வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. கொஞ்சம் யேசுதாஸ் சாயல்
இருந்தாலும் ஜெயச்சந்திரன் குரலில் ஒரு காந்தம் உண்டு. அவரின்
பாடல்களில் சில எனக்கு பிடித்ததை இங்கே கேட்கலாம்.
நான் தாயுமானவன் தந்தையானவன்:
|
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே
நீ கலந்தாய்!!!
மறக்க முடியாத மாஞ்சோலை கிளிதானோ!!
சித்திரச் செவ்வானம் சிரிக்க கண்டேன்
முத்து முத்தான முத்தம்மா
கவிதை அரங்கேரும் நேரம்...
தேவன் தந்த வீணை:
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை
21 comments:
இந்தப்பாடலை மறந்துட்டுவிட்டீர்களே புதுகைத்தென்றல்
என் ஃப்ரெண்ட் ஜான்சி என்று ஒருவர் இருந்தார்.அவருக்கு ஜெயசந்திரன் என்றால் உயிர்.அவரை நினைவு படுத்தி விட்டீர்கள்.இப்பொழுது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
உறவுகள் தொடர்கதை ....lovely song.... the best!
சுட்டிக்கு நன்றி ஸாதிகா.
வாங்க அமுதா,
எனக்கு கானகந்தர்வன் பாட்டு என்றால்தான் உயிர். ஆனால் மற்றவர்களையும் சில பாடல்களில் ரொம்ப பிடிக்கும்.
கானக்கந்தர்வன் தளத்திற்கு முடிந்தபோது ஒரு எட்டு வாங்க.
வருகைக்கு நன்றி
வாங்க சித்ரா,
இந்தப் பாடல் கேட்கும் போது நெஞ்சம் உருகுவது நிச்சயம்
வருகைக்கு நன்றி
அசத்தலான பாடல்கள்.. ஜன்னலுக்கு வெளியே அடைமழை. கம்ப்யூட்டர் ஜன்னலுக்குள்ளே இசைமழை.. நனைஞ்சுக்கிட்டிருக்கேன் நான் :-)
வாங்க அமைதிச்சாரல்,
ஆஹா ரசனையான பின்னூட்டம். எஞ்சாய்
வருகைக்கு நன்றி
//உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை//
my eyes will make tears when i hear this song!!
:-)
வாங்க ஷர்புதீன்,
பாடல்கள் வரிகள் கண்ணில் நீரை கோர்க்கச் செய்துவிடும். அதனாலேயே இந்தப் பாடல் எனக்கு பிடிக்கும்.
வருகைக்கு நன்றி
இதில் நிறையப் பாட்டு ஜேசுதாஸ்னு நினைசுச்கிட்டு இருந்தேன். நல்ல தேர்வு.
'உறவுகள் தொடர்கதை' பாடல் ஒரு அக்மார்க் யேசுதாஸ் மேடம். சரி பாருங்கள்.
மற்றவை ஜெயச்சந்திரனின் அற்புதமான பாடல்கள். சலீல் சௌத்ரியின் 'பூவண்ணம் போல நெஞ்சம்' - எனக்கு மிகவும் பிடித்த ஜெயச்சந்திரன் பாடல்.
வாங்க பாலா,
நானும் ஆரம்பத்துல அப்படித்தான் நினைச்சேன். யேசுதாஸ் சாயலில் ஜெயச்சந்திரன் பாட்டு தான் இது.
ஆஹா நீங்க சொன்ன பாட்டும் நல்லா இருக்குமே. இருங்க ஓடிப்போய் பாட்டை கேட்டுட்டு வர்றேன்.
அதென்னவோ ஜெயச்சந்திரன் பாடல்கள் மாஸ்டர் பீஸா அமைஞ்சிருக்கு.
வருகைக்கு நன்றி
தென்றல்,
இந்த பாடலுக்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய ஒட்டுதல் உண்டு. நான் பாடிய இந்த பாடலை கேட்டுத்தான் இன்றைய என் மனைவி எனக்கு அறிமுகம் - அந்த ஒரு காரணம் போதாதா - என் வாழ்வில் நான் அதிகமாக கேட்ட, பாடிய பாடல் இதுவாகத்தான் இருக்கும் :-)
உங்களை போலவே KJY ரசிகன். நான் ஒரு காலத்தில் KJY Fanatic - எந்த அளவுக்கு என்றால் அவர் பாடிய டூயட் பாடலைக் கூட கேட்கமாட்டேன் - இன்னொரு குரல் இருக்கிறதே என்று :-) வேறு யாரையும் கேட்காமல் இருந்திருக்கிறேன். பின்னாளில் தான் திருந்தினேன். அவரால் கிளாஸ்கில் மியூசிக் கேட்டு கற்றுக் கொண்டேன். அவருடைய பாடலை சரியாக பாட வேண்டும் என்று மலையாளம் எழுத , படிக்க கற்றுக் கொண்டேன். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் :-)
BTW, இதனாலெல்லாம் இந்த பாடல் KJY என்று சொல்லிவிட முடியாது :-) - அடி சறுக்கலாம், இருந்தாலும் நான் அறிந்தவரை இது KJY தான். அப்துல்லா அண்ணே - இந்த field ல் தானே இருக்கிறீர்கள் - கேட்டுச் சொல்லுங்கள்.
