டாமென்று இருந்தேன்.

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!!!!!!!

இப்படியெல்லாம் கூடவா:(

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

\\\தன் மனைவியைத் தவிர
மற்றவர் அனைவரையும் சகோதரியாக
பாவிக்கும் எண்ணம் வந்தால் நல்லது.
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே
உதிக்கலாம். ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது. \\\\

வருத்தத்துடன் கண்டிக்கின்றோம்... எல்லாரையும் மொத்தமாக குற்றம் சொல்கின்றீர்கள்... :(/


ரிப்பீட்டு போட்டு ரொம்ப நாள் ஆச்சு.....சோ பலமா ரிப்பீட்டேய்......

pudugaithendral said...

வாங்க துளசியக்கா,

அட ராமா!!!!!!!!!!!!

இப்படியெல்லாம் கூடவா:(//

ஆமாம் இத்தனையையும் மீறி சில பெண்கள் பதிவுலகில் இருக்கிறார்கள்.
பூமியைப் போன்ற பொறுமை உடையவர்கள் என்பதால்னு சொன்னால் சரியா இருக்கும்.

வருகைக்கு நன்றி

நிஜமா நல்லவன் said...

/பல விஷயங்கள் சொல்லலாம். சொன்னால்
பிரச்சனை அதிகமாகும். பிரச்சனை செய்ய
இந்தப் பதிவு அல்ல.
/

குட்....இருக்கிற பிரச்சனையே போதும்:)

நாமக்கல் சிபி said...

லேட் பிக் அப்!

pudugaithendral said...

வாங்க சிபி,

லேட்தான். கரண்ட் கட் ஆகிடுது. இதுல கணிணில உக்காறவே நேரம் கிடைக்க மாட்டேங்குது. கடந்த ஒரு மாதமா அதிக தொடர்பில் இல்லாமலேயே போய்விட்டது.

லேட் என்பதால் விட்டுடக்கூடாதில்ல.

வருகைக்கு நன்றி

நிஜமா நல்லவன் said...

/லேட் என்பதால் விட்டுடக்கூடாதில்ல. /

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லாம போய்டுச்சி:)

நாமக்கல் சிபி said...

//லேட் என்பதால் விட்டுடக்கூடாதில்ல. //

எக்காரணத்தைக் கொண்டும் விடக் கூடாது! நீங்க கும்முங்க!

சாந்தி மாரியப்பன் said...

என்னன்னவோ சொல்றீங்க தென்றல்.இப்படி ஒரு சூழல் இருந்தா,பதிவுலகத்துக்கு வரணும்ன்னு நினைக்கிற பெண்களும் ஒதுங்க ஆரம்பிச்சிடுவாங்களே..

Thamiz Priyan said...

\\\புதுகைத் தென்றல் said...

வாங்க சிபி,

லேட்தான். கரண்ட் கட் ஆகிடுது. இதுல கணிணில உக்காறவே நேரம் கிடைக்க மாட்டேங்குது. கடந்த ஒரு மாதமா அதிக தொடர்பில் இல்லாமலேயே போய்விட்டது.
\\

நம்புற மாதிரி இல்லியே.. இன்னைக்கே ரெண்டு மூணு பதிவு வந்த மாதிரி இருக்கே.. ;-))

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

இப்படி இங்கயும் நடக்குதுப்பா. பலருக்குத் தெரிவதில்லை. எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துப்பது நல்லதுதானே. நீங்க சொல்லும் பயம் எனக்கும் இருக்கு. புதுசா வர யாரும் பயப்படுவாங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லாம போய்டுச்சி:)//

தம்பி ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போல.

:))

pudugaithendral said...

எக்காரணத்தைக் கொண்டும் விடக் கூடாது! நீங்க கும்முங்க//

அதெல்லாம் கரெக்டா செஞ்சிடலாம்

:)

pudugaithendral said...

நம்புற மாதிரி இல்லியே.. இன்னைக்கே ரெண்டு மூணு பதிவு வந்த மாதிரி இருக்கே.. ;-))//

அட நீங்க வேற,

போன மாசம் பதிவு ரொம்ப குறைஞ்சு போச்சு. அதை எப்படியாவது இந்த மாசம் காம்பன்சேட் செய்யணும்னு முடிவு செஞ்சு இன்னைக்குத்தான் 2 பதிவு என்பதிவுல, கானக்கந்தர்வனில் ஒரு பதிவு போட்டேன்.

