Tuesday, July 26, 2011

வானவில்லின் வர்ணங்கள்...

NDTV GOOD TIMES எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சேனல்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் ROUTES எனும் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
மாற்றுமருத்துவம் பற்றிய நிகழ்ச்சி.

அன்று நிறங்களைப் பற்றிய நிகழ்ச்சியாக இருந்தது என்னை மிகவும்
கவர்ந்தது. சரி என்று பார்க்கத் துவங்கினேன். மைக்ரேன் தலைவலியால்
அவதிப்பட்டவர் எத்தனையோ மருத்துவங்கள் பார்த்து சரிவராமல்
கடைசி முயற்சியாக கலர்தெரப்பியில் முயன்று பார்த்திருக்கிறாராம்.
(கலர் தெரப்பி கற்று அதை உபயோகிக்கும் முறை தெரிந்தவர்கள்
இருக்கிறார்கள்.) பச்சை நிறத்திற்கு குணமாக்கும் தன்மை உண்டு
என்பதால் அவரது அறை திரைச்சீலைகள், தலையணை,விரிப்பு என
இளம் பச்சை கலரில் மாற்ற சொல்ல அப்படியே செய்து நல்ல முன்னேற்றம்
இருப்பதாக சொல்ல செம ஆச்சரியம்.

கலர் தெரப்பி பற்றி தெரிந்து கொள்ள

ரெய்கி மெடிடேஷனில் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு கலர் உண்டு.
பொதுவாக நான் வீட்டுக்குள் வர்ணம் அடிக்கும்பொழுது சில கலர்களை
அதுவும் மென்மையான கலர்களை உபயோகிக்கும் பொழுது வீட்டில்
இருப்பவர்களின் மனோபாவங்கள் மாறும் என்பதை படித்திருக்கிறேன்.
குமுதம் சிநேகிதி என்று நினைக்கிறேன். நமக்கு ஏற்ற நிறம் என்ன
என்பதை பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. அதில் நாம்
அணியும் உடையின் நிறம் நம் மனதை பிரபதிலிக்கிறது என்று
சொல்லியிருந்தார்கள்.

நேற்று சாயந்திரம் முதல் எனக்கு சரியான தலைவலி. கிட்டத்தட்ட
மைக்ரேன் போலத்தான். வலி அதிகமானால் தலையை சாய்த்து
படுக்க கூட முடியாது. வலி நிவாரணி மாத்திரைகள் எல்லாம் கூட
எடுபடாது. வலியும் நோவும் அதிகமாக இருக்கும் பொழுது என்னால்
எனக்கே ரெய்கி செய்து கொள்ளவும் முடியாது. ரொம்பவே துடித்து
என் உறவினரை ரெய்கி செய்யச் சொல்லி மெசெஜ் அனுப்புவேன்.

இரவு 10 மணி தாண்டியும் வலி குறையவில்லை. படுக்கவும்
முடியாத நிலை. நேற்று அந்த நிகழ்ச்சி பார்த்தது நினைவுக்கு வந்து கண்ணை மூடிக்கொண்டு பச்சை இலைகள், பசுமை தோட்டம், அதன் நடுவில் நான் என
என்னைச் சுற்றி பசுமையாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டே
இருந்தேன். வலி மெல்லக் குறைந்து ஆழ்ந்த தூக்கம் கிடைத்தது.
காலையில் ஃப்ரெஷ்ஷாக எழுந்து வேலை செய்தேன்.
(வேலைக்காரம்மா வரவில்லை. எல்லா வேலையும் முடித்து
கானக்கந்தர்வனில் இன்று ஒரு பாட்டும் போட்டு இங்கேயும் பதிவெழுத
முடிந்தது ஆச்சரியம்!!)

இதை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு.
உங்களுக்கும் இந்த கலர் தெரப்பி உதவக்கூடும். எப்பொழுது
எந்த கலரை உபயோகப்படுத்துவது என்று தெரிய வேண்டுமே!!
இதோ இந்தக் கலர் சார்ட்டை பாருங்கள்.


மருந்து மாத்திரைகள் தரும் சைட் எஃப்கட்டுகளிலிருந்து தப்பிக்க
மாற்று மருத்துவத்தைத்தான் பலரும் தற்போது நாடுகின்றன.
ரெய்கி,பிரானிக்ஹீலிங் வகையில் இப்பொழுது வர்ணங்களும்
இருக்கின்றன.

உங்கள் வாழ்விலும் வர்ணங்கள் சேர்ந்து இந்தநாள் ஒரு இனிதான
நாளாக அமைய வாழ்த்துக்கள்.
colour therapyஇந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்


16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைத்தாலே சரியாகுதா.. ஆச்சரியம் தான்.. என்னன்னு பாத்துடுவோம்.. :)

காற்றில் எந்தன் கீதம் said...

இந்த முறை நல்லா இருக்கே...... நானும் முயற்சி செய்து பார்கனும்....
(ரிச் தக்காளி சாதம் செய்தேனே... ஒரே பாராட்டு மழை தான் போங்க ரொம்ப நன்றி உங்களுக்கு ) நம்ம கட பக்கமும் கொஞ்சம் வந்துட்டு போங்க அக்கா...

நட்புடன் ஜமால் said...

nice sharing, will try ...

pudugaithendral said...

வாங்க கயல்,

நினைச்சாலேன்னா ஆழ்நிலை தியானம் மாதிரின்னு வெச்சுக்கோங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

ரிச் தக்காளி சாதம் செஞ்சு கொடுத்து அசத்திட்டீங்களா. வெரிகுட்.

இனி கண்டிப்பா உங்க வீட்டுப்பக்கம் வர்றேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு ரொம்ப நன்றி...கலரில் தான் எவ்வளவு இருக்கின்றது...

அமுதா கிருஷ்ணா said...

நல்ல செய்தி..முயல்வோம்.

ஹுஸைனம்மா said...

பொதுவாகவே, நம்மை வருத்தும் எந்த விஷயத்திலுமே, அதனை விட்டு நம் கவனத்தைத் திருப்பி வேறு எதன்மீதாவது செலுத்தினால், மனம் நிதானப்படும். (காலமே காயத்துக்கு மருந்துன்னு சொல்வாங்களே, அந்த மாதிரி)

எழுத்தாளர் அனுராதா ரமணனும் ஒருமுறை சொல்லிருந்தாங்க, ’வலிக்கும்போது, மனதை வலுக்கட்டாயமாக வலியைவிட்டு வேறு எனக்குப் பிடித்த ஏதாவதொன்றில் ஈடுபடுத்துவேன். வலி தெரியாது’ என்று.

இங்கே நிறம் அதுக்கு பயன்படுவது போல. ஆஸ்பத்திரியில், பெரும்பாலும் பச்சை நிறங்கள் இருப்பதுக்கும் இதத்தான் காரணமாப் படிச்சிருக்கேன். ஆனா, இப்பல்லாம் ஆஸ்பத்திரியில் போடும் ‘கடும்பச்சை நிறங்கள்’ கடுப்பைத்தான் கிளப்புது.

pudugaithendral said...

வாங்க கீதா,

நிறைய்ய இருக்கு. இது ரொம்ப வருஷமா பழக்கத்துல இருந்த மருத்துவம்தான்னு சொல்றாங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

முயன்று பாருங்க அமுதா,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இப்ப சில ஆஸ்பத்திரிகளில் பச்சைநிறத்துடன் மற்ற நிறங்களையும் உபயோகிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

வருகைக்கு நன்றி

அன்புடன் அருணா said...

அட! சூப்பர்!!

ADHI VENKAT said...

நல்ல தகவலா இருக்குங்க. வர்ணங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!!!!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அருணா

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ஆமாம். சின்ன வயசுல ஊசிகுத்திக்கும்பொழுது பச்சை இலையை நினைச்சுக்கன்னு சொல்வாங்கள்ல ...

வருகைக்கு நன்றி