ஏழு வருஷத்துக்கு முன்னாடி நடந்த இந்தக் கதை இப்பவும்
நினைச்சுப்பாத்தா திக்.. திக்..தான்.
அழகான ஞாயிற்றுகிழமையில் அர்த்தராத்திரி!! 6.30 மணிக்கு
போன் அடிச்சிச்சு. எந்திரிச்சு போய் எடுக்கக்கூட யாரும் தயாரில்லை!
மொதோ நா ராத்திரி சினிமா பாத்துட்டு தூங்கப்போகையில மணி1!!
விடாம அடிச்சுகிட்டிருந்த போனை வேற வழியில்லாம எடுக்கப்போனேன்.
போனில் என் தோழி தான்.” இன்னைக்கு ஜாலியா!! வெளியில
சுத்தப் போகலாமா!”ன்னு கேட்க எங்க? என்னன்னு விசாரிச்சுகிட்டோம்.
அயித்தான் கிட்ட நான் மேட்டரைச் சொல்ல, அவரு என் தோழியோட
கணவர்கிட்ட டீடெயில்ஸ் கேட்டு சரி போயிட்டு தான் வரலாமேன்னு
முடிவாச்சு!! அவங்க அவங்க காரில் பயணம். ஆஷிஷ், அம்ருதாவுக்கு
ஜாலி. அவங்க ஃப்ரெண்ட் பானுவும் தேஜுவும் வர்றாங்களே!!
”ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு”! என்னை தோழி
அண்ணபூர்ணா கூப்பிட்டாங்க. வெளிநாட்டுல இருக்கும்பொழுது
நட்புக்கள்தான் உறவினர். அந்த வகையில நிறைய்ய சொந்தங்கள்
இருந்தாலும் அண்ணபூர்ணா, தாஜ் விஜி மேடம் இவங்க நெருங்கிய
சொந்தங்கள் போல. நாம மட்டும் போறமே! எப்பவும் ஹோட்டல்லையே
இருக்காங்களேன்னு மேடத்துக்கு போன் போட்டு மேட்டரைச் சொன்னேன்.
அவங்களும், அவங்க மகளும் ரெடியா இருந்தாங்க. “ நீங்க ஊர் சுத்திட்டு
வாங்க, நான் நல்லா தூங்கறேன்னு!!!” அவங்க மகன் டிக்ளேர் செஞ்சிட்டு
முக்காடு போட்டு தூங்க ஆரம்பிச்சிட்டாரு. “வருதா பாரு!!”ன்னு
புலம்பிக்கிட்டு மேடம் எங்க கூட வந்தாங்க.
மதிய சாப்பாட்டுக்கு நானும் அண்ணபூர்ணாவும் ஆளுக்கொண்ணு
செஞ்சு எடுத்து பேக் செஞ்சுகிட்டோம். மேடம் ஹோட்டலில்
கேக் ஆர்டர் செஞ்சு அதைக் கொண்டு வந்திருந்தாங்க. டெசர்ட்
இல்லாமலா!! கண்டிப்பா ஷூ போட்டுக்கோங்கன்னு அண்ணபூர்ணா
சொல்லியிருக்க எல்லோரும் ரெடி. அவங்களும் வந்ததும் கிளம்பினோம்.
கொழும்பிலிருந்து சபுர்காமவ மாவட்டத்தில் இருக்கும் Rain forest.
அங்க தான் போக திட்டம். 10 நாளைக்கு முன்னாடி பெய்த
மழையில சாலை சரியில்லைன்னு சொன்னாங்க. ஆனா இப்ப
சரியாகிருக்கலாம்னு ஒரு நம்பிக்கையில் கிளம்பிட்டோம். இலங்கையில்
எங்கே சுத்தினாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா அந்தப் பச்சை பசேல்...
சூப்பரா இருக்கும். சாலையின் இரண்டு பக்கமும் பச்சை பசேல்.
இரண்டு மணிநேரத்தில் வனப்பகுதிக்கு கிட்ட வந்திட்டோம். எங்களுக்கு
முன்னாடி அண்ணபூர்னா கார் போய்க்கிட்டு இருந்தது நின்னுடிச்சு!!!
