Monday, June 28, 2010

இடம் கொடுத்தா என்ன????!!!!!

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் மண்டைய குடைஞ்சு கிட்டு இருக்கு.
அதுக்கு எப்படியாவது வழி கண்டுபிடிக்கணும். அதுக்குத்தான் இந்த
போஸ்ட்.( பதிவு போடவும் மேட்டர் எப்படி எல்லாம் தேத்தறாங்கன்னு
யாரோ சொல்வது காதுல கேக்குது :) )

நல்ல நாளிலேயே பொண்டாட்டியைக்கண்டா ரங்க்ஸுகளுக்கு
ஒரு மாதிரிதான். ”இதுல மனைவிக்கு இடம் கொடேல்”!
அப்படின்னு பெரியவங்க சொல்லி வெச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.
இந்த ”இடம் கொடேல்” இரண்டு விதமா அர்த்தம் புரிஞ்சிக்கலாம்.

1. இடத்தை கொடுப்பது. அதாவது நம்ம பொண்டாட்டியாச்சே,
அப்படின்னு இடம் கொடுத்து நல்லா பாத்துகிட்டா எங்க அவங்க
அதிகாரம் செஞ்சுபுடுவாங்களோன்னு ஒரு பயம்.

2. இரண்டாவது இடது பாகம். சரியா சொல்றேன் இருங்க.
கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு வலப்பக்கம்தான் மணப்பொண்ணு
உக்காரணும். இது எதுக்கு எனக்கு புரியலை. கேட்டா மனைவி
கணவனுக்கு இடப்பக்கம் இருக்கக்கூடாது.

எனக்கு குழப்பமே இங்கதான். நம் தமிழ்நாட்டில் மட்டும்தான்
என் சிற்றறிவுக்கு தெரிஞ்ச அளவுல இந்தப் பழக்கம் இருக்கு.
ஒரு சமயம் பிரபல மடத்துக்கு போயிருந்தோம். குடும்ப சகிதமாத்தான்.
தம்பதிகளாச் சேர்ந்துதான் அந்த பூஜை செய்யணும். நான் அயித்தானுக்கு
வலப்பக்கம் நின்னுகிட்டு இருந்தேன்.(அப்படித்தானே நம்ம ஊர் பழக்கம்)
மடாதிபதியோ சைகையில என்னை இடப்பக்கம் நிக்கச் சொன்னாரு.
அவர் சொல்வதைக் கேட்பதா, இல்ல பெரியவங்க சொன்னதை கேப்பதான்னு
புரியமா அவங்க இடத்துல அவங்க சொல்படி கேப்போம்னு இடப்பக்கமே
நின்னு பூஜை செஞ்சேன்.



இங்க ஆந்திராவிலும் எந்த பூஜை செய்தாலும், திருமணத்தின் போதும்
மனைவி கணவனின் இடப்பக்கம்தான் நிக்கணும். ஆந்திராவை விடுங்க
கடவுள்கள் படத்தை பாருங்க சிவ பெருமான் உமையவளுக்கு தன்
இடப்பாகத்தைத்தான் தந்திருக்காரு. வலப்பாகம் கொடுக்கலை.
பத்ராசலத்துலதுல கூட ஸ்ரீராமர் சீதாபிராட்டியை தனது இடது
மடியில் தான் உக்கார வெச்சுகிட்டு தரிசனம் தர்றாரு.


 கண்ணனும் ராதையும் காதல் தம்பதிகள் அவர்களையும்
பாருங்கள்.


நரசிம்மரும் லட்சுமியை தனது இடது மடியில் தான் வெச்சு
தரிசனம் தர்றாரு. தனது இதயத்தில் இடம் கொடுத்தார்
மகா விஷ்ணு. இதயம் இருப்பது இடது பாகத்தில் தானே இருக்கு!!?

