Saturday, March 05, 2011

ரேக்ளா வருது...... பங்களா ஒதுக்கு!!!!

அயித்தான் எப்பவுமே இப்படித்தான்! சும்மாலும் இருக்க மாட்டாரு.
நீச்சல் கத்துக்கோன்னு சொல்லி நீச்சல் பழகியாச்சு. இப்ப
வண்டி. டூ வீலர் கூட இல்ல... நாலு சக்கர வாகனம். :( :))

எல்லோரும் கார் ஓட்டக் கத்துக்கிடணும்னு பாடிக்கிடு இருந்திருப்பாரு
போல. அக்டோபர் மாதத்தில் ஒரு சுபயோக சுபநாளில் என்னை
கார் டிரைவிங் கத்துக்க வைக்கணும்னு முடிவு செஞ்சிட்டாரு.
அயித்தான் சொன்னா அப்பீல் ஏது!! சரிங்கன்னு சொன்னேன்.
கண்ட கண்ட இடமெல்லாம் வேணாம்னு சொல்லி சின்னப்புள்ளைய
ஸ்கூல்ல சேக்கிறமாதிரி விசாரிச்சு கடைசியா என்னையும் கூட்டிகிட்டு
போய் மாருதி டிரைவிங் ஸ்கூல்ல பணத்தை கட்டினார்.

எல் எல் ஆர் வாங்கினாத்தான் வண்டியை ரோட்ல ஓட்டவே
விடுவாங்க அவங்க. அந்தக் கருமத்தை வாங்க ஆன்லைன்ல
பரிட்சையெல்லாம் எழுதச் சொல்றாங்க. இந்த ஆர்டீஒ ஆபீஸ்
காரங்க. அதுவும் ஸ்லாட் புக் செஞ்சு குறிப்பிட்ட நேரத்துக்கு
அங்கின போய் எல்லாம் செய்யணும். இரண்டு தடவை ஸ்லாட்
செஞ்சு அது கான்சலாகி கடைசியா பிப்ரவரி 1 பரிட்சை எழுதி சரி சரி
கம்ப்யூட்டரில் கிளிக்கி எல் எல் ஆர் வாங்கியாச்சு.

ஊருக்கு போயிட்டு வந்தது, அம்மா அப்பா வந்திருந்ததுன்னு
ஒரு மாசம் ஓடியே போச்சு. இப்ப டிரைவிங் கிளாஸ் போக
ஆரம்பிச்சாச்சு!! ஆனா உண்மையில் நல்லதா ஒரு டிரைவிங் ஸ்கூல்
தேர்ந்தெடுத்து சேத்ததுக்கு அயித்தானுக்கு தாங்கீஸு சொல்லிக்கிடறேன்.
வண்டி ஓட்ட கத்துக்கிட்டா எல்லோரும் மாருதி டிரைவிங் ஸ்கூல்லதான்
கத்துக்கணும். மாருதி கார்கள் தயாரிக்கும் அதே கம்பெனிதான்
இந்தியாவில் பல மாநிலங்களில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்து,
நம் இந்தியாவில் ஓட்டுனர்கள்(மக்கள்ஸ் தான்) நல்ல படியா வண்டி ஓட்ட
திட்டமிட்டு ஆரம்பிச்சிருக்காங்க.

முதலில் காரைப்பத்தி டெமோ. அப்புறம் சிமுலேஷன் வீடியோ கேம்ஸ்
மாதிரி. ஆனா நல்லா கத்துக்கலாம், 3 கிளாஸ் சிமுலேஷன் முடிச்சி
ரோட்ல காரை ஓட்டப்பழக்கி அதுல ஏதும் ப்ராப்ளம்னா திரும்ப சிமுலேஷன்ல
வெச்சு ப்ராக்டிஸ் செய்ய வைக்கறாங்க. இதுல தியரி கூட உண்டு.
இப்படி முறையோட கத்துகிட்டா ரோட்டில் விபத்துக்கள் குறையும்னு
நல்லா புரிஞ்சுகிட்டேன். சிலர் டிரைவிங் கத்துகிட்டு வண்டி கையில
வந்ததும் தன் இஷ்டத்துக்கு ஓட்டுவாங்க. புயல் மாதிரி வண்டி ஓட்டி
அடுத்தவங்களுக்கு டென்ஷன் கொடுக்கன்னே சிலர் இருப்பாங்க. இந்த
மாதிரி சமயத்துல நாம நல்லா வண்டி ஓட்டினாலும் சிக்கல்தானே!
ஆனா தன்னம்பிக்கையோட நாம வண்டி ஓட்டினா எந்தச் சிக்கலையும்
சமாளிக்கலாம்னு மாருதி ஸ்கூல் காரங்க சொல்லிக்கொடுக்கறாங்க.

சென்னையிலும் மாருதி டிரைவிங் பள்ளி இருக்குதுங்க. யாருக்காவது
உதவும் என்பதால அவங்க வெப் அட்ரஸ் கொடுத்த்திருக்கேன்.

