Thursday, December 16, 2010

நாகவல்லி வந்தாச்சு!!!!!

விக்டரி வெங்கட் நடித்து இன்று வெளிவந்திருக்கும் தெலுகு
ஹாரர் படம் “நாகவல்லி”.. பி.வாசு டைரக்‌ஷனில்
வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் வெங்கடேஷுடன்
6 ஹீரோயின் நடிக்கிறார்களாம்!!!

அனுஷ்கா ஷெட்டி- சந்திரமுகி
ரிச்சா- கொளரி
கமலினி முகர்ஜி- காயத்ரி
ஷ்ரத்தா தாஸ்- கீதா
என லிஸ்ட் நீளுகிறது.



சந்திரமுகியின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவந்திருக்கிறது.
இன்று வெளியாகி இருக்கும் இந்தப் படம் நல்ல கலெக்‌ஷனைக்
கொடுத்திருப்பதாகவும் 5வருடங்களுக்கு முந்தைய ரஜினியின்
சந்திரமுகி டப்பிங் படத்தின் முதல் கலெக்‌ஷனையும் மிஞ்சி
விட்டதாக சொல்கிறார்கள்.

சந்திரமுகியில் பிரபலமான “லகலகலக” மாதிரி இதில்
வெங்கடேஷ் ”அவுர அவுரா” என கலக்கியிருக்கிறாம்!!!



இந்த மாதம் தனது 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய
விக்டர் வெங்கி என அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும்
வெங்கடேஷ் இந்தப் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் என்கிறார்!!
பொறுத்திருந்து பார்ப்போம். பாடல்கள் கொடுத்திருக்கிறேன்.




12 comments:

வெங்கட் நாகராஜ் said...

பகிர்வுக்கு நன்றி. இப்போது தான் வேறு ஒரு வலைத்தளத்திலும் இப்படத்தினைப் பற்றி படித்தேன். கலெக்ஷனில் இப்படமும் கலக்கும் என எதிர்பார்க்கிறார்கள் போல.

SenthilMohan said...

ஒரு முக்கியமான matter இன்னானா, படத்துல நம்ம தலைவர் ஒரு Sceneல வர்றதா கேள்விப்பட்டேன். உண்மையா? யாராச்சும் படம் பாத்திருந்தீங்கன்னா சொல்லுங்க. ஆமானா நான் பாக்குற முத நேரடித் தெலுங்குப்படம் என்ற பெருமை இந்தப் படத்துக்கு கிடைக்கட்டும்.

Chitra said...

ரைட்டுலு!

நாஞ்சில் பிரதாப்™ said...

என்னது தெலுங்குப்படமா?
தெலுங்குப்படங்களின் ஓவர் க்ளிஷேக்களும், ஓவர் சவுண்டும், ஓவர் கலரும் நமக்கு அலர்ஜிலு....நான் எஸ்கேப்புலு.லுலுலுலு :)))

புதுகைத் தென்றல் said...

வாங்க வெங்கட்,

ஆமாம் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க செந்தில் மோகன்,

தலைவர் வர்றாரான்னு தெரியலை!!! தெரிஞ்சா சொல்றேன்.

முதல் வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சித்ரா

புதுகைத் தென்றல் said...

வாங்க பிரதாப்,

என்னவோ தமிழ் சினிமாவில் ஓவர் சவுண்டும், கலரும் இல்லாத மாதிரி பேசறீங்க.

சமீபத்திய தனுஷ் படம், இதற்கு முந்தைய விஜய் படங்கள் எல்லாமே இங்கேயிருந்து வந்ததுதாங்க. எல்லா இடத்திலும் எல்லாமும் இருக்கு.

வருகைக்கு நன்றி

SenthilMohan said...

மொத வருகை எல்லாம் இல்லீங்க. மொத பின்னூட்டம். :)

அமைதிச்சாரல் said...

கலக்கலு தகவலு :-))

மோகன் குமார் said...

நாங்க ஹைதை வந்த போது இந்த படம் அங்கே கலக்கி கிட்டிருந்தது. தலைவி வாழ்க (தலைவி யாரா? நீங்க ஷெட்டி சேத்து சொல்லிருக்கீங்களே அவுக தான் இப்போதைய தலைவி )

புதுகைத் தென்றல் said...

வாங்க மோகன்,

தலைவி வாழ்க

ஆஹா!!!! சரி நடக்கட்டும் :))

வருகைக்கு நன்றி