Sunday, June 13, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி- 13.6.10

”ரெடி” அப்படின்னு ஒரு தெலுங்குப்படம். ஃபேமலி மூவி.
நம்ம நாசர்கூட அதுல நடிச்சிருக்காங்க.கதையும் கொஞ்சம்
வித்தியாசமா நல்லா இருக்கும். நகைச்சுவை ப்ரம்மா
ப்ரம்மானந்தம் அவர்களின் காமெடி கலக்கலா இருக்கும்.

இந்தப் படம் தமிழ்ல வரப்போகுதாம். விஜய்க்கு அடுத்து
தெலுங்குப்படங்களின் ரீமேக்குகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும்
தனுஷ் தான் ஹீரோ. ஹீரோயின் ஜெனீலியா(தெலுங்கிலும்
இவர்தான்). ப்ரம்மானந்தம் கேரக்டரை விவேக்
செய்யறார். படம் எப்படி வரப்போகுதோ!!!??!!

நல்ல கதையம்சம், நல்ல நடிகர்களாக போட்டு
நல்ல குடும்ப படத்தை கொடுங்கப்பா!

*********************************************
தி நகர் கடைகளுக்கு போகணும்னாலே கடுப்பா
இருக்கும். அயித்தான்  வரவே மாட்டாங்க.
அதுவும் ரெங்கநாதன் தெரு கடைகளுக்கு
நோ நோ தான்.  பாண்டிபஜார், உஸ்மான்
ரோடு கடைகள்னா ஓகே சொல்வார்.

ரெங்கநாதன் தெருவில் இருக்கும் ஜவுளி
மாளிகைகளுக்குப் போயிருக்கிறேன்.
விற்பனை பிரிவில் இருக்கும் பெண்களும்
சரி ஆண்களும் சரி ஒரு வித கடுப்பாவே
இருப்பாங்க. நாம இலவசமா வாங்க வரலை,
காசு கொடுத்துதானே வாங்கப்போறோம்,
இப்படி நடந்துகிட்டா எப்படின்னு?
அதனாலே அங்கே போவதை விட்டுவிட்டேன்.

ஆனா அந்த கடு கடுப்பான முகத்துக்கு பின்னாடி
இருக்கும் நிஜம் “அங்காடித் தெரு” பாத்து
புரிஞ்சிக்கிட்டேன். அந்த மாதிரி சோறு,
தங்கும் இடம் கொடுத்து மாட்டை கொட்டகையில்
அடைக்கிறா மாதிரிதான் அந்த பசங்களின்
வாழ்வு இருக்குதுன்னா அந்த பசங்க
கஸ்டமர்கள் கிட்ட கஷ்டமத்தான் நடந்துக்குவாங்க!!
*****************************************************

சனிக்கிழமை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
மயிரிழையில் தப்பிச்சிச்சு. விக்ரவாண்டிகிட்ட
குண்டு வெச்சு தண்டவாளத்தை பேத்துட்டாங்க.
காரணம் ராஜபக்சே இந்தியா வந்ததாம்!
அவர் வந்த வண்டி இல்ல அவரு இருக்கற
இடத்துல வெச்சிருந்தா கூட ஏதோ நியாயம்னு
சொல்லலாம். அநியாயமா 2000 உயிர் போயிருக்கும்ல!!
ஏன் இந்த மர்டர் வெறி!!!
*****************************************************
பஸ்ல போனா அடிச்சு நொறுக்கறாங்க, எரிக்கறாங்க!
ரயில்ல போனா குண்டு பயம், திருடர் பயம்,
ஹி ஹி !! ஃப்ளைட்ல போனா!!! சொல்லவே
வேணாம். சென்ற வாரம் சென்னை போயிருந்தார்
அயித்தான். ஹைதையில் புறப்பட்டதிலிருந்து
சென்னை வரை ஏரோப்ளேன் ஏதோ தண்ணி
போட்டாமாதிரி டான்ஸாம். லாண்டிங் வேற
சரியில்லையாம்!( பைலட்டுகள் “ தாகசாந்தி”
செஞ்சுகிட்டுத்தான் வண்டி ஓட்டறாங்களாமே!
நிசமாவா!அவ்வ்வ்வ்வ்வ்) ரோட்ல நடந்து போறது
கூட பிரச்சனையாகிடிச்சு. நாம வாட்டுக்கு
ஓரமா போனாக்கூட அடிச்சு தள்ளிட்டு போயிடுது
வண்டி.

எங்கயும் போகாம வீட்டோட இருக்கலாம்னு
நினைக்கறீங்களா! ஹை ஹை அதெப்படி
அங்கயும் வெக்கறாங்கள்ல ஆப்பு. நேத்து
டீவி 9 சேனல்ல பாத்ததும் கலவரமாகிடிச்சு.

இந்த செல்போன்களுக்காக ஒவ்வொரு வீட்டுகள்லயும்
டவர் வெச்சுக்க அனுமதி தர்றாங்கள்ள அதுலேர்ந்து
வர்ற ரேடியேஷன் வீட்டுக்குள் இருந்தாலும் தாக்கி
விநோதமான நோய்களை வரவைக்குதாம்.

ஹைதையில் எங்கேயும் சேஃப்டி இல்லையாம்!
எல்லாம் ரேடியேஷன் மயம். தொலி சவுக்கி
அப்படிங்கற இடத்துல 4000த்துக்கு அதிகமா
பாயிண்ட் காட்டுது.

உங்க ஊர்ல யாரானும் இப்படி கண்டுபிடிச்சிருக்காங்களா?
**********************************************************

எப்பவும் டீவீ சீரியல்களில் மாமியார் மருமக குடுமிபிடி
சண்ட, ஓடிப்போன புருஷன் அப்படி இப்படின்னு நாராசமாவே
காட்டுவாங்க. டயாலக்கும் அப்படித்தான். ஆனா செம
ஆச்சரியம். வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு சேனல்
மாத்திகிட்டு இருந்தேன். சன் டீவில ஒரு சீரியல்.
கார் பெட்ரோல் பங்குல வந்து நிக்குது. உடனே கார்ல
இருக்கற அம்மா மொபைலை ஆஃப் செய்யறாங்க.
“நீங்க பேசுங்கம்மா!” அப்படின்னு டிரைவர் சொல்ல
”ரூல்ஸ்னா ரூல்ஸ்தான், பெட்ரோல் பங்குல மொபைலில்
பேசினா ஆபத்துன்னா நாம பேசக்கூடாதுன்னு”அந்தம்மா
சொல்றாமாதிரி காட்டியிருந்தாங்க.
நம்ம ஊரு சேனல்தானா இது!!????

****************************************************






11 comments:

நட்புடன் ஜமால் said...

4000 பாயிண்ட்ஸுன்னா எதுல

வோல்ட்டேஜா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நெஜமாவே ஆவக்காயில பிரியாணி செய்றாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆவக்காயில எப்படி பிரியாணின்னு ஆசையோடு ஓடிவந்தா என்ன மேடம் இது?

ஹுஸைனம்மா said...

//செல்போன்களுக்காக ஒவ்வொரு வீட்டுகள்லயும்
டவர் வெச்சுக்க அனுமதி தர்றாங்கள்ள//

அய்யோ, இந்தக் கொடுமை வேறயா? எப்பருந்துங்க இது? வீட்டுக்கு வீடு டி.வி. ஆண்டனா மாதிரி, செல்ஃபோன் டவர் வேறயா? !!!!!!!

:-((((((((((

//ஃப்ளைட்ல போனா!!! சொல்லவே
வேணாம்//

இப்ப என்னவோ ரோட்ல போற மாதிரி, அங்கங்க, “விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது”ன்னு வேற நியூஸ் சொல்றாங்க!! கொஞ்ச நாள்ல, “ஏழாம் வானவீதி, மூணாவது சந்துல போற பச்சை பிளேன், ஓரமாப் போ”ன்னு ஒரு (ஏர்) டிராஃபிக் போலீஸ் ஹெலிகாப்டர்ல கையில மைக்கோட அனௌன்ஸ் பண்ணுவாரா??!!!

நானானி said...

//நம்ம ஊரு சேனல்தானா இது!!???//

ஆஹா...புல்லரிக்குதே!!!!!!!!!

pudugaithendral said...

வாங்க ஜமால்,

நலமா? அது ஏதோ மீட்டர் ரீடிங் மாதிரி கையில வெச்சிருந்தாங்க. அதுல தெரிஞ்சுச்சு. :(

pudugaithendral said...

முதல் வருகைக்கு நன்றி ராம்சாமி,

கதம்பமா செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு நான் செலக்ட் செஞ்சிருக்கும் தலைப்பு ஆவக்காய பிரியாணி. இரண்டும் நானிருக்கும் ஹைதையில் ஃபேமஸுங்க அதான்.

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இப்ப மழை பெஞ்சுகிட்டு இருக்கு. ஒரு தபா எங்க மொட்ட மாடியிலிருந்து போட்டோ எடுத்து போடுறேன்.பாருங்க.

//“ஏழாம் வானவீதி, மூணாவது சந்துல போற பச்சை பிளேன், ஓரமாப் போ”ன்னு ஒரு (ஏர்) டிராஃபிக் போலீஸ் ஹெலிகாப்டர்ல கையில மைக்கோட அனௌன்ஸ் பண்ணுவாரா??!!!//

நடக்கலாம். சிட்டுக்குருவி படத்துல இந்தாம்மா கருவாட்டுகூட முன்னால போன்னு சொல்ற மாதிரி :))

pudugaithendral said...

ஆமாம் நானானி,

எனக்கும் அப்படித்தான். அதான் பகிர்ந்துகிட்டேன். வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//எங்கயும் போகாம வீட்டோட இருக்கலாம்னு
நினைக்கறீங்களா! ஹை ஹை அதெப்படி
அங்கயும் வெக்கறாங்கள்ல ஆப்பு.//

உண்மைதான்..

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்