நிலமை இப்படி ஆகிப்போச்சேன்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன்.
”ஓடமும் ஒரு நாள் கரையிலேன்னு” சொல்லுவாங்க அதுமாதிரில்ல
ஆகிப்போச்சு.
ஒரு இருவது வருடங்களுக்கு முன்னால் மங்கையர் மலரில்
வரும் திருமண விளம்பரங்களில் முதிர்கன்னிகள் புகைப்படங்கள்
பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். இப்போது நிலமைத் தலைகீழ்.
40 வயதுக்கும் பெண் தேடும் ஆண்கள் படங்களை பார்க்கும்
பொழுது பாவமாக இருக்கிறது. அதே பத்திரிகையில் மணமகள்
தேவை விளம்பரங்கள் அதிகமாகவும், மணமகன் தேவை
விளம்பரங்கள் குறைவாகவும் வருவதைப்பார்க்கும் பொழுது
பெண்கள் திருமணமே வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்களா!!
எனத் தோணும்.
சில பெண்களுக்கு எதிர்பார்ப்பு அதாவது கணவனாக
வரப்போகும் ஆணின் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்பொழுது ஒரே பிள்ளையானாலும் மாமன்,மாமியுடன்
கூடி வாழ சில பெண்கள் விரும்புவதில்லை. தாலி
கட்டும் முன்னேயே தனிக்குடித்தனத்திற்கு ஒப்புதல்
பெற்றுதான் பல கல்யாணங்கள் நடக்கிறது. சமீபத்தில்
ஒரு பெண் மாதம் 11/2 லட்சம் தான் சம்பளமா??
அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது எனக்
கேட்டதை அறிந்து நொந்து நூடுல்ஸானேன்.
மாதம் ஒண்ணரை லட்சம் சம்பளம் போதாதா!!!’
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏன் இந்த மாற்றம்?? இது ஆரோக்கியமானதா??? பேசினால்
பிரச்சனைதான் அதிகமாகும்னு தோணுது.
எண்ணச் சிதறல் எனும் வலைப்பூவில் இந்த வார
நட்சத்திரம் குறும்பன் அவர்கள் எழுதியிருந்த இந்தப்
பதிவை படித்த பொழுது மனதில் தோன்றியவைகளை
இங்கே பதிகிறேன்.
வரதட்சனை, சீர் எனக் கொடுத்து மாளாது என
பெண்குழந்தைகளை கொலை செய்துவிட்டார்கள்.
இப்போது 40 தாண்டியும் பலர் முதிர் கண்ணன்களாக
இருக்கிறார்கள். இதைத் தவிரவும் பல காரணங்கள்.
அதில் முக்கியமானது பொண்ணுங்க அதிகம் படிச்சிருப்பது.
அந்த பதிவில் சொல்லியிருப்பது போல படிக்க வேண்டிய
வயதில் ஆண் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக
இருந்து விடுகிறார்கள். பாலிடெக்னிக், ஐஐடி என
டிப்ளமா படித்தமோ வேலைக்கு போனமா என்று
பணம் சம்பாதிக்க போய்விட இப்போது பல பெண்கள்
சர்வசாதரணமாக எம் பீ ஏ படித்து முடித்து நல்ல
வேலைகளில் இருக்கிறார்கள். தனக்கேற்ற படிப்பு
இல்லாத, வேலை இல்லாத மாப்பிள்ளைக்கு
நோ சொல்லி விடுகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் பொதுத் தேர்வில் பெண்கள்
அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதைப்
பார்த்தாலே தெரியவில்லை. அதிகம் ஃபெயிலாவதும்
ஆண் குழந்தைகள் தான்.
இந்த வயதில் பிள்ளைக்கு உயர்கல்வி பற்றி பேசி
அவனுக்கு எதில் விருப்பமோ அது நல்லதா என
பார்த்து நல்ல டிகிரி வாங்க வைக்க வேண்டியது
பெற்றவர்களின் பொறுப்பு. இதைச் செய்யத்
தவறினால் அவனின் வேலை வாய்ப்பை பொறுத்துதான்
திருமண வாழ்க்கையும் அமையும் என்பது நிதர்சன
மான உண்மை.
ஆண்குழந்தைகளின் படிப்பைப் பத்திபேசும் பொழுது
சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் நடந்த
கலந்துரையாடல் நினைவுக்கு வருகிறது.
”இப்ப பசங்களை படிக்க உக்கார வைக்கறதுக்குள்ள
தாவு தீந்துடுதுங்க. போதும் எடுத்து வைன்னு!! எப்ப
சொல்வோம்னு காத்துகிட்டு இருக்காங்க.!! நானும்
என் மனைவியும் அன்றாடம் படும் டென்ஷன் இது!”
அப்படின்னு புலம்பினார்.
உங்களுக்கு பரவாயில்லிங்க. வீட்டுல ஒரு பொண்ணாவது
இருக்கு(!!) எனக்கும் இரண்டும் பசங்க. இவங்க
எதிர்காலத்தை நினைச்சு மனசு பிசயது தினமும்.
எப்படி கரை சேர்க்கப்போறோனோ என்று மேலும்
வருத்தப்பட்டார்.
பதின்ம வயதில் பெண்பிள்ளையை கையாளுவதில்
அவ்வளவு சிரமம் இருப்பதில்லை. அதுவே ஆண்குழந்தைகள்?
இதனால்தானே பர்சனாலிட்டு டெவலப்மெண்ட் பதிவுகள்
வந்தன! உண்மையில் அந்த வயதில் ஆண்பிள்ளையை
சரிவரக் கையாளா விட்டால் ரொம்ப கஷ்டம்.
பயமுறுத்த வில்லை. உளவியல் ரீதியா கற்றதைச்
சொல்கிறேன்.
வரதட்சணைக் கொடுமை எதிர்காலத்தில் இருக்காது.
(இப்ப இருக்கு. நேற்று பழம்பெரும் நடிகை ஜமுனாவின்
மகளை வரதட்சணைக் கொடுமை செய்கிறார்கள் என்று
போலீஸ் ஷ்டேஷனில் கம்ப்ளையண்ட் கொடுத்து
மாமனும் மாமியும் அரெஸ்ட் செய்யப்பட கணவர்
ஆளையே காணமாம்) வரதட்சணைக் கூட வேண்டாம்,
நகையோ நட்டோ நீங்க எது போட்டாலும் சரின்ன்னுதான்
பல மணமகன் வீட்டுல சொல்றாங்க. ஆனாலும்
குதிரைக் கொம்பா போச்சு!!
கிடைக்கும் பெண்களும் ஆட்டிவைப்பதாக பல
செய்திகள், பத்திரிகைகளில் வருவதும் அதை
ஊர்ஜிதப்படுத்துகின்றன. இல்லாவிட்டால்
பெங்களூரில் தங்கமணிகள் சங்கம் ஆரம்பிச்சிருப்பாங்களா!
டைரக்டர் விசுவுக்கு அப்பவே வேண்டுகோள் வெச்சு
பதிவு போட்டிருந்தேன்.
அப்ப பெண்கள் கல்யாண மார்கெட்டில் விலைபோகாமல்
கஷ்டப்பட்டது மகாபாவம் என்றால் இப்போது ஆண்குழந்தையே
வேணாம் என தந்தையே நினைக்கும் அளவுக்கு நிலை
இருப்பதை என்னவென்று சொல்வது????
மேச்சா கழுதை இல்லாட்டி பரதேசம் என்று சொல்வார்களே
அப்படி இல்லாமல் நடுநிலையான ஒரு நிலை உருவாகாதா!!!
எனக்கும் மகன் இருக்கிறான். கவலைப்பட வேண்டுமா?
வேண்டாமா? புரியவில்லை
இந்தப் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது
Get Your Own Hindi Songs Player at Music Plugin
நான் ஆதவனின் முதிர்கண்ணன்கள் படிச்சிருக்கீங்களா?