என்ன ஆச்சுன்னு புரியலை!! அயித்தான் காரை ஓரமா நிப்பாட்டிட்டு
என்னன்னு விசாரிக்க போனவரும் ஷாக் ஆகிட்டாரு!! ஒண்ணுமில்லை
10 நிமிஷ பயணத்தில் வனப்பகுதி ஆரம்பம் வந்திடும். ஆனா அது
கொஞ்சம் மலைப் பிரதேசம். அந்த இடம் போகும் பாதை மழையால
பாதிக்கப்பட்டு ஒவ்வொரு கல்லும் ஷார்ப்பா நிக்குது!!!! டயர்
பஞ்சராகக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதனால எல்லோரும்
இறங்கி நடந்து வந்திடுங்க. வண்டியை மட்டும் ஓட்டிகிட்டு
வந்திடுவோம்னு சொல்ல. தத்தக்கபித்தக்கான்னு நடந்து டிக்கெட்
கொடுக்கும் இடத்தை சேர்ந்து உக்காந்திட்டோம். அண்ணபூர்னாவின்
கணவருக்கோ பக் பக்குங்குது. டயர் போச்சுன்னா ஒவ்வொரு டயரும்
இலங்கை மதிப்பில் 50,000...” ஒவ்வொரு கல்லுமே எனக்கு
50,000 தெரியுதுன்னு!!”” கமெண்ட் அடிச்சுகிட்டு பயப்பட்டு வண்டி
ஓட்டிகிட்டு வந்தாரு. சொந்த வண்டியாச்சே!!! நமக்கு அப்படி இல்ல.
rent a car. அதனால அயித்தான் ஜாக்கிரதையா பாத்து ஒட்டிகிட்டு
வந்து நிப்பாட்டிட்டாரு. இவரு வண்டி ஓட்டினதை பார்த்ததும் அவருக்கும்
தெகிர்யம் வந்து எப்படியோ மெல்ல டயருக்கு சேதாரமில்லாம வந்து
சேர்ந்து அப்பாடான்னு பெரு மூச்சு விட்டாரு!!
21 கிமீ பரப்பளவில் தான் இந்தக் காடு இருக்குன்னாலும், அடர்த்தி அதிகம்.
அதனால அவ்வளவு எளிதில் விலங்குகளை பார்த்து விட முடியாது.
டிக்கெட் வாங்கிகிட்டு உள்ளே நுழைஞ்சோம். கொஞ்ச நேரத்துல
“ஆஆ...னு” அலறல். தேஜு (அண்ணபூர்னாவின் சின்ன மகள்)
குரல் மாதிரி இருக்குன்னு பின்னாடி மெல்ல வந்துகிட்டு இருந்த
என் மக சொல்ல.... அடுத்த அடி எடுத்து வைக்க பயமா இருந்துச்சு.
காரணம் ஆஷிஷும் கத்த ஆரம்பிச்சாச்சு. தேஜு கத்தினதுக்காக
கத்தலை. ஆனா அதே காரணம்!! :)) லீச்சஸ் காலில் இருந்து
ரத்தம் எடுக்க ஆரம்பிச்சிருந்தது. ஷூவுக்குள் நுழைந்த மர்மம்
என்னன்னு யோசிச்சுகிட்டே மெல்ல கட்டையால அடிச்சு கீழே
தள்ள... அடுத்து ஒவ்வொருதரும் ரத்த தானம் தர ஆரம்பிச்சாச்சு.
ஆ... ஊ... அம்மான்னு அலறல்கள் தான். சின்னப்பசங்க தானே!
ரொம்பவே பயந்து போயிருந்தாங்க. பெரியவங்க எங்களுக்கும்
பதட்டமாத்தான் இருந்தது. வனப்பகுதியில் இருந்த குளிர்ச்சியை
அனுபவிக்ககூட முடியலை. எதிரில் கொஞ்சம் மக்கள் வந்து
கிட்டிருந்ததைப் பார்த்து கொஞ்சம் மனசுக்கு தெம்பாகி நடந்தோம்.
