Friday, December 03, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-2

எப்படியோ லோன் வாங்கி பணம் கொடுத்ததுல நிப்பாட்டினேனா!!
வீட்டை ரெஜிஸ்ட்ர் செஞ்சாச்சு. இனி அடுத்த கட்டம். அதான்
கிருஹப்ரவேசம். முடிஞ்சும் முடியாமலும் இருக்கும் சமயத்துல
தான் புதுமனை புகுவிழா செய்யணும்னு சொல்வாங்க. சரி செப்டம்பர்
மாசம் வெச்சுக்கலாம்னு ப்ளான் செஞ்சிருந்தேன். ஆனா வெளியூரில்
இருந்து வரவேண்டிய உறவினர்களுக்கு முன்னக்கூட்டியே சொன்னத்தானே
டிக்கெட் புக் செஞ்சுக்க முடியும்!!

சரி நல்ல நாள் பார்க்கப்போனேன். என் நேரம் செப்டம்பர் மாசம்
எங்க இரண்டு பேருக்கும் ஒத்துவரும் நல்ல நாளே இல்லை. அப்ப
ஆகஸ்ட் மாசமே கிருஹப்ரவேசம் செஞ்சாகணும். இதை விட்டா
நவம்பரில் தான் கிருஹப்ரவேசம் செய்ய முடியும்!!! இதை நான்
கொஞ்சமும் எதிர் பார்க்கவேயில்லை. இவ்வளவு சீக்கிரமா எப்படி??
வேற வழியில்லை 20 நாளில் கிருஹப்ரவேசம். அம்மா,அப்பா
கிரஹப்ரவேசத்துக்கு 2 நாள் முன்னாடி வந்தாங்க. அயித்தானோட
அண்ணி வந்திட்டாங்க. அவங்க அக்கா,மாமாவால வரமுடியாத
சூழல். இதனால நாளைத் தள்ளவும் முடியாது. சீக்கிரமா மரவேலைப்பாடுகள்
முடிச்சு நவராத்ரியை புது வீட்டில் கொண்டாடனும். வீட்டு வாடகையும்
கட்டி, லோனையும் கட்டின்னு இரட்டைக்குதிரை சவாரி செய்ய
முடியாது. சரின்னு ஏற்பாடுகளை செஞ்சோம்.

கிருஹப்ரவேசம் உறவினர்கள் வரைக்கும். அதன்பிறகு தனியா
நண்பர்களைக்கூப்பிட்டு பார்ட்டி கொடுத்துக்கலாம்னு ப்ளான்
செஞ்சோம். கிருஹப்ரவேசமும் ரொம்ப நல்லாவே நடந்துச்சு.






அட புதுமனைபுகுவிழா பத்தி சொல்ல ஆரம்பிச்சதுல அதுக்குமுன்னால
நடந்த மேட்டரைச் சொல்ல மறந்திட்டேனே!!
பில்டர் 4 சுவரு மட்டும்தான் தந்தாருன்னு சொன்னேன்ல,
முழு வீடாக்க மரவேலைப்பாடுகள் முக்கியமாச்சே. துணிமணி
வைக்க இடம் வேணுமே!! சரி நல்லதொரு இண்ட்ரீயர் டெகரேட்டரை
கூப்பிட்டு தரமான பொருட்களால நம்ம பட்ஜட்டுக்குள்ள முடிக்கச்
சொல்லணும்னு நினைச்சோம். ஆனா யாரை கேப்பதுன்னு புரியலை.

அப்பதான் அயித்தானின் அலுவலகத்துல இருக்கும் ஒருத்தர்
தனக்கு தெரிஞ்சவர் ஒருவர் இருக்காருன்னு சொல்லி கூட்டிகிட்டு
வந்தார். நாங்க சொன்னதையெல்லாம் கேட்டுகிட்டாரு. இமெயிலில்
ப்ளான் அனுப்புவதாகவும் அதைவெச்சு நீங்க மாற்றம் ஏதும்
வேணும்னா செய்வதா சொன்னாரு. அனுப்பி வெச்ச ப்ளான் களில்
சில மாற்றங்கள் செய்யச் சொன்னேன்.

”நீங்க என் ஆபிஸூக்கு வாங்க மத்ததெல்லாம்(!!) பேசலாம்னு!!”
போனோம். அவரு வீடு/ஆபிஸ் இருப்பது மெஹதிபட்டணம்.
இங்கேயிருந்து 15 கிமீட்டருக்கு மேல இருக்கும். போனோம்.
பேசினோம். இண்ட்டீரியர் டெக்கரேட்ட்டர்களுக்கு அவங்க
தரும் டிசைனுக்கு ஒரு ரேட், மெட்டீரியல்ஸ் வரவழைச்சு,
தேவையான ஆள்களை கொடுப்பதுக்கு ஒரு ரேட். மொத்தமா
எல்லாத்தையும் முடிச்சு கொடுப்பது படி காண்ட்ராக்ட்.
அவர் கேட்ட ஃபீஸெல்லாம் ஓகே. ஆனா நாங்க சொன்ன பட்ஜெட்டுக்கு
சரி சரின்னு சொல்லிட்டு போக போக அவரு,” பேங்கல 10 லட்சம்
வெச்சுக்கங்க!!! நான் கேட்கும் போது கொடுத்தாத்தான் நல்லா
செய்ய முடியும்னாரு!!!” பாருங்க, நானும் அயித்தானும்
மயக்கம் போட்டு விழாம  இருக்க உக்காந்திருந்த சேரை
பத்திரமா பிடிச்சுகிட்டோம். இதுல இவரு அடிக்கடி வந்து
மேற்பார்வை செய்ய மாட்டாராம். 3 தடவை மட்டும் இலவசமா
செய்வாராம். அதற்கப்புறம் ஒரு தடவைக்கு 3000 ஃபீஸ்!!!
நாம போய் அல்லாட முடியாதுன்னுதான் காண்ட்ராக்டுக்கு
விடுறது. அதுவும் செய்ய மாட்டாருன்னா!!

அடுத்த தெருவுல ஒரு வீட்டுல அவர் போட்ட டிசைன்ல
வேலை நடந்துக்கிட்டு இருப்பதை போய் பார்த்துட்டு
வரச்சொன்னாரு. ப்ளைவுட்டுதான் உபயோகிச்சிருந்தாலும்
அதுவும் தரமானதா தோணலை. யோசிச்சு சொல்றோம்னு
வந்திட்டோம். பத்து லட்சம்லாம் டூமச், நம்மால ஆவாது.
நம்ம பட்ஜட்ல முடிக்கும் ஆளைப்பாப்போம்னு!”நானும்
அயித்தானும் பேசிக்கிட்டு வீட்டுக்கு வந்தோம்.

அந்த ஆள் கிட்ட வேலை கொடுக்கப்போவதில்லைன்னு
சொன்னதுக்கு அவரு அப்படின்னா நான் டிசைன் போட்டுக்
கொடுத்ததுக்கு 30000 பணம் கொடுக்கணும்னு சொல்லிவிட்டாரு.
அந்த டிசைன் எங்களுக்கு வேண்டவே வேண்டாம், திருப்பி
கொடுத்திடறோம், 1 நையா பைசாக்கூட கொடுக்க மாட்டோம்னு
சொல்லிட்டோம்.

சரி! இனி யாரைக்கேட்பது? என்ன செய்வது. ஒண்ணும்
புரியலை. எங்க அப்பார்ட்மெண்ட்ல லிஃப்ட பலநாள்
வேலை செய்யாது. அன்னைக்கும் அப்படித்தான் ஆகி
நானும் அயித்தானும் பேசிக்கிட்டே மாடிப்படி ஏறிகிட்டு
வந்தோம். அப்போது எங்க அப்பார்ட்மெண்ட் நண்பரும்
வந்தாரு. வீட்டு வேலை ஆரம்பிச்சீங்களான்னு!! கேக்க
எங்க சோகக்கதையைச் சொன்னோம்.
எனக்குத் தெரிஞ்சவரோட மருமகள் செய்யறாங்க, அப்படின்னு
சொல்லி நம்பர் கொடுக்க, பேசினோம்.எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே
அவங்க இருப்பது வசதியாக போய் உடன் வந்தாங்க. அவங்க
இப்ப செஞ்சுகிட்டு இருக்கும் இடத்தை கூட்டிகிட்டு போய்க்காட்டினாங்க.
வேலை நல்லா இருந்துச்சு.


