Friday, January 28, 2011

ஜம்பலக்கடி பம்பா... கிதகிதலு

ஆண்களிடம் பெண்கள் படும் கொடுமையை பார்க்க சகிக்காத
பெண் ஒருவர் ஒரு யோகியிடம் சென்று கேட்க அவர்
“ஜம்பலக்கடி பம்பா” எனும் மருந்தை கொடுக்கிறார். அதை
ஆண்களுக்கு தெரியாமல் சோற்றில் கலந்து கொடுத்துவிட நிலமை
மாறுகிறது. கணவன் வீட்டு வேலை செய்வது முதல் குடிகார மனைவியிடம்
அடிவாங்குவதை எல்லாம் மாறிப்போகிறது. பெண் தான் குழந்தை
பெறுகிறாள் என்றாலும் வலி மட்டும் அந்தக் குழந்தையின் தகப்பனுக்கு
தான். சிரிசிரித்துக்கொண்டு பிள்ளை பெறும் பெண்.... வலியால் துடிக்கும்
பக்கத்து வீட்டுக்காரன்!!! அவனுடன் சண்டை போடு அந்தப் பெண்ணின்
கணவனை தடுத்து வலிபட்ட கணவனின் மனைவி வீட்டுக்குள் அழைத்துச்
சென்று பரேடு நடத்துவாள் பாருங்கள்!!! தன் கணவன் செய்த துரோகம்
தாளாமல் குடித்து குடித்து இறக்க அவளது கணவனுக்கு வெள்ளை உடை!!!
ஆண்களின் கழுத்தில் தாலி!!!!

பாஷை புரியாவிட்டாலும் வீடியோ பாருங்க!! காமெடியா இருக்கும்.

இப்படி இந்தக் கிராமம் மட்டும் வித்தியாசமாக இருக்க காரணம் என்ன?
என மண்டையைக் குடைந்து கொள்ளும் போலிசார் ஒரு காவலரை
அனுப்பி வேவு பார்த்து வரச் சொல்வர். அந்தக் காவலரின் அண்ணன்
அந்த ஊரில் இருக்க அவரது வீட்டுக்கு வரும் காவலரை சந்தேகித்து
போலீஸ் உளவாளி என கண்டுபிடித்து விடுவார் அந்தப் பெண். அவருக்கும்
மருந்தை கலந்து கொடுக்க முயலும் ஒவ்வொரு தருணமும் தட்டிப்போகும்.
தன்னையும் அந்த ஊர் ஆண்கள் போல மாற்ற முயல்கிறாள் என்பதை
கண்டுபிடித்து ஒவ்வொரு முறையும் மருந்திலிருந்து தப்பித்து....
ஆண்களின் நடவடிக்கை பெண்களுக்கும், பெண்களின் நடவடிக்கைகள்
ஆண்களுக்கும் வருவது போல கதை எழுதி அதை அழகாக
வடிவமைத்திருந்ததில் பார்த்தவர்களின் வயிறுகள் சிரிப்பால்
பஞ்சராகிப்போனது. கடைசியில் இரு பாலினருக்கும் பைத்தியம்
பிடித்து பிள்ளைகளைப்போல நடந்துகொள்வதாக வரும்.

அந்தப் பெண்ணின் மனதில் இருக்கும் ஆண்கள் மீதான வெறுப்பை
களைந்தானா? இருவருக்கும் திருமணம் நடந்ததா? ஊர் மாறியதா
அது தான் ஈ.வி.வி சத்யநாராயாணா இயக்கி 1993ஆம் ஆண்டு
வெளிவந்த தெலுங்கு படம் ஜம்பலக்கடி பம்பா!!!

நரேஷ் (நடிகர் கிருஷ்ணாவின் மூத்தமகன்) போலிஸ் அதிகாரியாகவும்,
ஆண்களை வெறுத்து மாற்றும் பெண்ணாக ஆமனி நடிக்க மற்ற
கேரக்டர்களில் பிரம்மானந்தம், கோடா ஸ்ரீநிவாச ராவ், பாபுமோகன்,
மல்லிகார்ஜுன ராவ், அன்னபூர்ணா, ஸ்ரீலட்சுமி என பெரிய பெரிய
புள்ளிகள்.

இந்தப் படத்தின் இரண்டாவது பார்ட்டாக பம்பலக்கடி ஜம்பா படம்
எடுக்க திட்டமிட்டிருந்தார் சத்யநாரயணா! அந்த மகாபாக்யம் தெலுங்கு
திரையுலகிற்கு கிடைக்கவில்லை. எத்தனையோ தெலுங்கு படங்களை
ரீமேக் செய்யும் தமிழ் திரையுலகம் இந்த ஜம்பலக்கடி பம்பாவை
விட்டு வைத்தது ஏனோ!!! லாஜில் இல்லாத சூப்பர் நகைச்சுவை
படம் அது!!

கிதகிதலு:
சத்ய்நாராயணா தன் மகன் அல்லரி நரேஷை வைத்து எடுத்த
படம். சின்ன வீடு, சதிலீலாவதி படத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சம்
சுட்டா மாதிரி இருந்தாலும் படம் காமெடி ட்ரீட்மெண்ட். அதிகமாக
கிடைக்கும் வரதட்சணைக்காக அல்லரி நரேஷ் குண்டு பெண்ணை
திருமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ முடியாமல் வேறொரு
பெண்ணை காதலிக்க மூத்த தாரத்தை விவாகரத்து செய்து இந்தப்
பெண்ணை மணக்கலாம் என திட்டமிட்டு மனைவியிடம் கேட்க
நீ இன்னொரு திருமணம் செய்து கொள்வது போல் எனக்கும்
இன்னொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடு! நான்
விவாகரத்து செய்கிறேன்” என்று சொல்ல நரேஷின் காதலி
அவர் இருக்கும் வீட்டை பார்த்து இந்த வீட்டை தன் பேரில் எழுதி
கொடுக்கச் சொல்ல அது தன் மனைவியுனைடயது என்று சொல்ல
உண்மை வெளிப்படுகிறது. உண்மை என்னவென்றால் நரேஷுக்கு
போலிஸ் உத்யோகத்தில் கிடைப்பது 10000 சம்பளம் மட்டுமே!
அவர் இருக்கும் வீடு, கார் அதற்கு டிரைவர், செலவுக்கு இரண்டு
லட்சம் எல்லாம் மாமனார் தருவது!!


இது தெரிந்து அந்தப் பெண் விட்டு ஓட உண்மை உணர்ந்து
குண்டோ ஒல்லியோ தன் மனைவிதான் சிறந்தவள் என புரிந்து
சுபம்!!


படத்தின் சில போட்டோக்கள் பாருங்கள்


3 comments:

அமைதிச்சாரல் said...

முதலில் குறிப்பிட்ட படம் டப்பிங் செஞ்சு வெளிவந்துச்சுன்னு நினைக்கிறேன்.. டிவியில் பார்த்த ஞாபகம் இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு காணொளிகளும் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி.

அப்பாவி தங்கமணி said...

//எத்தனையோ தெலுங்கு படங்களை ரீமேக் செய்யும் தமிழ் திரையுலகம் இந்த ஜம்பலக்கடி பம்பாவை
விட்டு வைத்தது ஏனோ!!! //
இந்த ஜோக் "ஆத்மா" ஒரு தமிழ் படம்... ரெம்ப நாள் முன்னாடி... ராம்கி ஹீரோவா நடிச்சது...அதுல பாத்தா ஞாபகம் அக்கா... இதே படமா இல்ல சும்மா ஜோக் மட்டும் அதுல இருந்து எடுத்தாங்களானு நினைவில்ல...


Second movie looks like a good one... ha ha