ச்சும்மா ஒரு மெஜஸ்டிக் லுக் அப்படின்னு சொல்வாங்களே
அதுமாதிரியான ஒரு லுக்கைத் தரும் புடவைகள் இந்த மங்கள்கிரி
காட்டன் புடவைகள். இது தூய பருத்தியால் ஆனது. ஜரி உபயோகிப்பார்கள்.
அடர்த்தி பார்டராக இல்லாமல் பார்க்கவும், உடுத்தவும் மெத்தென
இருக்கும் இந்த வகை புடவைகள் சின்ன ஃபங்க்ஷன்களுக்கு,
அலுவலகத்திற்கு கட்டிச் செல்ல ஏதுவானது.
கண்ணைக்கவரும் வண்ணங்களில் தயாராகிறது இந்தப் புடவைகள்.
இது பக்கா கைத்தறிப்புடவை. இன்றளவும் கையால்தான் நெசவு
செய்யப்படுகிறது. அது என்ன மங்களகிரி புடவைவகை?
மங்களகிரி எனும் ஊரில் தயாரிக்கப்படும் புடவை இது.
விஜயவாடாவிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கிறது மங்களகிரி.
இங்கே பானக நரசிம்ம மூர்த்தி எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு
பிரசித்தம் மங்களகிரி காட்டன். மெலிதான ஜரிபார்டர் தான் அதிகம்
கிடைக்கும் என்றாலும் ஆர்டர் செய்தால் இவ்வளவு அழகான
புடவையும் கிடைக்குமாம். சில கடைகளில் இவ்வளவு அழகிய
வேலைப்பாடு கொண்ட புடவைகள் கிடைக்கும்.
ஆத்திர அவசத்திரத்திற்கு புடவை கட்டுவது இயலாது என
ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு (என்னையும் சேர்த்துதான்) ஒரு
குட் ந்யூஸ். மங்களகிரி வெரைட்டியில் ட்ரெஸ் மெட்டீரியலும்
கிடைக்கும். காண்ட்ராஸ்ட் கலரில் சன்ன ஜரி போட்ட ட்ரெஸ்
மெட்டீரியல் 400 ரூபாய்க்கே கிடைக்கும்.
கொஞ்சம் 750 ரூபாய் வரை செலவு செய்தால் இந்த மாதிரி எம்ப்ராய்டரி
போட்ட மெட்டீரியல் கிடைக்கும்.
பார்க்கவும் சுகமாக இருக்கும் மங்களகிரி வயது வித்தியாசமில்லாமல்
அனைவரும் அணிந்து மகிழும் ஒரு வெரைட்டி என்பதில் ஐயமில்லை.
15 comments:
மங்களகிரி காட்டன் புடவைகள்" மங்களகரமான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
புடவைகளை பற்றிய உங்கள் தொடர் பதிவுகள் நல்லாஇருக்கு.மங்களகிரியில்
ட்ரெஸ்மெட்டீரியலும் கிடைப்பது எனக்கு
புதிய தகவல்.
வாங்க இராஜராஜேஸ்வரி,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க KSGOA,
மங்களகிரி ட்ரெஸ் ஆந்திராவில் ரொம்ப ஃபேமஸ்
வருகைக்கு நன்றி
இதுவரை நீங்க சொன்ன வகைகளில் எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. கூரியர் அனுப்பமுடியுமா? ;-))))))
ஆஹா ட்ரெஸ் மெட்டீரியலா.குட்.
மங்களகிரி காட்டன் நன்றாக இருக்கும்.சுடிதார் மெட்டீரியல் நல்ல விஷயம்.
வாங்க ஹுசைனம்மா,
கூரியர் தானே அனுப்பிட்டா போச்சு.
வருகைக்கு நன்றி
வாங்க அமுதா கிருஷ்ணா,
ட்ரெஸ் மெட்டீரியல் ரொம்ப நல்லா இருக்கும்.
வருகைக்கு நன்றி
வாங்க கோவை2தில்லி,
ட்ரெஸ் மெட்டீரியலும் கிடைக்குது என்பதால மங்களகிரி பதிவு எல்லோருக்கும் பிடிச்சிருக்கு போல :))
வருகைக்கு நன்றி
நல்லாருக்கு கலா...பகிர்வுக்கு நன்றி..
அழகான பகிர்வுங்க. :-)
வருகைக்கு மிக்க நன்றி பாசமலர்
நன்றி சித்ரா
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment