Tuesday, June 15, 2010

வாழ்த்துக்கள் ஆஷிஷ் & அம்ருதா

கொழும்பு போனதிலிருந்தே மனசுக்குள்ள ஒரு பயம்.
திரும்ப எப்ப வேணாம் இந்தியா வரலாம். வந்தா
கண்டிப்பா பசங்களுக்கு சிலபஸ்ல பிரச்சனைதான்.
எப்படி சரி செய்வதுன்னு ஒரு பயம்!

நம் இந்திய பாடத்திட்டத்துல படிப்பு கொஞ்சம்
ஸ்ட்ரெஸ்ஸாவே இருக்கும். அதுதான் என் பயம்.
மத்த சப்ஜக்ட் அப்ப பாத்துக்கலாம்னு ஹிந்தி
மட்டும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன்.

சம்சாரம் அது மின்சாரத்துல விசு சொல்லறாப்ல
சொல்லிக்கொடுத்தேன், சொல்லிக்கொடுத்தேன்,
சொல்லிக்கொடுக்கிறேன், இன்னும் சொல்லிக்கொடுக்கிறேன்
நிலமைதான்.

ஹிந்தியில் உயிர் மெய் எழுத்துக்கள் மட்டும்தான்
படிச்சான் ஆஷிஷ். அம்ருதாவும் படிக்க ஆரம்பிச்சதும்
திரும்ப அ, ஆவன்னான்னே போனிச்சு. திரும்ப
வர்ற வரைக்கும் இருவரும் அதுக்கு மேல முன்னேறல. :(
அம்மா சொல்லிக்கொடுத்தா இப்படித்தான். நம்ம
அம்மாதானேன்னு சாய்ஸ்ல விட்டுடுவாங்க.
சரி எப்படி நடக்குதோ நடக்கட்டும்னு அதுக்கு மேல
வற்புறுத்தாம விட்டுட்டேன்.

பொட்டி கட்டி 2 வருஷம் முன்னாடி இந்தியா வந்தாச்சு.
மத்த பாடங்களை விட ஹிந்திதான் கஷ்டமா இருந்துச்சு.
காரணம் ஆஷிஷ் அப்ப 7த். டீச்சர் போர்டில் எழுதிப்போட
மாட்டாங்க. டிக்டேட் செஞ்சு அதை பசங்க எழுதும்
அளவுக்கு வகுப்பில் ஹிந்தி இருந்துச்சு. டீச்சரிடம்
ஷ்பெஷல் பர்மிஷன் வாங்கி ஆஷிஷ் டீச்சர் சொல்வதை
ஹிந்திலிஷ் (அதாங்க டங்கிலீஷ் தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலத்தில் எழுதுவோமே) அதுமாதிரி எழுதி வீட்டுக்கு
கொண்டு வந்து அதை நான் ஹிந்தியில் ரஃப் நோட்டில்
எழுதிக்கொடுக்க அய்யா ஃபேர் நோட்டில் காப்பி செய்வார்.

பரிட்சைகளின் போது ரொம்ப கஷ்டம். வார்த்தைகளை
கோர்த்து படிச்சு பரிட்சை எழுதி மார்க் வாங்கி. இப்போதும்
நான் சொன்னது மார்க் பத்தி கவலைப்படாதே, முதலில்
மொழி புரியட்டும். அம்ருதாவுக்கு பரவாயில்லை போர்டில்
எழுதிப்போடுவார்கள். ஆனாலும் படிச்சு பரிட்சை எழுத
ஆரம்பத்தில் கஷ்டபட்டாள். தனியாக திரும்ப உட்கார
வைத்து சின்ன சின்ன வார்த்தைகள் சொல்லிக்கொடுத்தேன்.
அர்த்தம் புரிந்தால் தானே, மொழியின் அருமை புரியும்!

அப்போ அம்ருதா ஆஷிஷ்கிட்ட ஒரு நாள் சொன்னது,
“அம்மா சொன்ன்படி கேட்டு நாம ஒழுங்க ஹிந்தி
படிச்சிருந்திருக்கலாம்! இப்ப கஷ்டப்படறோம்!”

இலங்கையில் இருக்கும்பொழுதே ஹிந்தி பாட்டுக்கள் கேட்பது
படங்கள் பார்ப்பதுன்னு பழக்கம் வெச்சிருந்தேன். நான்
ஹிந்தி பேசக்கற்றது இப்படித்தான். ஹைதை வந்ததன்
முக்கிய நோக்கமே பிள்ளைகளுக்கு ஹிந்தி மொழி அறிவு
வந்துவிடும். தெலுங்கு தெரியாவிட்டாலும் கூட
ஹிந்தி இருந்தால் இங்கே பிழைக்க முடியும். பள்ளி
டிரைவரிடம் ஹிந்தியில் பேச வேண்டிய நிர்ப்பந்தம்
பிள்ளைகளுக்கு.

அம்மா வீட்டில் எங்களுடன் ஹிந்தியில் மட்டுமே
பேசவேண்டும் (இது நான் முன்னாடி சொன்னது)
என்று அம்ருதாவும் ஆஷிஷும் கோரிக்கை வெக்க
சரின்னு பேச ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சம்
பேசுவது புரிய ஆரம்பமானது. துக்கடா துக்கட
ஹிந்தியில் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.

அப்பார்ட்மெண்டிலிருக்கும் சம வயது நண்பர்களும்
ஹிந்தியில் பேச மெள்ள பிக்கப் ஆச்சு. இப்ப
சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. அம்ருதா
ஹிந்தியில் 90க்கு குறையாமல் மதிப்பெண் எடுக்கிறாள்.
அம்ருதாவுக்கு படிக்க சீக்கிரமே வந்துவிட்டது.

ஆஷிஷ் பற்றிதான் கொஞ்சம் மெனக்கட வேண்டுமோ
என்று நினைத்துக்கொண்டிருந்த நேரம் முதல்
டெஸ்ட் மார்க் வந்திருக்கு.ஹிந்தியில் ஐயா தான் டாப்பர்.

இரண்டே வருடத்தில் இவ்வளவு தூரம் முன்னேற்றம்
எனக்கே ஆச்சரியம். என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
இருவருக்கும். இறைவனின் ஆசி என்றும் இருக்க
பிரார்த்தனைகள்.14 comments:

மாதேவி said...

ஆஷிஷ் & அம்ருதா இருவருக்கும் வாழ்த்துகள்.

தொடரட்டும் சிறப்புகள்.

ஷர்புதீன் said...

தொடரட்டும் சிறப்புகள்

புதுகைத் தென்றல் said...

நன்றி மாதேவி

நன்றி ஷர்புதின்

மங்களூர் சிவா said...

ரொம்ப சந்தோஷம். பசங்களை விசாரிச்சதா சொல்லுங்க.

வித்யா said...

வாழ்த்துகள் ப்ரெண்ட்ஸ் இரண்டு பேருக்கும்:)

அமுதா said...

ஆஷிஷ் & அம்ருதாவுக்கு வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

thanks siva kandipa solren

thanks vidya

thanks amuda

நட்புடன் ஜமால் said...

மருமக்கட்களுக்கு வாழ்த்துகள்!

எல்லாத்துலையும் டாப்பரா வரனும் :)

காற்றில் எந்தன் கீதம் said...

ஆஷிஷ் அம்ருதா இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிவிடுங்க அக்கா.......

அப்பாவி தங்கமணி said...

//ஹிந்தி மட்டும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன்//
ஓ... ஹிந்தி எல்லாமா? ஹும்... எனக்கில்ல எனக்கில்ல....
வாழ்த்துக்கள் அமிர்தா மற்றும் ஆசிஷ்க்கு....

thenammailakshmanan said...

வாழ்த்துக்கள் ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும்.. தென்றலுக்கும்..:)))

பாச மலர் / Paasa Malar said...

malarvaazthukkaL....

Porkodi (பொற்கொடி) said...

congratulations!! :)

புதுகைத் தென்றல் said...

thanks jamal

thanks katril en geetham

thanks buvana

thanks thenammai

thanks pasamalar