Thursday, July 28, 2011

ஹைதை ஹாட் டாபிக்ஸ்..

சென்ற மாதம் தில்லியில் சூடுகிளப்பிய பிரச்சனை ஒன்று நடந்தது.
தெலங்கானாவுக்காக தன்னை மாய்த்துக் கொண்ட ஒரு இளைஞனின்
சவத்தை ஆந்திரா பவனில் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என
தெலங்கானா தலைவர்கள் சொல்ல அதற்கு முன்னதாகவே அப்படியெல்லாம்
செய்ய முடியாது என்று சொல்லி தடுக்க கோரி அதிகாரிகள் தில்லி
போலீசுக்கு கடிதம் எழுத. வெகுண்டு எழுந்து குதித்தார்கள் தெலங்கானா
கட்சிக்காரர்கள். ஆந்திராபவனில் இருந்த அதிகாரி ஒருவரை அடித்து
அவமாரியதை செய்துவிட்டு, ஏதோ ஆவேசத்தில் அப்படி செய்து
விட்டேன்!!! என்று மன்னிப்பு கேட்டார் அடித்த ஆள்.

வலதுபக்கத்தில் இருப்பவர் அடிவாங்கிய அரசு அதிகாரி!!!!

இது எப்படி இருக்கு?? இறந்தவருக்கு மரியாதை செய்ய வேண்டும்,
மனிதாபிமானம் வேண்டும் என்று சொல்லும் இவர்கள் உயிருடன்
இருப்பவர் பற்றி ஆலோசனையே இல்லையே. இவர்கள் கையில்
ஆந்திராவைப் பிரித்துக் கொடுத்தால்!!!!!!! அவ்வ்வ்வ்வ்வ் தான்.
***********************************************************

ஒருத்தருக்கு எப்போது எப்படி பிரச்சனை துவங்கும் என்று
சொல்லவே முடியாது. அப்பா சம்பாதித்த சொத்தை ஆனந்தமாக
அனுபவித்து வந்தார் ஜகன்.(மறைந்த முன்னாள் முதல்வர்
ராஜசேகர ரெட்டியின் மகன்)

ஹைதையிலேயே இப்பொழுது பெரிய்ய்ய்ய வீடு ஜகனுடையதுதான்.
லோட்டஸ் மஹல் என்று பெயர்!!!! 90,000 சதுர அடி வீடு.


இதைத் தவிர ரொம்ப ஆடம்பரமாக தனது கட்சிக்கு ஒரு அலுவலகமும்
பளபளன்னு துவங்கினார். திருஷ்டி பட்டுடிச்சு போல!!!
ஜகனிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவுன்னு சீபிஐ
விசாரிச்சு நீதிமன்றத்திடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கு. சட்டத்துக்கு
புறம்பா எம்புட்டு சம்பாரிச்சிருக்காங்கன்னு வெட்ட வெளிச்சம் ஆகப்போகுது.
இரண்டு வருஷத்துல டபுளாகிடிச்சாம்ல சொத்து!!!!!
நாம முதலமைச்சர் ஆகிடலாம்னு கனவு கண்டுகிட்டு இருக்கும் ஜகன்
மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம இருக்காரு.


ஓதாரிப்பு யாத்ரான்னு ஒண்ணு ஜகன் போவாரு. அதாவது ஆறுதல் சொல்வது.
இப்ப கோர்ட் கேஸுன்னு அலையப்போற ஜகனுக்கு யாரு ஓதாரிக்கிறது????
**************************************************************

தெலங்கானா காரங்க கிட்டயும், ஆந்திரா காரங்க கிட்டயும் ஆசாத்
பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காரு. ஆந்திராகாராங்க மனசையும்
தெரிஞ்சிகிட்டுத்தான் முடிவு எடுக்க முடியும்னு சொல்லியிருக்காரு.
இதுல முக்கியமான பிரச்சனை இருக்கு. தெலங்கானா பகுதியில்
நதியே கிடையாது!!! தனியா பிரிச்சா அவங்க கோதாவரியை
திருப்பிட்டாங்கன்னா காய்ஞ்சு போய் கிடக்க வேண்டியதுதான் தெலங்கானா.

ஆந்திரா மக்களும் ஹைதையில் நிறைய்ய முதலீடு செஞ்சிருக்காங்க.
ஹைதராபாத்தை விட்டுக்கொடுத்தா அந்த முதலீடுகள் பாடு கஷ்டம்.
இதையெல்லாம் ஆசாத்துக்கு எடுத்துச் சொல்லி நதியையும், ஹைதையும்
பங்கு போட்டுக்கச் சொல்வாங்க போல இருக்கு.
**************************************************************

தெலங்கானா வரும் வராது பிரச்சனைய விட கொடுமையா இருக்கு
அவங்க திடும் திடும்னு அறிவிக்கும் பந்த். ஆன்னா பந்த் ஊன்னா பந்த்.
தில்லி ஆந்திரா பவனில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதியில்லைன்னு
சொல்லி அடுத்த நாள் பந்த்.

ரயில் ரோகோன்னு ஒண்ணு நடத்தி தெலங்கானா பக்கம் எந்த டிரையினும்
வராம செஞ்சாங்க. அதுல செம நஷ்டம். மக்களுக்கும் ரொம்ப சிக்கல்.
ஒண்ணா தெலங்கானா தரேன்னு சொல்லி தந்திடணும். இல்ல மாட்டேன்னு
சொல்லிடனும். இரண்டும் செய்யாம இழுபறி செய்யுது காங்கிரஸ் அரசு.
இதுல இழுபறி ஆவது பள்ளி செல்லும் குழந்தைகளின் எதிர்காலம்!!!
இந்த ஸ்திரமில்லாத தன்மையால ஹைதையில் வரவேண்டிய முதலீடுகள்
ஓசை படாம தமிழகத்துக்கு வருதுன்னு சொல்றாங்க.

முன்னாடி அம்மா ஆட்சி நடக்கும்பொழுது சென்னையில் அமைந்திருக்க
வேண்டிய ஐமேக்ஸ், அவங்க அப்ப பழிவாங்குவதில் பிசியாக இருக்க
ஹைதைக்கு கொண்டு வந்திட்டாரு சந்திரபாபு நாயுடு. இப்ப காட்சி மாறுது.

இனி ஆந்திராவை அந்த கோவிந்தன் தான் காப்பத்தணும்னு சொல்லலாம்னா
அவன் சொத்தை அவன் பாதுக்காக்கவே அவனுக்கு நேரம் சரியா இருக்கும்.
திருமலையைப் பத்தி நாளொரு செய்தி, பொழுதொரு பிரச்சனை வந்து
கிட்டே இருக்கு.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியலை!!!!!


8 comments:

ILA (a) இளா said...

இது கூட நல்லா இருக்கே. local news . அருமையான எண்ணம்தான்

Thenammai Lakshmanan said...

யப்பா முடியல ஆந்திரா காரம்..

pudugaithendral said...

வாங்க இளா,

நலமா?
local news இந்த லேபில் கூட நல்லா இருக்கு. ஐடியாவுக்கும் வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க தேனம்மை,

ஆந்திரான்னாலே காரம் தானே!! :))

வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

செம காரம் :-)

ஸாதிகா said...

தலைப்புக்கும்,பகிர்வுக்கு செம பொருத்தம்.நாங்களும் ஹைதை விஷயங்களை சுடச்சுட அறிந்து கொண்டதும் போலவும் ஆச்சு.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்,

அப்பப்ப கொஞ்சம் கார சாரமா இருந்தாத்தானே நல்லது :))

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா