Wednesday, March 09, 2011

ஏன் பிடிச்சிருக்குன்னு தெரியலை!! ஆனா பிடிச்சிருக்கு...

பாடல்கள் என் உயிர். நான் உருகுவது அந்த ஒன்றுக்குத்தான்.
என் மனதை ரிலாக்ஸ்க்கிக்கொள்ள என் வழிய இது.

சில பாடல்கள் ஏன் பிடிக்கும்னு காரணம் சொல்ல முடியாமல்
பிடிக்கும். பாடல்வரிகள், பாடகரின் குரல், சிச்சுவேஷன் இப்படி
எத்தனையோ காரணங்கள். அப்படி சில பாடல்கள் பாப்போம்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா...


பூங்கதவே தாழ்திறவாய்.....


மெது மெதுவா ஒரு காதல் பாட்டு.....


ஒரு காதல் தேவதை நேரினில் வந்தாள்...


சம்சாரம் என்பது வீணை...



நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்...



மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ!!!


மான் கண்ட சொர்க்கங்கள்....

ஹொய்யா புது ரூட்டுலதான்...


அந்தி நேரத் தென்றல் காற்று....


22 comments:

எல் கே said...

அத்தனையும் மனதில் தென்றலாய் வீசும் பாட்டு. அந்தி நேரத் தென்றல் காற்று அடிக்கடி நான் முணுமுணுக்கும் ஒன்று.. காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லையே ??

pudugaithendral said...

வாங்க எல்கே,

என்னவோ அந்தப் பாட்டை கேக்கும் பொழுது உள்ளம் உருகும்.

வருகைக்கு நன்றி

நானானி said...

உங்கள் விருப்பத்தில் எனக்கும் பிடித்த பாடல்களும் இருக்கு. குறிப்பா, ‘செந்தாழம்பூவில்...அந்தி நேர தென்றல் காற்று..’

கோபிநாத் said...

எல்லா பாட்டுக்கும் ஒரு ரீப்பிட்டேய் ;)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா//
எனக்கும் ரெம்ப ரெம்ப பிடிச்ச பாட்டு இது... பாட்டுக்கு பாட்டு விளையாடும் போது எப்படா "ச" வரிசை வரும்னு காத்துட்டு இருப்பேன் இதை பாட...அவ்ளோ பிடிக்கும்... எனக்கு ரீசன் எல்லாம் தெரியாது...ஆனா ரெம்ப பிடிக்கும்..:))

//பூங்கதவே தாழ்திறவாய்.....//
செம பாட்டு..காட்சி படுத்திய விதமும் சூப்பர் தான்..

//மெது மெதுவா ஒரு காதல் பாட்டு.....//
இதுவும் எனக்கு பிடிக்குமே... லட்டு மாதிரி செலக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க அக்கா..தேங்க்ஸ்...

//ஒரு காதல் தேவதை நேரினில் வந்தாள்...//
அந்த படமே ஒரு கவிதை போலத்தான் இருக்கும் எனக்கு... செம பீலிங் படம்... இந்த பாட்டும் எனக்கு பிடிக்கும்...

//சம்சாரம் என்பது வீணை...//
கேட்டு இருக்கேன்... ஆனா நெறைய கேட்டதில்ல... நல்ல பாட்டு

//நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்...//
one of the old melodies I just love to listen...:)

//மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ!!!//
இது நெறைய கேட்டும் பாடியும் இருக்கேன்... சூப்பர்...

//மான் கண்ட சொர்க்கங்கள்....//
அவ்ளோ கேட்டது இல்லை

//ஹொய்யா புது ரூட்டுலதான்...//
ஸ்கூல் காலேஜ்ல கலாட்டா பண்ணின பாட்டுகள்ல இது நிச்சியம் உண்டு...

//அந்தி நேரத் தென்றல் காற்று....//
பாடப்படும் அந்த சூழல் இன்னும் சிரிப்பு சேர்க்கும் இந்த பாட்டுக்கு..

ஒரு ஒரு பாட்டுக்கும் என் கருத்து போட்டுட்டேன்... "உன்னை கேட்டாங்களாக்கும் " னு யாருங்க அது அங்க....அதுக்கும் பாட்டு எடுப்போம்ல "யாரடி நீ மோகினி...:))

எல்லாமும் செம பாட்டுங்க... அதெப்படி எனக்கு பிடிச்சதே உங்க லிஸ்ட்லயும் இருக்கே... ஒருவேள இதை தான் "Great Women Listen Alike" னு சொல்றதோ...ஒகே மீ எஸ்கேப்.... ஹா ஹா... :)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எல் கே said...
காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லையே ??//

இதுலையே தெரிஞ்சு போச்சு என்னமோ சரித்தரமே இருக்கு இதுக்கு பின்னாலனு... ஒகே ஒகே... கார்த்திக் வந்து டென்ஷன் ஆகறதுகுள்ள மீ எஸ்கேப்...:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

-

Chitra said...

இதில் சில பாடல்களுக்குரிய காணொளிகளை இப்பொழுதுதான் முதன் முறை பார்க்கிறேன்.
ஹொய்யா புது ரூட்டுலதான்....... in this song, Vikram looks so different. :-)

pudugaithendral said...

வாங்க நானானி,

சூப்பர் உங்களுக்கும் பிடிச்ச பாட்டா.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோபி

pudugaithendral said...

வாங்க புவனா,

பாடல்களை ரசிக்கன்னே ஒரு தலைமுறை வாழ்ந்திருக்கிறோம். டீவி அதிகம் இல்லாத ரேடியோவால் உயிர் வாழ்ந்த அனைவருக்கும் இப்படித்தான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

மீரா படம் இது. விக்ரம் சக்ஸஸ் ஆனதெல்லாம் சேதுலேர்ந்து தான்.

வருகைக்கு நன்றி

பாச மலர் / Paasa Malar said...

எல்லாப் பாடல்களுமே எனக்குப் பிடித்தவை...பகிர்வுக்கு நன்றி கலா

எல் கே said...

@அப்பாவி

ஒன்னும் பெரியக் காரணம் எல்லாம் இல்லை. இது தன் குழந்தையை நினைத்து கதாநாயகன் பாடுவதாய் வரும். அதனால் ரொம்பப் பிடிக்கும்

அமுதா கிருஷ்ணா said...

செந்தாழம் பூவில் பாடலில் சரத்பாபுவை தனியாகவும், ஷோபாவை தனியாகவும் ஷீட் செய்தது போல் இருக்கும். பாடல் கேட்க மிக அருமை.

ADHI VENKAT said...

அனைத்துமே இனிமையான எனக்கும் பிடித்த பாடல்கள். மான் கண்ட சொர்க்கங்கள் இதுவரை கேட்டதில்லை.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி பாசமலர்

pudugaithendral said...

வாங்க அமுதா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

மான் கண்ட சொர்க்கங்கள் இதுவரை கேட்டதில்லை.//

அந்தக்கால திருச்சி ரேடியோவிலோ, இலங்கை வானொலியிலோத்தான் கேட்டிருக்க முடியும். ரொம்பவே அன்யூசுவலி ப்ளே ஆகிர பாடல் இது.

வருகைக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

3,4 தவிர்த்து மற்றவை மிகவும் இரசித்தவை

pudugaithendral said...

oo varugaiku nandri jamal

jothi said...

good collection