மாருதி ஸ்கூலில் ஃபீஸ் அதிகமா இருக்குமோன்னெல்லாம் பயப்பட
வேண்டாம். வேகன் ஆர் வண்டியில் 4 தியரி கிளாஸ், 6 (1/2 மணி)
சிமுலேஷன் கிளாஸ், 10 நாள் பிராக்டிகல் (ரோட்ல கார் ஓட்ட பழக்குவதுன்னு)
கோர்ஸுக்கு (மொத்தம் 20 மணிநேரம்) 3600. லைசன்ஸ் நாம தான்
வாங்கிக்கணும். அந்தச் செலவு அதுல வராது.

ஆச்சுடா பட்டாபின்னு எஸ்வீசேகரின் காட்டுல மழை டயலாக்கை
அடிக்கடி சொல்வேன். அது போல நானும்
கிளாஸுக்கு போக ஆரம்பிச்சு 1 வாரம் ஓடிடிச்சு. வரும் திங்கள் கிழமை
அல்லது செவ்வாய்க்கிழமை ஹைதையில் பேகம்பெட், எஸ்பீ ரோடு
பக்கத்துல இருக்கும் மக்களுக்கு கிரகம் பிடிக்கப்போகுது. அன்னைக்குத்தான்
நான் வண்டியை ஓட்டப்போறேன். பாவம் மக்கள்ஸ். அவங்களுக்காக
நல்லா வேண்டிக்கங்க. அப்படியே எனக்கும். அவங்களுக்கு ஏதாவது
செஞ்சு எனக்கு பிரச்சனை வந்திட்டா பதிவு போடறது என்னாவுறது?? :))



அது வரைக்கும் ஹேப்பி வீக் எண்ட்
a

16 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா இன்னைக்கு தான் இங்கு என் கணவர் எப்ப கத்துக்க போறேன்னு மிரட்டிட்டு இருந்தார். வந்து பார்த்தால் மாருதி பற்றி. வாழ்க.

pudugaithendral said...

வாங்க அமுதா,

உங்களுக்கும் மிரட்டல் வந்திடிச்சா... ம்ம்ம் :))

சீக்கிரமே டிரைவிங் கத்துக வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி

Pandian R said...

***
நீச்சல் கத்துக்கோன்னு சொல்லி நீச்சல் பழகியாச்சு. இப்ப
வண்டி. டூ வீலர் கூட இல்ல... நாலு சக்கர வாகனம். :( :))
****

Saringa.. neenga pudukkottai varappo oru vaarthai sollidunga. ellaaraiyum echcharikkaiya irukka solren!

pudugaithendral said...

வாங்க ஃப்ண்டூ,

புதுகை வந்தா பரமசிவம் மாமா இல்லாட்டி பைரவர் தம்பி வண்டீ ஓட்ட அதுல ப்ரயாணம் செய்யத்தான் விரும்புவேன். :))

வருகைக்கு நன்றி

settaikkaran said...

மார்ச் மாசம் ராசியானதோ உங்களுக்கு? ஐந்து நாட்களில் ஐந்து இடுகை போட்டு அசத்தறீங்க? :-)

கலக்ஸ்! கலக்ஸ்!!

கானா பிரபா said...

;)

pudugaithendral said...

வாங்க சேட்டைத் தம்பி,

நலமா. கொஞ்சம் ஃப்ரீயா இப்பத்தான் டைம் கிடைக்குது. ஒரு நாளைக்கு 4 போஸ்ட் போட்டுகிட்டிருந்தேன். நடுவுலதான் கொஞ்சம் சுணக்கம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க பாஸ் வாங்க,

ஹுஸைனம்மா said...

நல்லவேளை நான் ஹைதராபாத்தில் இல்லை!! அதுலயும் தமிழகத்துல கார் ஓட்டமாட்டேனு சொல்லிட்டீங்க, ஹப்பாடா!!

எனிவே வாழ்த்துகள்!!

;-)))))))))

அன்புடன் அருணா said...

/கோர்ஸுக்கு (மொத்தம் 20 மணிநேரம்) 3600. /
ஜெய்ப்பூர் பரவாயில்லை போல! 15 hrs 1500 தான்!

மாதேவி said...

:) வாழ்த்துகள்.

pudugaithendral said...

தப்பிச்சிட்டதா நினைக்காதீங்க ஹுசைனம்மா,

ஒரு நாள் அமீரகத்துக்கு சடனா வரத்தான் போறேன். :)))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

இங்கயும் 2500 ரூபாய்க்கு லைசன்ஸ் கூட வாங்கிக்கொடுத்து டிரைவிங் கத்துக்கொடுக்க கூடிய இடங்கள் ஏராளம். ஆனால் மாருதி கோச்சிங் த பெஸ்ட் என்பது என் அனுபவம்.

வருகைக்கு நன்றி

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் கலா...

pudugaithendral said...

நன்றி மாதேவி

pudugaithendral said...

நன்றி பாசமலர்,

எப்படி இருக்கீங்க