Thursday, May 06, 2010

நட்போடு ஒரு மணிநேரம்

பாண்டிச்சேரியில் விலை கம்மி என்பதால் வண்டிக்கு
டீசல் புல் டேங்க் அடிச்சிட்டு வண்டியை நேரா விட்டோம்.
அங்கேயிருந்து கிளம்பும்போதே ஆத்தா மங்கம்மாவுக்கு
போனைப்போட்டேன். ”இன்னும் காலேஜுல தான் இருக்கேன்,
இன்னைக்கு லாஸ்ட் வொர்க்கிங் டே, எங்க ஊருக்கு கிட்ட
வரும்போது ஒரு கால் செய் ஓடியாந்திடறேன்னு!” சொன்னா.

சஸ்பென்ஸ் ரொம்ப வேணாம். பாக்கப்போனது என் 18 வருட
நட்பை. அவுக இருப்பது சிதம்பரத்தில். அண்ணாமலைப்
பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியை.
என் தோழியின் அறிமுகம் முன்பே எனது 450ஆவது
பதிவா போட்டிருந்தேன்.

பாண்டியிலேர்ந்து சிதம்பரம் 1 1/2 மணிநேரப்பயணம்தான்.
சிதம்பரம் அடைய 3 கிமீ இருக்கும்பொழுது ஆத்தாவுக்கு
போன் போட்டு ”கிட்ட வந்துக்கினே இருக்கோம்”னு சொன்னோம்.
ஐயோ இதோ கிளம்பிட்டேன்னு போனை கட் செஞ்சிட்டு
கிளம்பினாங்க அம்மா.

அடுத்த 5ஆவது நிமிஷம் திரும்ப கால். ”எங்க இருக்கீங்க?
நீங்க வீட்டுக்கு வந்திருப்பீங்கன்னு நினைச்சு ஒடியாந்தேன்னு!”
மூச்சிரைக்க பேசினா. டூவிலர் ஓட்டும்போது மூச்சிரைக்குமான்னு
எனக்கும் அயித்தானுக்கு செம டவுட். ”அவசரத்துல
வண்டியை ஸ்டார் செஞ்சு ஓடவிட்டுட்டு தங்கச்சி
வண்டி பின்னாடியே ஓடிருப்பாக! அதான் மூச்சிரைக்குது”
அப்படின்னு அயித்தான் ஜோக் அடிச்சாரு.

தோழியும் அவங்க மூத்தமகனும் இருந்தாங. சின்னவரு
லீவுக்கு காரைக்குடி போயிருந்தாப்ல. எனக்கு கொல பசி.
பப்ஸ், போளி, முறுக்குன்னு என் ஃப்ரெண்ட் வாங்கி
வெச்சிருந்தாப்ல. சாப்பிட்டுட்டு டீ போட்டு குடிச்சிட்டு
பேசிகிட்டு இருந்தோம்.

என் தோழிக்கு நான் பட்ட பெயர் வெச்சதை என் பிள்ளைகளுக்கு
சொல்லிகிட்டு இருந்தா. ”அப்பவே ஆத்தா படிப்ஸ் பத்மா!
அதான் பேர் வெச்சோம்னு” நான் சொல்ல ”நான் எப்பவும்
விழுந்து விழுந்து படிப்பதும் ஒண்ணும் உங்கம்மா
கடைசி நேரத்துல படிச்சு மார்க் எடுப்பதும் ஒண்ணு”
அப்படின்னு என்னிய விட்டுக்கொடுக்காம பேசினா
காலேஜ் கோல்ட் மெடலிஸ்டான என் தோழி.

கொஞ்ச நேரத்துக்கு பள்ளத்தூர் ஆச்சி காலேஜில்
நானும் என் ஃப்ரெண்டும் இருந்தது போல இருந்துச்சு.
கூட இருந்தவங்க எல்லோரையும் மறந்துட்டோம்.
1 மணிநேரத்துக்கும் மேலே நேரமாச்சு! அப்பா
5 மணிக்கு அந்த கோவில் அபிஷேகம் பார்க்க
வரச்சொல்லியிருந்தாரு. ஏகப்பட்ட போன் அப்படின்னு
ஞாபகப்படுத்தினாரு அயித்தான். அப்பவே மணி 6
இனி அபிஷேகம் பார்க்க முடியாது என்பதால்
சிதம்பரம் நடராஜரை தரிசிச்சிட்டு உடனே கிளம்பினோம்.


”இப்படி கால்ல கஞ்சி கொட்டினா மாதிரியா வருவது,
4 நாள் தங்கக்கூடாதான்னா!” சண்டைபோட்டா ஃப்ரெண்டு.
பாண்டியிலேர்ந்து போகும்போது வழியில உங்க ஊரு,
உன்னைப்பாக்காம போனா தில்லைக்காளி மாதிரி
நீ கோபப்பட்டு நடராஜர் மாதிரி தாண்டவம் ஆடினா
தாங்கமாட்டேன், அதாண்டா பாத்துட்டு போகலாம்னு
ஓடிவந்தேன். அடுத்தவாட்டி இங்க வந்து தங்கி
பிச்சாவரம் லேக் போகலாம்னு “ சமாதானம் செஞ்சுட்டு
கிளம்பினேன்.


அங்கேயிருந்து கிளம்பி நேரா போனது...
அடுத்த பதிவுல...

17 comments:

நட்புடன் ஜமால் said...

இருந்தது ஒரு மணிநேரம் அதையும் இரண்டு பாகமா, யக்கோவ் டெரர் கிளப்புறிய.

----------

மூச்சிறைப்புக்கு மாம்ஸு சூப்பர் விளக்கம்ஸ் ...

தமிழ் அமுதன் said...

படிக்க சுவாரஸ்யமா இருக்கு.. அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க..!

Vidhoosh said...

:) பழைய நட்பென்றாலே சந்தோஷம்தான்.. :)

வெண்பூ said...

//
பாண்டிச்சேரியில் விலை கம்மி என்பதால்
//

ரீட‌ரில் முத‌லில் இந்த‌ வ‌ரிக‌ளைப் பார்த்து "அட‌, ந‌ம்ம‌ புதுகைத் தென்ற‌லா இப்ப‌டி எழுதுற‌து" என்று அதிர்ந்து பின் அடுத்த‌ வார்த்தைக‌ளைப் ப‌டித்து தெளிவ‌டைந்த‌தை இங்கே ப‌திவு செய்துக் கொள்கிறேன்... :)

சாந்தி மாரியப்பன் said...

உங்க ஃப்ரெண்டை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. ஏன்னு உங்களுக்கே தெரியும் :-)

மங்களூர் சிவா said...

nice!

Radhakrishnan said...

தொடரட்டும் பயணம், நல்லதொரு நட்பினை கண்ட மகிழ்ச்சி.

பா.ராஜாராம் said...

intresting.

//பாண்டிச்சேரியில் விலை கம்மி என்பதால்//

பார்த்துட்டு குடு குடுன்னு ஓடி வந்தேன்,பிறகு டீசலா,என சோர்வாகி முடிச்சேன். :-)

//அயித்தான்//-அருமை. :-))

pudugaithendral said...

வாங்க ஜமால்,

அடுத்த ப்திவு அடுத்து போன ஊர் பத்தி.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இதோ போடறேன் ஜீவன்,
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் வித்யா,

அதுவும் நீண்டகாலமாக தொடரும் எங்கள் நட்பு என்பதாலும் எனக்கிருக்கும் உயிர்தோழி இவள் என்பதாலும் ரொம்பவே சந்தோஷம்

pudugaithendral said...

ஆஹா,

பாண்டிச்சேரி விலைக்கம்மியைப்பாத்தி டெர்ரர் ஆகிட்டீங்களா வெண்பு.

எப்படியோ என் வலைப்பூக்கு வந்தீங்களே அதுக்கு நன்றி

pudugaithendral said...

:)) நன்றி அமைதிச்சாரல்

pudugaithendral said...

நன்றி சிவா

pudugaithendral said...

நன்றி ராதாகிருஷ்ணன்

pudugaithendral said...

பார்த்துட்டு குடு குடுன்னு ஓடி வந்தேன்,பிறகு டீசலா,என சோர்வாகி முடிச்சேன். //

பாண்டிச்சேரியில் தண்ணித் தவிர மத்ததும் விலைக்கம்மிதாங்க. :))

நன்றி பா.ரா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான பதிவு... எனக்கும் இப்படி பழைய தோழிகளை பாக்கற வாய்ப்பு கெடைச்சா அழகா இருக்கும்னு ஆசை தோண வெச்சுடீங்க