Thursday, December 09, 2010

இந்தக்கொடுமையை நான் பாத்தேன்!!!!

ரொம்ப ஆசை ஆசையாய் எதிர் பார்த்து ரொம்ப சர்ப்ரைஸா
டிக்கெட் புக் செஞ்சு தியேட்டருக்கு போனோம். ஆஹா
அந்தக்காலம். பேகி பேண்ட்... 70களில் நடந்தது போல
இருக்கும் படம்னெல்லாம் பேசிகிட்டாங்களேன்னு ரொம்ப
எதிர் பார்ப்போட உக்காந்திருந்தேன். Action replay படம்.

கொடுமைன்னாலும் கொடுமை மஹா கொடுமை அது!!!
ஐஸ்வர்யா ராயும் அக்‌ஷ்யகுமாரும் கணவன் மனைவிகள்
அப்படின்னு சொல்வதற்கு பதில் எலியும் பூனையும்னு
சொல்லலாம்!!! எடுத்ததெற்கெல்லாம் சண்டை போடும்
ரகம். இவங்க மகனுக்கு இதனாலேயே கல்யாணம்னா
வெறுப்பா இருக்கு.

தன்னை விரும்பும் பெண்ணோட தாத்தா கண்டு பிடிச்ச
டைம்மிஷினில் போய் தன் அப்பா அம்மா கல்யாணத்தை
லவ் மேரேஜ்ஜா மாத்துறார். திரும்பி வந்து பாக்கும் பொழுது
இருவரும் சந்தோஷமான தம்பதிகளா இருக்காங்க. இவரும்
கல்யாணத்துக்கு ஒத்துக்கறாரா. கஷ்டம்!!!!



Churake Dil Mera அப்படின்னு அக்‌ஷ்ய் பாடி ஆடின காலத்திலேர்ந்து
நான் அவரோட ஃபேன். அப்புறம் அக்‌ஷயை ரொம்ப பார்க்க
முடிஞ்சதில்லை. சிங் இஸ் கிங் இப்படி சமீபமா நல்லா ஹிட்டான
படங்கள் கொடுத்திருக்காரு. ரொம்ப நாளைக்கப்புறம் நடிப்பை
பாக்கலாம்னு போனதுக்கு பல்புதான் கிடைச்சது. ஹோட்டலில்
வெயிட்டரா இருந்து, கராத்தே உதவியோட பாலிவுட்டில் நுழைஞ்சு
தனக்குன்னு ஒரு இடத்தை தக்க வெச்சிருந்தாலும் இந்தப் படம்
செம பல்பு. ஐஸ்வர்யா ராய் அடாவடி கேரக்டர். ஓம்பூரி, கிரோன் கெர்
எல்லோரையும் வேஸ்டாக்கிட்டாங்க. அந்தக்கால பூனைக்கண் அழகர்
ரண்தீர் கபூரை வேஸ்ட் கேரக்டர் கொடுத்து ரீ எண்ட்ரி தந்திருக்காங்க.

கட்டா மீட்டான்னு ஒரு படம். கொஞ்ச நேரம் பாத்துட்டு ஆஃப் செஞ்சிட்டேன்.
நல்ல வேலை தியேட்டருக்கு போகாம ஃப்ரெண்ட் கொடுத்த சீடியில
பாத்தேனோ தப்பிச்சேன். த்ரிஷா இப்படி ஒரு படத்துல அறிமுகம்.
ஆனா இந்தப் படத்துல அக்‌ஷயோட நடிப்பை குறை சொல்ல முடியாது.
கதைதான் ஜவ்வுமாதிரி இழுக்குது.
ஆக்‌ஷன் ரீப்ளே படத்துல வரும் இந்தப் பாட்டு மாதிரி
படம் பாக்கப்போறவங்களுக்கு “ஜோர் கா ஜட்கா”தான்னு சொன்னதை
புரிஞ்சிக்காம படம் போக்க போனோமேன்னு என்னை நானே
நொந்துக்கறேன்.

இந்த வருடத்தில் நான் பார்த்து நொந்தப் படம் எனும் சிறப்பை
இந்தப் படம் பெறுகிறது. :(((









26 comments:

Prathap Kumar S. said...

எந்தப்படத்தைச்சொல்றீங்க.... என்னால வீடியோவைபார்க்கமுடில.... பதிவுல படம்பேரை போடாமலே விமர்சனமா? :)

கட்டா மீட்டா ஒரு மலையாளப்படத்தின் (வெள்ளாணகளுடே நாடு) ரீமேக். பிரியத்ர்ஷனின் இந்தி ரீமேக் கொடுமைகளில் இதுவும் ஒன்று... ஆனால் மலையாளத்தில் மோகன்லால் நடித்து படுசுவாரஸ்யமாக இருக்கும்.

