புதுவருடம் பிறக்க இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன.
என்னவிதமான புதுமைகளை உள்ளடக்கி வருகிறதோ??
ஆச்சரியமும்,எதிர்பார்ப்பும் நம்முள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
பிறக்கும் வருடம் எல்லோருக்கும் நல்லதைத் தர வேண்டுமென
பிரார்த்தனைதான் அனைவருக்கும் இருக்கும்.
ஒவ்வொரு வருடம் என் பதிவில் கண்டிப்பாக அந்தந்த
வருடத்தின் நிறத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கலர்களின் ராஜா எனப்படும் [PANTONE] நிறுவனம்
ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்து
வெளியிடுகிறது. அது போல பிறக்க இருக்கும் 2011ஆம்
ஆண்டிற்கான நிறம் Honeysuckle. பேரிலேயே தேன் இருக்கிறது.
சர்க்கரை பொங்கலில் தேன் மழைப்பொழிந்தது போல
புத்தாண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும்
என பிரார்த்திப்போம். இனி இந்தக் கலரின் குணாதியசங்களைப்
பார்ப்போம்.
வர்ணங்கள் காட்டும் ஜாலங்கள் எத்தனையோ. ஒவ்வொரு
கலருக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. நாம் அணியும்
நிறத்தைப்பொறுத்து நம் மனநிலையைக்கூட சொல்லிவிடலாம்.
பிரச்சனைகளிலிருந்து தப்பி ஓடாமல் அதை எதிர்த்து
தைரியம், தன்னம்பிக்கையுடன் சமாளிக்கும்
தன்மை இந்த இளஞ்சிவப்போடு கலந்த
பிங்க் நிறத்திற்கு உண்டாம். பிங்க் என்பதால் பெண்களுக்கு
மட்டுமேயான நிறமில்லை. இந்த Honeysuckle இருவருக்கும்
பொருத்தமான நிறம்.
கண்ணிற்கு இதமான இந்த நிறத்தை 2011 ஆம் ஆண்டிற்கு
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. மனதிற்கும் இதத்தை
தரும் ஆண்டாக மலர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
டிஸ்கி: இது என் 700ஆவது பதிவு.
14 comments:
வரும் வருடம் எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும். உங்களுடைய 700-வது இடுகைக்கு வாழ்த்துக்கள். மேலும் பல நூறு பதிவுகள் எழுத எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
www.venkatnagaraj.blogspot.com
www.rasithapaadal.blogspot.com
நல்ல பகிர்வுக்கா ;)
700 பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)
இதமான நிறம்..
நன்றி வெங்கட் நாகராஜ்
நன்றி கோபி
ஆமாம் அமைதிச்சாரல்,
கண்ணுக்கு மிக இதம், மனதுக்கும் குளிர்ச்சி.
வருகைக்கு நன்றி
’ஹனி சக்கிள்’ - பேரே இப்பத்தான் கேள்விப்படுறேன். தகவலுக்கு நன்றி.
நல்ல நிறம்தான். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றி ஹுசைனம்மா
கண்ணுக்கு இதமான நிறமாக இருக்கிறது. 1000 வது பதிவு விரைவில் வெளிவர வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாங்க கோவை2தில்லி,
அடுத்த வருஷம் 1000 அடிச்சிடலாம் :))
வருகைக்கு நன்றி
700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
1000, 1000 நல்ல பதிவுகளை வழங்க வாழ்த்துக்கள்
அழகான பிங்க் எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடித்தத கலர், எனக்கும் தான் .
என் பக்கம் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி ஜலீலா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
Post a Comment