Saturday, May 08, 2010

ஈஸ்வரனுக்கு அடுத்து ஈஸ்வரப்பட்டம் பெற்றவரின் தரிசனம்

திருக்கடையூரிலிருந்து காரைக்கால் போய்சேர்ந்தோம்.
ஆன்லைனில் பாத்து ஒரு ஹோட்டல்ல புக் செஞ்சு
வெச்சிருந்தோம். எங்களுக்கு முன்னதாகவே அம்மா,
அப்பா வந்துவிட அவங்க புக் செஞ்சு வெச்சிருந்த
ரூமில் ஒன்றில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அந்தா இந்தா வென நாங்கள் ஹோட்டல் போய்ச்சேர்ந்த
பொழுது இரவு மணி 10. சிதம்பரத்தில் ஃப்ரெண்ட் வீட்டில்
சாப்பிட்டது. செம பசி. முதலில் போய் சாப்பிட்டோம்.

ரூம் சாவி கேட்கும்பொழுது ஆரம்பித்தது பிரச்சனை.
நாங்கள் புக் செய்து வைத்தது இரண்டு ஃபேமலி ரூமுக்கு.
ஆனால் அதில் ஒரு ரூம் காலிஆகாத காரணத்தால்
அப்பா,அம்மாவுக்கு டபுள் ரூம் சாதாரணமானது
கொடுத்திருக்கிறார்கள். ரூம் போய் பார்த்தால் ரொம்ப
சின்னது. நாங்களோ 5 பெரியவர்கள் இரண்டு குட்டீஸ்.

சண்டை போடவும் தெம்பில்லை. சரி டயர்ட். காலை
ட்ரையின்ல் இறங்கியதிலிருந்து பயணம் பயணம்...
ஆஹா காலையில போய் தரிசிக்கிறதுக்குள்ளேயே
ஆட்டத்தை காட்டுறாரே மிஸ்டர்.சனீஸ்வரர்னு நினைச்சேன்.
சூட்டுங்கற பேர்ல ஒரு ரூம் கொடுத்தாங்க. அதை
நாங்க எடுத்துகிட்டு அம்மா,அப்பா, கூடவந்த்வங்களுக்கு
அந்த ஃபேமிலி ரூமை கொடுத்தோம். ஹோட்டல்
பேரீஸ் இண்டர்னேஷனல் -காரைக்கால் அப்படி
ஒண்ணும் ஓகோ ரகமில்லை. ரூம் பரவாயில்லை ரகம்
ஆனா அவங்க சர்வீஸ் மகா மட்டம்.

திருநள்ளாறு போகனும்னு சொன்னதிலேர்ந்து அப்பா
6 - 7 சனி ஹோரையில் சனி பகவானை தரிசிப்பது
உத்தமம். அதுவும் அங்கேயிருக்கும் நளதீர்த்தத்தில்
குளிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தாரு. ஆஹா,
6-7 தரிசனம்னா அதுக்கு முன்னாடி 5 மணிக்கே
குளிக்கணுமே!!ன்னு விசனபட்டுகிட்டு இருந்தேன்.
ஆஷிஷுக்கு போன மாசம் தான் அம்மை போட்டு
சரியாகி இருந்தது. கொஞ்சம் சளி இருக்கும் நேரத்தில்
புது ஊரில் வெயில் வரும்முன் குளத்தில் குளிச்சா
என்னாகுமோன்னு பெம்மா இருந்துச்சு.

7 மணிக்கு மேலே தரிசனம் வெச்சுக்கோங்கப்பா,
சனிக்கிழமை திருநள்ளாறில் தரிசனம் செய்வோம்
இதுவே பெரிசுன்னு அப்பாகிட்ட சொன்னேன்.
5மணிக்கு அலாரம் வெச்சு எந்திரிச்சு அப்பாக்கு
போனைப்போட்டு போகலாம்பான்னு சொன்னேன்.
“வெளியில மழைக்கொட்டுது!!! ரூமிலேயே
குளிச்சிடலாம்னு சொன்னார் அப்பா.

சந்தோஷமா ரூமில் குளிச்சு ரெடியாகி ரூமை
காலி செஞ்சிட்டு திருநள்ளாறு கிளம்பினோம்.
காரைக்காலிலிருந்து திருநள்ளாறு 10 நிமிஷம்தான்.
மழை நல்லாவே தூறிக்கிட்டு இருந்துச்சு. கூட்டமும்
எக்கச்சக்கம்.கோவிலில் நுழைஞ்சு வெளியில
வரும் வரை மழை. தொப்பல் தொப்பலா நனைஞ்சோம்.
குளத்தில் குளிப்பதைவிட புனிதமான மழைநீரில்
உங்களை புனிதமாக்கிட்டேன்னு ஆண்டவன் சொல்றாரோ!
அருமையான தரிசனத்துக்கு அயித்தான்
அரேஞ்ச் செஞ்சிருந்தாரு.

முதலில் திருநள்ளாறில் கொலுவிருக்கும் சிவன்.
தர்ப்பாரேண்யேஸ்வரர் எனும் திருநாமம். இங்கே
ஸ்தல விருட்சம் தர்ப்பை எனும் புல்தான்.
அம்பிகைக்கும் தனி கோவில். அதற்கு அருகிலேயே
சின்னஞ்சிறு மூர்த்தியாக சனீஸ்வரர். மூர்த்தி
சிறுசானாலும் கீர்த்தி ரொம்ப பெரிசு.

நளனுக்கு பிடித்திருந்த சனிதோஷம் நீங்கியது
இங்கேதான். திருநள்ளாற்றிற்கு வேறு பெயர்களும்
உண்டு. ஆதிபுரி, தர்பாண்யம்,நாகவிதங்கபுரம் &
நளேஸ்வரம்.

8.30க்குள்ள தரிசனம் முடிஞ்சிருச்சு. வெளியே
வந்து பாத்தா அனுமார் வால்மாதிரி பெரிய்ய
க்யூ... சரி கூட்டம் அன்னைக்கு. சனிக்கிழமை
தவிர மே1 என்பதால் விடுமுறை தினம் வேற.
நாங்க கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும் அடுத்த
கோவிலுக்கு போயிருக்க முடியாது.

திருநள்ளாறு கோவில் அதிகாரி ரம்யாஸ்னு ஒரு
ஹோட்டல் இருக்கு அங்க போய் டிபன் சாப்பிடுங்கன்னு
சொல்லியிருந்தாரு. கோவிலிலிருந்து கிட்டத்தான்
போய் பாப்போமேன்னு போனோம். புஃபே டைப்தான்னு
சொன்னாங்க. எம்புட்டுன்னு கேக்க 50ரூபாய்னு பதில்
வந்துச்சு. பரவாயில்லையேன்னு போய் தட்டை எடுத்து
கிட்டோம். தோசை,இட்லி, பொங்கல், கிச்சடி, சட்னி,
சம்பார், காபி இருந்துச்சு. நல்லா சாப்பிட்டு
அடுத்த கோவில் மூடுவதற்குள்ள போய்ச்சேரணும்னு
கிளம்பினோம்.

ரம்யாஸ் ஹோட்டலில் ரூம்களும் நல்லா இருக்கு.
வெஜ், நான் - வெஜ் ரெஸ்டாரண்ட்கள் தனித்தனியா
இருக்கு. சர்வீஸ் ரொம்ப அருமை. உங்களுக்கு
உதவும்னு இணைய தள முகவரி.அடுத்து எங்க.... அதே தான் அடுத்த பதிவில்4 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

குட் நல்லா இருக்கு...!


ஒன்னு பதிவ பெருசா போடுங்க இல்லாட்டி ...! சீக்கிரமா போடுங்க ஒரு ஊருக்கு ஒரு பதிவா? ;;))

அமைதிச்சாரல் said...

பயணம் நல்லா எஞ்சாய் பண்ணீங்களா... ஆஷிஷ்க்கு இப்போ தேவலையா?..

புதுகைத் தென்றல் said...

ஆஷிஷ் இப்ப நல்லா இருக்கான் அமைதிச்சாரல். நல்லாவே எஞ்சாய் செஞ்சேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜீவன்,

போன இடமெல்லாம் சிறப்பு மிக்கது.அதனால ஊருக்கு ஒரு பதிவுதான். :))

வருகைக்கு நன்றி