Tuesday, December 07, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-4

நவம்பர் 20 சனிக்கிழமை நட்புக்களை கூப்பிடத்திட்டம். ஆனா 14ஆம் தேதி
வரை சுவத்துக்கு பெயிண்ட் கூட அடிக்கலை!!! இப்படியே
விட்டா சரியா வராதுன்னு வூட்டுல சமைச்சு வெச்சிட்டு
காலேலியே புதுவீட்டுல போய் உக்காந்து சூப்பர்வைசர்
வேலை பார்க்க ஆரம்பிச்சேன். எனக்கு இப்ப ஆளை அனுப்பறீங்களா?
இல்லையான்னு பில்டர் கிட்ட சண்டைப்போட்டு திங்கள்கிழமை
பெயிண்ட் அடிக்க ஆரம்ப வேலை நடந்துச்சு. மதியம் சாப்பாட்டுக்கு
அயித்தான் வந்து அழைச்சுகிட்டு போய் திரும்ப கொண்டு வந்து
விடுவாரு. பசங்க ஒரு சாவி எடுத்துக்கிட்டு போய் தானே திறந்து
வீட்டுக்கு வருவாங்க. வீட்டுல துணி காயப்போட்டு, மடிச்சு
பாத்திரம் கவுத்துன்னு பசங்க செஞ்சு எனக்கு டீயும் போட்டு
வெச்சாங்க. தினமும் இதே கதைதான். பாவம் பசங்க
இரண்டு பேரும் உதவி செய்யத்தான் எங்களால மேனேஜ்
செய்ய முடிஞ்சது. குட்டீஸூங்களுக்கு அன்பு முத்தங்கள்.

இங்க வேலை முடிஞ்சதும் ஒரு 6.30மணிக்கு அயித்தான் வந்து
என்னியக்கூட்டிகிட்டு போவாரு. அடுத்த நாளிலிருந்து சோத்தையும்
கட்டி எடுத்துகிட்டு வந்து அங்கயே உக்காந்திட்டேன். வீட்டுக்கு
போனா அந்த நேரத்துல இவங்க எஸ்ஸாகிடறாங்க. அவங்க தடுக்குல
பாஞ்சா நான் கோலத்துல பாயற ஆளாச்சே!!! :))
கறாரா நின்னு சண்டை போட்டு, பேசி பேசி முதல் கோட்டிங்
பெயிண்டிங் முடிச்சாச்சு,( அந்த தைரியம் வந்தப்புறம் நண்பர்களை
விருந்துக்கு அழைச்சோம்.வேலை முடியாட்டி அப்புறமா பாத்துக்கலாம்னு
திட்டம்) பில்டர் சொன்ன மாதிரி 3 நாளில் எல்லாம் வீடு
ரெடியாகாது. முதல் கோட்டிங் பெயிண்டிங் முடிஞ்சு இரண்டு
நாள் கழிச்சு லப்பம், பட்டி பாத்து அப்புறம் உப்புத்தாள் வெச்சு
தேச்சு அப்புறம்தான் செகண்ட் கோட்டிங்.

ஃபேன்,லைட் எல்லாம் பக்கத்துலேயே இருந்து வெச்சோம்.
எங்க பில்டர் தரப்பு எலக்ட்ரீஷியனுக்கு வேலையே தெரியாது
போல. அவர் கன்னா பின்னா கனெக்‌ஷன் கொடுத்துவெச்சிருக்க,
பத்தாதக்கு எங்க இண்டீரியர் டெக்கரேட்டர் தரப்பு எலக்ட்ரீஷியனும்
தன் இஷ்டத்துக்கு வேலை பாக்க அதை சரி செய்ய வந்தாளு
தலையை பிச்சிக்கினு வேலையை பாத்ததானல சாதரண ட்யூப்
லைட் ஃபிக்சிங் கூட இரண்டு நாள் இழுத்துச்சு. கிச்சன்,
பசங்க புத்தக அலமாரி, டைனிங் ஹால் யூனிட் ஆகிய இடத்துல
கண்ணாடி கதவுகள் வைக்கணும். இந்தோ வர்றேன் அந்தோ
வர்றேன்னு அந்த ஆளு வரலை. சனிக்கிழமை காலேல
கொண்டு வந்து வைக்கறேன்னு சொன்னாரேன்னு அங்க போய்
12 மணி வரைக்கும் நிக்கறோம். ம்ஹூம்... வண்டி கவுந்திடிச்சு,
குடை சாஞ்சிடிச்சுன்னு சொல்லிட்டாரு.

அந்தக் கண்ணாடிகள் வெச்சப்புறம்தான் அழகே கூடுதலா இருக்கும்.
அது இல்லாமலே பார்ட்டி. 7.30மணிக்கு பார்ட்டின்னா நானும்
அயித்தானும் 6 மணி வரை புதுவீட்டுலேயே இருக்கோம்.
வீடு க்ளீனிங் எல்லாம் நடக்கணுமே!! அப்புறமா வீட்டுக்குப்போய்
ஃப்ரெஷ்ஷாகி ஓடி வந்தோம்.

இரவு 12 மணி வரை நண்பர்களோட கலகலன்னு இருந்துச்சு
வீடு. எல்லோருக்கும் வீடு பிடிச்சிருந்துச்சு. கல்யாணப்பொண்ணு
மாதிரி நல்லா அலங்காரமா இருக்கு!!! வீடுன்னு ஒருத்தங்க
சொன்னாங்க. ஒரு கல்யாணம் செய்வதும் வீடு கட்டிப்பாப்பதும்
சமமா ஏன் பெரியவங்க சொன்னாங்கன்னு நல்லாவே புரிஞ்சது.
தலைப்பை கொண்டுவந்தாச்சுன்னா முற்றும்னு நினைக்கறீங்களா!!
அதான் இல்ல. இதக்கப்புறம் என்ன நடந்துச்சு????
அடுத்த பதிவுல. :))



14 comments:

Chitra said...

அருமையான பதிவு, இன்னும் தொடரும்.... சூப்பர்!

Vidhya Chandrasekaran said...

குழந்தைகளின் பொறுப்பு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறதுக்கா..

வெயிட்டிங்..

pudugaithendral said...

வாங்க சித்ரா,

நட்புக்களிடம் பகிர்வதே தனி சுகம் இல்ல.

pudugaithendral said...

ஆமாம் வித்யா,

ஐ ஆம் ப்ளஸ்ட். வீடு மாறும் போதும் கூட இருவரும் பொறுப்பாக எல்லாம் எடுத்து வைத்து, திரும்ப வீட்டில் சேர்த்து என செய்தார்கள். ஆஷிஷ் சாமான்கள் ஏற்றும் லாரியில் அவர்களுடன் கூடவே வந்து வந்து போய்க்கொண்டிருந்தான்.

அம்ருதா கீழே நின்று கொண்டு மேற்பார்வை பார்த்துக்கொண்டாள்

ஹுஸைனம்மா said...

ஆமா தென்றல், பசங்க அவசியமான நேரத்துல அழகா கைகொடுப்பாங்க. நாங்க வீடு மாத்துற நேரத்துல, பெரியவன் ஸ்கூல்ல எக்ஸிபிஷன்னு 2 நாள் போக வேண்டியதாப் போச்சு. ரொம்ப கையொடிஞ்ச மாதிரி ஆகிப்போச்சு.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, ரொம்ப சுவாரசியமாய் சொல்லிட்டு போறீங்க, தொடருங்க. ஒரு வீட்டுல இருந்து மற்ற இடத்துக்கு பொருட்களை அனுப்பும்போது இந்த லாரி வாடகைக்காரர்களும் படுத்தும் பாடு இருக்கே, அடுத்து அதுவா?

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

அம்ருதா கொஞ்சம் சின்னது என்பதாலும் ஆஷிஷ் இல்லாட்டி எனக்கு நிஜமாவே கை ஒடிஞ்சா மாதிரிதான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வெங்கட்,

அந்தக்கூத்து வழக்கம். அதுக்குமுன்னாடி என்ன நடந்துச்சுன்னு சொல்ல வேணாமா!! :)

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

தொடருங்க. தொடருங்க. அடுத்ததை கேட்க தயாரா இருக்கோம். பசங்க உதவி பண்ணினதில் சந்தோஷம். ஏனென்றால் நிறைய வீடுகளில் பசங்க வேலை செய்வதை பெற்றோர்களே விரும்புவதில்லை.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

நம்ம வீட்டுல பசங்க எப்பவுமே ஹெல்ப்பிங் ஹேண்ட் தான். நோ சொல்வதே இல்லை. அவங்களும் கத்துக்கணும்ல.

வருகைக்கு நன்றி

கோபிநாத் said...

\\இப்படியே
விட்டா சரியா வராதுன்னு வூட்டுல சமைச்சு வெச்சிட்டு
காலேலியே புதுவீட்டுல போய் உக்காந்து சூப்பர்வைசர்
வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.\\

சிங்கம் ஒன்னு புறப்பட்டதே..பாட்டு எல்லாம் பாடினாங்களா பின்னாடி ;)))

என்ன இருந்தாலும் நாமும் அங்க இருந்து பார்த்து வேலை வாங்கினால் தான் ஆகும் போல..குட் ;)

Porkodi (பொற்கொடி) said...

போன பதிவுல சொன்ன கதை என்னன்னா, ஒரு வீட்டுக்கு 5 மருமகள் வந்த ஒடனே எல்லா வேலையும் அவங்க பாத்துப்பாங்க அப்பாடான்னு ஒவ்வொருத்தருக்கு ஒரு வேலை பிரிச்சு குடுத்தாங்காளாம்.. பாத்தா ஒருத்தி எல்லாருக்கும் முன்னாடி எழுந்து கோலம் போடுவாளாம், அப்புறமா வர்றவ சாணி ஊத்தி அலம்புவாளாம், ஒருத்தி வீட்டை பெருக்குவாளாம், அப்புறமா வர்றவ அரிசி புடைப்பாளாம்.. இப்படி இழுத்துட்டு போவாங்க என் பாட்டி. அவன் ஓட்டை போடறதுக்கு முன்னாடியே இவன் ஃபிட்டிங் பண்றது இவன் கனெக்சன் குடுக்கறதுக்கு முன்னாடியே அவன் வர்றதுன்னு கடவுளே கடவுளே.

pudugaithendral said...

என்ன இருந்தாலும் நாமும் அங்க இருந்து பார்த்து வேலை வாங்கினால் தான் ஆகும் போல..//

ஆமாம் கோபி,

அதுவும் கண்கொத்தி பாம்பு மாதிரி அவங்களை நோட்டம் விட்டுகிட்டே இருக்கணும் இல்லாட்டி அம்புட்டுதான். சொல்லிகிட்டே இருக்கும்போதே ஆஷிஷ் ரூமில் ஒரு சைடு ப்ளூ கலர் அடிக்கச் சொல்லியிருந்தேன். மறந்துட்டு மத்த கலரை அடிச்சிட்டாப்ல. திரும்ப ப்ளூ கலர் அடிக்க வெச்சேன்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க பொற்கொடி,

அதே அஞ்சு மாட்டுப்பொண்ணு கதைதான் இங்க நடந்துச்சுன்னு இப்ப நீங்க கதையை விளக்கிச் சொன்னப்புறம் புரிஞ்சுது. :(( :))

வருகைக்கு நன்றி