Thursday, December 09, 2010

மாதங்களில் டிசம்பர்!!!!

மாதங்களில் மார்கழியாக இருப்பதாக கண்ணன் சொன்னான்.
எனக்கு மிகவும் பிடித்தது மாதம் இந்த டிசம்பர். என் திருமணம்
நடந்தது,அயித்தானுடன் ஹைதைக்கு வந்து சேர்ந்தது, ஆஷிஷுடன்
முதலில் ஹைதைக்கு வந்திறங்கியது என பல நினைவுகள் இந்த
மாதம் எனக்குத் தந்திருக்கிறது.

அயித்தானுக்கும் டிசம்பர்தான் ஆகிவந்த மாதம்:)) அவர்
ஹிந்துஸ்தான் லீவரில் சேர்ந்தது, இலங்கைக்கு நாங்கள் கிளம்பியது
என எல்லாம் இந்த மாதம் தான். டிசம்பர் ””ஸோ ஸ்பெஷல்””
மாதம்.

டிசம்பர் 15தேதிக்கு மேல் மார்கழி பிறந்து குளிர் ஆரம்பிக்கும்.
இங்கே ஹைதையில் அக்டோபர் இறுதிக்கே துவங்கிவிடும்
என்றாலும் இப்போது பற்கள் கிடுகிடுக்கும் நிலை.
இதமான வெயிலுடன் கூடிய அருமையான தட்பவெட்பம்.
வண்டியில் செல்லும்போது முகத்தில் அறையும் குளிர் காற்று.....
சீசனுக்கு தகுந்த பழங்கள் வரிசையில் தற்போது கொய்யாக்காய்.
அப்படியே நறுக்கி உப்பு, கொஞ்சமாய் மிளகாய்த்தூள் சேர்த்து
சாப்பிட்டால்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))))

இலங்கை சென்றதும் ஒரு டிசம்பர் மாதத்தில்தான். மரங்கள்
செடிகள் எல்லாம் விளக்கொளியில் ஜொலி ஜொலிக்கும்.
கிறிஸ்துமஸிற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் துவங்கி
அருமையாக இருக்கும். ஊர் மொத்தமும் விளக்கொலியில்
ஜொலிப்பது போலிருக்கும். அங்கேயும் குளிர் அதிகம்தான்.
அப்படிப்பட்ட ஒரு குளிர் நிறைந்த பொழுதில் நாங்கள்
நால்வரும் கொழும்புவிலிருந்து 2 மணிநேரத் தொலைவில்
இருக்கும் "BENTOTA" போய்க்கொண்டிருந்த பொழுது
எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவு பனி...


இந்த டிசம்பர் மாதத்தில்தான் நாங்கள் 4 அல்லது 5 குடும்பங்கள்
சேர்ந்து வண்டி எடுத்துக்கொண்டு கதிர்காமம் செல்வது
பழக்கம். முதன் முதலில் சிங்கப்பூர், மலேசியா சென்றதும்
இப்படி ஒரு டிசம்பரில்தான்.

புதுகை கீழ3ஆம் வீதியில் நாங்கள் குடியிருந்த வீட்டில்
டிசம்பர் பூக்கள் பூக்கும். இல்லை இல்லை பூத்துக் குலுங்கும்.
அவர்கள் அதை விற்பார்கள் கூட. பிங்க்,நீலம், இராமர் கலர்,
மஞ்சள் என வகை வகையாய் இருக்கும். முதல் நாள்
சாயந்திரமே மொட்டுக்களை பறித்து தொட்டி முற்றத்தில்
துணி பரத்தி போட்டு வைத்துவிடுவார்கள். காலையில்
அரும்பி இருக்கும். காலையிலும் நிறைய்ய பூ பறிக்க
வேண்டி இருப்பதால் இப்படி செய்வார்கள்.ஆனால் ஒரு பூ கூட
நான் வைத்துக்கொள்ள மாட்டேன். வாசமில்லா மலருக்கும்
எனக்கும் சம்பந்தமே இல்லை.:))


பாசமிகு அவ்வாவை இழந்தது இப்படி ஒரு டிசம்பரில்.
நோய்வாய்ப்பட்டிருந்த என் மாமியார் இறைவனிடம் சேர்ந்ததும்
10 வருடங்களுக்கு முந்தைய டிசம்பரில்தான்.

