Wednesday, July 07, 2010

நாணயத்தின் மறுபக்கம்.

நான் பார்த்த வகையில் சில (பல) திருமணமான பெண்களைப் பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்வி, " இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது"?!

தவறாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!

அடிக்கடி அம்மா வீட்டுக்கு போவதைத்தான் கேட்கிறேன். கணவன் - மனைவி சண்டை, மாமியார் சண்டை, உறவுகளைப் பார்க்க, அம்மா, அப்பாவைப் பார்க்க, அது.... இது.... என்று போய் டேரா போட எப்படி முடிகிறது? இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ஓய்வெடுக்க பிறந்த வீட்டிற்கு போவார்கள். எப்படிங்க?


எனக்குத் தெரிந்த ஒரு பெண். தாய்வீடும் உள்ளூரிலேயே அமைந்து விட
ஒவ்வொரு வெள்ளி இரவும், கணவனோடு பிறந்த வீட்டிற்கு போய்விடுவார்.
சனி,ஞாயிறு இரண்டு நாளும் குழ்ந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு இருவரும் ஊர் சுற்றுவார்கள். என்ன கொடுமை இது? இப்படியே கழியும் ஒவ்வொரு வார விடுமுறையும். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்தப் பெற்றோர்கள்
படும் கஷ்டம். பாவம் அவர்கள்.

வெளியூரில் இருக்கும் பெண்கள் கூட அம்மா வீட்டிற்கு அடிக்கடி போவார்கள். பிறந்த வீட்டு பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் நம்
கடமையை விட்டு, பாரமாக (சத்தியமாக திருமணத்திற்கு பிறகு அடிக்கடி போய் தங்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்கு பாரம்தான். என்ன ?தன் மகளாயிற்றே என்று சொல்ல மாட்டார்கள்) ஏன் போகவேண்டும்.

ஓய்வெடுக்க அம்மா வீட்டிற்கு போபவர்களே!! ஓய்வெடுக்கப் போக அது என்ன ஹோட்டலா? ஓய்வு வேண்டுமானால் குடும்பத்துடன் (முடிந்தால் பெற்றவர்களையும் அழைத்துக் கொண்டு) ஏதேனும் ஊருக்கோ, ஹோட்டலில் தங்கி ஓய்வெடுங்கள்.


வயதான் பெற்றவர்கள் நம் வேலையாட்கள் அல்ல.
நமக்காக பாடுபட்டு, நம்மை வள்ர்க்க ஓடியாடி உழைத்தவர்கள் அவர்கள்.
வயதான காலத்தில் சற்று ஓய்வெடுக்கவேண்டாமா? அவர்களின் தனிமையில், ஆன்ந்தத்தில் குறுக்கிடுவது தவறல்லவா?

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உரிமையோடு பிறந்த வீட்டிற்கு செய்யலாமே?

( ஒரு தாய் 4 மணி நேரம் கலங்கிய கண்களுடன் புலம்பிய வார்த்தைகளின் சாராம்சம் இது)

டிஸ்கி: ஒவ்வொரு முறை மனைவி ஊருக்கு கிளம்பியதும் "அக்னிநட்சத்திரம்" ஜனக ராஜ் மாதிரி " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் கணவன்மார்கள் என்னை மன்னீப்பீர்களாக!!!!

32 comments:

அமுதா கிருஷ்ணா said...

பெற்றவர்கள் தங்களுடைய வேலையாட்கள் என்று நினைக்கும் பெண்கள் அதிகம் உள்ளனர்.திருமணம் ஆனதும் ஏதோ கிரீடம் சூட்டியதாக தோணும் போல..எப்பவும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க முடியாதோ?

Chidambaram Soundrapandian said...

// சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்தப் பெற்றோர்கள்
படும் கஷ்டம். //


பெற்றோர்கள் சொன்னால், தாம் தூம் என்று குதிப்பார்கள்.
சகோதரர்கள் சொன்னால், பெரிய பஞ்சாயத்தே நடக்கும்.

உலகத்திலேயே மிகக்கேவலமான exploitation, இது தான்.

ஒன்று பெண் வீட்டாரே துணிந்து முடிவுகட்டவேண்டும். அல்லது,
கணவன் கண்டிப்புடன் செயல்படும் போது, வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

(எனக்கு தெரிந்த ஒரு கணவர் சொல்லி சொல்லி சலித்துப்போய், ஒரு நாள் விட்டார் ஒரு அரை.
அடுத்த நாள், "அதுக்காக கை நீட்டுவியா" என்று துள்ளிக்கொண்டிருந்தது, பெண் வீட்டார்.)

http://vaarththai.wordpress.com

வால்பையன் said...

கூட்டு குடும்பம் என்ற பெயரில் ஆண்கள் தம் குடும்பத்தோடே இருக்கிறார்கள், பெண்கள் அவுங்க அம்மா வீட்டுக்கு போனா தப்பா!

அப்படி நினைக்கிறவங்க, என்னை மாதிரி வெளியூரில் பொண்ணு கட்டிகோங்க!

குத்தம், குறை சொல்லமுடியாது!

வித்யா said...

ஹி ஹி நீ வரலன்னா கூட பரவாயில்லை. ஜூனியர கொண்டு வந்து விடுன்னு சொல்றவங்களுக்கு என்ன பண்றது. சிஸ் நானெல்லாம் எப்படா டைம் கிடைக்கும் அம்மா வீட்டுக்கு எஸ்ஸாகலாம்ன்னு தவிச்சிக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா. போங்க சிஸ். உங்களுக்கு ஹைதைல இருத்து வந்து போறதுக்குள்ள ஸப்பாடின்னு ஆகிடும். பொறாமைதான:))

Jeeves said...

நல்ல பதிவு. ஆனா இதெல்லாம் நீங்க சொல்லலாம். நாங்க சொன்னா பெண்களைக் கட்டுப்படுத்தறதா ஆகிடும். :( பெண்ணியக் காவலர்கள் கிட்ட எங்களை மாட்டிவிட உங்க ஐடியா இதுன்னு தெரிஞ்சு போச்சு மாட்டுவோமா நாங்க

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்?? அருமை புதுகை, நான் பிறந்த வீட்டிற்கு இரு பிரசவங்கள் தவிரவும், மற்றச் சமயங்களில் போய் அதிகம் தங்கினதில்லை. அப்படிப் போவதும் பெரும்பாலும் அங்கே கல்யாணம், ஸ்ரீமந்தம், வேறு தவிர்க்கமுடியாத நிகழ்வுகளில் தான். ஆனால் அதற்கும் புக்ககத்தில் வேறு மாதிரி விமரிசனம் வரும்! ஆகக் கூடிப் போனாலும் தப்பு, போகலைனாலும் தப்பு தான். பொதுவாய்த் திருமணம் ஆகித் தன் குடும்பம் என்று ஆனதும் குடும்பத்திற்கே முன்னுரிமை என்பதில் மாற்றுக் கருத்து எனக்கும் இல்லைதான், நல்ல பதிவு தான்.

கோபிநாத் said...

;-)))) என்னாத்த சொல்ல...இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு நல்ல பதிவு ;)

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

திருமணம் ஆனதும் ஏதோ கிரீடம் சூட்டியதாக தோணும் போல..எப்பவும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க முடியாதோ?//

சிலர் அப்படி இருப்பதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சிதம்பரம் சொளந்திரபாண்டியன்,

நீங்க சொல்வது மிகச் சரி.

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் யாவும் சொளக்கியமேன்னு அப்பவே கவியரசர் பாடி வெச்சிருக்காரு. அது எல்லாருக்கும் பொருந்தும். பலர் நினைச்சுப் பார்ப்பதில்லை அதான் பிரச்சனை.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

பெண்கள் அவுங்க அம்மா வீட்டுக்கு போனா தப்பா!//

வாங்க வால்பையன்,

அம்மா வீட்டுக்கே போறது தப்புன்னு சொல்லலையே. அடிக்கடி அங்க போய் டேரா போடறது, அவங்களுக்கும் இடஞ்சலா இருக்கும் என்பது பலரும் யோசிப்பதில்லை.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வித்யா,

நான் சொல்ல ஏதுமில்லை. பெண்ணின் மேல் இருக்கும் அதீத பாசம் பெற்றோரை தன் மகள் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்க வெச்சு தன்னலம் இல்லாம ஆக்கிடுது. அதை மகள்கள் புரிஞ்சிக்கணும்னு சொல்ல வந்தேன்.

ஹைதையில் இப்பத்தான் இரண்டு வருஷமா. சென்னையில் நான் இருந்தப்போ கூட அதிகம் போனதில்லை. பொறாமை இல்ல வித்யா. புரிந்து கொண்டதால் கொஞ்சம் எட்ட நின்று கடமைகளைச் செய்கிறேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

பெண்ணியக் காவலர்கள் கிட்ட எங்களை மாட்டிவிட உங்க ஐடியா இதுன்னு தெரிஞ்சு போச்சு மாட்டுவோமா நாங்க//

:)))))))) வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்

புதுகைத் தென்றல் said...

பொதுவாய்த் திருமணம் ஆகித் தன் குடும்பம் என்று ஆனதும் குடும்பத்திற்கே முன்னுரிமை என்பதில் மாற்றுக் கருத்து எனக்கும் இல்லைதான், நல்ல பதிவு தான்.//

நன்றி கீதா சாம்பசிவம்.

நானும் உங்களைப்போலத்தான். வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி கோபிநாத்.

இது இன்னோட மீள் பதிவு. 3 வருஷம் முன்னாடி போட்டது.

வருகைக்கு மிக்க நன்றி

விக்னேஷ்வரி said...

:(

மங்களூர் சிவா said...

பின்னூட்டம் பெற

மங்களூர் சிவா said...

/
சத்தியமாக திருமணத்திற்கு பிறகு அடிக்கடி போய் தங்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்கு பாரம்தான்.
/

உண்மைதான், ஆனா நாங்க இதை சொன்னா வீட்டுல மண்டகப்படிதான்.

அப்பாவி தங்கமணி said...

நல்ல பதிவுங்க... பெற்றவர்களை வேலைகாரர்கள் மாதிரி ட்ரீட் பண்றதுக்கு நானும் எதிரி தான்... மன அமைதிக்கு போறது சரி... ஆனா ரெஸ்ட் எடுக்கங்கறது கொஞ்சம் ஓவர் தான்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆனால் விரும்பி அழைக்கும் தனிமையில் தவிக்கும் பெற்றோருக்கு இது பொருந்தாது இல்லையா தென்றல்.?

(ஸீரியஸா எழுதியிருக்கீங்க.. ஜோக்கா பின்னூட்டறதுக்க மன்னிக்க. : 'அதெப்படி.. எங்க தலையில இம்சையை கட்டிவச்சுட்டு எப்பிடி நேக்கா தப்பிச்சாங்க‌ல்ல? எவ்ளோ பாவம் நாங்க. அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு ஒரு தடவையாவது படட்டுமே' :-))

ரங்கன் said...

அந்த வேதனையை நேரிடையாக அனுபவித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்...

இது ஒரு தவறான மனோபாவம். அதற்காக வீட்டுப்பக்கமே வராதன்னு சொல்லலை..!!

வாங்க..ஆனா..வந்தா இதுவும் என் குடும்பம் என்கிற பொறுப்புணர்வோட நடந்துக்கோங்க என்பதுதான் என் வேண்டுகோள்..!!

AKM said...

உங்கள் அம்மா இதை நல்ல பதிவு என்று பாராட்டினாரா? நிச்சயம் எந்த அம்மாவும் சொல்லமாட்டார்.. நாளை மணம் முடித்து உங்கள் பெண் வந்து தங்கும்போது சுமை என நினைப்பீரகளா.. எப்போது வருவார் என காத்திருப்பீரா மாட்டீர்களா.. பயிர் வேண்டுமானால் நாற்றாங்காலை மறந்து போகலாம்.. பெண்ணால் எப்படி வாழ்வின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை கழித்த வாழ்ந்த இடத்தை மறக்க முடியும்..உரிமையான இடத்தில் விருந்தாளி போல் வந்து தங்கிப்போக சொல்கிறீர்கள்.. எத்ததை பெண்கள் தாயின் மடியில் தங்கிச்செல்லும் அந்த தருணங்கள்தான் பேட்டரி சார்ஜ் என சொல்ல கேட்டிருக்கிறீர்களா..?தங்கள் பெண் வந்து தங்குவதை எந்த தாயும் சுமையாக நினைக்க மாட்டார்..நிச்சயம் இந்த பதிவை உங்கள் மனதிலிருந்து எழுதியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.. சற்றே கோபமாய் (எழுதுவது என் உரிமை அதில் நீ என்ன கோபப்படுவது என என் மேல் கோபப்பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்) ஏகேஎம்

வல்லிசிம்ஹன் said...

வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். புகுந்த வீட்டில் நிறையப் பேருக்கு ஒட்டுவதில்லை.
நீங்கள் சொன்ன வார இறுதிக்கொண்டாட்டதுக்கு வர மறுத்த கணவன் அந்த இரண்டு நாட்களும் தன் தந்தை தாயோடு இருந்தான், எத்தனையோ நடக்கிறது. ஹ்ம்ம். சொல்லத்தான் வகையில்லை. கீதா சொன்னது போல எங்களுக்கு டேரா போடவெல்லாம் அனுமதி இருந்ததே இல்லை.உள்ளூருக்குப் பெற்றவர்கள் வந்தும், மதியம் இரண்டு மணி பஸ்ஸில் போய் நாலரைக்கு வீட்டில் இருக்கணும்:)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சிவா

புதுகைத் தென்றல் said...

மன அமைதிக்கு போறது சரி... ஆனா ரெஸ்ட் எடுக்கங்கறது கொஞ்சம் ஓவர் தான்...//

ஆமாம் புவனா. வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆனால் விரும்பி அழைக்கும் தனிமையில் தவிக்கும் பெற்றோருக்கு இது பொருந்தாது இல்லையா தென்றல்.?//

தனிமையில் தவிக்கும் பெற்றோரை பார்த்துக்கொள்வது தவறல்ல. நான் சொல்வது அங்கே அடிக்கடி சென்று டேரா போடுவது. அடிக்கடி இப்படி போவதால் இங்கேயும் ஒட்டாமல், அங்கேயும் இல்லாமல் இக்கட்டான நிலை உருவாகிவிடும்.

தனக்கு கஷ்டமாக இருந்தாலும் தன் மகள் கஷ்டப்படுவதற்காக கூட தன் கஷ்டத்தை வெளிப்படுத்தாமல் மகளை அழைத்து, பேரப்பிள்ளைகளை விடச்சொல்லி செய்யும் பெற்றோர்கள் உண்டு ஃப்ரெண்ட். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக எதையும் தியாகம் செய்வார்கள் தானே! கஷ்டமாம்மான்னு கேட்டால் “ச்சே, இல்லவே இல்லைன்னு!” தான் சொல்வாங்க.

புதுகைத் தென்றல் said...

: 'அதெப்படி.. எங்க தலையில இம்சையை கட்டிவச்சுட்டு எப்பிடி நேக்கா தப்பிச்சாங்க‌ல்ல? எவ்ளோ பாவம் நாங்க. அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு ஒரு தடவையாவது படட்டுமே' //

உங்க தலையில உங்க சம்மதம் இல்லாமலேயா கட்டி வெச்சாங்க? கல்யாணம் செஞ்சுக்கன்னு யாரும் கால்ல விழுந்து கெஞ்ச மாட்டாங்களே! பொண்ணைக் கொடுத்தவங்க தன் கண்ணையே கொடுத்திருக்கா மாதிரி. பாவமாமே பாவம்? யாரு பாவம்? இம்சையாம் இருக்கட்டும் இதுக்காகவே ஒரு தனிப் பதிவு போடறேன். :))

புதுகைத் தென்றல் said...

அழகா சொல்லியிருக்கீங்க ரங்கன்,

திருமணமாகிப் போனதும் புருஷன் வீட்டில்( அது தன் வீடுன்னு நினைப்பு வராததால்) தான் செய்வதெல்லாம் மிக மிக அதீத வேலைகள், அங்கே பிரச்சனைகள் அதனால் எனக்கு ஓய்வு என் அம்மா வீட்டில் என வருவதுரொம்பவே தவறு..

உங்க கருத்து தெளிவா அழகா இருக்கு. வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஏகே எம்,

எந்த அம்மாவும் சொல்ல மாட்டங்களா? அப்ப என்னிடம் அழுதவங்களை என்னன்னு சொல்ல?

சரி உங்களுக்காக தனிப்பதிவே போடறேன். :)

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

எங்க அம்மம்மாவும் உள்ளூரிலேயே தான் இருந்தாங்க. சொன்ன நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடவேண்டும். காலை போய் மாலை அம்மா வந்து விடுவார். அதுவும் மிக மிகத் தேவை என்றால் மட்டுமே. வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/07/akm.html

AKM பதிவு போட்டுட்டேன் கண்டிப்பாய் படிங்க

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!

புதுகைத் தென்றல் said...

மிக்க நன்றி இளா...