Monday, November 22, 2010

ஆஷிஷ் அம்ருதா ஷ்பெஷல்

புது வீட்டு கிருஹப்ரவேசத்தின் போது புடவைகள் வாங்க
கடைக்கு போன போது ஆஷிஷ் அம்ருதாவையும் கூட்டிகிட்டு
போயிருந்தேன். ஹைதையில் இருக்கும் நல்லி கிளைக்கு
போனோம். அங்கே விற்கும் பட்டுப்புடவைகளை ஆஷிஷ்
பார்த்துகிட்டே இருந்தாப்ல். வீட்டுக்கு வரும் வழியில்
25000,30000ம்னு புடவை விக்குதே யாரும்மா இதெல்லாம்
வாங்கி கட்டுவாங்கன்னு? அப்பாவியா கேட்டாரு. அதுக்கும்
ஆளுங்க இருக்காங்கன்னு சொன்னேன்.

அதற்கப்புறம் வந்த விகடன் இதழில் சுமார் நாலே முக்கால்
லட்சம் பெருமானமுள்ள பட்டுப்புடவையை ஒரு பெண்
கட்டிப்பார்த்து போட்டோ போட்டிருந்ததை ஆஷிஷிடம்
காட்டினேன்.” இதெல்லாம் டூமச் அம்மா!! இந்தக் காசை
கொண்டுபோய் புடவையில் கொட்டி இருப்பதற்கு பதில்
அழகா 5 லட்சத்துக்கு காரே வாங்கியிருக்கலாம்!!! ஏம்மா
இப்படி எல்லாம் யோசிக்க மாட்டங்கன்னு” கேக்க நான்
என்னத்த பதில் சொல்ல?!!!

********************************************************
வீட்டு வேலைகள் 90 சதவிகிதம் முடிஞ்சிருச்சு. அடுத்த வாரம்
சனிக்கிழமை அங்கே போய்விடத் திட்டம். அதற்கு முன் இங்கே
இருக்கும் நண்பர்களை விருந்துக்கு அழைச்சிருந்தோம். 20.11.2010
இரவு விருந்து மிக அருமையாக நடந்தது. இரவு 11 மணி வரை
வீடு கல கலவென பேச்சும் சிரிப்புமாக இருந்தது. டின்னர் முடிந்து
எல்லாம் ஏறக்கட்டிக்கொண்டு இருந்த பொழுது மிஞ்சியிருந்த
சாப்பாட்டை பார்த்து அம்ருதா,”  நீ ஏன் பர்த்டே பார்ட்டி வைக்க மாட்டேன்னு சொல்வது இப்ப புரியுதும்மா!! பார்ட்டியின் போது அனாவசியாமா
உணவுப்பொருட்கள் மிஞ்சி போகுது”” என்ற பொழுது ஆஹா
நம்மளை இம்புட்டு தூரம் உத்து பாத்துகிட்டே இருக்காங்களான்னு
இருந்துச்சு.
******************************************************************
தனக்கு என்ன வேணும், எப்படி அதை செஞ்சுக்கணும் என்பதில்
எல்லாம் இந்தக்கால பசங்க நல்லா தெளிவா இருக்காங்க.
தனது அறையை எப்படி எல்லாம் ரெடி செய்யணும் என்பதில்
அண்ணன், தங்கை இருவரும் மஹா கில்லாடிகள். எங்கே
என்ன வரவேண்டும்? எல்லாம் பக்கா ப்ளான்.

அவங்களுக்கு பிடிச்ச கலரை ரூமோட ஒரு பக்க சுவரில்
அடிச்சிருந்தோம். அதை சர்ப்பரைஸா கூட்டிகிட்டு போய்
காட்டினோம். ரொம்ப சந்தோஷம். ஐயாவோட ரூம் கலர் தீம்
நீலம். அம்மாவுக்கு பிங்க்.

*****************************************************************
நாம எதையும் வற்புறுத்தக்கூடாது என்பதுல நான் திடமா
இருப்பேன். திடும்னு ஒரு நாள் அம்ருதா ,”நீங்க எந்த
வயசுல கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சீங்க??”ன்னு
கேட்க 10 வயசுலன்னு சொன்னேன். அப்ப நானும் இப்பவே
கத்துக்கறேன்னு சொன்னாப்ல. ஆங்கிலத்திலும், தமிழிலும்
இருப்பது போல ஒரு புத்தகம் வாங்கிக்கொடுத்தேன். முதலில்
பாட்டா கேட்டு, கேட்டு அப்புறம் அத்தோடு புத்தகத்தை
வெச்சு படிச்சுன்னு நவராத்திரி லீவிலிருந்து அம்ருதம்மா
கந்த ஷஷ்டி கவசம் படிக்க ஆரம்பிச்சாங்க. இப்ப யாரவது
சொன்னா அவங்க கூட பாக்காம சொல்லும் அளவுக்கு
வந்தாச்சு. தாத்தாவுக்கு போனப்போட்டு தான் கத்துகிட்டதை
சொல்லிக்கிட்டு இருப்பாங்க. வீட்டில் இன்னொரு முருக
பக்தை ரெடி. நேற்று புதுவீட்டில் கார்த்திகை தீபம் வைக்க போயிருந்தோம்.
அண்ணனும் கந்த ஷஷ்டி கவசம் படிக்க ஆரம்பிச்சிருக்காரு.
ஆண்டவனருள்.

12 comments:

வல்லிசிம்ஹன் said...

ஆஷிஷ் அம்ருதாவுக்கு முருகன் அருள் எப்பவும் முன்னிற்கட்டும். இளைய வயதில் கற்றால் பின் எளிதில் மறக்காது. திருக்கார்த்திகை நன்னாள் வாழ்த்துகள் தென்றல்.

LK said...

நல்லாதான் கேள்வி கேக்கறாங்க...இப்பொழுது குழந்தைகள் படு சுட்டி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஷ்பெஷல் ரொம்ப ஷ்பெஷல் தான்:)

கந்தசஷ்டி கவசம் .. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

வித்யா said...

குட்டீஸ் இருவருக்கும் என் அன்புகள்..

ஹுஸைனம்மா said...

ம்ம்.. பார்ட்டியென்றாலே அலர்ஜியாவது இதனால்தான்..

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

வாழ்த்திற்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க எல்கே,
அவங்க கேட்குற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்விழி,
வாழ்த்துக்களை கண்டிப்பா சொல்லிடறேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா

கண்டிப்பா சொல்லிடறேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

அதானாலேயே முதல் பிறந்தநாளைத்தவிர பிள்ளைகளுக்கு பர்த்டே பார்ட்டி கொண்டாடியதே இல்லை. அனாதை இல்லத்துக்கு பணத்தை அனுப்புவது, இல்லையென்றால் பிள்ளைகளை அங்கே அழைத்துச் செல்வதுன்னு செய்வேன்.

வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

/
இந்தக் காசை
கொண்டுபோய் புடவையில் கொட்டி இருப்பதற்கு பதில்
அழகா 5 லட்சத்துக்கு காரே வாங்கியிருக்கலாம்!!! ஏம்மா
இப்படி எல்லாம் யோசிக்க மாட்டங்கன்னு” கேக்க
/

haa haa
good good

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

நலமா??