விக்னேஷ்வரி said...

உங்கள் கருத்துகளுக்கு முழுக்க ஒத்துப் போகிறேன் புதுகைத் தென்றல். சில விஷயங்களை அறிகையில் அசிங்கமாக உள்ளது.

pudugaithendral said...

நன்றி விக்னேஷவரி,

அசிங்கமாகத்தான் இருக்கிறது.

ஆயில்யன் said...

ஹம்ம்ம்ம்!

நீங்களும் ஆவேசப்பதிவு போட்டாச்சா பாஸ் !

ப.கந்தசாமி said...

உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.

Paleo God said...

அதிக நேரம் நான் படித்த பதிவுகளில் இதுவும் ஒன்று. அதிகம் பரிந்துரைக்கக்கூடியதாகவும் இருக்கப்போகும் பதிவும் கூட.!

pudugaithendral said...

நீங்களும் ஆவேசப்பதிவு போட்டாச்சா பாஸ் !//

ஆவேசப்பதிவு இல்ல பாஸ் உண்மை இது

pudugaithendral said...

ஆமாங்க ,

ஆதங்கம் தான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சங்கர்,

வருகைக்கு மிக்க நன்றி

Radhakrishnan said...

// பிறன் மனை நோக்காமல், ஒழுக்கமாக
வாழ்ந்து தன் மனைவியைத் தவிர
மற்றவர் அனைவரையும் சகோதரியாக
பாவிக்கும் எண்ணம் வந்தால் நல்லது.
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே
உதிக்கலாம். ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது. //

;)

settaikkaran said...

வலையுலகில் நான் பெரிதும் மதிப்பவர்களில் நீங்களும் ஒருவர். இந்தப் பதிவைப் படித்தது முதலாக பின்னூட்டம் இடவேண்டுமா வேண்டாமா என்று மிகவும் யோசித்து, இருமுறை பின்வாங்கி, இன்று துணிந்து எழுதுகிறேன்.

நாம் இருக்கிற இந்த வலையுலகம் நம்மால் நிர்மாணிக்கப்பட்ட உலகம். இங்கு எழுதுபவர்கள் சதையும், எலும்பும்,இரத்தமுமாய் நம்முடன் வாழ்கிற நிஜ மனிதர்கள் தான்! எனவே அவர்களின் குறைபாடுகள் இங்கும் தொடரும்; நம்மைத் தொடாமல் இருப்பதற்கு இங்கு வழிவகைகள் உள்ளன-அவை நிஜ உலகத்தில் கிடையாது. முன்பின் தெரியாதவர் மின்னரட்டைக்கு அழைப்பு அனுப்பினால், மறுக்கலாம். தனிமடல்கள் வருமெனில், அவற்றை ’SPAM'-க்கு அனுப்பலாம். வலைப்பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் வைக்கலாம். இப்படி வலையுலகில் நேரக்கூடிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க பலவழிகள் உள்ளன. இதையெல்லாம் மீறியும் ஆண்களால் பெண்பதிவர்களுக்குத் தொல்லை ஏற்படுகின்றதென்றால், தவறு ஆண்பதிவாளர்கள் மீது மட்டும் இருக்க முடியாது என்பதே வெளிப்படை!

சமநிலையுடைய உங்களைப் போன்ற வலைப்பதிவாளரிடமிருந்து இப்படியொரு கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

பொத்தம்பொதுவாக ஆண் பதிவர்களால் பெண் பதிவர்களுக்கு தொல்லை ஏற்படுகிறது என்பது போல நீங்கள் எழுதியிருப்பதை ஒரு ஆண் என்ற முறையிலும், ஒரு வலைப்பதிவாளராகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறவன் என்ற முறையிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Vidhoosh said...

அன்பு தென்றல்.
முதலில் நன்றி.
நேரிலேயே பேச முயற்சித்து அஷோக் போனை எடுக்காததால், அன்றிருந்த ஆவேச சூழலில், நான் ஒரு எதிர் பதிவு அல்லது பின்னூட்டம் எழுதுவது, நம் நோக்கத்தை தொய்வடையச் செய்யும் என்பதே. மேலும் எழுத்து சில சமயங்களில் படிப்பவரின் மனநிலையை பொறுத்தே அமைகிறது. அதுவும் அஷோக் போன்ற immatured person கிட்ட பேசும் போது இன்னும் கொஞ்சம் precaution எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

