Tuesday, April 27, 2010

பதின்மவயதுக்குழந்தைகளுக்கு சத்தான உணவு

தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்னு முண்டாசு கவிஞர் பாடிவெச்சதிலேயே
உணவு எவ்வளவு முக்கியம்னு தெரியுது. அதிலயும்
நாம் சாப்பிடும் உணவு சத்தான உணவா இருப்பது
ரொம்ப முக்கியம்.

குழந்தை பிறந்ததும் முதல் உணவு அன்னையின்
அமுதான தாய்ப்பால்தான். அதில் கிடைக்காத
சத்துக்களே இல்லை. அதன் பிறகு குழந்தைக்கு
திட உணவு கொடுக்கும்போது கூட சத்தான
உணவா கொடுக்கணும். இல்லாட்டி உடல்பருமன்,
அல்லது குறைவான எடைன்னு குழந்தை அவதிப்படும்.

பிறந்த குழந்தையை வளர்ப்பதைவிட பள்ளிப்போகும் வயது
குழந்தையை வளப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா
உள்ளதிலேயே ரொம்ப கஷ்டமான ஸ்டேஜ்னு சொன்னா
அது இந்த பதின்மவயதுதான்.

சின்னக்குழந்தையை மிரட்டி, திட்டி, கொஞ்சின்னு
எப்பாடுபட்டாவது சாப்பிடவெச்சிடலாம். வாயில
ஊட்டி ஏதோ ஒரு வகையா சாப்பாட்டை உள்ளேத்
தள்ளிடலாம். ஆனா இந்த பதின்மவயதுக்குழந்தையை
இடுப்பில வெச்சு ஊட்டவா முடியும்?

ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்துக்கு வரப்போகிறாள்னு
அவளோட உடல்வளர்ச்சி கட்டியம் கூற ஆரம்பிச்சதும்
வீட்டுல ஆரம்பிச்சிடுவாங்க. சத்தான உணவு கொடுப்பாங்க.
பூப்பெய்தியதும் பச்சை முட்டை, நல்லெண்ணெய்,
உளுந்தங்களி, அது இதுன்னு நல்லா கவனிப்பாங்க.
நெய், பால், இடுப்பை பலமாக்க திண்பண்டங்கள்னு
ஓவ்வொரு ஊரிலும் ஒரு பழக்கம் இருக்கும்.
எப்படியோ பொண்ணை சரியா கவனிச்சிடறாங்கன்னு
சொல்வேன்.

ஆனா இந்த பதின்மவயது ஆண்குழந்தைகள்தான்
ரொம்ப பாவம். தட்டு நிறைய்ய சோறு வெச்சா
சரி. பத்தோ பதினொண்ணோ தோசைன்னு ஊத்தி
போட்டா சரின்னு இருப்பாங்க சிலர். இதனால
அந்த வயசுபசங்க சரியான வளர்ச்சி இலலாமா
ஒண்ணா ரொம்ப குண்டா இல்லாட்டி ஒல்லியா
இருப்பாங்க. முறையான கவனிப்பு இல்லாததுதான்
காரணம். எங்க ஊர் பக்கம் ஒரு வாக்கியம் சொல்லி
கேள்விப்பட்டிருக்கேன். “குறத்தி பிள்ளைபெற
குறவன் மருந்து சாப்பிட்டானாம்” என்பதுதான் அது.

சத்தான உணவு குறவனுக்கு கிடைக்காட்டி பிரச்சனைதானே!!!
யாருக்காவது பதின்மவயதுக் குழந்தைக்கு என்ன
கொடுக்கணும்? எப்படிக்கொடுக்கணும்னு தெரியுமா?
காலங்காலமா சமைஞ்ச பொண்ணு, சமைய போகும்
பொண்ணுன்னு எல்லாம்பொண்ணையே டார்கட் கட்டி
ஊட்டச்சத்தை கொடுத்தாங்க.

அதுக்காக நாம அப்புடியே விட்டுடலாமா?
எப்படி உணவு கொடுக்கணும்? எப்பப்போ கொடுக்கணும்?
இதைப்பத்தி பேசுவோமா??

தெரிஞ்சவங்க உங்க கருத்தையும் சொல்லுங்க.
பலருக்கும் உதவப்போகுது இந்தப் பதிவு.


3 comments:

நட்புடன் ஜமால் said...

எங்களுக்காக குரல் குடுக்கும் உங்களுக்கு ...

சீக்கிரம் பதிவிடுங்க, எதையெல்லாம் மிஸ் பன்னியிருக்கோம்ன்னு தெரிஞ்சிக்கிறேன் ...

pudugaithendral said...

நாளைக்கு பதிவு வரும் ஜமால்

வருகைக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த site ரெம்ப நல்ல இருக்குனு என்னோட friends சொல்லி கேட்டு இருக்கேன்... உங்க பதிவுக்கு ஆகுமான்னு பாருங்க...
http://kidshealth.org/teen/food_fitness/
நானும் படிக்க ஆவலா காத்துட்டு இருக்கேன் உங்க பதிவ