ஒரு 4 கிமீ உள்ளே நடந்திருப்போம்... அங்கேயிருந்து மேலே
ஏறிப்போய் பாக்கலாம்னு அண்ணபூர்ணா சொன்னாங்க. நான்
வரலைப்பான்னு அங்கேயே பத்திரமா ஒரு இடம் பாத்து
உக்காந்திட்டேன். ஆஷிஷும், அம்ருதாவும் போட்டோ எடுக்கணும்னு
சொல்ல அயித்தான் கொஞ்சம் முன்னாடி போயிருந்தாரு. அந்த
நேரத்துல ஒரு காட்டுக்குரங்கின் சத்தம்!!!!!!!!!!!! அப்படியே
உறைஞ்சு போயிட்டோம். பசங்க அப்பாவை அப்படியே கட்டிகிட்டு
சப்த நாடியும் அடங்கினா மாதிரி ஆகிட்டாங்க. 2 குரங்குகளுக்கிடையே
சண்டை வேற!!!! வேணாம்பா போயிடலாம்னு சொல்லி கிளம்ப
ஆரம்பிச்சிட்டேன்.
அண்ணபூர்ணா வீட்டில் அடிக்கடி பாம்பு வரும். அது படம் எடுக்க
இவங்க அதை படம் எடுத்துகிட்டு இருப்பாங்க. கொஞ்சம் தெகிரியமான
ஆளு. சுத்தி பாக்கலாம்னு அவங்க சொல்ல. “நா மாட்டேன்னு
அவங்க பொண்ணுங்களும்” சேர்ந்துக்க பாதி வழி கூட போகாம
திரும்ப வந்திட்டோம். காட்டுக்குள்ள நடந்து போனது செம த்ரில்.
தண்ணீர் பாம்பு மட்டும் தான் பார்த்தோம்.
மழைநேரத்துல எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கும் தோட்டத்தில்
கீரிச்சண்டை நடக்கும்!!! க்ரில் கேட்டுக்குள் புகுந்து வந்து
சண்டைப்போடும். அடுத்த நாள் அனேகமாக அங்கே ஏதாவது
ஒரு வகை நாகராஜாவின் தோல் கிடக்கும்!!!! நம்ம வீடே
ஒரு ரெயின் ஃபாரஸ்தான்னு ஆஷிஷ் கமெண்ட் அடிக்க,
மறுபடியும் சில லீச்சஸ்களுக்கு ரத்த தானம் செஞ்சுகிட்டே
மெல்ல வெளியே கார் பார்க் ஏரியாவுக்கு வந்த பிறகுதான்
எங்க முகத்தில் ஒரு நிம்மதி!!!
அதக்கப்புறம் கொண்டு போயிருந்த சாப்பாட்டை நல்லா
ஃபுல் கட்டு கிட்டிட்டு, கேக்கையும் சாப்பிட்டு நடக்க
ஆரம்பிச்சோம். அந்த கல்லு துருத்திக்கிட்டு இருக்கும்
நடந்து கடந்து மெயின் ரோட்டில் வந்து காரில் ஏறினோம்.
அழகா தூங்கிக் கழிச்சிருக்க வேண்டிய ஞாயிற்றுக்கிழமை
இப்படி இரத்ததானம் செய்றாப்ல! ஆகிடிச்சேன்னு ஆரம்பத்துல
நினைச்சாலும்..... சின்ஹராஜா ரெயின் ஃபாரஸ்டுக்கு
நாங்களும் போயிட்டு வந்தோம்லன்னு பெருமை படக்கூடிய
விஷயமா இருந்தது.
விஜி மேடம் ஹோட்டலுக்கு போய் ரத்தம் வடிந்த இடங்களை
தொடைச்சு, மருந்து போட்டுக்கிட்டு இருக்க அவங்க மகன்,
“ஹெ ஹெ”ன்னு ஒரே சிரிப்பாம். அவரு தப்பிச்சிட்டாராம்!!!
அதற்கப்புறம் நாங்க எல்லோரும் சந்திக்கும் பொழுதெல்லாம்
இதைப் பத்தி கண்டிப்பா பேசிக்கிட்டோம்.
அப்புறமாத்தான் ஒரு மேட்டர் தெரிஞ்சது. அந்த காட்டுக்குள்ள
3 யானைகளும், 15 சிறுத்தைகளும் இருக்காம்!!! ரொம்ப
அபூர்வமா அது வெளிப்படுமாம்.....
கந்தன் தான் காப்பாத்திருக்கான்.
சின்ஹராஜா வலைத்தளம்
21 comments:
படிக்கும்போதே இவ்வளவு திரில்லிங் ஆ இருக்கே, அங்கே இருந்தபோது எப்படி இருந்திருக்கும்னு யோசித்தேன்.. திகில் பகிர்வு!
இந்த மாதிரி வெளியில் போக வாய்ப்பே கிடைப்பது இல்லை :(
வாங்க சகோ,
உயிர்ப்பயம்னா என்னன்னு அன்னைக்கு தெரிஞ்சிச்சு. :))
வருகைக்கு நன்றி
படிக்கும் பொழுதே திக் திக்னு தான் இருக்கு... திகில் சுற்றுலாவும் நல்லா தான் இருக்கு...
வாங்க எல்.கே,
எனக்கும் இந்தியா வந்ததற்கப்புறம் அழகான நாட்டை விட்டு ஏன் கிளம்பி வந்தோம்னு தோணும்!!! இந்தியாவில் நிறைய்ய அழகான இடங்கள் இருந்தாலும் ஏனோ போக முடிவதில்லை. அந்தக் குறை இலங்கையில் இருந்த நாட்களில் தீர்ந்தது.
திகில் சுற்றுலாவும் நல்லா தான் இருக்கு...//
வாங்க ஃபாயிஷா,
நல்லாத்தான் இருக்கு. ஆனா ரிஸ்க் எடுக்க பயமாவும் இருக்கு. :))
வருகைக்கு நன்றி
good one..
திரில்லிங்கா இருந்தது. பகிர்வுக்கு நன்றிங்க.
நன்றி சமுத்ரா
உங்க வருகைக்கும் நன்றி கோவை2தில்லி
ஹையோடா. லீச்சை சிகரட் லைட்டரால் சுடுவாங்க இல்லேன்னா உப்புத் தண்ணி ஊத்தி ஊத்தி விலத்துவாங்க. பிடிச்சு இழுத்தாலோ தடியால் தட்டினாலோ தோலையும் பதம் பாக்கற நிலைமை வரும். இது அங்க இருக்கறவங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே. தெய்வமே. இதுக்காகவே அடம்ஸ் பீக்கிற்கு நான் இன்றுவரை போனதில்லை. ஹி ஹி. நாங்க ரொம்பவே விபரமானவங்க.
ஹான்ட் பாக்ல கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு ஐட்டம் சிகரட் லைட்டர்.
திக் திக் பயணம்தான்..
ஆகா திகிலா தான் இருக்கு.
நான் நிறைய தடவைகள் போய் சிறுத்தை எல்லாம் பார்த்திருக்கேன். ரொம்பவும் த்ரில்லிங் அதே நேரம் கொஞ்சம் ரிஸ்கான பயணம் தான். உங்கள் பதிவு நல்லா இருக்கு சிரிச்சுகிட்டே படிச்சேன் :)
வாங்க அனாமிகா,
அயித்தானுக்கும், ஃப்ரெண்டோட கணவருக்கும் சிகரட் பழக்கம் இல்லை. தவிரவும் லீச்சஸ் இருக்கும்னு தெரியாது. என் முதல் காட்டுக்குள்ளே அனுபவம் இது. நல்ல வேளை தோலுக்கு ஏதும் பாதிப்பு இல்லாம கம்பாலயே தட்டிவிட்டு வந்தோம். டிப்ஸுக்கு நன்றி. நானும் ஆடம்ஸ் பீக் போகலை.
ஆமாம் அமைதிச்சாரல்,
ரொம்பவே அமுதா...
வாங்க சுதர்ஷிணி,
ஒரு வாட்டிக்கே போதும்டா சாமின்னு ஆகிடிச்சு. ஹபரானா மாதிரி ஜீப் கூட கிடையாது. நடந்து போகணும். ரொம்பவே ரிஸ்க் தான்.
வருகைக்கு நன்றி
இவ்ளோ ஆபத்தான வனப்பகுதிக்கு டிக்கட் தந்து அனுப்புறங்களா? கூட யாரும் வன அலுவலர் துணைக்கு வர்றதில்லயா? ஆச்சர்யம்.
ஆமா, அது எங்க போறதுக்கான டிக்கட்டாம்? ;-))))
ஆமா, அது எங்க போறதுக்கான டிக்கட்டாம்? //
good question :))
Post a Comment