எதுலதான் அரசியல் செய்யுறதுன்னு இல்ல. பண்டிகை விடுமுறையில்
கூட அரசியல் செய்வது எப்படின்னு ஆந்திராவுல கத்துக்கலாம்.
தெலங்கானா பகுதிகளில் தீபாவளியைவிடவும் சிறப்பா கொண்டாடப்படுவது
தசராதான். பள்ளிகளுக்கு இப்பதான் 15 நாள் லீவு கிடைக்கும். அரைப்பரிட்சை
லீவுன்னு வெச்சுக்கலாம். இப்ப தெலங்கானா கட்சித்தலைவர்
கே.சீ.ஆரோட பொண்ணு கல்லூரிகளுக்கும் 15 நாள் லீவு கொடுக்கணும்!
எங்க பண்டிகையை கொண்டாட விடாம செய்யறது தப்புன்னு
போர்க்கொடி தூக்கியிருக்காங்க. கல்லூரிகளுக்கு 5 நாள் விடுமுறை
கொடுப்பது போதாதாம். லீவு லீவா விட்டு, போராட்டம் பந்துன்னு
போயிகிட்டு இருக்கற நேரத்துல பெத்தவங்க பிள்ளைங்க படிப்ப
முடிக்குமா முடியாதான்னு பயப்படுவது இவங்களுக்கு எங்க புரியப்போகுது??
*****************************************************************
எம்புட்டு ஊழல் நடந்துச்சோ??!! அமைப்புகளில் என்ன குளருபடியோ?
காமன்வெல்த் விளையாட்டுக்கள் துவங்கியாச்சு. துவக்க விழா
கொஞ்ச நேரம் பார்த்தேன். 120 வகை தாள வாத்தியங்கள் சூப்பர்.
அதுவும் அந்தக் குட்டிப்பையனோட தபலா வாசிப்பு சூப்பர்.
பாராட்டுக்கள் அந்த இளம் கலைஞனுக்கு. எப்படியோ நம் நாட்டின்
பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சி இருந்தது
சந்தோஷம். வெள்ளி, வெங்கல பதக்கங்களோட ஆரம்பித்திருக்கும்
நம் இன்னிங்க்ஸ் தங்கம் வரைக்கும் போக பிரார்த்தனைகள்.
***************************************************************
காமன் வெல்த் விளையாட்டுக்களுக்காக தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை
விட்டாங்க சரி. ஆனா எதற்கு வணிக வளாகங்களை மூடச்சொன்னாங்க.
இந்த 10 நாளும் அவங்க வருமானம்??!!! அதற்கு ஈடா
அரசு ஏதாவது தரப்போகுதா???
**********************************************************
எத்தனைக்காலம் மாறினாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரா
நடக்கும் அட்டூழியங்கள் மட்டும் மாறாது போல. ஆந்திராவில்
இருக்கும் அனந்தவரம் கிராமத்தில் ஒரு அறிவில்லாத அறிவியல்
ஆசிரியர் தன் வகுப்பு மாணவியை பலமுறை கற்பழிச்சிருக்காரு.
14 வயதான அந்தப் பொண்ணை மிரட்டி வெச்சிருந்ததில்
தன் பெற்றோரிடமும் கூட சொல்லமுடியாத நிலை. இப்ப அந்தப்
பொண்ணு 5 மாச கர்பம்!!! ஆள் அப்ஸ்காண்ட். இதையெல்லாம்
படிக்கும்போது பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்பவே பயமாயிடும்!!
கலியுகம் என்பது இதுதானா??? மாதா பிதாவுக்கு அடுத்து
வைத்து போற்றப்படும் ஆசிரியர் நடந்து கொள்ளும் விதம் இதுதானா??
பள்ளிப்பருவத்திலேயே ஆண்குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து
பெண்ணைப் போதைப்பொருளாக பார்க்கும் மனோபாவத்தை
மாற்ற அரசு கட்டாய சட்டம் போட்டால் என்ன? தொடர்ச்சியான கவுன்சிலிங்
நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.
**********************************************************
போதும் போதுமென நினைக்கும் அளவுக்கு இந்த வருடம்
மழை அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு
இந்த அளவுக்கு மழை பெய்திருக்கிறதாம். அது முடிஞ்சு இப்ப
வெயில் பிரிச்சு மேயுது!!!! 33 டிகிரி.... சரி இந்த ஆட்டம்
இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே!!! அப்புறம் ஊருக்கே
ஏசி போட்டாப்ல குளிர் காலம் வரப்போகுதே!! ஆஹா அதிகாலை
பனி!!! 10 மணி வெயில் கூட சூடே இல்லாமல் உனக்கையாக
இருக்கும்!!! மீ த வெயிட்டிங்!!!
***********************************************************
எந்திரன் படம் வந்தாச்சு. இன்னும் பாக்கலை. இங்க ஹவுஸ்புல்லாத்தான்
ஓடிகிட்டு இருக்கு. இங்க ஹிந்தி வர்ஷன், தெலுங்கு டப்பிங்,
தமிழ்ல எல்லாமே ஹவுஸ்புல்தான். ஆனா ஆரம்பவிழா
அன்னைக்கு 4000 லிட்டர் பாலபிஷேகம் எல்லாம் ரொம்பவே
ஓவரா இருந்துச்சு. முன்னாடியே தடுத்து நிறுத்திருந்திருக்கலாம்.
அதுக்கு பதிலா ஏழைகளுக்கு அன்னதானம் செஞ்சிருந்தாலும்
புண்ணியமா போயிருந்திருக்கும்!! என் ஆதங்கத்தைச் சொன்னேன்
அம்புட்டுதான்.
*****************************************************
11 comments:
பகிர்வுகள் சிறப்பு.
வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்
Aasiriyarin seigai varuthathirkuriyathu.
Enthiran ingeyum housefulthanga.Oru 1 illa 2 maasam pona konjam gaali aagidum.Paakalaamnuthan naanum irukken.
//4000 லிட்டர் பாலபிஷேகம்//
கொடுமை!!
//கே.சீ.ஆரோட பொண்ணு கல்லூரிகளுக்கும் 15 நாள் லீவு கொடுக்கணும்//
அதுசரி, வாரிசை இப்பவே களத்துல இறக்கிவிட்டாச்சா?!!
வருகைக்கு நன்றி தென்றல்
அதெல்லாம் கரெக்ட்டா களத்துல இறக்கிடுவாங்க ஹுசைனம்மா,
வருகைக்கு நன்றி
நல்ல பகிர்வுகள்.. எங்கூர்ல ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாம, எந்திரனை அமைதியா பார்த்து ரசிச்சோம் :-))
////கே.சீ.ஆரோட பொண்ணு கல்லூரிகளுக்கும் 15 நாள் லீவு கொடுக்கணும்//
அதுசரி, வாரிசை இப்பவே களத்துல இறக்கிவிட்டாச்சா?!! //
முதன் முதலாக ஒரு பொண்ணு வாரிசு அரசியலில் வருவதைப் பற்றிப் பார்க்கும் போது பெருமையாக இருக்கு. (இந்திரா காந்தி ஓல்ட்டு ஜெனரேஷன். நான் நம்ம ஜெனரேஷன் பொண்ணுங்க பத்தி சொல்றேன்)
// முதன் முதலாக ஒரு பொண்ணு வாரிசு அரசியலில் வருவதைப் பற்றிப் பார்க்கும் போது பெருமையாக இருக்கு. (இந்திரா காந்தி ஓல்ட்டு ஜெனரேஷன். நான் நம்ம ஜெனரேஷன் பொண்ணுங்க பத்தி சொல்றேன்)
//
கலைஞர் பொண்ணு,சரத்பாவர் பொண்ணுன்னு நிறைய பேர் இப்பவும் இருக்காங்க :)
//எம்.எம்.அப்துல்லா said...
கலைஞர் பொண்ணு,சரத்பாவர் பொண்ணுன்னு நிறைய பேர் இப்பவும் இருக்காங்க :)//
அப்துல்லா, இன்னும் முந்தின (உங்க) தலைமுறையையே உதாரணமா சொன்னா எப்படி? கயல்விழி - அதான் கலைஞரோட பேத்தியே களத்துல (கொஞ்சமா) ஏற்கனவே குதிச்சாச்சு!! :-))
தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_07.html
Post a Comment