//பெண்ணீயம் பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை/// :)) இவ்ளோ அலுப்பு ஏன் என்று புரியவில்லை. எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம்தான், அது எங்கே எப்போ யாரிடம் என்பதை பொறுத்தே பின் விளைவுகள் அமைகிறது. அன்றே நானும் பொங்கி இருந்தால், இருந்த ஆவேச சூழ்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணையை விட்டமாதிரி ஆகி இருந்திருக்கும். மேலும் அவலமாகி இருக்கும். ஈகோ அதிகமாகி மேலும் மேலும் பெருகி கொண்டே போகும். நீ பேசு நான் பேசு என்று இரண்டு பிரிவாகி ... நாம் அதற்கா இங்கு எழுதிக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவோ நண்பர்கள் போட்டோவும், தொலைபேசி என்னும் கேட்டுத் "தரமுடியாது" என்று நேரிடையாகவே சொல்லி இருக்கிறேன். அதே போல, வீடு வரைக்கும் அழைத்து போய் மாமனார் மாமியார் வரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து, குடும்ப நண்பர்களாக ஆனவர்களும் உண்டு.

//ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது. ///
இல்லீங்க. எல்லோரும் அப்படி கிடையாது.
பத்தில் ஒன்று பழுது... அதற்காக ஒதுங்கிப் போவது !!! :(

பெண்கள் நிச்சயம் பதிவர் சந்திப்புக்கு வரவேண்டும் என்பதே என் ஆவல். பார்க்கலாம். :)

Porkodi (பொற்கொடி) said...

:) நல்ல பதிவு தென்றல். என்னைக் கேட்டால் மிகவும் தெரிந்த சில பேரை தவிர்த்து எவருடனும் சாட் (ஆண் பெண் பேதமெல்லாம் இல்லை) எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்வேன். இதை பத்தி எழுத ஆரம்பிச்சா 4-5 பதிவுக்கு மேட்டர் தேறும் போல‌யே!

Prathap Kumar S. said...

நடத்துங்க...நடத்துங்க...

மதார் said...

சரியாகச் சொல்லி இருக்கீங்க .ஒரு மாதத்திற்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும் , எதிர்பதிவுகளும் நான் பெண் என்ற காரணத்தினால் வந்தவையே . அதிலும் சில எனக்கு பாட்டு எழுதிய பதிவர்கள் என்னவென்று சொல்ல . ஒரு சீரியஸ் விஷயத்தை காமெடி ஆக்குவதில்தான் எவ்வளவு முனைப்பு . அந்த பதிவுக்கு பின் என்னை பற்றி பதிவர்கள் தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வம் எனக்கு வந்த chat request இல் தெரிந்தது . ஒரு பதிவர் என்னுடன் ஒரு மணிநேரம் chat இல் கேட்டவை சில .எனக்கு இன்னும் போதிய அறிவு வளரவில்லையாம் . திருமணதிற்கு பிறகு சமையல் யார் உங்கள் கணவரா ? உச்சகட்டம் "Did u have sex with anyone " இதை அவருக்கு வர இருக்கும் வருங்கால மனைவியிடமோ ,அவர் தங்கையிடமோ அவரால் கேட்க முடியுமா ? என்னால் இதை தனி பதிவு போட்டு அவர் யாரென்று சொல்ல முடியும் . ஆனால் அவருக்கும் இங்கு ஒரு நட்பு வட்டம் இருக்கலாம் . அதை சிதைக்க நான் விரும்பவில்லை . ஏன் இங்கு பின்னூட்டம் இட்ட சிலரும் அவருக்கு நண்பராய் இருக்கலாம் .அதன் பிறகு என்னுடைய profile போய் என் மெயில் id என் வயது எல்லாம் delete பண்ணேன் . இவைதானே என்னை பிறர் அறிய விரும்ப ஆவல் தூண்டுகிறது .பின்பும் ஒரு வாரம் invisible ஆ இருந்தேன் . மனதளவிலும் உளைச்சல் . பின் யாருடைய chat ம் accept பண்ணல யாருமே என்னிடம் இதுவரையிலும் இப்படி கேட்டதில்லை . அதன் பிறகும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் . வீட்டு பெண்களையும் வெளிஉலக பெண்களையும் வேறு வேறு மாதிரி பார்க்கும் ஆண்களின் பார்வை என்று மாறுமோ அப்பொழுதுதான் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பும் உயரும் .என் நண்பர்களிடம் கூட இதை நான் சொல்லல . சொன்னா அப்படி நீ ப்ளாக் எழுதணுமா என்றுதான் கேட்ப்பாங்க . ஒரு சில கல்லடிகளுக்காக ஒதுங்கிப் போக நான் விரும்பல . இந்த மாதிரியான எதிர்ப்புகள்தான் என்னை மேலும் எழுத தூண்டுகின்றன .

