Monday, July 25, 2011

தடா!! பிளாஸ்டிக்குக்கு தடா!!!

வரும் வராதுன்னு தெலங்கானா பிரச்சனை மாதிரி இந்தத்தடாவும்
வருமா வராதான்னா பலரும் ஆருடம் சொல்லிக்கிட்டு இருக்க
Greater hyderabad municipal corporation ஜூலை 1 முதல் தடா
போட்டாங்க. அதாவது 40 மைக்ரானுக்கு குறைவா இருக்கும்
ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடா.

எங்கும் எதிலும் வியாபித்திருந்த ப்ளாஸ்டிக் பயன்பாடு இதனால
கொஞ்சம் குறையும்னு நம்பிக்கை இருக்கு. பல சூப்பர் மார்க்கெட்டுகளில்
நாம் பை எடுத்துகிட்டு போனாத்தான் சாமான் தருவாங்க. இல்லாட்டி
அவங்க கொடுக்கும் பேப்பர் பேக்குக்கு ஒரு பைக்கு 3 ரூவா சார்ஜ்
செய்வாங்க.

தப்பி யாராவது விற்பனையாளர் ப்ளாஸ்டிக் பையில் கொடுத்தாங்கன்னா
ரூ 500 முதல் 5000 வரை தண்டம் கட்ட வேண்டி வரும். 2 வருஷமாவே
எங்க போனாலும் பையை எடுத்துப்போய் பழகிட்டேன். அதனால
பிரச்சனையா தெரியலை. ஆனா பலரும் ஞாபக மறதியா சூப்பர் மார்க்கெட்டுக்கு
வெறுக்கையோட வந்திட்டு அந்த தம்மாத்தூண்டு பேக்குக்கு 3 ரூபாய்
பணம் கொடுக்க மனசில்லாம வீட்டுக்கு திரும்ப போன கதைகள் நடந்துச்சு.
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. எல்லோரும் ஏதோ ஒரு ஷாப்பிங்
பேக்கை எடுத்துகிட்டுத்தான் வீட்டை விட்டே கிளம்புவாங்க.

ஒரு 22 வருஷம் முன்னால எங்க தாத்தாவுக்கு 60 கல்யாணம் நடந்துச்சு.
அப்பதான் எங்க பெரிய மாமா மும்பையிலிருந்து 5 கிலோவரை தாங்கக்கூடியதுன்னு
ப்ளாஸ்டிக் கேரி பேக்கை கொண்டு வந்தாங்க. அதை ரொம்ப ஆச்சரியமா
பாத்தோம். அது எப்படி பாரத்தைத் தாங்கும்னு? யோசனை. மும்பையில்
இப்ப காய்கறிகடைக்கு கூட யாரும் பேக் எடுத்துகிட்டு போறதில்லை. இந்த
மாதிரி பேக்ல கொடுப்பாங்கன்னு மாமா சொல்ல, நான் மும்பையில் இருந்தப்ப
இந்த வசதியை அனுபவிச்சிருக்கேன். ஆனா இந்த ப்ளாஸ்டிக் பேக்குகளால்
பூமி இவ்வளவு மாசுபடும்னெல்லாம் அப்போ தெரியாது. ஒரு காலத்தில் நதியா தோடு,நதியா ஹேர்பின்னு ப்ளாஸ்டிக்கில் ஒரு ஃபேஷனே இருந்துச்சு.
ஒரு பேட்டியில் நதியா சொன்னாங்க,”இப்ப அந்த மாதிரி இருந்தா தடா தான்.
ஈகோ ஃப்ரெண்ட்லியாதான் இப்ப இருக்கணும்னு” அதுமாதிரி அப்ப மஞ்சப்பையை
எடுத்துகிட்டு யாராவது வந்தாங்கன்னா, இல்ல மஞ்சப்பையில ஏதும் கொண்டு
போகணும்னா சங்கடமா இருக்கும். கேலி பேசுவாங்க.

இப்ப அது ஈகோ ஃப்ரெண்டிலின்னு சொல்லிக்கிறோம். யார் கிண்டல் செஞ்சாலும்
பரவாயில்லைன்னு இந்த மாதிரி துணிப்பையை உபயோகிப்பதை வழக்கமா
வெச்சிருக்கோம். Hyderabad goes green அப்படிங்கற ஒரு தளத்தில்
நாம துணிப்பைகளை வாங்க முடியும். இந்த அமைப்பில் நானும்
இணையனும்னு வெச்சிருக்கேன். பாப்போம். என்னால முடிந்ததை
இந்த பூமிக்கு செய்ய ஒரு வாய்ப்பா இது இருக்கும்.