மனைவி இடது பாகத்தில் அல்லது இடது பக்கத்தில் இருப்பது
பல நன்மைகளைத் தருமாம். லட்சுமி எப்படி மஹா விஷ்ணுவின்
ஹ்ருதயகமல வாசினியாக இருக்கிறாளோ அப்படி தனது
கணவனின் இருதயகமலத்தில் ஒர் நிரந்தரமான இடத்தைத்தான்
எந்த மனைவியும்  விரும்புகிறாள்.

கணவன் மனைவிக்குள்ள சண்டை சச்சரவுகள் அதிகம் ஏறபடும்போது
அவங்க நிக்கிற பொஷிஷனை கொஞ்சம் கவனமா கூர்ந்து
பாருங்களேன்.  கணவனின் வலது பக்கம் நிக்கும் போது
கூடுதலா கோவம் வருமாம். (அப்போ மனைவியின் இடது பக்கம்
கணவன் நிக்கிறாருதான் ஆனா அதைப்பத்தியெல்லாம் ரங்க்ஸ்கள்
உணர மாட்டார்கள். இதை நான் சொல்லலை. ஆராய்ச்சியாளர்களே
பெண்களுக்கு உணரும் தன்மை அதிகம்னு சொல்லியிருக்காங்க)
எப்போதோ புத்தகத்துல படிச்சேன். இடது பக்கம் பாசிடிவ் எனர்ஜியை தருகிறதாம்.

கணவனின் இடது பக்கத்தில் மனைவி இருந்தால் அன்பு நிறைந்திருக்குமாம்.
நம்ம ஊர்ல இடது பக்கம் ஏன் மனைவி இருக்கக்கூடாது என்பதற்கு
காரணம் தெரிஞ்சவங்க சொல்லிட்டு போங்க. தெரிஞ்சிக்கறேன்.
கோபமா இருக்கற ஒரு நேரம் ரங்க்ஸுக்கு இடது பக்கம் உக்காந்து
பாத்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது சரியான்னும்மெயில்
எழுதுங்க.

இப்போதைக்கு டா டா!


30 comments:

சாந்தி மாரியப்பன் said...

//கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு வலப்பக்கம்தான் மணப்பொண்ணு
உக்காரணும். இது எதுக்கு எனக்கு புரியலை. கேட்டா மனைவி
கணவனுக்கு இடப்பக்கம் இருக்கக்கூடாது//

எங்க கல்யாணத்துல நான் இடதுபக்கம்தான் இருந்தேன். ஒண்ணும் பெரிசா வித்தியாசம் தெரியலை ;-)))

நிஜமா நல்லவன் said...

ஆராய்ச்சி பலமா இருக்கு:)

Pandian R said...

இடப்பக்கம் நின்னுகிட்டு கண்ணாடில பாருங்க. சரியாப் போயிடும்..

வல்லிசிம்ஹன் said...

thenral

Enthap pakkam irunthaal successful aaka iruppoomo
antha idaththila irukka veendiyathuthaan:)

தாரணி பிரியா said...

இடது பக்கம் நின்னா பாக்கெட்ல இருந்து பணத்தை ஈசியா எடுத்துக்கலாம். திட்டாதீங்க :). எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். யாராவது பெரியவங்க வந்து காரணம் சொல்லும்போது நானும் தெரிஞ்சுக்கிறேன். :)

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

கல்யாணத்தன்னைக்கு என்ன வித்தியாசம் தெரிஞ்சிடப்போகுது அமைதிச்சாரல். இந்த சம்பிரதாயம் எதுக்குன்னுதான் புரியலை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆராய்ச்சி பலமா இருக்கு:)//

ஏதோ என்னால முடிஞ்சது தம்பி :))

pudugaithendral said...

இடப்பக்கம் நின்னுகிட்டு கண்ணாடில பாருங்க. சரியாப் போயிடும்..//

ஐடியா நல்லாத்தான் இருக்கு.,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

எனக்கு சரியா படுவது இடது பக்கம் தான். சோ மீ த ஃபாலோயிங் தட் :))

வருகைக்கு நன்றி

Sabarinathan Arthanari said...

இடது பக்கம் இவ்வளவு விசயமா ?
ரைட்டு.

அப்படியே நம்ம பெயருக்கு விளக்க படம் போட்டதற்கும் நன்றி ;)

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சபரிநாதன் அர்த்தநாரி

pudugaithendral said...

இடது பக்கம் நின்னா பாக்கெட்ல இருந்து பணத்தை ஈசியா எடுத்துக்கலாம்.//

ஓஹோ இப்படி ஒண்ணூ இருக்கோ. எங்க அயித்தானுக்கு பாக்கெட்ல பணம் வைக்கும் பழக்கமில்லை. வருகைக்கு நன்றி ப்ரியா

அன்புடன் அருணா said...

இடது பக்கம் உக்காந்து
பாத்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது சரியான்னு ஆராய்ச்சி செய்துட்டு வர்றேன்!

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா, என்ன ஆளையே காணோம்???

Thamira said...

இடது பக்கம் போனாலென்ன? வலது பக்கம் போனாலென்ன? மேல விழுந்து ****************** என்பதுதான் என் பாலிஸி. ஹிஹி..!!

pudugaithendral said...

அப்படியே செஞ்சு பாத்து ஆனந்தத்தை அனுபவிக்க என் வாழ்த்துக்கள் அருணா

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

கணிணிக்கு உடம்பு சரியில்லை. அதான்

pudugaithendral said...

இடது பக்கம் போனாலென்ன? வலது பக்கம் போனாலென்ன? மேல விழுந்து ****************** என்பதுதான் என் பாலிஸி. ஹிஹி..!!//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!!!!!!
உங்களை மாத்தவே முடியாது ஃப்ரெண்ட் :))

ஹுஸைனம்மா said...

இடது பக்கம் இருதயம் இருக்கதாலத்தான் இடது கை மோதிரவிரல்ல கிறிஸ்துவர்கள் திருமண மோதிரம் போட்டுப்பாங்களாம்.
(அந்த விரலிலிருந்து ஒரு நரம்பு இருதயத்தை இணைக்குதாம்).

//தாரணி பிரியா said...
இடது பக்கம் நின்னா பாக்கெட்ல இருந்து பணத்தை ஈசியா எடுத்துக்கலாம்.//

பிரியாஆஆஆஆ..... நல்ல ஐடியாதான்!! :-))))))

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

தகவலுக்கு நன்றி. ப்ரியா நல்ல ஐடியா கொடுத்திருக்காங்க இல்ல :)) ட்ரை செஞ்சு பாக்க வேண்டியதுதான்.

Anonymous said...

இந்து, ஆக்க்சுவலி சைவ சமய திருமணங்களில், பெண்ணை முதலில் வலது புறம் இருத்தி கொஞ்சம் சடங்கு நடக்கும். அப்புறம், தாலி கட்டும் போது இடது புறம் மாறுவார்கள் என்று சமயப் புத்தகத்தில் படிச்ச ஞாபகம்.

பெரும்பாலும் ஆண்கள் தான் பெண்களை அணைச்சுட்டு இருக்கறதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகத் தான் நாங்கள் இருக்கிறோம். அப்படி பாக்கற போது, வலது கை வழக்கம் உள்ளவர்கள் இடது கையால் அணைச்சுட்டு வலது கையால வேற ஏதாவது செஞ்சுட்டு இருக்கலாம்ங்கறத்துக்காக எங்கள் மூளையே இடது கையை தானாகவே அணைக்கறதுக்காக நீட்டுகிறதுன்னு நினைக்கிறேன். நீங்களே பாருங்க, ஹான்ட் பாக், பாக்பக் (Back Pack) ஒரு பக்கம் போடும் போது கூட நம்மளோட வலது புறம் தான் போடறோம்.