எங்க புதுவீட்டைக்கூட்டிக்கிட்டு வந்து காட்டி, எங்க தேவைகளைச்
சொன்னோம்.CADDயில் டிசைன் போட்டா 30000 ஆகும். நான்
போட்டோவா காட்டறேன்னு சொன்னாங்க. சரின்னு சொன்னோம்.
எங்க பட்ஜட் தாண்டாம செய்யணும்னு திரும்ப திரும்ப சொன்னோம்.
புது வீடு இரண்டாவது மாடிதான்னாலும் அயித்தானுக்கு ஃபால்ஸ்
சீலிங் போட்டு அலங்கார விளக்குகள் வைக்கணும்னு ஆசை.

சரின்னு அதுக்கும் சேத்து பேசினோம். முதலில் ஃபால்ஸ் சீலிங்
வேலை அடுத்து மரவேலைகள் அப்படின்னு முடிவு செஞ்சாங்க.
ஆகஸ்ட் 15  அட்வான்ஸ் பணம் கொடுத்து வேலைகளை ஆரம்பிக்கச்
சொன்னோம்... ஆகஸ்ட் 30 கிருஹப்ரவேசத்தின் போது
ஃபால்ஸ் சீலிங்கிற்கு பீம் போட்டு, விளக்குகளுக்கு வயர்லாம்
தொங்கிகிட்டு இருந்துச்சு....

 அப்புறம்!!??!!




16 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, ரெண்டாவது பகுதி வந்தாச்சு. இப்பல்லாம் இண்டீரியர் டெகரேஷன் பயங்கர பணம் பிடுங்கற விஷயமாகிடுச்சு. தொடருங்கள்.

ADHI VENKAT said...

தொடர் நல்லா போகுது. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் இருக்கிறேன்.

துளசி கோபால் said...

வீடு கட்டறதும் இண்டீரியர் டிஸைன் செஞ்சு அதுலே காம்ப்ரமைஸ் பண்ணி 'ஜெயிக்கறதும்' ரொம்ப ச்சேலஞ்சா இருக்கும்.

நம்ம அனுபவம் ஒன்னும் இருக்கே!

தொடருங்க. கூடவே வர்றேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ வீட்டைக்கட்டிப்பார்ங்கரது சரிதானே..:)

கோபிநாத் said...

ஆகா இம்புட்டு நடந்திருக்கா...!!! புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள் அக்கா ;)

pudugaithendral said...

வாங்க வெங்கட்,

சரியா சொன்னீங்க.

அடுத்த பாகம் திங்கள்கிழமை வரும்.

pudugaithendral said...

நன்றி கோவை2தில்லி

pudugaithendral said...

வாங்க டீச்சர்,

ஆமாம், ஆமாம். தொடர்வதற்கு ரொம்ப சந்தோஷம்.

pudugaithendral said...

ஆமாம் கயல்விழி,

அயித்தானோட அண்ணன் பசங்க ரெண்டு பேர் கல்யாணமும் நடத்தி வெச்சு அந்த அனுபவத்தைப்பார்த்திட்டேன். நங்கநல்லூரில் வீடு வாங்கியபொழுது கூட வேறுவித அனுபவம். இந்த அனுபவம்.... வருது பாருங்க

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோபி,
நடந்ததுல கால்வாசிக்கே “இம்புட்டான்னு” கேக்குறீகளே!! சொச்சத்தையும் படிச்சுப்பாருங்க.

வாழ்த்துக்கு நன்றி

எஸ்.கே said...

சுவாரசியம்! சுவாரசியம்! அருமை!

கோமதி அரசு said...

புதுமனை புகு விழாவிற்கு வாழ்த்துக்கள்!

வீட்டை கட்டிப் பார்த்த அனுபவ தொடர் நல்லா இருக்கு.

HEALER said...

ரொம்பவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது
உஷா ரமெஷ் நாசிக்

ஹுஸைனம்மா said...

வாடகைக்கு வீடு தேடினதுக்கே ஆஞ்சு ஓஞ்சு போய் இருக்கேன். சொந்த வீடு கட்டுறதுன்னா கேக்கணுமா..

pudugaithendral said...

நன்றி எஸ்.கே

நன்றி கோமதி அரசு

நன்றி ஹீலர்

ஆமாம் ஹுசைனம்மா. வருகைக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தென்றல் - இண்டீரியர் மர வேலை கொஞ்சம் காஸ்ட்லிதான் - ஃபால்ஸ் சீலிங் வேற - டைம் ஷார்ட்டு - தூள் கெளப்பீட்டிங்க போல - மத்ததையும் பாக்கறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா