Tuesday, March 01, 2011

சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்.........

குட்டி பாப்பா கூட அம்மாவின் துப்பட்டாவை சேலையாக
கட்டி அழகு பார்க்கும். புடவை இதற்கு இருக்கும் மதிப்பே
தனிதான். சேலையின் மதிப்பு சொல்லிவிட முடியாது
என்றாலும் இந்தப் பாடல் கேட்டால் சுவாரசியமாக இருக்கும்.



இந்தியாவில் புடவைகள் மாநில வாரியாக பிரசித்தமானவை.
நம்ம ஊர் செட்டிநாடு, கோயம்புத்தூர் காட்டன், ஆரணிபட்டு,
காஞ்சிப்பட்டு என எத்தனையோ வகைகள். எனக்குத் தெரிந்த
மற்ற மாநில புடவைவகைகளைப்பத்தி கொஞ்சம் எழுதலாம்னு
நினைக்கிறேன். வித்தியாசமா இருக்கணும்னு நினைக்கறவங்க,
பட்டைத் தவிர்க்கணும்னு நினைக்கறவங்களுக்கு காட்டன் என
சில வெரைட்டிகளை ஒவ்வொரு பதிவா எழுதப் போறேன்.

ஆந்திராவின் சிறப்பு பெற்ற சில புடவைவகைகளை
முதலி பார்ப்போம். கத்வால் இது ஆந்திராவில் இருக்கும் ஒர்
சின்ன ஊர். இங்கேயிருந்து தயாரிக்கப்படும் கத்வால் புடவைகள்
ரொம்ப விஷேஷம். பருத்தி, பட்டுன்னு இதே புடவையை
தயாரிக்கறாங்க.

ஒவ்வொரு இழையும் கையாலேயே நெய்யப்படுகிறது.
கீழே வீடியோவுல பாருங்க தெரியும்.



ஜரிபார்டர்,முந்திகளில் மட்டும் பட்டுஜரி கலந்து உடலில் காட்டனாக
தயாரிக்கறாங்க. இவற்றின் விலை 1500லேர்ந்து இருக்கும்.
கூலாக இருக்க பருத்தியிலும் கத்வால் புடவைகள் தயாராகின்றன.
இவற்றின் விலை 500க்குள் அடக்கம். உடுத்தினாலும் வித்தியாசமா
நல்லா இருக்கும்.

ஜரியில் உபயோகிக்கப்படும் பட்டு துஸ்ஸார் அல்லது
மல்பேரி பட்டுவகைகளைச் சேர்ந்ததா இருக்கும்.


Gadwal புடவைகள் வெளி மாநிலங்களிலும் கிடைக்கிறது.
சென்னையில் பெரிய பெரிய புடவைக் கடைகளில் பார்க்கலாம்.
1930ஆம் ஆண்டிலிருந்து பிரபலாமாக இருக்கும் இந்தப் புடவைகள்
மிக நேர்த்தியாக தயாரிக்கப்படுகிறது.

பட்டு கட்டி போரடித்தவர்கள் வித்தியாசமாய் இந்தப் புடவை
அணியலாம். நல்ல ரிச் லுக் இருக்கும். பட்டு வேண்டாமென
தவிர்ப்பவர்களும் காட்டனில் கிடைக்கும் கத்வால் புடவையை
அணியலாம்.

அடுத்த இழை நாளை...

16 comments:

துளசி கோபால் said...

நல்ல தொடக்கம்.

புடவை அவ்வளவாக இப்பெல்லாம் கட்டலைன்னாலும் புடவை ஆசை விடுதா?

நானும் உங்கூர் வந்தப்ப ஒரு புடவை வாங்கிவந்தேன்.

அப்புறம் ஜிங்குச்சா பாடலுக்கு எங்க தமிழ்ச்சங்கக் குழந்தைகள் கிறைஸ்ட்சர்ச் ஆர்ட் ஃபெஸ்டிவலுக்கு நடனமாடுனாங்க சில ஆண்டுகளுக்கு முன். கலர்ஸ் பார்த்துட்டு வெள்ளையர்கள் பிரமிச்சுப் பாராட்டுனாங்கன்னு சொல்லவும் வேணுமோ!!!!

pudugaithendral said...

அட உடனே பின்னூட்டம் அதுவும்
டீச்சர் கிட்டேயிருந்து சந்தோஷம்.

எங்க ஊர்ல இன்னும் நிறைய்ய வெரைட்டிகள் இருக்கு. அதைப்பத்தி சொல்லி சில ரங்கமணிகளின் பர்ஸுக்கு வேட்டு வைக்கணும்ல அதான் :))

வருகைக்கு நன்றி

Asiya Omar said...

பகிர்வுக்கு நன்றி.தொடர்ந்து சேலைச் சோலையை காண ஆசை.

Chitra said...

அந்த பாடலை, இப்பொழுதுதான் முதன் முறை காணொளியில் பார்க்கிறேன்.
புடவையை - என்ன அழகாக - பொறுமையாக - நேர்த்தியாக நெய்து தருகிறார்கள்.
பகிர்வுக்கு நன்றிங்க.
அருமையான பதிவுங்க. தொடருங்க.

கோமதி அரசு said...

//பட்டைத் தவிர்க்கணும்னு நினைக்கறவங்களுக்கு காட்டன் என
சில வெரைட்டிகளை ஒவ்வொரு பதிவா எழுதப் போறேன்.//

30 வருஷம் ஆச்சு நான் பட்டை தவிர்த்து வித விதமான கைத்தறி சேலைகள் தான் கட்டுகிறேன்.

எனக்கு பிடித்த பதிவு.

//சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் சேலையடி.//

இந்த பாட்டு பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது, எனக்கு பிடித்த பாடல்.
தொடர்ந்து எழுதுங்கள் கைத்தறி சேலைகளைப் பற்றி, படிக்க ஆவல்.

ஹுஸைனம்மா said...

ம்.. சின்ன வயசில எங்கூர்ல இப்படித்தான் நெசவுத் தொழில் நடந்தது. இப்ப எங்க அதெல்லாம்..

சேலையைப் பத்தி சொன்னா மட்டும் போதுமா? இந்தத் தொடருக்கு அதிகப் பின்னூட்டம், ஓட்டு போடறவங்களுக்குப் பரிசா ஒரு சேலை பரிசாத் தரலாமே? (ஐடியா சொன்ன எனக்குத் தனி பரிசு!!)
:-))))

சாந்தி மாரியப்பன் said...

புடவை... பிடிக்கும், ஆனா அவ்வளவா பிடிக்காது. நம்ம ஓட்டத்துக்கு சல்வார்தான் சரி :-)))))))

ADHI VENKAT said...

புடவை இது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சிறு வயதிலேயே அம்மா எங்காவது வெளியில் சென்று விட்டால் ஃப்ராக் மேலே ஒரு ரிப்பன் கட்டியாவது புடவை கட்டி பார்ப்பேன். இப்ப குளிர்ல கட்றது இல்லை. சம்மர் வந்தா வாரத்தில் இரண்டு நாளாவது கட்டுவது உண்டு.
தொடருங்கள் புடவை வகைகளை.

pudugaithendral said...

vaanga gomathi arasu,

enakum anth paatu romba pidikum. neengalum ennai mathiri sameblooda!! nanum pattu kattuvathey illai.

thodarnthu varungal.

varugaiku nandri

pudugaithendral said...

vaanga husainamma,

avvvvvvvvvvv ippadillam maatividakoodathu :)) varugaiku nandri

pudugaithendral said...

vaanga amaithi charal,

nanum salwar katchi than. amayam samayamna uniform pola pudavai kattuven :))

varugaiku nandri

pudugaithendral said...

vaanga kovai2delhi,

nanum antha koothellam adichiruken. ippa en maga adikara koothai rasichukittu iruken. :))

varugaiku nandri

வல்லிசிம்ஹன் said...

தென்றல், கத்வால் புடவை பழைய கதநாயகிகள் கட்ட ஆரம்பித்த நாட்களிலியே மோகம். அதாவது கதைக் கதாநாயகிகள்:0விலை 1500 தானா. எங்க ஊருக்கு வரும்போது விலை கூடிடுமோ. படக்காட்சி நல்லா இருந்தது.

அன்புடன் நான் said...

புடவையும் காட்சிப் பொருளா ஆகிவிடும் போல....

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

கத்வால் புடவை சென்னைசில்க்ஸில் 2 வருடங்களுக்கு முன் 1500 ரூபாய்.

வருகைக்கு நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க கருணாகரசு,

பண்டிகை நாட்களிலாவது புடவை அணிவதை பழக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள் பெண்கள். புடவை அருங்காட்சியகத்தெற்கெல்லாம் செல்லாது.

வருகைக்கு நன்றி