மதார் said...

என்னுடைய இந்த பின்னூட்டம் வெளிவிடுவதும் மறுப்பதும் உங்கள் உரிமை . இதைப் பற்றி வெளியே சொல்ல எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை . ஒரு உரையாடலில் நடந்தவைகளை இவர்தான் என்று என்னால் உலகறியச் செய்து அவரை அசிங்கபடுத்த விரும்பவில்லை .

butterfly Surya said...

நல்லாவே நடக்குது. இத்தனை நாள் பேசவேண்டாமென்று இருந்தேன்./////////

இப்போதாவது பேசினீர்களே..?

தேவையான பதிவு புதுகை..

நன்றி.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன்

pudugaithendral said...

வாங்க சேட்டைத்தம்பி,

என்னைப்பற்றி நீங்கள் கூறியிருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்.

pudugaithendral said...

முன்பின் தெரியாதவர் மின்னரட்டைக்கு அழைப்பு அனுப்பினால், மறுக்கலாம். தனிமடல்கள் வருமெனில், அவற்றை ’SPAM'-க்கு அனுப்பலாம். வலைப்பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் வைக்கலாம். இப்படி வலையுலகில் நேரக்கூடிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க பலவழிகள் உள்ளன.//

இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்ங்க. பதிவில் நான் சொல்லியிருப்பதை நல்லா படிச்சு பாருங்க. தவிர்க்க எங்களுக்கும் தெரியும். அதைத்தான்பலரும் செஞ்சுகிட்டு இருக்காங்க.

pudugaithendral said...

பொத்தம்பொதுவாக ஆண் பதிவர்களால் பெண் பதிவர்களுக்கு தொல்லை ஏற்படுகிறது என்பது போல நீங்கள் எழுதியிருப்பதை ஒரு ஆண் என்ற முறையிலும், ஒரு வலைப்பதிவாளராகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறவன் என்ற முறையிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

ஆஹா, பதிவை சரியா படிக்கவில்லை போல. எல்லோராலும் தொந்திரவு என்பது எங்கும் சாத்தியமில்லை. நல்ல உள்ளங்களும் இருக்காங்க. சில புல்லுருவிகள் இருக்காங்க என்பதைத் தான் சொன்னேன்.

நீங்க வன்மையா கண்டிச்சா அதுக்காக நான் என்ன செய்ய முடியும். நீங்க உங்க கண்டிப்பை தொடருங்க. நான் சொல்வதை சொல்வேன். எது உண்மையோ அதை சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லையே.

pudugaithendral said...

வாங்க பொற்கொடி,

என்னைக் கேட்டால் மிகவும் தெரிந்த சில பேரை தவிர்த்து எவருடனும் சாட் (ஆண் பெண் பேதமெல்லாம் இல்லை) எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்வேன்.//

ஆமாம் .

இதை பத்தி எழுத ஆரம்பிச்சா 4-5 பதிவுக்கு மேட்டர் தேறும் போல‌யே!//

கண்டிப்பா தேறும். வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி பிரதாப்

pudugaithendral said...

சில கல்லடிகளுக்காக ஒதுங்கிப் போக நான் விரும்பல . இந்த மாதிரியான எதிர்ப்புகள்தான் என்னை மேலும் எழுத தூண்டுகின்றன .//

இந்த எண்ணம் எனக்கும் உண்டு அதனால்தான் விடாமல் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதார்

pudugaithendral said...

ஒரு உரையாடலில் நடந்தவைகளை இவர்தான் என்று என்னால் உலகறியச் செய்து அவரை அசிங்கபடுத்த விரும்பவில்லை .//

நல்ல எண்ணம். வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நன்றி சூர்யா

Vidhoosh said...

எங்கங்க என் பின்னூட்டத்தைக் காணோம்?? :( தனி மடலில் உங்கள் தொலைபேசி எண் அனுப்ப விருப்பமிருந்தால் அனுப்புங்களேன் :)

settaikkaran said...

//ஆஹா, பதிவை சரியா படிக்கவில்லை போல.//

ஒருமுறைக்கு பலமுறை படித்தேன். :-)

நீங்களும் எனது பின்னூட்டத்தின் முதல் பத்தியைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் முத்தாய்ப்பாக சொல்லியிருப்பதென்ன?

//என்னதான் காலம் மாறினாலும் மாட்ர்னானாலும், படித்தாலும் பெண்ணை போகப்பொருளாகவே பார்க்கும் ஆணின் அடிப்படை புத்தி மாறாவிட்டால் ஒன்றும் நடக்கது.//

இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு? "அடிப்படை புத்தி" என்ற ஒரு வார்த்தையில் சமநோக்குடைய ஆண்களுக்கும் சேர்த்தல்லவா சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்? உங்களது பதிவுக்குப் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் கூட சராசரி ஆண் மற்றும் சராசரி பெண்ணின் அடிப்படை புத்தி என்ன என்று நம்மால் கண்டுகொள்ள முடியாது என்பது உங்களுக்கும் தெரியாமலா போயிருக்கும்? மனிதமனத்தின் ஆழத்தை யார் அறிவார்கள்?

//பிறன் மனை நோக்காமல், ஒழுக்கமாக வாழ்ந்து தன் மனைவியைத் தவிர மற்றவர் அனைவரையும் சகோதரியாக பாவிக்கும் எண்ணம் வந்தால் நல்லது.
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே உதிக்கலாம். ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது.//

இந்தப் பத்தி சற்றே உபரியாகப் போயிருக்கிற உபதேசம் என்பதோடு, ஆண்களில் இந்த மாற்றம் நிகழாது என்று முடித்திருக்கிறீர்கள். இப்படியொரு பொதுமைப்படுத்துகிற எதிர்மறையான சிந்தனையை உங்களைப் போன்ற சமநோக்குடைய பதிவரிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த நெருடலின் காரணமாகவே எனது பின்னூட்டம்.

//எல்லோராலும் தொந்திரவு என்பது எங்கும் சாத்தியமில்லை. நல்ல உள்ளங்களும் இருக்காங்க. சில புல்லுருவிகள் இருக்காங்க என்பதைத் தான் சொன்னேன்.//

உங்க ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தது. ஃபினிஷிங் சரியில்லை!

//நீங்க வன்மையா கண்டிச்சா அதுக்காக நான் என்ன செய்ய முடியும். நீங்க உங்க கண்டிப்பை தொடருங்க. நான் சொல்வதை சொல்வேன். எது உண்மையோ அதை சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லையே.//

எனது கண்டனத்தைப் படித்து உடனே உங்களது கருத்துக்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுவீர்கள் என்பது அல்ல எனது நோக்கம். உங்களது பதிவைப் படித்து முடித்ததும் ஏற்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இப்போதும் அதையே விரும்புகிறேன்.

மிக்க நன்றி!!

pudugaithendral said...

உங்க பின்னூட்டம் வரலையே வித்யா,
வந்திருந்தா கண்டிப்பா பிரசூரிச்சிருப்பேன்.

என் மொபைல் நம்பர் கொடுக்க கஷ்டமில்லை. உங்க ஐடிதான் எனக்குத் தெரியாது. என் ஐடி என் ஃப்ரொபைலிலேயே இருக்கு. :))

மதார் said...

//முன்பின் தெரியாதவர் மின்னரட்டைக்கு அழைப்பு அனுப்பினால், மறுக்கலாம். தனிமடல்கள் வருமெனில், அவற்றை ’SPAM'-க்கு அனுப்பலாம். வலைப்பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் வைக்கலாம். இப்படி வலையுலகில் நேரக்கூடிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க பலவழிகள் உள்ளன. இதையெல்லாம் மீறியும் ஆண்களால் பெண்பதிவர்களுக்குத் தொல்லை ஏற்படுகின்றதென்றால், தவறு ஆண்பதிவாளர்கள் மீது மட்டும் இருக்க முடியாது என்பதே வெளிப்படை!//

என்னங்க பண்றது எல்லோரையும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க முடியாதே . ஒரு அனுபவத்திற்கு பிறகுதானே முழிச்சுக்கிறது. நல்லவங்கன்னு நம்பிதானே முன்பின் தெரியதவங்களிடம் பழகி ஒரு நல்ல நட்பு வருது . ஆள் சரியில்லன்னு தெரிஞ்ச பிறகு தானே ஒதுங்குறோம் .

pudugaithendral said...

இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு? "அடிப்படை புத்தி" என்ற ஒரு வார்த்தையில் சமநோக்குடைய ஆண்களுக்கும் சேர்த்தல்லவா சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்? உங்களது பதிவுக்குப் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் கூட சராசரி ஆண் மற்றும் சராசரி பெண்ணின் அடிப்படை புத்தி என்ன என்று நம்மால் கண்டுகொள்ள முடியாது என்பது உங்களுக்கும் தெரியாமலா போயிருக்கும்? மனிதமனத்தின் ஆழத்தை யார் அறிவார்கள்?//

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். இப்போது பெண்கள் சீரியல் பார்த்து குடும்பதை சரிவர கவனிப்பதில்லை என்று பெயர். இதைப்பத்தி கமெண்டும் போது பொத்தாம் படையாகத்தான் சொல்வார்கள்.

சீரியல்பக்கமே ஏன் டீவிபக்கமே போகாமல் உபயோகமாக நேரத்தை செலவழித்து, குடும்பத்தை பேணும் என் போன்றவர்களும் இருக்காங்க. ஆனால் பெண்கள் என பொதுவாகத்தான் சொல்வார்கள்.
நான் அப்படியில்லை என்றால் இது நமக்கில்லை என புரிந்து கொள்வேன் அவ்வளவுதான்.

பின்னூட்டத்தை வைத்தோ பதிவுகளை வைத்தோ இவர் நல்லவர், கெட்டவர் இவரின் எண்ண ஓட்டம் என்ன எனப்தையெல்லாம் எப்படி கண்டு கொள்ள முடியும். அன்றாடம் நாம் சந்திக்கும் முகம் தெரிந்த நண்பர்களையே நம்மால் உணர முடியாது.

எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லவில்லை. ஓவ்வொரு வகைகளிலும் சில ஆண்கள் தவறாக இருக்கிறார்கள். எனக்கு ஆண்கள் என்றால் வெறுப்போ தவறான எண்ணமோ கிடையாது.

இப்போதும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த ஆண் சமூகத்துக்கு சாட்டையடி கொடுக்கவில்லை. அது என் எண்ணமும் இல்லை. தவறு செய்பவர்கள் அதிகம். நல்ல மனிதர்கள் குறைவு. இது இருபாலருக்கும் பொருந்தும்.

விவாதம் செய்ய வில்லை தம்பி. என் கருத்தைச் சொல்கிறேன்

pudugaithendral said...

உங்க பின்னூட்டம் தப்புன்னு சொல்லலியே,

இது பேசி தீர்க்க கூடிய விஷ்யமில்லை சேட்டைத் தம்பி.

முடித்ததும் ஏற்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இப்போதும் அதையே விரும்புகிறேன். //

உங்கள் ஆதங்கம் புரிகிறது. என் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு அடியிலும் இப்படிப்பட்டவர்களை சந்தித்து இந்த மன உளைச்சளிலிருந்து மீண்டு தான் பெண்கள் சாதிக்கிறார்கள்.

இது பத்தி பேசினா நிறைய்ய்ய்ய்ய்ய்ய் பேசணும். அதெல்லாம் வேண்டாம்.

நீங்கள் சொல்வதை நான் புரிந்து கொண்டேன்.

சென்ஷி said...

செம்மச் சூடு.. :)

(நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்ன்னு சொல்லுவாங்க. அது நல்ல மாட்டுக்கு மாத்திரம்தான் போல!)

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்ஷி

pudugaithendral said...

வாங்க் வித்யா,

இவ்ளோ அலுப்பு ஏன் என்று புரியவில்லை.// அலுப்பு என்பதை விட அதுதான் உண்மை.

எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம்தான், அது எங்கே எப்போ யாரிடம் என்பதை பொறுத்தே பின் விளைவுகள் அமைகிறது. அன்றே

நானும் பொங்கி இருந்தால், இருந்த ஆவேச சூழ்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணையை விட்டமாதிரி ஆகி இருந்திருக்கும். மேலும் அவலமாகி இருக்கும். ஈகோ அதிகமாகி மேலும் மேலும் பெருகி கொண்டே போகும். நீ பேசு நான் பேசு என்று இரண்டு பிரிவாகி ... நாம் அதற்கா இங்கு எழுதிக் கொண்டிருக்கிறோம்.//

அதனால்தான் ஆவசப்படாமல் இருப்பது நல்லது என்று நானும் நினைக்கிறேன். இதற்காக நாம் இங்கே எழுத வரவில்லை என்பதுதான் என் எண்ணமும்.

ஏன் பெண்பதிவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லைன்னு கேட்டிருந்தார். கண்டனம் தெரிவிச்சா என்ன ஆகப்போகுது. இப்படிஒரு கூட்டமே அலையுதுன்னு சொல்லத்தான் பதிவு போட்டேன்.

pudugaithendral said...

எவ்வளவோ நண்பர்கள் போட்டோவும், தொலைபேசி என்னும் கேட்டுத் "தரமுடியாது" என்று நேரிடையாகவே சொல்லி இருக்கிறேன். அதே போல, வீடு வரைக்கும் அழைத்து போய் மாமனார் மாமியார் வரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து, குடும்ப நண்பர்களாக ஆனவர்களும் உண்டு.//

சேம் பளட்டுன்னு சொல்லிக்கவா? இங்கே எனக்குக் கிடைத்திருக்கும் நட்புகள், உறவுகள்(யுனிவர்சல் அக்கா மாதிரி இங்க எனக்கு நிறைய்ய்ய்ய்ய் உடன்பிறப்புக்கள்)
எல்லோரையும் என் கணவருக்குத் தெரியும். பலரை சந்தித்தும் இருக்கிறார். ஆரோக்கியமான உறவுகள், நல்ல உள்ளங்கள் ஆண்டவன் எனக்குக் கொடுத்த வரமாகவும் நம்புகிறேன்.

pudugaithendral said...

//ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது. ///
இல்லீங்க. எல்லோரும் அப்படி கிடையாது.
பத்தில் ஒன்று பழுது... அதற்காக ஒதுங்கிப் போவது !!! :(//

பத்தில் ஒன்று பழுதுன்னுதான் நான் சொல்றேன். மத்ததும் பழுதாத்தான் இருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்திடுது பாருங்க. :))))

பெண்கள் நிச்சயம் பதிவர் சந்திப்புக்கு வரவேண்டும் என்பதே என் ஆவல். பார்க்கலாம். :)//

இந்த அரசியல் எல்லாம் தெரியாமல் எந்த பெண்ணும் புதிதாக பிரச்சனைக்குள் மாட்டிக்கொள்ளக்கூடாதே என்பதே என் எண்ணம்.

எங்க சந்திப்புன்னு சொல்லுங்க நான் கண்டிப்பா வருவேன்.

மதார் said...

இந்த பதிவர் சந்திப்பில் எனக்கும் கலந்து கொள்ள ஆசைதான் . ஆனா இதுவரைக்கும் யாரும் எனக்கு நட்பாகல.சொல்லப்போனா நான் பதிவர்கள் யார்கூடயும் நட்பு வச்சுக்கல. இங்கே எவ்வளவு பெண்பதிவர்கள் உண்டு அதும் சென்னையில் எத்தனைபேர் என்று கூட தெரியாது . இதில் தனி ஆளாய் எப்படி பதிவர் சந்திப்புக்கு வருவது ? அதுவும் சந்திப்பு வைக்கும் நேரம் மாலை நேரம் . அது முடிவடைய எப்படியும் இரவு 9 மணி ஆனால் என்னால் தனியாக வீடு திரும்பவும் முடியாது . அதையும் தாண்டி வந்தால் கூட எனக்கு வந்த பின்னூட்டங்களை கொண்டு யோசித்தால் அங்கு எனக்கு என்ன மாதிரியான ஒரு பாதுகாப்பு இருக்கும் என்று என்னும்போதே நீர்க்குமிழி போல் என் பதிவர் சந்திப்பு வருகையும் ஒரு நொடியில் உடைஞ்சு போகுது .

settaikkaran said...

//என்னங்க பண்றது எல்லோரையும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க முடியாதே . ஒரு அனுபவத்திற்கு பிறகுதானே முழிச்சுக்கிறது. நல்லவங்கன்னு நம்பிதானே முன்பின் தெரியதவங்களிடம் பழகி ஒரு நல்ல நட்பு வருது . ஆள் சரியில்லன்னு தெரிஞ்ச பிறகு தானே ஒதுங்குறோம்.//

எனக்கும் சில பெண்களால் தொல்லை ஏற்பட்டிருக்கிறது - சேட்டைக்காரன் என்பது தவிர என்னைப் பற்றிய தகவல்களை எவருக்குமே நான் அளிக்காதபோதும் கூட சிலர் வலிய வந்து மின்னரட்டைக்கு அழைத்திருக்கிறார்கள்; உரையாடியிருக்கிறார்கள். பின்னாளில் தங்கள் வலைப்பதிவிலேயே எனது பெயரையும் குறிப்பிட்டு காரணமேயில்லாமல் கிண்டல் செய்திருக்கிறார்கள். அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக எல்லாப் பெண்பதிவர்களும் அப்படித்தான் என்று நான் சொன்னால் எப்படியிருக்கும்?

மேலும் இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் "பெண்கள் என்பதால் தான் பின்னூட்டம் இடுகிறார்கள்," என்பது போல ஒரு கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் வருந்தத்தக்கது. இனிமேல் பெண்வலைப்பதிவர்களின் இடுகையைப் படித்து விட்டு பின்னூட்டமிட்டால், ஜொள் விடுகிறான் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாயிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், என்னிடம் சில பெண்பதிவர்கள் யாரால் தங்களுக்கு அதிகம் தொல்லை வருகிறது என்று சொல்லுகிறார்களோ, அவர்களைத் தொடர்ந்து சகித்துக்கொண்டு, புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; ’வலைப்பதிவைப் படித்தீர்களா? பிடித்திருந்தால் கருத்து எழுதுங்கள், இல்லாவிட்டால் பரவாயில்லை,’ என்று போய்க்கொண்டிருக்கிறவர்களை அவமானப்படுத்துவதில் அற்ப சந்தோஷம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு மாதங்களில் வலையுலகம் பற்றி நிரம்பக்கற்றுக்கொண்டு விட்டேன். கொஞ்சம் பயமாய்த்தானிருக்கிறது. நேரத்தையும் உழைப்பையும் இப்படி விரயம் செய்து வாங்கிக்கட்டிக்கொள்வதற்கு, எழுதுவதையே நிறுத்தி விட்டு பிழைப்பைப் பார்க்கப் போகலாம் போலிருக்கிறது.

Vidhoosh said...

பழுதா இல்லையான்னு பயந்து உட்காந்துகொண்டிருந்தால் ஆகப் போவது ஏதுமில்லை. உண்மையில் நான் போய் பார்த்தவரை, பதிவர் சந்திப்பு போன்ற ஒன்றாக, கொஞ்சம் ஆக்க பூர்வமாக இருந்தது உரையாடல் கதை பட்டறை மற்றும் சொற்கப்பல் விமர்சனக் குழு. இரண்டில் சிறந்தது என்றால் சொற்கப்பலையே சொல்வேன்.
எங்கேனும் இப்படி organised மற்றும் ஓரளவுக்கு secured இடமாக இருந்தால் எப்படியும் சென்றுவிடவே முயற்சிக்கிறேன்.

மற்றபடி மெரினா கடற்கரை போன்ற இடங்களில் அதுவும் மாலை ஐந்தரைக்கு மேல் போய் சேர்ந்து பேசி வர, நிச்சயம் நேரமாகி விடும், சனிக்கிழமை என்றால் 'குடி'மகன்கள் தொல்லை வேறு 'பீச்சாங்கரை' பக்கம் ஜாஸ்தியாகிவிடும் என்று முற்றிலும் தவிர்த்து விடுவேன்.

:) மற்றபடி,
///மத்ததும் பழுதாத்தான் இருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்திடுது பாருங்க. :))))/////
:)) மனசுக்குள் என்னவேணா நினைச்சுக்கோங்க - அதை பற்றி யார் என்ன செய்து விட முடியும். மற்றொருவரை பற்றிய உடல் சார்ந்த ஆகச் சிறந்த விமர்சனங்களை பொதுவில் வைக்காதீங்க என்பது மட்டுமே நான் அப்போதும் சொன்னேன் இப்போதும் சொல்கிறேன். :))

என்னவோ போடா மாதவா மட்டுமே எப்போதும் :))

Vidhoosh said...

profile எங்கே இருக்குன்னு கண்டு பிடிக்க முடியலை. :(

நிஜமா நல்லவன் said...

என்ன ஒரே ரணகளமா இருக்கு:)

முகுந்த்; Amma said...

ஏங்க, எப்படியெல்லாம் கூட நடக்குதா. பயம்மா இருக்குதுங்க பதிவெழுத.

பகிர்வுக்கு நன்றிங்க