பிரம்மசாரிகளுக்குன்னு பாலான்னுஒருத்தர் பதிவு எழுதியிருக்கார்.
35 comments:
mic testing
இதுக்கு என்னாத்த பின்னூட்டம் போடுறது...ஒன்னுமே புரியல. ;))
//(இப்ப இருக்கு. நேற்று பழம்பெரும் நடிகை ஜமுனாவின்
மகளை வரதட்சணைக் கொடுமை செய்கிறார்கள் என்று
போலீஸ் ஷ்டேஷனில் கம்ப்ளையண்ட் கொடுத்து
மாமனும் மாமியும் அரெஸ்ட் செய்யப்பட கணவர்
ஆளையே காணமாம்) //
அக்கா இந்தியாவில் போடப்படும் வரதட்சணை வழக்குகளில் 90% பொய் வழக்குகள். என் எம்.பி.ஏ கிளாஸ்மேட் ஒருத்தி கணவர் பிடிக்காம டைவர்ஸ் பண்ணும் முடிவெடுத்தாள். ஆனால் அவர் இன்னும் கொஞ்சம்நாள் சேர்ந்து வாழ்ந்து பார்ப்போம். சரியில்லாட்டி விலகிருவோம்னாரு. டைவர்ஸ்க்கு உடனே சம்மதிக்கலை. பார்த்தா..உடனே ஒரு வரதட்சணைக் கொடுமை வழக்கை அவர்மேல போட்டா. அவரே டைவர்ஸ் நோட்டீஸ் உடனே அனுப்பிட்டாரு. இதுமாதிரிதான் பல கேஸ்கள் :(
//மாதம் ஒண்ணரை லட்சம் சம்பளம் போதாதா!!!’
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
ஆண்கள் தங்களை விட குறைவா சம்பாதிக்கும் பெண்களை கல்யாணம் செய்யற மாதிரி , பெண்களும் இன்னும் கொஞ்ச நாள்ல பக்குவத்துக்கு வந்துடுவாங்க.
ஆண் என்ன பெண் என்னா எல்லாம் ஒன்றுதான் என்ற காலமும் மலையேறிடும் போலிருக்குங்க...
படிச்சா, நல்லா சம்பாதிச்சா, நல்ல குணவானாக இருந்தா பெண் கிடைக்கும் என்ற நிலைமைதான் இப்போது..
ரொம்பவும் கவலைப்பட வேண்டிய விஷயம். எப்படி கையாள்வது என்று அறிவுரை கூற 76 வயதான எனக்கே சொல்லத்தெரியவில்லை என்பது என்னைத்தலை குனிய வைக்கிறது.
ம்
:(
வருகைக்கு நன்றி கோபி
ஆமாம் அப்துல்லா,
வரதட்சணைக்கொடுமைன்னு சும்மானாச்சும் வழக்கு தொடுப்பவர்கள அதிகம்னு அதனால அந்த பையனின் குடும்பத்தினர் படும் அவஸ்தைகளும்னு நிறைய்ய கதை கேள்விப்பட்டிருக்கேன்.
யார் யாரோ தவறு செஞ்சுட்டு இப்ப அடுத்த தலைமுறையினர் அவதிப்படறாங்க
வருகைக்கு நன்றி
நீங்க வேற சின்ன அம்மிணி,
அந்த பொண்ணு இப்பத்தான் மாசம் 25ஆயிரம் சம்பளம் வாங்குது. மாப்பிள்ளை ஒண்ணரை லட்சம் சம்ப்ளம் வாங்கினா பத்தாதாம். என்னத்த சொல்ல. :(
வருகைக்கு நன்றி
படிச்சா, நல்லா சம்பாதிச்சா, நல்ல குணவானாக இருந்தா பெண் கிடைக்கும் என்ற நிலைமைதான் இப்போது..//
அப்ப கூட நிறைய்ய பேரு வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க இராகவன். :((
வருத்தப்படாதீங்க ஐயா,
பெண்கள் அவதிப்பட்டுகிட்டு இருந்த போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. மணல்கயிறு, டொளரிகல்யாணம் என விசு எடுத்த படங்கள் அப்போதைய அவலங்களுக்கு சாட்சி.