Vidhya Chandrasekaran said...

ஹி ஹி மீ தி எஸ்கேப்பு.
ஜோர் கா சட்காவும், பேக்கபர் பாட்டும் நல்லாருக்கு.

அமுதா கிருஷ்ணா said...

:))))

Thamira said...

ஹிஹி.. மகிழ்ச்சி, மகிழ்ச்சி.

pudugaithendral said...

ஆக்‌ஷன் ரீப்ளே படம் பேரு. ஒரிஜனலா எதுவும் நல்லா இருக்கும். அதை ஹிந்திக்குகொண்டு போகும் கொடுமை இருக்கே!!!! கடவுளே..

வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்

pudugaithendral said...

ஆமாம் வித்யா பாட்டு நல்லா இருக்கு.
சாவரியாவுக்கு அடுத்து நான் நொந்த படம் இது. :(

pudugaithendral said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா.

pudugaithendral said...

ஆஹா என்ன ஒரு சந்தோஷம் ஃப்ரெண்ட் உங்களுக்கு. ம்ம்ம் :))

அன்புடன் அருணா said...

நல்லவேளை நான் தப்பிச்சேன்!நன்றி!

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள். இந்த மாதிரி கொடுமை எல்லாம் எங்களுக்கு இல்ல.. தப்பிச்சுட்டோம்..

உண்மைத்தமிழன் said...

கட்டா மீட்டால அரைமணி நேரத்துக்கு அப்புறம்தான் படமே ஆரம்பிக்குது..!

அதுக்குள்ள பொட்டியை மூடிட்டு குறை சொன்னா எப்படி..?

அதோட மலையாள மூலப் படத்தை இன்னிக்கும் பார்த்தா சிரிக்கலாம்.. அழுகலாம்.. சிரிக்கலாம்.. அழுகலாம்..! லவ்லி பிலிம்..!

Chitra said...

Kinda from "Back to the Future" story.

pudugaithendral said...

நல்லவேளை நான் தப்பிச்சேன்!நன்றி!//

என்ன ஒரு சந்தோஷம் அருணா :))

pudugaithendral said...

இதுக்கு வாழ்த்து வேறயா இராகவன்!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

கட்டா மீட்டால அரைமணி நேரத்துக்கு அப்புறம்தான் படமே ஆரம்பிக்குது..!//

அண்ணாச்சி வாங்க,

அந்த அரைமணிநேரம் கூட பார்க்க முடியலையே!!!

pudugaithendral said...

ஆமாம் சித்ரா,

அதை பாடாவதியா எடுத்திருக்காங்க. :(

R. Gopi said...

:)

முதல் முறை என்பதால் ஸ்மைலி. போகப் போகக் கலாய்ப்போம்:)

புதுக்கோட்டை அப்பா வழியில் சொந்த ஊர். அதனால் அதிகமாகவே கலாய்ப்போம்:))))

Azhagan said...

Looks like they have lifted a sequence from "back to the future" and made it in to a full length movie!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கட்டா மிட்டா நானும் பாத்தேன் அக்கா... ஒகே ரகம் தான்... கதை ஆரம்பிச்சதுமே நாமே முடிவு சொல்ற மாதிரி கதை... usual சினிமாடிக் ஸ்டோரி... அக்சய்க்கு ஒரு நல்ல குடை வாங்கி குடுத்து இருக்கலாம் டைரக்டர்... ஜஸ்ட் கிட்டிங்...

நீங்க சொன்ன மொதல் படம் இன்னும் பாக்கல... நல்ல விமர்சனம்...ஏதோ புது முயற்சி போல இருக்கு இந்த கதை...

நான் எந்திரனே இப்போ தான் போன வாரம் பாத்தேன்.. ஹும்...

சாந்தி மாரியப்பன் said...

நான் தப்பிச்சேன்..ஏன்னா படம் பார்க்கலை.

pudugaithendral said...

புதுக்கோட்டை அப்பா வழியில் சொந்த ஊர். அதனால் அதிகமாகவே கலாய்ப்போம்:))))//

ஆஹா ஆனந்தமா!!! அடிக்கடி வாங்க :))

pudugaithendral said...

ஆமாம் அழகன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க புவனா,

எந்திரன் ஒருவாட்டி பாக்கலாம். மத்த இரண்டும் பாக்காட்டிப்போனாலும் பரவாயில்லை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

கொடுத்துவெச்சவங்க அமைதிச்சாரல்.

:))

Pandian R said...

so sorry for you.

pudugaithendral said...

ப்ச்.. என்ன செய்ய?? இதைத்தான் சொ.செ.சூ வெச்சுக்கறதுன்னு சொல்வாங்க :))