Thursday, July 14, 2011

முத்தான மூன்று- தொடர் பதிவு

முக்கனிகள், மூவேந்தர், முத்தமிழ், மூன்றுமுடிச்சு, முக்கண்ணன் என 3க்கு
இருக்கும் சிறப்புக்கள் எவ்வளவோ!!! அதனால்தான் நம் வலையுலகில் ரொம்ப
நாளைக்கப்புறம் (ரொம்ப நாளைக்கப்புறம் நான் மாட்டிகிட்டதால என தெரியாம
இருந்திருக்கலாம்) தொடர் பதிவு.

இந்த 3 பத்தி பேசும்போது எனக்கு மூனைத் தொட்டது யாருங்கற கேள்விக்கு
ஆம்ஸ்ட்ராங்னு பதில் சொல்லி பளார்னு அறைவாங்கின வடிவேலுவும்,
”மூனைத் தொட்டது அமிர்தலிங்கம்”னு சொல்ற காமெடி நினைவுக்கு வருது. :))

சகோ வெங்கட் நாகராஜ் தொடரச் சொல்லி அழைச்சிருக்காரு. இதோ
என்பதில்கள் முன்னாலே!! பாத்து மார்க் போடுங்க. :)))

1. நீங்கள் விரும்பும் 3 விஷயங்கள்.

1.அப்பவும்,இப்பவும், எப்பவும் கானக்கந்தர்வனின் குரல்.
2. ஊர் சுத்துவது ( அட பயணங்களைச் சொன்னேங்க)
3. மழலைகளுடன் பொழுதை கழிக்க முடிந்தால் ஆனந்தமே!

2. விரும்பாத 3 விஷயங்கள்:

1. பணத்தை கண்டு குணம் மாறுபவர்கள்
2.ரோட்டில் வெக்கம் மானம் இல்லாம பிஸ் அடிக்கும்
ஆண்கள்.
3. தீவிரவாதம்

3. பயப்படும் 3 விஷயங்கள்:

ஆஹா!!!

1. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்தேதான் என் வேலைகளைச்
செய்கிறேன்.
2.பல சமயங்களில் நான் மிகவும் ரசிக்கும் தனிமையே எனக்கு
சில சமயங்களில் பயத்தை தருவது ஏன்னு புரியலை!!!
3. தெனாலி மாதிரி வீட்டை விட்டு இறங்கி திரும்ப வீடு வந்து
சேரும் வரை பயமால்ல இருக்கு. (நான் வெளியில போவது
பத்தி இல்ல, வீட்டு நபர்கள் பத்திரமா வீடு வந்து சேரும் வரை
திக் திக் தான். காலம் கெட்டு கிடக்கு!)


4. உங்களுக்கு புரியாத 3 விஷயங்கள்:

1. தெலுங்கானா தருவாங்களா? மாட்டங்களா?
2. திடும் திடும்னு ராஜினாமா செய்யும் அரசியல்வாதிகளை
நம்பி ஓட்டு போட்ட மக்கள் தன்னோட நேரத்தை இவர்கள்
வீணாக்கினாங்களேன்னும், திரும்ப எலெக்‌ஷன் வெச்சு
பணச்சுமையை அதிகமாக்குவாங்களேன்னும் கோர்ட்ல
கேஸு போடலாமா? இல்லை இப்படி செஞ்சா “கட்டுபடி
ஆகாதுண்ணே, கட்டுப்படி ஆகாதுண்ணு” வாக்குச் சாவடிக்கு
செல்லாம தடுக்க ஏதும் செய்யலாமா?
3. இந்த வருஷம் மார்ச் வரைக்கும் சில இடங்களில் மழை
பெஞ்சும், இந்த வருஷம் மழை கம்மின்னு சொல்றாங்களே!!
அது ஏன்? எப்படி? ம்ஹூம்.

5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:

மணலில் வீடு கட்டி விளையாடும் என் செல்வங்களின்
புகைப்படம், கடிகாரம், செல்போன்.

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:

1.நல்ல காமெடி, நகைச்சுவை பதிவுகள்.
2. எங்க பக்கத்து வீட்டு வாண்டு செய்யும் சேஷ்டைகளை பார்க்கும்
பொழுது மனம்விட்டு சிரிக்கிறேன்.
3. இங்கே(ஆந்திரா) நடக்கும் அரசியல் பார்க்கும் பொழுது நல்லா
தமாஷா இருக்குப்பா

7. தாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:

1. ஆஷிஷ் 10த் என்பதால் அதிகமா ஸ்ட்ரெஸ் ஆகிடக்கூடாது,
அதே சமயம் டீல்லயும் விட்டுடக்கூடாது. இந்த டாஸ்க்கை எப்படி
செய்வதுன்னு யோசிச்சு நிதானமா அதை செயல் படுத்திக்கிடு இருக்கேன்.
2. ரொம்ப நாளைக்கப்புறம் நான் படிச்ச மாண்டிசோரி படிப்புக்கு
சின்ன வேலை. எஸ்ஸு. எங்க பக்கத்து வீட்டு வாண்டுக்கு என்னால
ஆன உதவிகளை செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.
3. நடுவுல உடம்பு சரியில்ல, அது இதுன்னு ரொம்ப டயர்டாகி,
அதனால ஸ்ட்ரெஸ்ஸுன்னு ஒரு மாதிரியா இருந்தேன். இப்ப
அதுலேர்ந்து வெளியில வந்து மறுபடி என்னை நான் லவ் செய்ய
ஆரம்பிச்சிருக்கேன்.
!!! :))

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:

1. என் பிள்ளைகள் எல்லாவிதத்திலும் தன் காலில் தானே நின்று
சுயமாக தன் வேலையை செய்துகொள்ள பழக்க வேண்டும் எனும்
வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
2. துள்ளித் திரியும் வயதில் விளையாட்டாக பிள்ளைகள்
கல்வி கற்கும் விதத்தில் ஒரு பள்ளி ஆரம்பித்து நல்லாசிரியைன்னு
பேர் வாங்கணும்.!!!
3. பெயர் சொன்னால் தரம் எளிதில் விளங்கும்னு சொல்வது போல
புதுகையில் எங்க குடும்பத்தினரின் பேர் சொன்னா போதும். அதே போல
என் வாழ்நாளிற்கப்புறமும் கூட நான் பழகிய, பேசிய நட்புக்கள்,
உறவினர்கள் என்னை மறக்கக்கூடாது. நல்ல தருணத்தில் என்னை
நினைத்து பார்ப்பது போல என்னால முடிஞ்சதை செய்யணும்.

9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:

1. இந்த சிலிண்டர் தீந்து போச்சுன்னா அயித்தானையோ இல்லை
வேறயாரையோ தான் கூப்பிட்டு மாத்தச் சொல்றேன். எத்தனையோ
வாட்டி சொன்னாலும் மண்டைல ஏனோ ஏத்திக்க மாட்டேங்குறேன்.
அதை கத்துக்கணும்.
2. ஜெட் வேகத்துல வந்துகிட்டு இருந்த என் பதிவுகள் யார் கண்ணு
பட்டுச்சோ!!!! ரொம்ப ஸ்லோவா வருது. இப்போ 779 பதிவுகள்
ஆகிருக்கு சீக்கிரம் 1000 அடிக்கணும்.
3. இலவசமா கல்வி சொல்லிக்கொடுக்க திட்டம் இருக்கு.

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:

1. இன்னும் நிறைய்ய புது புது ரெசிப்பிக்கள் கத்துக்கணும்.
(அயித்தானுக்கு நான் இப்படி சொல்லும் பொழுதெல்லாம்
வயிற்றில் புளி கரைச்சா மாதிரி இருக்கும். கல்யாணத்துக்கு
முன்னாடி ஒல்லியா இருந்தேன். என்னை இப்படி குண்டாக்கினது
பத்தாதுன்னு இன்னும் வகைவகையா கத்துக்கறேன்னு சொல்றியே
இது நியாயமா?தர்மமான்னு? கேப்பாரு :)) ) ஆனாலும் கத்துக்கணும்.

2. அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் அதுக்கு ரியாக்ட் ஆகாம
இருக்கணும்னு பாக்குறேன்.ம்ஹூம்.

3. டீன் ஏஜி வயசில் பிள்ளை வளர்ப்பது எப்படின்னு
இன்னும் நிறைய்ய கத்துக்கணும்!!

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:

1. அடுத்தவங்க சமைச்சு போட்டா அடிபிடிச்சிருந்தா கூட அது அமிர்தம் தான். :))
2. பனீர் டிக்கா அதுவும் இலங்கை மேங்கோட்ரீ ஹோட்டலில் இருந்து
வாங்கியிருந்தா.
3. நல்ல ரசம்.

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா.

1. பொறுமை இல்லாம கேட் திறக்கறதுக்குள்ள ஹார்ன் அடிச்சுகிட்டே
இருக்கும் பக்கத்து வீட்டு ஜீப் சத்தம்.....
2. பொண்ணுக்கு/பையனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தோம்.
சரிவரலை பிரிஞ்சிட்டாங்க!!! என பெற்றோர்கள் சொல்லும் அவலம்!!!
3. அயித்தானோட மொபைல் ரிங்கிங்... :)) (நேரம் காலம் இல்லாம
அது ஒரு தொந்திரவு. எங்க மாமியார் சரியா அதுக்கு பேரு வெச்சாங்க.
கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி மொபைலும், கார்ட்லெஸ்ஸும்னு
சொல்வாங்க)

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:

1. பூந்தேனில் கலந்து பொண்வண்டு எழுந்து.... ஏணிப்படிகள்
படத்துல சூப்பர் பாட்டு.
2. கோயி காத்தா மே சோ ஜாத்தா.... யேசுதாஸோட குரலில்
இந்தப் பாட்டு மனத்தை அப்படியே ஒரு வருடு வருடும்.
3. உப்பொங்கலே கோதாவரி... (கோதாவரி தெலுங்கு படத்தோட
பாட்டு, இந்தப் பாட்டு அப்படியே என் மனசுல ஒரு பொங்கி
பொங்கி ஆனந்தத்தை தரும்)

14. பிடித்த 3 படங்கள்:
1.BAAWARCHI ராஜேஸ் கன்னா நடிப்பு சூப்பரா இருக்கும்.
இந்த படம் பார்க்கும் பொழுது ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.
2. வானமே எல்லை- அதென்னவோ இந்தப் படம் ரொம்ப
பிடிக்கும்.
3. காதலிக்க நேரமில்லை - என் பிள்ளைகள் ரொம்ப விரும்புவதால
இந்தப் படம் பிடிக்கும்.

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:

1. தன்னம்பிக்கை- அது இல்லாட்டி நான் மட்டுமில்ல யாருமே இல்லை.

2. ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனதை ரிலாக்ஸ்
செய்து கொள்ள தெரிவது ரொம்ப முக்கியம். (தவறான பாதைக்கு
போகாம, நல்ல வழியில் மனதை கொண்டு செல்ல தெரிஞ்சிருக்கணும்)

3. புத்தகம்- ஏதாவது படிக்காட்டி மண்டை காய்ஞ்ச மாதிரி இருக்கும்.
என்னை நான் அப்டேட் செய்துகொள்ள உதவியா இருப்பது என்
புத்தகம் படிக்கும் பழக்கம்னு சொல்வேன்.

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:

மாட்டி விட்டேன்னு திட்டினாலும் இதை அவங்க தொடர்வாங்கன்னு
நம்பறேன்.

ஹுசைனம்மா

அன்புடன் அருணா

சேட்டைத் தம்பி


24 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பினை ஏற்று பதிவினைத் தொடர்ந்த உங்களுக்கு எனது நன்றி சகோ... கருத்துள்ள பதில்கள்.... நன்றி... அழைத்த மூன்று பேரும் தொடரட்டும்....

வெங்கட் நாகராஜ் said...

வானமே எல்லை... எனக்கும் பிடிக்கும். முதல் மூன்றில் ஆனால் இல்லை... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுறுசுறுப்பு :)

நல்லா இருக்கு எல்லாமே ..

உங்களுதுல இருந்து கொஞ்சம் காப்பி அடிச்சிக்கட்டாப்பா ?:))

pudugaithendral said...

வாங்க சகோ,

வருக்கைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

உங்களுதுல இருந்து கொஞ்சம் காப்பி அடிச்சிக்கட்டாப்பா ?:))//

கேக்கணுமா?? :)) வருகைக்கு நன்றி கயல்

ஹுஸைனம்மா said...

//உங்களுதுல இருந்து கொஞ்சம் காப்பி அடிச்சிக்கட்டாப்பா ?:))//

முத்தக்கா, காப்பி அடிக்க அனுமதி கேக்கிறாங்க. ஆனா, நீங்க எதுவும் கேக்காம, அப்படியே என் மனசக் காப்பியடிச்சு, இந்தப் பதிவ எழுதின மாதிரி இருக்கு!!! ;-)))))

ஒண்ணுரெண்டு பதில்களைத் தவிர, இந்தப் பதிவத்தான் நான் அப்படியே மீள்பதிவு பண்ணனும்போலத் தோணுது. ;-)))))

pudugaithendral said...

ஆனா, நீங்க எதுவும் கேக்காம, அப்படியே என் மனசக் காப்பியடிச்சு, இந்தப் பதிவ எழுதின மாதிரி இருக்கு!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-)))))//

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா. சீக்கிரம் மீள்பதிவு போடுங்க

காற்றில் எந்தன் கீதம் said...

நல்லா இருக்கு..."பூந்தேனில் கலந்து " எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

அமுதா கிருஷ்ணா said...

மூன்று மூன்று முத்துகளும் அருமை...

ஷர்புதீன் said...

:-)

settaikkaran said...

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்திருத்திருக்கிறீர்கள். கண்டிப்பாய் எழுதுகிறேன். ஆனால், நான் யாரை அழைக்கன்னுதான் தெரியலே! :-)))

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம் தென்றல்:)!

raji said...

//என்னை நான் லவ் செய்ய
ஆரம்பிச்சிருக்கேன்.!!! :))//

ஒவ்வொருத்தரும் அவங்களை அவங்களே
விரும்ப ஆரம்பிச்சுட்டா கட்டாயம் பல
பிரச்சனைகள் குறைஞ்சு மனச்சோர்வு போயே போயிடும்

நல்ல பகிர்வு

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சுதர்ஷிணி,

டெலிவரி எப்போ.

pudugaithendral said...

மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஷர்புதீன்

pudugaithendral said...

நகைச்சுவை ததும்ப நீங்க எழுதப்போற பதிவுக்காக வெயிட்டிங் சேட்டைத் தம்பி. கூப்பிட நிறைய்ய பேரு இருக்காங்க. :))

pudugaithendral said...

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

ஒவ்வொருத்தரும் அவங்களை அவங்களே
விரும்ப ஆரம்பிச்சுட்டா கட்டாயம் பல
பிரச்சனைகள் குறைஞ்சு மனச்சோர்வு போயே போயிடும்//

ஆமாம் ராஜி

வருகைக்கு மிக்க நன்றி

settaikkaran said...

பதிவு எழுதிட்டேன். நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்!

முன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
http://settaikkaran.blogspot.com/2011/07/blog-post_17.html

மாய உலகம் said...

முத்தான மூன்று அனைத்தும் சத்தானவை...

pudugaithendral said...

வாங்க சேட்டைத்தம்பி,

பதிவு படிச்சு கமெண்ட் போட்டுட்டேன்.

தொடர்ந்தற்கு நன்றி

pudugaithendral said...

மிக்க நன்றி மாய உலகம்

ADHI VENKAT said...

பூந்தேனில் பாட்டு எனக்கும் பிடிக்கும்.

எல்லா பதில்களுமே நல்லாயிருக்குங்க.