இப்படி ஒரு டிசம்பரில்தான் நெல்லூரிலிருந்து மாமா போன்
செய்து இலங்கையில் பூகம்பமாமே!! பத்திரமா இரும்மா!!
என்றது. மாமா சொல்லும் வரை இலங்கையில் சுனாமி,
பூகம்பம் எதுவும் தெரியாது. அன்று காலைதான் அயித்தான்
இந்தியாவுக்கு பயணமானது.நான் தம்பி மற்றும் குழந்தைகள்
தனியாக இருந்தோம். இந்த ட்ராக்கிலிருந்துதான் ரயில் ஒன்று
அடித்துச் செல்லப்பட்டு அதில் இருந்த மக்கள் அனைவரும்
இறந்ததும். வலது பக்கம் கடல், நடுவில் கார் செல்லும் சாலை,
இடதுபக்கம் ரயில் என நான் பலமுறை ரசித்த இடம் இது. :((



வெள்ளவத்தையிலிருந்து சுனாமியின் ஆட்டமும் இதன்
விளைவுகள் இருப்பதாகச் செய்தி. நாங்கள் இருந்த
இடத்தில் எந்த பிரச்சனை இல்லை என்றாலும் நீரின்
அளவுக்கூடிக்கொண்டே இருப்பதாகவும், அதுவும்
ஏர்போர்டுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் ”கெளனிய”
பிரிட்ஜ்க்கு அடியில் ஓடும் நதியில் நீரின் வரத்து அதிகமாக
இருப்பதால் ஏர்போர்ட்டுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படலாம்
என்றும் செய்தி கேட்டு ஒரே பீதியானது. டிக்கெட் கிடைத்தால்
அடுத்த ஃப்ளைட்டில் இந்தியா வந்துவிட நினைத்துக்கொண்டிருந்தேன்.
கடைகளில் பால்பவுடர் கூட கிடைக்கவில்லை. இருந்தவற்றை
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களாக இங்கிருந்தவர்கள்
வாங்கி அனுப்பிக்கொண்டிருந்ததால் ஸ்டாக் இல்லாமல்
போயிற்று. 2 நாளில் நிலமை சரியானது. அப்போது அஞ்சா
நெஞ்சமாக தனியாகவே சமாளித்தேன்.


triton எனும் ஹோட்டலை
சூரையாடியிருக்கிறது சுனாமி. :(( இது போல் எத்தனையோ
அழிவுகள் அப்போது. நெஞ்சை விட்டு நீங்காத கொடுமை அது.


இந்த வருடம் கிறிஸ்துமஸ் மரம் வைத்தாயிற்று.
இந்த மரத்தை வைக்கும் பொழுது மனதுக்கு ரொம்பவே
இதமாக உணர்கிறேன்.அடுத்த முறை பெரிய மரமாக
வாங்க வேண்டும் என அம்ருதம்மா சொல்லியிருக்கிறார்.:))

எட்டு வருடங்களுக்கு முன் அண்ணனும் தங்கையும் கொழும்பு
கலதாரி ஹோட்டல் லாபியில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ்
மரத்துக்கு முன்பு.



ஹாலிடே ஜாலிடே சீசன் என்பதால் இந்த சீசனில் சீசனல்
மூவீஸ் பார்க்க ரொம்ப இஷ்டம். அதுவும் என் ஆல்டைம்
ஃபேவரைட் ஹோம் அலோன்.




கொள்ளையடிக்க வரும் திருடர்களுக்கு ஆட்டம் காட்டும்
இடம் ரொம்பவே நன்றாக இருக்கும்.அந்தத் திருடர்கள்
இருவருக்கும் ஷாக் அடிப்பது, நெருப்பு பிடித்துக்கொள்வது
என சூப்பராக இருக்கும். ஹோம் அலோன் 1,2,3,4
இவற்றில் 2,3,4 இவையே எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.


ஐ லவ் டிசம்பர்.

8 comments:

சமுத்ரா said...

good one...

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டை வரவேற்க தயாராக வைக்கும் மாதம்:)

pudugaithendral said...

நன்றி சமுத்ரா

ஆமாம் வித்யா

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. என்ன டெம்ப்ரேச்சர் ஒரு 20 25 செல்சியஸ் இருக்குமா? நீங்க கண்டிப்பா பேரிக்கா நாட்டுக்கோ இல்ல நார்வே ஸ்வீடனுக்கோ போயே ஆகணும்!! :)) டிசம்பர் எனக்கும் ஃபேவரிட்!

Chitra said...

என் திருமணம்
நடந்தது,அயித்தானுடன் ஹைதைக்கு வந்து சேர்ந்தது, ஆஷிஷுடன்
முதலில் ஹைதைக்கு வந்திறங்கியது என பல நினைவுகள் இந்த
மாதம் எனக்குத் தந்திருக்கிறது.


......வாழ்த்துக்கள்!

R. Gopi said...

\\இராமர் கலர்\\

I am hearing this after a very long time.

pudugaithendral said...

பொற்கொடி தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

ஒரு எட்டு போய் பாத்திடு வந்திட்டா போகுது.:))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி சித்ரா தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்