Thursday, March 03, 2011

பனீர் புர்ஜி தோசை...ம்ம்ம்ம்ம்... யம்மி.. யம்மி

வெரைட்டி தோசைகள் எனக்கு ரொம்ப இஷ்டம். அரிசிக்கட்டி அதாங்க
இட்டிலி அது கொஞ்சம் பிடிக்காது. :)) மெத்து மெத்துன்னு செய்வேன்.
ஆனாலும் தோசைக்குத்தான் என் ஓட்டு.

அப்படி வெரைட்டி தோசைகளில் பனீர் புர்ஜி தோசை சூப்பரா இருக்கும்.

முதலில் பனீர் புர்ஜி செஞ்சுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பனீர் 200 கிராம், தக்காளி- 2, பொடியாக நறுக்கியவெங்காயம் -2,
இஞ்சி பூண்டு பேஸ்ட்- கொஞ்சம், தனியாதூள், மிளகாய்த்தூள்,
தலா 1/2 ஸ்பூன், கரம்மாசாலா- 1 ஸ்பூன், ஆம்ச்சூர் பவுடர் கொஞ்சம்,
(விரும்புகிறவர்கள் குடைமிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக்கலாம்)

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு ஜீரகம்,கசூரி மேத்தி தாளித்து வெங்காயத்தை
நன்கு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி,
தக்காளியைச் சேர்க்கவும். மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொஞ்சம்
நேரம் கழித்து தனியா,மிளகாய்தூள், கரம்மசாலா, ஆம்ச்சூர் பவுடர்
சேர்த்து நன்கு வதக்கி கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும். (2 ஸ்பூன்
தண்ணீர் போதும். மசாலா நன்கு கலக்க இது உதவும்)பிறகு பனீரை
கைகளால் பொடித்து மசாலா கலவையில் சேர்க்கவும். சிறிது நேரம்
நன்கு கலந்து வதக்கி, கொத்துமல்லி தூவி இறக்கினால் பனீர் புர்ஜி ரெடி...



தோசை மாவு வீட்டில் இருக்கும். மொறு மொறு தோசை ஊற்றி
உருளைக்கிழங்கு மசாலா வைப்பது போல் நடுவில் பனீர் புர்ஜியை
வைத்து மடக்கி சுடச்சுட சாப்பிடலாம். பேச்சிலர்களுக்கும் செய்வது
எளிது.


நைட் டின்னர் இதுதான்., மீ த கோயிங் அண்ட் எஞ்சாயிங். :)))



15 comments:

எல் கே said...

ஹ்ம்ம் பார்ப்ப்போம்.

pudugaithendral said...

வாங்க எல் கே,
அட பதிவு போட்ட உடன் பின்னூட்டம்...
வருகைக்கு நன்றி

Chitra said...

yummy..:-)

அமுதா கிருஷ்ணா said...

செய்து சாப்பிடணும்..

சாந்தி மாரியப்பன் said...

ம்.. நடத்துங்க.. இருந்த பனீரையும் நேத்து டிக்கா செஞ்சாச்சு. இனிமே வாங்கறப்ப தோசைல ஸ்டஃப் பண்ணிடறேன். க்ரில் சாண்ட்விச்சுக்கும் இது நல்ல ஸ்டஃபிங் தெரியுமோ :-))))))

pudugaithendral said...

வாங்க சித்ரா,

யம்மியேதான்... :))
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

கண்டிப்பா செஞ்சு சாப்பிடுங்க. தொட்டுக்க எதுவுமே வேணாம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம், இன்னொரு வெரைட்டியும் செய்யலாம். பனீரை மட்டும் ஸ்லைஸ்களாக வெட்டி பாம்பே டைப் புதினா சட்னியில் புரட்டி ஸ்டஃப் செஞ்சு கிரில் ரோஸ்ட் செஞ்சா இன்னைக்கு டிபன் ப்ரட்டான்னு கேக்காம பசங்க இஷ்டமா சாப்பிடுவாங்க.

பனீரில் தேவையான கால்சியம், புரதச் சத்து சேர்ந்திடுவதால கவலையும் இல்லை.

வருகைக்கு நன்றி

Unknown said...

//பனீரில் தேவையான கால்சியம், புரதச் சத்து சேர்ந்திடுவதால கவலையும் இல்லை.// பனீர் எம் புள்ளைங்களுக்கு பிடிச்சதும் கூட! ஒரு பிரச்னை இருந்தது: ஒண்ணுத்துக்கு இட்டிலி பிடிக்கும்; இன்னொண்ணுத்துக்கு தோசை பிடிக்கும்...

உங்க பதிவை பாத்துட்டு இது தான் இப்ப செஞ்சேன்! Frozen பனீர் ரொம்ப thaw செய்ய நேரம் இல்லை, அதுனால, க்ரேட் செய்து போட்டேன். சுத்தமா காலி! எங்களுக்கும் மிச்சம் இல்லை:-) பார்க்க Scrambled egg மாதிரி இருந்ததுன்னு கமெண்டு ஆனா!

நன்றி!!!!!!

pudugaithendral said...

வாங்க கெக்கே பிக்குணி,

thaw செய்ய வேண்டியதில்லை. பனீரை கிரேட் கூட செய்யாமல் கைகளாலேயே உதிர்த்து போட்டுவிடலாம்.

பார்க்க Scrambled egg மாதிரி இருந்ததுன்னு கமெண்டு//

எக்ஸாட்லி.... எக் புர்ஜி மாதிரிதான்:))

பசங்க எஞ்சாய் செஞ்சதுல மகிழ்ச்சி.

வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

பனீர் புர்ஜியை உருண்டையாக உருட்டினால் பனீர் கோஃப்டா, கொஞ்சம் வெண்ணை தண்ணீ சேத்தா பனீர் பட்டர் மசாலா

எப்பூடி

:))

pudugaithendral said...

வாங்க சிவா,

ரொம்ப நாளைக்கப்புறம் பதிவுகளை படிச்சு 11 பதிவுகளுக்கும் ஒரேயடியா கமெண்ட் போட்டிருக்கீங்க. :))

பனீர் புர்ஜியை உருண்டையாக உருட்டினால் பனீர் கோஃப்டா, கொஞ்சம் வெண்ணை தண்ணீ சேத்தா பனீர் பட்டர் மசாலா

எப்பூடி

:))

ஆஹா... தம்பி ரொம்ப முன்னேறி இருக்காப்லயே!! அனுபவம் பேசுது போல. வெரிகுட். :)))

pudugaithendral said...

ஆனா சிவா,

ஒவ்வொரு வீக்கெண்ட் வரும்பொழுது ஒரு காலத்துல ப்ராம்ப்டா வீக்கெண்ட் ஜொள்ளு பதிவுகள் போட்டுகிட்டு ஒருதம்பி இருந்தாரேன்னு உங்க ஞாபகம் வந்திடும்.

ADHI VENKAT said...

படிக்கவே நல்லாயிருக்கு. செய்து பார்க்கிறேன்.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

செஞ்சு பார்த்து சொல்லுங்க. வருகைக்கு நன்றி