எந்த ஒரு நல்லநாள் என்றாலும் அப்பொழுதெல்லாம் ரேடியோவில்
அதற்கான சிறப்புத் திரைப்படப்பாடல்கள் வரும். அதைக் கேட்டு
கேட்டு இப்போது அது இல்லாத நல்ல நாள் ஏதோ ஒன்று குறைவது
போலவே இருக்கிறது.
இன்று முஸ்லீம் சகோதர சகோதரிகள் ரமலான் திருநாளைக்
கொண்டாடும் வேளையில் என் வாழ்த்துக்களை பாடல்
கொசுவத்திக்களாகத் தர விருப்பம்.
நாகூர் ஹனீபா: இந்தக் குரலுக்கு நான் அடிமை.
மதங்கள் வேறுபட்டாலும் ”இறைவனிடம் கையேந்துங்கள்”
எனும் இவரது பிரபலமான பாடல் எந்த மதத்தினருக்கும்
பொருந்துவது போல அமைந்திருக்கும்.
அடுத்த பாடலுக்கு வீடியோ கிடைக்கவில்லை.
ஆனால் அந்த பாடலின் வரிகள் என் மனதில் எப்போதும்
ஓடிக்கொண்டிருக்கும்.
ஊன் பிறையை நோக்கிடுவோம்! குரானை ஓதிடுவோம்
மேன்மைமிகு மெக்காவின் திசை நோக்கிப் பாடிடுவோம்
மேன்மைமிகு மெக்காவின் திசை நோக்கிப் பாடிடுவோம்!
நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டாவா!
யார் யாருக்கு எது கொடுத்தால் தகுமென்று நீ நினைத்தாய்
வாராத பதவிக்கெல்லாம் வாய்பிளக்கும் மனிதருண்டு
ஊர் குருவி சிலநேரம் பருந்தென்று நினைப்பதுண்டு
ஊர் குருவி சிலநேரம் பருந்தென்று நினைப்பதுண்டு!
யாரும் வருவார் யாரு தொழுவார் நாகூர் ஆண்டவன் சந்நிதியில்
நீயும் ஒன்று நானும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்
நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டாவா!
இந்தப் பாடலின் அடுத்த சரணங்கள் மறந்துவிட்டன.
எஸ்பீ பால சுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடல்
ஒன்றை கோவை ரவி அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்.
அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
வானுக்கு தந்தை எவனோ?
மண்ணுக்கு மூலம் எவனோ?
யாவக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தையில்லை
அல்லா பெற்ற பிள்ளை யாரும்
அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
லாயிலாஹி இல்லல்லாஹு முஹம்மதுரூச்ல்லாஹி
லாயிலாஹி இல்லல்லாஹு முஹம்மதுரூச்ல்லாஹி
அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
இந்தப் பாடலின் தொகுப்பை இங்கே கேட்கலாம்.
உலகத்தில் சமாதனாமும், மனிதமும் பெருகி
எல்லோரும் எல்லா வளமும் பெற மனமார்ந்த
ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.
9 comments:
ரேடியோவில் பாட்டு கேட்ட நாட்கள் நினைவில் வந்தன. எல்லா சகோதர சகோதிரிகளுக்கும் ரமலான் தின வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்ரி.மகிழ்ச்சி!
மிக்க நன்றி அக்ஸ்
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்.
உங்களின் வாழ்த்துக்கு நன்றி தென்றல்.
நாகூர் ஹனீபாவின் குரலுக்கு நாங்களும் அடிமை.. அருமையான அர்த்தமுள்ள பாடலை ஞாபகபடுத்தியதற்கு நன்றி
ஸாரி ஃபார் லேட் கமிங்!! வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தென்றல். ”இறைவனிடம் கையேந்துங்கள்” கேட்டால் மனம் லேசாகிவிடும் எப்பவும்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பலமா?
இனிமையான நினைவுகள் பகிர்விற்க்கு நன்றி இதோ எனது நண்பர் கோவை வானொலி நேயர் திரு.சையத் ரசூலின் ரமலான் மனதோடுதான் நிகழ்ச்சியின் தொகுப்பு தங்களீடம் பகிர்ந்து கொள்வதின் மூலம் அனைவருக்கும் எனது ரமலான் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். கேட்டு மகிழுங்கள்.
http://paasaparavaikal.blogspot.com/2010/09/92.html
வானுக்கு தந்தை எவனோ?
மண்ணுக்கு மூலம் எவனோ?
யாவக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தையில்லை
அல்லா பெற்ற பிள்ளை யாரும்
அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
//
சின்ன வயதில் கேட்ட பாடலின் மறக்காத வரிகள் இவை. நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் நன்றி
Post a Comment