ப்ரியமுடன்,
--பாலா
எனக்கு கிடைத்த ஓரளவுக்கு நம்பக் கூடிய ஆதாரம் - http://www.youtube.com/watch?v=0xsb5KHs5Yo&feature=related
பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீலேகா மற்றும் ஸ்ரீராம் இந்த பாடலைப் பற்றி பேசும்போது யேசுதாஸ் என்றே குறிப்பிடுகிறார்கள். (அதற்காக இது அசைக்க முடியாத ஆதாரமெல்லாம் இல்லை :-)) மற்ற சில பாடகர்களும் (ஸ்ரீநிவாஸ் மற்றும் கார்த்திக்) யேசுதாஸ் என்று குறிப்பிட்டு கேட்டதாக ஞாபகம்.
சும்மா ஜெயச்சந்திரன் பாடுவதாக நினைத்து பார்த்துக் கொண்டே நீங்கள் கொடுத்த லிங்கை கேட்டால், ஜெயச்சந்திரன் மாதிரியே இருக்கிறது. இவர்கள் இருவரையும் ஓரளவுக்கு தயக்கமில்லாமல் கண்டு பிடிப்பேன். உண்மையிலேயே குழம்பி விட்டேன் - ஒரு வேளை இரண்டு பேரும் பாடி இரண்டு வெர்ஷன் இருக்கிறதா?
வாங்க பாலா,
நானும் நம்ம தேன் கிண்ணம் முத்துலெட்சுமிகிட்ட கன்பர்ம் செஞ்சேன். தவறுதலா யேசுதாஸ்னு சொல்றாங்கன்னு சொன்னாங்க.
உங்களுக்கும் யேசுதாஸ்தான் பிடிக்குமா? சேம் ப்ளட்டுங்க. இப்ப வரைக்கும் யேசுதாஸ் பாட்டு கேட்டுப்போனா அந்த காரியம் சக்ஸச் எனும் நிலைதான். அதென்னவோ அந்தக் குரலுக்கும் என் வாழ்க்கைக்கும் ரொம்ப தொடர்பு இருக்கறாப்ல ஒரு உணர்வு.
அதனால்தான் இந்த வலைப்பூவை அவருக்கு சமர்பிக்க ஆரம்பிச்சேன்.
http://ganakandharvan.blogspot.com/
நேரம் கிடைக்கும் போது அங்க வாங்க.
நன்றி
ஹலோ மேடம் வணக்கம் நலம்தானே..
ஜெயச்சந்திரனின் நல்ல தமிழ் உச்சரிப்பு பாடல்களை ரசித்து பாடும் அவர் நல்ல குரல் மறக்க முடியாதது.. சிலருக்கோ ஒருவருக்கோ பிடிக்காமல் போனதால் அவர், ஜென்சி போன்றோர் தொடர்ந்து பாடாதது நம் துரதிர்ஷ்டமே..
அதோடு
வசந்தகாலங்கள் (இரயில் பயணங்களில்), கடவுள் வாழும் கோவிலிலே (ஒரு தலை ராகம்),காத்திருந்து காத்திருந்து (வைதேகி காத்திருந்தாள்), சங்கீதமே என் தெய்வீகமே(காஷ்மீர் காதலி),அலையே கடல் அலையே(திருக்கல்யாணம்), அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)போன்ற பாடல்களையும் கேட்டுப்பாருங்கள்.. சிலருடைய குரல் மட்டும் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும்.. அத்தகைய சக்தி வாய்ந்தது ஜெயச்சந்திரனின் குரல்.. நன்றி அன்புடன் எம்.எஸ்.எம்
வாங்க ஏகேஎம்,
நலமோ நலம். நம்ம ஊர்ல ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்லாம் எப்படி??
நீங்க குறிப்பிட்டிருக்கும் பாடல்களும் பிடிக்கும். ரேடியோ பொட்டியில் பாடல் கேட்ட அது ஒரு பொற்காலம்.
வருகைக்கு மிக்க நன்றி
ஒரு வானவில் போலே , சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன், தேவன் தந்த வீணை அருமையான பாடல்கள்.
தாலாட்டுதே வானம் ஜெயச்சந்திரனின் இன்னொரு அருமையான பாடல்.
தென்றல்,
அசைக்க முடியாத ஆதாரம் - 'உறவுகள் தொடர்கதை' யேசுதாஸ் பாடியது :-)
http://www.youtube.com/watch?v=Lm90_௮௧அ௨வ்
அவள் அப்படித்தான் படத்தின் டைட்டில்ஸ் - 1:09 ல் பாடியவர்கள் பெயர் வருகிறது - யேசுதாஸ் பெயர்தான் வருகிறது, ஜெயச்சந்திரன் இல்லை.
ப்ரியமுடன்,
--பாலா
வாங்க பாலா,
நானும் சந்தேகப்பட்டேன். தேன் கிண்ணம் முத்துலெட்சுமி கிட்டயும் கன்ஃபர்ம் செஞ்சேன்.
தங்களின் லிங்குக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment