அரசியல்ல எதுவேணாம் நடக்கலாம்னு சொல்லுவாங்க. வெக்கமே
இல்லாதது இந்த அரசியல்வாதிகள் கூட்டம்தான்.
மறைந்த ஆந்திர முதல்வர் YSR மகன் ஜகன் மோகன் ரெட்டியின்
அபார சொத்து குவிப்பு பத்தி சீபிஐ விசாரிக்க ஆரம்பிச்சது
பழைய நியூஸ். லேட்டஸ்ட் நியூஸ் அவங்க அப்பா முதல்வரா
இருந்த பொழுது அவருடைய அருளால பலர் சொத்து சேத்திருக்காங்க
அப்படின்னு கண்டுபிடிச்சு அவரையும் குற்றவாளியா சேத்திருக்காங்க.
மருத்துவரா இருந்து முதல்வரான ராஜசேகர ரெட்டி சொத்து
எப்படி சேத்தாரு? அதிகார வர்க்கத்துல இருக்கறவங்களை
ஒண்ணும் செய்ய முடியாது. அவங்களே எதிர்க்கட்சி ஆனாத்தான்
உண்மைகள் தோண்டி எடுக்கப்படுமா????????
**************************************************************
ஆந்திரா காங்கிரஸும் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி
கேலிக்கூடமா ஆகிடும் என்பதுல டவுட்டே இல்ல.
ராஜசேகர ரெட்டி பேரை குற்றவாளி லிஸ்ட்டில் சேத்ததுல
கோவமான காங்கிரஸ் எம்பிக்கல் 26 பேர்கள் ராஜினாமா செஞ்சாங்க.
(எத்தனை வாட்டி செய்வாங்க? ஏற்கனவே தெலங்கானா பிரச்சனைக்காக
ராஜினாமா செய்ததா ஞாபகம்) டீவில ஒரு ஷோவுல பேசிக்கிட்டதைக்
கேட்டு எனக்கு சிரிப்பும், கோவமும் தாங்கலை.
போபர்ஸ் ஊழலை பத்தி ஆரம்பிச்சாலே மறைந்த ராஜிவ்காந்தி
அவர்கள் பேர் வருவதை தடுக்க முடியாது!!! அவர் முன்னள்
பிரதம மந்திரி. அதுக்காக நாங்க ஏதும் சொல்லலியே. ராஜசேகர
ரெட்டி முன்னாள் முதல்வர் தான் அப்படின்னு ஸ்டேட்மெண்ட்
விட்டிருக்காரு ஒரு காங்கிரஸ் கட்சி கரைவேட்டி.
மொத்தத்துல என்ன சொல்ல வர்றாங்க? காங்கிரஸ் கட்சி
ஊழல்களின் மொத்த உருவம்னா?????
************************************************************
அன்னா ஹசாராவை தேவையில்லாம அரெஸ்ட் செஞ்சு அதுகப்புறம்
அவருக்கு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுத்து, இப்ப
பேச்சு வார்த்தைக்கு ரெடின்னு லெட்டர் எழுதி(எதுக்கு லெட்டர்
எல்லாம் எழுதணும்??) நேத்து பேச்சு வார்த்தை நடந்திருக்காங்க.
அன்னா ஹசாரா கேட்டுக்கிட்ட படி சில பல மாறுதல்களைச்
செய்வோம்னு சொல்லியிருக்காங்க. பிரதமரை லோக்பால்
பில்லில் சேர்ப்பதில் என்ன தப்பு?? கனிமொழி சொல்லியிருப்பது
போல உள்துறை அமைச்சரும், பிரதமரையும் சாட்சி ஆக்கி
ரெண்டு தட்டு தட்டி விசாரிச்சா உண்மை வெளிவரும். அப்ப
லோக்பால் பில்லில் யார் யாரு பேரெல்லாம் கண்டிப்பா சேக்கணும்னு
முடிவு செய்யலாம்.
இந்த அரசுதான் ஊழல் மிகுந்து இருக்குன்னு அடுத்தவங்களுக்கு
ஓட்டு போட்டா அவங்க ஏதும் நல்லது செய்ய போறாங்களா?
ஒரு குப்பையும் இல்ல. அவனவன் அவனவன் ஜோலியைத்தான்
பாக்கிறான்!!
இதுல சூப்பர் காமெடி என்னன்னா? அன்னா ஹசாரே போராட்டுத்துல
எங்க தெலங்கானா பிரச்ச்னையை எப்படி முன்னுக்கொண்டு போறதுன்னு
தெரியாம தலைகள் சைலண்ட் ஆகிட்டாங்க!!!!!!!
*********************************************************
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!!
விலை வாசி ஏறிப்போச்சு அது இதுன்னு புலம்பிக்கொண்டு இருக்கும்
மக்களுக்கு தேனொழுகும் செய்தி ஒன்று காத்திருக்கு!!!
இனி ஒரு குடும்பத்துக்கு வருஷத்துக்கு 4 சிலிண்டர்தான் ரேஷன்.
அதுக்கு மேல வேணும்னா ஒரு சிலிண்டர் ரூபாய் 650 கொடுக்கணும்.
இதுல என்ன நல்ல செய்தி அப்படின்னு கேட்டா. தங்கமணிகளுக்கு
கட்டாய ஓய்வு கொடுக்க அரசாங்கம் முடிவு செஞ்சிருக்குன்னு
புரிஞ்சிக்கணும். சிலிண்டர் இருக்கும் வரைக்கும்தான் சமைக்க
முடியும். இல்லாட்டி!!! எஸ்ஸு ஹோட்டல்தான் கதி.
வரும்போது மறக்காம வாங்கிட்டுவாங்கன்னு சாமான் லிஸ்ட்
கொடுக்க வேண்டியது இல்ல. என்னென்ன வேணும்னு மெனு
மட்டும் கொடுத்திடலாம். (வார மெனுத்திட்டம் கூட போட்டுக்கிடலாம்ங்க)
சமையலறை எப்பவுமே சுத்தமா இருக்கும்.!!!!!!
வீட்டுவேலைக்காரம்மா வரலைன்னு டென்ஷன் வேண்டாம்.
பெண்களின் மேன்மைக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் நமக்கு
கிடைச்சிருக்குன்னு சந்தோஷப்படுங்க. ரங்குகளுக்கு இப்ப
ரொம்பவே சந்தோஷமா இருக்கும். (வூட்டு சாப்பாட்டிலேர்ந்து
தப்பிக்கலாம் பாருங்க!!)
**********************************************************************
டிஸ்கி: சிலிண்டர் ரேஷன் பத்தி எங்கம்மா கிட்ட சொன்னேன்.
அவங்க அடிச்ச கமெண்ட்,” இண்டக்ஷன் அடுப்பு காரங்க கிட்ட காசு
ஏதும் வாங்கிட்டாங்களோ!!!” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சரி க்யாஸ்தான் ரேஷன். கரண்டாவது உபயோகிக்கலாம்னு
நினைச்சுகிட்டு இருந்தேன். அதுக்கு வெச்சிட்டாங்க ஆப்பு.
”ஒண்ணரையானா காய்கறி எல்லாம் ஒண்ணார்ரூவா ஆக்கிப்புட்டாண்ணேன்”
ஒரு யூனிட் கரண்ட் இனி ரூ4.15.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
21 comments:
mic testing
கேஸ் விலையினை கேட்டாலே சமைக்கிற ஆசையே போயிடுச்சு.
எக்ஸ்ட்ரா சிலிண்டர் 800 ரூபான்னு இல்லே கேள்விப்பட்டேன். ஆஹா.. விலைவாசி குறைஞ்சுடுச்சா :-)))
வாங்க அமுதா கிருஷ்ணா,
கேஸ் விலையினை கேட்டாலே சமைக்கிற ஆசையே போயிடுச்சு.//
ஆமாங்க. முதலுக்கே மோசம்னா மிச்ச செலவெல்லாம்!!!!
கருத்துக்கு நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
எங்க ஹைதையில் இப்ப 400 ரூவா தான். மத்த ஊர்ல ஜாஸ்தி. அதன்படி பார்த்தா எங்களுக்கு எக்ஸ்ட்ரா சிலிண்டர் 650. மத்த ஊர்களுக்கு 800 போல. 650க்கே பயப்படுறோம். 800ன்னா அடுப்பை பரண்ல போட்டுடவேண்டியதுதான்.
என்னத்த மாடுலர் கிச்சன் வெச்சு, என்னத்த சமைச்சுன்னு புலம்பிக்க வேண்டியது தான் :((
கருத்துக்கு நன்றி
//என்னத்த மாடுலர் கிச்சன் வெச்சு, என்னத்த சமைச்சுன்னு புலம்பிக்க //
கூடம், திண்ணை போல வருங்கால வீடுகள்ல கிச்சனும் ஆகிடுமோ? :-)))))
//பெண்களின் மேன்மைக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் நமக்கு
கிடைச்சிருக்கு//
பாருங்க நமக்காக அவங்க பாடுபடுறாங்க, இருந்தும் காங்கிரஸ் கவுர்மெண்டைப் பத்தி இம்புட்டுக் குறை சொல்றீங்க? ;-)))))))
கூடம், திண்ணை போல வருங்கால வீடுகள்ல கிச்சனும் ஆகிடுமோ? :-)))))//
ஆமாம் ஹுசைனம்மா எனக்கும் அப்படித்தான் தோணுது. சிங்கையில் எல்லாம் கிச்சன் ரொம்ப உபயோகிக்க மாட்டாங்களாம். வீடு வாடகைக்கு எடுக்கும் பொழுது நீங்க சமயலறையை உபயோகிப்பீங்களான்னு கேட்டுக்குவாங்க.
அது மாதிரி இந்தியாவும் ஆகிடும்.
//பெண்களின் மேன்மைக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் நமக்கு
கிடைச்சிருக்கு//
பாருங்க நமக்காக அவங்க பாடுபடுறாங்க, இருந்தும் காங்கிரஸ் கவுர்மெண்டைப் பத்தி இம்புட்டுக் குறை சொல்றீங்க? ;-)))))))//
நானும் ஸ்மைலி போட்டுக்கறேன் ஹுசைனம்மா :))))))))))
எந்தக் கவலையுமே இல்லாம இருந்த நம் பாட்டிகளின் காலம் பொற்காலம்
:-)))
வாங்க அமைதிச்சாரல்,
டைமிஷின் ஒண்ணு செய்யணும் இல்லாட்டி வாங்கணும்னு பசங்க ரெண்டும் திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. முடிஞ்சா அங்க கிளம்பி போயிடலாம்னு பாக்குறேன்.
2010 மாதிரி எதிர்காலத்துக்கு ஸ்பேஸ் ஷிப் வேணாம். டைம்மிஷின் அதுவும் கடந்த பொற்காலத்துக்கு போகணும் அம்புட்டுதான் ஆசை :))
வருகைக்கு நன்றி
மின் கட்டணம் ஏற்கனவே இங்க அதிகம் தான். இன்னும் ஏத்தினா சூப்பர்...
சமைக்காம இங்க தப்பிக்க முடியாதுங்க காரணம் பைப் லைன் கேஸ் :))))
ஹைதை பிரியாணி இந்தவாரம் ஒரே அரசியல்..... கேஸ் விலை.... நான்கு சிலிண்டர் என்பது அமலுக்கு வரும் எனத் தோன்றவில்லை... அப்படி வந்தால் நிறைய அரசியல்வாதிகளுக்கே பிரச்சனை... அதனால் வர விட மாட்டார்கள்...:))
என்ன சகோ மைக் டெஸ்டிங் பண்ணி இருக்கீங்க :)
நான் ஏதோ சமையல் குறிப்புதான் சொல்லி இருக்கன்னு நினைச்சேன்.
கேஸ் விலை பாத்தா சமைக்கவா
தோனுது. இங்க 450-ரூவா சிலிண்டர்
எதுதான் விலை கம்மி?
vanga kovai2delhi,
ella iduthalyum gas pipeline iruntha nalla irukum. selavum kammi.
engaluku antha kuduipinai illai. maduraila kooda oru gated communityla irukunga.
vanga sago,
நான்கு சிலிண்டர் என்பது அமலுக்கு வரும் எனத் தோன்றவில்லை... அப்படி வந்தால் நிறைய அரசியல்வாதிகளுக்கே பிரச்சனை... அதனால் வர விட மாட்டார்கள்...:))//
aaha nalla seidhi solli irukeenga nandri.
vanga lakshmi amma,
hydai avakaya briyaningra perla ennai bathicha sila mattergalai thoguthu kathamba poduven.
varugaiku mikka nandri.
(tamil type velai seyyala mannikkavum)
தெலுங்கானா போராட்டம் தீடீரென்று
ரொம்ப ஆக்டீவாக இருக்கிறது.தீடீரென்று
அமைதியாகி விடுகிறது.என்ன் நடக்கிறது
என்றே புரியவில்லை.
அருமையான பயனுள்ள தகவல்ப் பகிர்வு மிக்க நன்றி சகோ .உங்களைப் பின்தொடர ஆரம்பித்துள்ளேன் .
இனி முடிந்தவரை நம் நட்பும் தொடரட்டும் .வாழ்த்துக்கள்
சகோ .அருமையான பகிர்வுகளுக்கு .வாருங்கள் நம் தளத்திற்கும்
வாய்ப்புகள் கிட்டும்போதெல்லாம் .உங்கள் வரவுக்காகக்
காத்திருக்கின்றேன் நன்றி சகோ ........
தமிழ்மணம் 2
வாங்க கேஎஸ்கோ,
இங்க ஹைதையில் சொல்லிக்கிறது என்னன்னா? கேசிஆர் அண்ணாவுக்கு அனுப்பவேண்டியதை (பொட்டிதான்) அனுப்பாட்டி அவர் கத்த ஆரம்பிச்சிருவாருன்னு. ஆனா இப்ப ரம்ஜான், விநாயகசதுர்த்தி எல்லாம் முடிஞ்சதும் களைகட்டும். செப்டம்பர் 6லேர்ந்து ஸ்ட்ரைக் இருக்குன்னு சொல்றாங்க.
வருகைக்கு நன்றி
வாங்க அம்பாளடியாள்,
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி. கண்டிப்பா உங்க வலைப்பு பக்கமும் வர்றேன்,
Post a Comment