ஆண்டவனைப் பிரார்த்திப்போம். வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி சிவா
ஆளாளுக்கு விரக்தியின் எல்லையில் நின்று ஊட்டி தற்கொலைப்பாறை எபெக்ட் கொடுக்கிறாங்க பாஸ்
ரொம்ப நல்ல பதிவு.
வாங்க பாஸ்,
கல்யாண வயது வந்தும் பெண்கள்கோவில் அடிப்பிரதட்சணம் செய்தது அந்தக்காலம். ஆண்கள் பியர் அடிச்சு பொங்கி வழிவது இந்தக்காலம். என்ன செய்ய கொடுமை தான்!! :((
நன்றி சரவணக்குமார்
//நடுநிலையான ஒரு நிலை உருவாகாதா!!!//
என் ஏக்கமும் இதுதான்.இருபாலருமே எதிர்பார்ப்புகளை குறைச்சிக்கிட்டா சந்தோஷம்தான்.
என்னத்தங்க சொல்றது.. ஆண்கள் இத்தனை வருசம் பெண்களை திருமணம்ன்ற பெயர்ல டார்ச்சர் பண்ணினதுக்கு இப்ப அனுபவக்கிறாங்க போல!
என் பதிவிற்கான லின்ங் கொடுத்ததுக்கு நன்றிங்க.
இருபாலருமே எதிர்பார்ப்புகளை குறைச்சிக்கிட்டா சந்தோஷம்தான்.//
வாங்க அமைதிச்சாரல்,
பசங்க இப்பல்லாம் பெருசா எதிர்பாக்கறதில்லை. கிடைச்சா சரின்னு தான் இருக்காங்க. ஆனா பெண்கள் ஒவ்வொரு மேட்ரிமோனியல் சைட்லயும் பாருங்க தெரியும்.
வருகைக்கு நன்றி
ஆண்கள் இத்தனை வருசம் பெண்களை திருமணம்ன்ற பெயர்ல டார்ச்சர் பண்ணினதுக்கு இப்ப அனுபவக்கிறாங்க போல!//
ஆமாம் ஆதவன்,
போன தலைமுறை வரை ஆண்கள் ஆடாத ஆட்டம் ஆடி இந்த தலைமுறை ஆண்கள் கஷ்டபடறாங்க.
வருகைக்கு நன்றி
எந்த function / gettogether னு போனாலும் "எங்க தம்பிக்கு இல்ல மகனுக்கு இல்ல அண்ணனுக்கு நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க" அப்படிங்கற வாசகம் ரெம்ப சகஜம் ஆய்டுச்சு. இருவது முப்பது வருஷம் முன்னாடி கள்ளிப்பால் கொடுமைக்கு இன்னைக்கி உலகம் பதில் சொல்லிட்டு இருக்கு. ஆனா யாரோ செஞ்ச தப்புக்கு இன்னைக்கி நம்ம அண்ணன் தம்பிக கஷ்டப்படறாங்ககறது தான் கஷ்டமா இருக்கு. இதுவும் கடந்து போகும்கறது தான் நிதர்சனம். கொஞ்சம் காலம் ஆகும்
நிறைய பேர் எங்கிட்ட, உனக்கென்ன ரெண்டும் பையன், ஹூம்னு பெருமூச்சு விடுவாங்க. ஆனா, இந்தக் காலத்துல ரெண்டு பேரையுமே நிறைய தீமைகளிலிருந்து சமமாத்தான் காப்பாத்த வேண்டியிருக்குன்னு ஏந்தான் புரியமாட்டேங்குதோ!!
என்னாது 11/2 லட்சத்துக்கே யோசிக்குறாய்ங்களா????!!!!!!
அப்ப மித்தவங்க கதி....
என் முந்தைய கமெண்டில் “ரெண்டு பேரும்” என்பது ஆண் குழந்தை, பெண் குழந்தை என இருவரையும் குறிக்கிறது.
//40 வயதுக்கும் பெண் தேடும் ஆண்கள் படங்களை பார்க்கும்
பொழுது பாவமாக இருக்கிறது//
இதில எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. 40 வயசே ஆனாலும், பல ஆண்கள், பெண்களுக்குச் ”சிவந்த நிறம்” என்ற மாறாத அளவுகோல் வைத்திருக்கிறார்கள். இதை விட்டுவிட்டால், நிச்சயம், முதிர்கண்ணன்/கன்னிகள் பெருமளவில் குறைந்து போவார்கள்.
வாங்க அப்பாவி தங்க்ஸ்,
இப்படித்தான் நிலைமை இருக்கு. என்னத்த கடந்துபோய்...
ஆனா யாரோ செஞ்ச தப்புக்கு இன்னைக்கி நம்ம அண்ணன் தம்பிக கஷ்டப்படறாங்ககறது தான் கஷ்டமா இருக்கு. //
ம்ம்ம் ப்ச் அதான் கஷ்டமா இருக்கு. அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க கஷ்டபடும்போது மனசு வருத்தமாகுது.
வருகைக்கு நன்றிபா
ஆமாம் ஹுசைனம்மா,
பொண்ணை பெத்திருக்கே ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கறவரைக்கும் நெருப்பை மடியில கட்டிகிட்டா மாதிர்ன்னு டயலாக் அந்தக்காலம். பசங்க வழிதவறிடாம பாதுகாப்பது கர்ப்ப காலத்தைவிட கஷ்டம்.
வருகைக்கு நன்றி
அப்ப மித்தவங்க கதி....//
முன்பு ஆண்கள் அது சரியில்லை இது சரியில்லன்னு சொன்னாங்கள்ல... இப்ப இப்படி. வேறென்னத்த சொல்ல. வருகைக்கு நன்றி கண்ணா
வாங்க ஹுசைனம்மா,
சிவந்த நிறமா நீங்க வேற அப்படி கேட்டா 60ஆம் கல்யாணம் கூட நடக்காதுன்னு புரிஞ்சா நல்லது.
வருகைக்கு நன்றி
என்னப்பு !!! பயம் பயமா ந்யூஸ் கொடுக்கிறீங்க. சும்மாவே பையங்கள வைச்சுகிட்டு இந்த ஊர்ல இருக்கறதால உண்டான ஸ்பெஷல் வயத்தக்கலக்கல் .இந்த ந்யூஸ் கடுக்கா இல்ல கொடுக்குது!!( நம்ப ஊர் பொண்ண கல்யாணம் பன்னனும்னா:((
புதியவனை அறிமுகபடுத்தும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி புதுகை!
www.balavin.wordpress.com
வாங்க ஜெயஸ்ரீ,
இதான் இப்ப நடப்பு. முன்னெல்லாம் சமைஞ்சதும் ஜாதக்கட்டை எடுத்தாத்தான் 21 வயசுலயாவது கல்யாணம் நடக்கும்னு சொல்வாங்க. இப்ப ஆண்கள் நிலமை அதுதான். அவங்க டீன் ஏஜ் ஆரம்பிச்சதுமே யோசிச்சு பேசி முடிவு செய்யும் காலம் வராம இருக்கணும்.
வருகைக்கு நன்றி பாலா
உங்கள் பதிவு மிக அருமை
சமீபத்தில் என் தோழி கூட இப்படித்தான் இரண்டும் ஆண் குழந்தைகளாகி விட்டதே என்று வருத்தப்பட்டார்....பெண்ணைப் பெற்றால் வேறு விதமான பயம்...
இருக்கும் சூழலைப் பொறுத்ததுதான் கலா...நீங்கள் வருத்தப்படவேண்டாம்..எல்லாம் நல்லபடி நடக்கும்..
thanks pasamalar
Post a Comment