Wednesday, November 17, 2010

ஆமாம்ப்பு!! நாங்க அந்தக்காலம்தேன்!!!

அந்தக்காலம்னு ஆரம்பிச்சாலே ஏதோ வயசானவங்க டயலாக் மாதிரி
ஆக்கிட்டாங்க. ஆனா ”அந்தக்காலம்” மறக்க முடியாத பொற்காலம்னு
பலரும் கொசுவத்தி சுத்துவோம். எங்க அப்பா கருப்பு,வெள்ளை
திரைப்படங்களா பாத்தப்பா இதையெல்லாம் போயி பாத்துகிட்டு
இருக்காறேன்னு நினைச்சிருக்கேன். ஆனா அதுல கிடைச்ச பல
விஷயங்கள் இப்ப மைனஸ். :( எனக்கு பிடிச்ச இடைக்கால
படங்கள் இப்பத்த பொடிசுகளுக்கு அந்தக்கால படங்கள் ஆனாப்லதான்.

ஆனா இந்த “அந்தக்காலம்” ரொம்பவே நல்லா இருந்துச்சுல்ல.
சமீபத்துல ஒரு இமெயில் வந்துச்சு. அதை எல்லோர்கிட்டயும்
பகிர்ந்துக்கவே இந்தப் பதிவு.

1930-1979 வருடம் வரை பிறந்து வளர்ந்தவர்களா நீங்க
அப்ப இந்தப் பதிவு படிக்கும் போது கண்டிப்பா “சேம் ப்ளட்”
சொல்லிப்பீங்க படிச்சு பாருங்க!!

குப்புற படுத்து தூங்கி, படுத்தது
ஒரு இடம், எந்திரிச்சது ஒரு இடம்னு குட்டி கரணம் போட்டு
தூங்கிய சந்தோஷம் ஆஹா!! (இப்ப எல்லாம் கட்டில்தான்!!)

மருந்துகளை குழந்தைகள் கைக்கு எட்டும் வைக்கும் விதத்தில்
வைக்காதீர்கள்!! அப்படின்னு சொல்லும் வாக்கியங்களோ,
மருந்துகளுக்கு ஷ்பெஷலான சீல்களோ இருந்ததில்லை.
சைக்கிளோ பைக்கோ ஓட்டும்போது ஹெல்மெட்டெல்லாம்
யாரும் போட்டதே இல்லை.

கார் இருக்கும் வீட்டுப்பசங்க கூட சீல்ட்பெல்ட்,பூஸ்டர் சீட்,
இல்லாத காருலதான் பயணம் செஞ்சிருப்பாங்க. ஏன் சில சமயம்
காருக்கு ப்ரேக்கூட இல்லாம இருந்திருக்கும்!! :))

குழாய்த்தண்ணி, கிணத்துத்தண்ணி தான் குடிச்சிருக்கோம்.
பிஸ்லரி தண்ணி எல்லாம் கிடையவே கிடையாது. ஆனாலும்
நோய்வாய்ப்படாம நல்லாத்தான் வாழ்ந்தோம்.

ஒரு கூல்ட்ரிங்க்ஸை 4 ஃப்ரெண்ட்ஸுங்க சேர்ந்து குடிச்சிருக்கோம்,
ஆனா யாரும் அதனால செத்ததில்லை.

கப் கேக்கு, வெண்ணெய் போட்ட கேக்குன்னு வகை வகையா,
சாப்பிட்டிருக்கோம். ஆனா யாரும் உடல்பருமனோட இருக்கலை.
காரணம் நதியோடி விளையாடி, கரையோரம் விழுந்தாடின்னு
வீதியில வந்து விளையாடி ஆரோக்கியமா இருந்ததுதான்.

காலேல பள்ளிக்கு கூடத்துக்கு நடந்துதான் போயிருப்போம்.
காலேலேயே போயிட்டு சாயந்திரம் விளக்கு வெச்சுத்தான்
வீட்டுக்கு வந்திருப்போம். ஆனா பயப்பட தேவையில்லாம
இருந்துச்சு. படிப்போடு விளையாட்டுக்கும் இடம் இருந்திச்சு.

செல்போன்,போன் இதெல்லாம் இல்லாத ஒரு ஆனந்தமான
வாழ்க்கை அப்ப இருந்துச்சு. லீவு போட்டுட்டு போனா
அந்த மனுஷரை கண்டுபிடிப்பதே கஷ்டம்னு ஆபிஸ்ல
டயலாக்லாம் வரும்.

டயர் வண்டி, நுங்கு வண்டி, கோலி, கில்லி, பாண்டி,
நொண்டி விளையாடுதல்னு ரொம்ப பிஸியான நாட்கள்.
கீழே விழுந்து அடிபட்டுன்னு இருக்கும். விழுப்புண்
இல்லாத உடம்பே கிடையாது!! இதுக்காக வேற
வீட்டுல அடி விழும். கீழே விழுந்த வலி, அடிபட்ட
வலின்னு இரண்டுக்கும் சேத்து அழுதவங்களும் உண்டு.
ஆனா அதுக்காக யாரும் புகார் எல்லாம் செஞ்சதில்லை.


இப்ப இருக்கும் மாடர்ன் விளையாட்டு சாதனங்களோ,
150 சேனல்களோ, நாள் முழுக்க போரடிக்கும் ரேடியோக்களோ
இல்லை. டீவிடி போட்டு படம் பாக்க முடியாது. வீசி ஆரில்
புதுப்படம் வர 6 மாசமாகும்!! கம்ப்யூட்டர், லேப்டாப்,
செல்போன், இணையம் இதெல்லாம் இல்லை ஆனா
“நண்பேன்டா” என சொல்லிக்கொள்ளும் நட்புக்கள்
இருந்தாங்க. வீட்டை விட்டு வெளியே வந்து நல்ல
நட்புக்களை தெரிவு செய்துகொண்டோம். உறவுகள்
பலப்பட்டு இருந்தது.

ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு போயி
பார்த்து பேசுறது என்பது சர்வ சாதாரண் விஷயம்.
போன் போட்டு வரட்டுமான்னு???!! கேட்டு போனதில்லை.

ஆனா இந்தத் தலைமுறையில்தான் நல்ல அதிகாரிகள்,
மேனேஜர்கள், பிரச்சனை தீர்க்கும் வல்லவர்கள்,
ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
என அனாயாசமான ரிஸ்க் எடுத்து சாதித்தவர்கள்,
கண்டுபிபிப்பாளர்கள் என பலர் பிறந்துள்ளனர்.

கடந்த 50 வருஷமா எத்தனையோ புதிய கண்டுபிடிப்புக்கள்.
இப்போதைய பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட சந்தோஷங்கள்
கிடையாது. கம்ப்யூட்டர் கேம்ஸ், எக்ஸ்பாக்ஸ் சந்தோஷங்கள்
தவிர வேறென்ன??!!!

நமக்கான சுதந்திரம் இருந்தது, தோல்விகள், சந்தோஷங்கள்,
சாதனைகள், பொறுப்புக்கள் எல்லாம் சரிவிகிதமாக இருந்தது.
இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளும்
தருணங்கள் இருந்தன.

என்ன இப்படிப்பட்ட சந்தோஷங்களை அனுபவித்தவர்களில்
நீங்களும் ஒருவரா???!!! வெல்கம்!! வெல்கம்!!

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!





26 comments:

settaikkaran said...

//என்ன இப்படிப்பட்ட சந்தோஷங்களை அனுபவித்தவர்களில்
நீங்களும் ஒருவரா???!!!//

இப்படிப்பட்ட சந்தோஷங்களை இனிவரும் தலைமுறை அனுபவிக்க முடியாது என்று வருத்தப்படுபவனும் கூட...சூப்பர் இடுகை! :-)

கோமதி அரசு said...

//இந்த பதிவு படிக்கும் போது கண்டிப்பாய் சேம் ப்ள்ட் சோல்லிப்பீங்க//

உண்மை நான் அப்படிதான் சொல்லிக் கொண்டேன்.

அருமையான பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் நானும்.. :)

அதும் சைக்கிள் எடுத்துட்டு ஒரு ப்ரண்ட் வீட்டுக்கு போய் அவ இல்லைன்னா அங்கிருந்து இன்னோரு ப்ரண்ட் வீட்டுகுக்போய் அரட்டை ஆகா..அந்த நாளும் வந்திடாதோ..?

துளசி கோபால் said...

ஸேம் ப்ளட்:-)))))

சினிமாவுக்குப் போகணுமுன்னா அப்படியே கிலம்பிப்போய் டிக்கெட் எடுத்துருவோம்.

இப்போ மாதிரி புக்கிங் செய்ய அலைய வேணாம்.

மெரீனாவில் அசிங்க பயமில்லாம எங்கே வேணா உக்காரலாம்.

பஸ் ஏறிப்போகலாம் வரலாம்.

Thenammai Lakshmanan said...

அருமை தென்றல்.. இப்படி எல்லாம் விளையாடக் கொடுத்து வைச்சிருந்துச்சு நமக்கு.. ஆனா இப்போ பிள்ளைகளுக்கு விளையாடவே டைம் இல்லை..

தீபாவளி மலர் லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் திரும்பி வந்த அன்பு வந்துள்ளது பார்த்தீர்களா.. வாழ்த்துக்கள்..

www.ladiesspecial.com இல் லாகின் செய்து படியுங்கள்..

வெங்கட் நாகராஜ் said...

”ம்.. அந்தக்காலம் திரும்ப வருமா?” ன்னு ஏங்குற பலரில் ஒருவனாக, உங்களது பதிவினை படித்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

கோபிநாத் said...

செம பதிவுக்கா....அப்படியே சைக்கிளை ஒட்டிக்கிட்டே போயிக்கிட்டே இருக்கேன் ;)

\\ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு போயி
பார்த்து பேசுறது என்பது சர்வ சாதாரண் விஷயம்.
போன் போட்டு வரட்டுமான்னு???!! கேட்டு போனதில்லை\\

எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம் அது போயி பார்க்கும் அவன் என்னை தேடி என்வீட்டுக்கு போயிருப்பான் ஒரே சிரிப்பாக
இருக்கும்...;))))

அப்புறம் உடனே நான் அந்த காலம்ன்னு எல்லாம் சொல்லக்கூடாது அதுக்கு அப்புறம் வந்தவுங்க தான் ;))

Vidhya Chandrasekaran said...

83'ல பிறந்ததால இதுல கொஞ்சம் நானும் அனுபவிச்சிருக்கேன்:)

pudugaithendral said...

வாங்க சேட்டைத்தம்பி,

இப்படிப்பட்ட சந்தோஷங்களை இனிவரும் தலைமுறை அனுபவிக்க முடியாது என்று வருத்தப்படுபவனும் கூட..//

எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. ஆனா காலச்சுழற்சியில் மறுபடி இந்த மாற்றம் வரும்னு நம்பிக்கை இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு,

மிக்க நன்றி

pudugaithendral said...

ஆமா கயல்விழி,

போவோமா ஊர்கோலம்னு நானும் என் ஃப்ரெண்டும் சைக்கிளில் சுத்தினது, ஃப்ரெண்ட்ஸ் போனதுன்னு ஜாலிடேஸ்,

உங்க ஏக்கம்தான் எனக்கும்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

ஆமாம், இதைப்பத்தி தொடர்பதிவே ஆரம்பிக்கலாம் போல இருக்கே :))
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க தேனம்மை,

சந்தோஷ சமாச்சாரத்தை சொல்லியிருக்கீங்க. இங்க அந்த புத்தகம் கிடைக்காததால படிக்கலை. இப்ப லாகின் செஞ்சு படிக்கறேன்.