Ex: இடது கையால அணைச்சுன்டு வலது கையால (தன்னோட / பெண்ணோட) தலை கோதுவது, இடது கையால் தலை கோதுவதை விட இலகுவானது. அதுக்காகத் தான் இந்த இடது கை பழக்கம்னு நினைக்கிறேன்.

அதை விட ஒரு உயரான கம்பின் வலது புறமும் இடது புறமுன் நின்று பாருங்க. உங்களை விட உயரமான பொருள் உங்கள் இடது பக்கம் இருக்கும் போது பாலன்ஸ் குறையுற மாதிரி ஒரு பீலிங்ஸ் வரும்.

இதெல்லாம் பாக்கறப்போ நாம ரியலைஸ் பண்ணுறதுக்கு முன்னவே எங்களோட மூளை நரம்புகளுக்கு தகவல் அனுப்பி சிலதுகளை செய்யவைக்கறது.

pudugaithendral said...

இப்ப நீங்க வலதுபக்கம் சரின்னு சொல்றீங்களா? இடதுபக்கம் சரின்னு சொல்றீங்களா அனாமிகா!!

Porkodi (பொற்கொடி) said...

பயங்கர ஆராய்ச்சியா இருக்கே! :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பதிவு போடவும் மேட்டர் எப்படி எல்லாம் தேத்தறாங்கன்னு யாரோ சொல்வது காதுல கேக்குது //
உங்களுக்கும் இந்த mindvoice தொல்லை ஆரம்பிச்சுடுச்சா.... பாவம் நீங்க.. ஹி ஹி ஹி

//மனைவிக்கு இடம் கொடேல்//
ஓ... இப்படி ஒண்ணு இருக்கா?

//கணவனின் வலது பக்கம் நிக்கும் போது கூடுதலா கோவம் வருமாம்//
சண்டை போடறப்ப பக்கத்துல நிக்க கூடாது மேடம்... அதான் safe for both... ஹி ஹி ஹி

//கோபமா இருக்கற ஒரு நேரம் ரங்க்ஸுக்கு இடது பக்கம் உக்காந்து பாத்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது சரியான்னும்மெயில் எழுதுங்க//
ஆஹா... சொந்த செலவுல சூனியம் வெச்சுகறதா... மீ எஸ்கேப்....

Jokes apart அக்கா - எங்க திருமணத்துல நலங்கின் போது நான் அவருக்கு இட பக்கம் இருந்தேன்... ஆனா முஹுர்ததப்போ வல பக்கம் தான்... அப்போ யோசிக்கல... இப்போ நீங்க சொன்னப்புறம் லாஜிக் இடிக்குது.... எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு பாக்கறேன்... தேங்க்ஸ்

Unknown said...

எனக்கு ரொம்ப விஷயம் தெரியாதுன்னாலும், இந்த இட/வல வித்தியாசங்களைப் பாத்திருக்கேன். கணவர் வளந்த ஊரு பக்கம் போனா, கணவருக்கு இடப்பக்கம் தான் நிக்கச் சொல்லுவாங்க. நம்ம வீட்டுப் பெரியவங்க கால்ல விழுந்து கும்பிட்டா, நாமளும் வலப்பக்கம், ஆசி வழங்கும் அம்மணியும் தம் கணவருக்கு வலப்பக்கம்.

விக்கில பாருங்க: "According to Hindu religious texts, Brahma created man from the right shoulder and woman from his left shoulder. A woman is referred to as Vamangi or one who is on the left side. Throughout the marriage ceremony the bride sits on the right side of the groom. That is the place for strangers and acquaintances. Only after the Saptpadi, when the bride and groom have exchanged marital vows, is the wife sealed on the left side of the man".

மேற்படி கருத்து விக்கியோடது, என்னுது இல்லை.

தமிழ் ப்ரம்மாவுக்கு பெண்கள் வலத் தோளிலிருந்து பிறந்தார்கள், இது எப்படியிருக்கு? :-)

pudugaithendral said...

வாங்க கெக்கே பிக்குணி,

விக்கிலஎல்லாம் தேடி விஷயங்கள் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

pudugaithendral said...

வாங்க புவனா,

மைண்ட் வாய்ஸ் தொல்லை இப்ப எனக்கும் ஆரம்பிச்சிருக்கு.

பெரியவங்களை கேட்டு சொல்லுங்க

சுசி said...

நானும் தலைவரும் பெரியோர்களை வணங்கும் போது ஒரு பெரியவர் "என்னிடம் நீ ரைட் ல வாம்மா" என்றவர் நான் மாறுவதற்குள் பொறுமையில்லாமல் "ரைட்,ரைட்" என்றார் டென்சன் ஆகி. "பொண்டாடிக்கு இடம் கொடுக்க கூடாதுடா." என்றார் கூடுதலாக.

உடனே தலைவர்,"ஏன் மாமா பொண்டாட்டிய ரைட் ல வைக்கணும்னு சொல்லறா?" என்று அப்பாவியாய் விசாரித்தார்.

நான் உடனே,"ம்...ம்... பொண்டாட்டி சொல்லற எல்லாத்துக்கும் ரைட்,ரைட் ன்னு சொல்லனும்னு இதுக்கு அர்த்தம்." என்றேன்.

மகாவிஷ்ணு மகாலக்ஷ்மியை தன் வல மார்பில் தான் வைத்துள்ளார். அதனால் தான் மனைவி வலது புறம் இருக்கவேண்டும் என்று சொல்லபடுவது. அதாவது, கணவனின் திரு அவனது மனைவியே என்பதே இதன் பொருளாகும்.

அப்படி பார்த்தால் மனைவி வலது பக்கத்தில் இருப்பது சரியே. ஆனால், அதற்கு எதிர்மறையான காரணம், விஷயம் தெரியாத சிலரால் கற்பிக்கபடுவதால் எனக்கும் வலது பக்கத்தில் இருக்க விருப்பமே இல்லை.

இடது புறம் தான் பெண்களுக்கு உரிய இடமாகும். ஏனென்றால், இடது புறம் தானே பெண்களுக்கே உரியதான கர்ப்ப பை இருக்கிறது.

திருப்பதி வெங்கடாசலபதியை பாருங்கள் வல மார்பில் மகாலக்ஷ்மியையும் இட மார்பில் பூமி தேவியையும் வைத்திருப்பார்.
"திருமதி" இல்லையென்றால் திருவெல்லாம் வெறும் "திரு,திரு" தான்.

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

ஏடுகொண்டல வாடு வலது பக்கம் திருமகள் இருப்பதுபோல தரிசனம் தருவது திருப்பதிக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் தொடர்பை காட்டுதுங்கோ. கோவிலில் செய்யப்படும் பல சேவைகள் தமிழ்வழிதான். எனக்குத் தெரிந்து கோவிந்தோ ஸ்ரீதேவி,பூதேவி இருவரையும் தன் வல,இட மார்பில் தாங்கியிருக்கிறார். அலமேலு மங்காத்தாயார் மட்டும் வலது புறம் இருப்பது போல படம் இருக்கும். (அதுதான் மேல் சொன்ன தமிழ்நாட்டுத் தொடர்பு) அதைத் தவிர ஆந்திராவில் எங்கேயும் பெருமாள் இடது பாகம் தந்துதான் அருள் பாலிக்கிறார்.

pudugaithendral said...

திருமதி" இல்லையென்றால் திருவெல்லாம் வெறும் "திரு,திரு" தான்.//

அதெல்லாம் புரிந்தால் ரங்க்ஸ்களுக்கு நல்லகாலம் பிறந்துவிடுமே!! :))

வருகைக்கு மிக்க நன்றி