BLUE CROSS HYDERABAD - இந்த அமைப்பை அமலாவும்-நாகார்ஜுனாவும்
1992ல் துவங்கி ரொம்ப சக்ஸஸ்ஃபுல்லா நடத்திகிட்டு வர்றாங்க.
அந்த தளத்தை இங்க பார்க்கலாம்.
சமீபத்துல ப்ளாஸ்டிக் பேக்குகளுக்கு தடா வந்ததும் SAVE
அப்படிங்கற அமைப்போட சேர்ந்து துணிப்பைகளை குறைவான விலைக்கு
விற்கும் வேலையையும் அமலா தன்னை இணைச்சுகிட்டாங்க.



பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னாலயே அம்மா ஸ்கூல்ல
களிமன் பிள்ளையார் செய்யும் குடும்பம் வந்திரும். பக்கத்துலேயே
பெருமாள் கோவில் மார்க்கெட் என்பதால அங்க வெச்சு விப்பாங்க.
களிமன் பிள்ளையார் அவருக்கு குடை மட்டும் கலர்ஃபுல்லா
இருக்கும். இப்படி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடியிருந்த எனக்கு
ஹைதையில் நான் பார்த்தது வித்தியாசம். நம்ம ஊர்லயும்
இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு ஆசை பட்டிருக்கேன்.


9ஆவது படிக்கும் பொழுது முதன் முதலா ஹைதை வந்திருந்தேன்.
அப்போ கணேஷ் சதுர்த்தி சமயம். மெகா சைஸ் பிள்ளையார்கள்
கலர்கலரா எடுத்துகிட்டு போவதை பார்த்து அதிசயத்திருக்கேன்.
நவராத்திரி கொலு பொம்மைகள்தான் இவ்வளவு கலர்ஃபுல்லா
இருக்கும். மும்பை,ஹைதை என இப்ப எல்லா இடத்துலயும்
கலர்ஃபுல் கணேசாதான். ஆனா அந்த கலரில் இருக்கும்
கெமிக்கல்களால் தண்ணீர் மாசுபடும் என்பதால் திரும்ப அந்த
களிமண் பிள்ளையாருக்கே எல்லோரும் ஓட்டு போடும் நிலை.

இப்பொழுது சின்ன சைஸ் 1 ரூபாய்- பெரிய்ய்ய் சைஸ் 1000
ரூபாய் விலையில் இந்த வகை களிமண் பிள்ளையார்கள்
ஹைதையில் இந்த முறை கிடைக்கும்.

நம்மை அறியாமலேயே நாம் இயற்கைக்கு எதிரா எப்படி
சதி செஞ்சிருக்கோம். படிச்சிருக்கோம்னு சொல்லிக்கிற நமக்கே
சில விஷயங்கள் அறியாம புரியாம தப்பு செஞ்சிருக்கோம்.
இனி இந்த நிலை மாறணும். அதனால நமக்கு நாமே
ஒரு சங்கல்பம் செஞ்சுக்குவோம்.



யாரும் தடை போடும் முன்னால நம்மால என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.
ப்ளாஸ்டிக் பைகளுக்கு, கலர்ஃபுல் கணேசாவுக்கு, கலர் ஹோலிகளுக்கு
தடா சொல்லிட்டு இயற்கை முறைக்கு மாறுவோம். இதுதான்
நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய
சொத்தா இருக்கும்.

ஃபேஸ்புக்கில்



20 comments:

இராஜராஜேஸ்வரி said...

யாரும் தடை போடும் முன்னால நம்மால என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.//

சுற்றுச்சூழல் விழிப்புண்ர்வுப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

pudugaithendral said...

பதிவு போட்ட உடனே உங்க பதில்.

நன்றி இராஜராஜேஸ்வரி

நட்புடன் ஜமால் said...

நானும் ப்ளாக்ஸ்பாட்டுக்கு தடா‍ன்னு படிச்சிட்டு பதட்டோட படிச்சேன்

நல்ல விடயம் ப்ளாஸ்ட்டிக்குளக்கு நோ சொல்லனும், நாமும் கொஞ்சமேனும் பங்களிப்பு கொடுக்கனும்.

நல்ல பகிர்வுங்கோ ...

pudugaithendral said...

ஆஹா ப்ளாக்குக்கெல்லாம் தடா சொல்லிட்டு ஓட மாட்டேன் ஜமால்.

:)

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

பிளாஸ்டிக் பயன்பாடு ஆரம்பிச்ச காலத்துல இது எவ்ளோ நல்லாருக்கு; ஈஸியா இருக்குன்னு ஆச்சர்யத்தோட பயன்படுத்த ஆரம்பிச்சோம். அளவோடு இருந்திருந்தா இந்தப் பிரச்னையே இருந்திருக்காது!! அதுசரி, இப்ப எல்லாமே - ஆணாதிக்கம், சுதந்திரம், குடி, அதிகாரம், பண ஆசை - இப்படிப் பலதும் - அளவில்லாமப் போனதுனாலத்தானே பிரச்னையாகிக் கிடக்கு!!

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

அளவோடு இருந்திருந்தா இந்தப் பிரச்னையே இருந்திருக்காது!! அதுசரி, இப்ப எல்லாமே - ஆணாதிக்கம், சுதந்திரம், குடி, அதிகாரம், பண ஆசை - இப்படிப் பலதும் - அளவில்லாமப் போனதுனாலத்தானே பிரச்னையாகிக் கிடக்கு!!//

ரொம்ப சரி. கூடிய சீக்கிரம் இந்த லிஸ்டில் பெண்களின் முன்னேற்றமும் சேர்ந்திடுமோங்கற அச்சமும் இருக்கு. :(((((((((

வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு தென்றல். பெங்களூரில் இந்தத் தடா வந்து பல மாதங்களாயிற்று. மக்களிடையே நல்ல மாற்றம். அபராதத்துக்கு பயந்து மட்டுமே என்றில்லாமல் கடைக்காரர்கள் இதை செயல் படுத்துவதில் தீவிர அக்கறை காட்டுகிறார்கள்.

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

நலமா??

இங்கயும் வியாபரிகள் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங. 40 மைக்ரான் களுக்கும் மேலே இருக்கும் பேக்குகள்தான் இருக்கு. அதுவும் அதிக காசு கொடுத்து வாங்கணும். பழைய ஞாபகத்துல யாராவது வெறுங்கையோட கடைக்கு போனா வெறுங்கையோடத்தான் திரும்பணும்.

வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

அவசியமானதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

சட்டத்தினை தீவிரமாக்கினால் தான் திருந்துவோம்.ஆனால்,கட்டாயம் வரவேற்கபடவேண்டியது.

pudugaithendral said...

மிக்க நன்றி ஸாதிகா

pudugaithendral said...

நன்றி வலையகம்

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

அது அப்படித்தான். :))

வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

குதிரை ஓடுனப்புறம் லாயத்தை பூட்டுறதுல நம்மாளுங்க கில்லாடியாச்சே.. அளவுக்கதிகமா மாசுபட விட்டுட்டு இப்ப சட்டம்போட்டு பயமுறுத்தித்தான் காரியம் சாதிக்கவேண்டியிருக்கு!!!.

ADHI VENKAT said...

தில்லியில் பிளாஸ்டிக் பேக்குக்கு தடா சொல்லி ரொம்ப நாளாச்சு. இங்க பேப்பர் பேக் ஐந்து ரூபாய்.

எப்பவுமே கடைத் தெருவுக்கு பிக் ஷாப்பர் எடுத்துப் போவதால் சிரமம் தெரியவில்லை.

மஞ்சப்பையில் அல்லது துணிப்பையில் பட்டு புடவைகளை போட்டு பீரோவில் வைத்தால் ஜரிகை கறுக்காமல் இருக்கும்.

அந்த பையில் வறுத்த வேர்கடலையை போட்டு முடிச்சு போல் பிடித்துக் கொண்டு சமையல் மேடையில் இரண்டு அடி அடித்தால் தோலை சுலபமாக எடுக்கலாம்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அப்படி மிரட்டாட்டி போனா மக்கள் மனசுலயும் மாற்றம் வரமாட்டேங்குது. தொட்டில் பழக்கம்தான் சுடுகாடு மட்டும்னு சொன்னாங்க. ஆனா இப்ப மக்கள் பழகின எதையும் அது கெட்டதா இருந்தாக்கூட விட தயாரா இல்லையே.

உங்க கருத்துக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

மஞ்சப்பை பத்தின உங்க டிப்ஸுக்கு நன்றி

வருகைக்கு மிக்க நன்றி

அன்புடன் அருணா said...

அடப் போங்க தென்றல்....இங்கே ரெண்டு மாசம் ஜோரா இருந்துச்சு! அப்புறம் தே பழைய கதை ஆரம்பிச்சாச்சு!

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.
நன்றி.

மங்களூர் சிவா said...

nice post. thanks