மிக மிக நன்றி

pudugaithendral said...

வாங்க வெங்கட்,

மிக்க நன்றி

pudugaithendral said...

அப்புறம் உடனே நான் அந்த காலம்ன்னு எல்லாம் சொல்லக்கூடாது அதுக்கு அப்புறம் வந்தவுங்க தான் //

வாங்க கோபித்தம்பி,

பொண்ணுங்க தான் வயசைச் சொல்ல வெக்கப்படுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். :)) அந்தக்காலத்தை இப்ப பொற்காலமா பாத்துகிட்டு இருக்கும்பொழுது அந்தக்காலமா இருந்தா தப்பில்லைல்ல.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் வித்யா,

எனக்குத் தெரிஞ்சு 85 வரைக்கும் கூட நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு.

வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

ஏக்கப்பெருமூச்சுதான் வருது..ஆனாலும் சிலவிஷயங்கள் அங்கங்க இன்னும் தொடர்ந்துக்கிட்டுதான் வருது

Pandian R said...

பட்டையைக் கிளப்பும் பதிவு.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

சில இடங்களில் ரொம்பவே அபூர்வமா இருக்கு. வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபண்டு,

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

”அந்த காலம் ” இனிமையான நாட்கள் தான் 82 ல் பிறந்ததால் ஓரளவுக்கு அனுபவித்திருக்கிறேன்.

Prathap Kumar S. said...

//காருக்கு ப்ரேக்கூட இல்லாம இருந்திருக்கும்!! :))//

இது உங்களுக்கே ஓவரா தெரில.....:))

நீங்க சொல்வது நிஜம்தான். ஆனா என்ன செய்ய காலம்போற போக்குல நாமளும் வேகமா ஓடலைன்னா, இந்த உலகத்துல் வாழறதுக்கு லாயக்கே இல்லங்கற நிலைமை....

So, Don't look behind keep running...

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி

pudugaithendral said...

வாங்க நாஞ்சில் பிரதாப்,

காலத்துக்கு தகுந்த மாதிரி ஓடலாம். ஆனா அந்த ஓட்டம் தருவது ஆரோக்கியமான வாழ்வையோ,மனநிலையோ இல்லை எனும் போது ஒரு வெறுமை தோன்றும். அது கொடுமை. அதுக்கு பழசை அசை போட்டு அதற்கு கொஞ்சமேனும் இணையான வாழ்வை வாழ முயற்ச்சித்தால் வாழும் வரை போராடாமல், வாழ்க்கையை அனுபவித்து வாழலாமே!!!

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

//அந்தக்காலம்தேன்!!!//

ஆமாம், அந்தக்காலம் தேன்!!! அதுபோல இப்ப வரவே வராது!! :-( ரொம்ப மிஸ் பண்றேன், என் பிள்ளைகளுக்கு வாய்க்கலையே என்று. இருந்தாலும், இருப்பதைக் கொண்டு திருப்திப் பட்டுக் கொள்கிறோம்.

பிஸ்லேரி வாட்டர் வந்தப்போ, நானெல்லாம் எவ்வளவு ஆச்சரியமா, அதிர்ச்சியாப் பாத்தேன் தெரியுமா!! ஆனா இப்ப, மறந்துகூட குழாய்த்தண்ணியைக் குடிக்கறதில்லை!! நான் மாறலை, மாறினது குழாத்தண்ணிதான்!! :-)))))

pudugaithendral said...

ஆனா இப்ப, மறந்துகூட குழாய்த்தண்ணியைக் குடிக்கறதில்லை!! நான் மாறலை, மாறினது குழாத்தண்ணிதான்!! :-)))))//

ரசிச்சு சிரிச்சேன் ஹுசைனம்மா. நீங்களே ஸ்மைலியையும் போட்டுட்டீங்க. :)