Tuesday, August 30, 2011

தட்டிக்கேட்டோம்!!! வெற்றிக்கண்டோம்

திவான் படுத்திய பாடுன்னு பதிவு போட்டிருந்தேன்ல. ஒருவழியா
அந்த திவான் அம்மாவீட்டுக்கு போய் சேர்ந்திருச்சு. ஒருவழியான்னு
சொல்றேனே தவிர அதுக்கு நிறைய்ய போராட்டம் செய்யவேண்டி இருந்தது.

நம்ம சகபதிவர் எங்கள் புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் சுரேகா
ஒரு பதிவு போட்டிருந்தார். அதெல்லாம் சாத்தியமில்லீங்கன்னு
என்னுடைய திவான் பதிவுக்கு லிங்க் கொடுத்தேன். படிச்சிட்டு
சேர்ந்து குரல் கொடுப்போம்னு சொன்னாரு. அப்படீங்கறீங்கன்னு!!!
நம்பிக்கை இல்லாமத்தான் விவரங்கள் கொடுத்தேன்.

திவான் படுத்தும் பாடு பதிவில் திவான் பெங்களூர் போய் ஒரு
கஸ்டமர் வீட்டில் இருக்குன்னு சொன்னாங்கன்னு சொன்னேன்ல.
அந்த கஸ்டமடி வீட்டில் தப்பா இறக்கி வெச்சது வரைக்கும் நிஜம்.
தப்பா இறக்கி வெச்சா அதை ஏன் அந்த கஸ்டமர் தரலை. அவருக்கு
அவர் கஷ்டம். அவருடைய சாமான்கள் சரியா பேக் செய்யப்படாததால்
உடைஞ்சு போயிருந்ததாம். அதனால அவரு சென்னை பேக்கர்ஸுக்கு
நீங்க எனக்கு பணம் கொடுத்தாதான் இந்த திவானை எடுக்க விடுவேன்னு
சொல்லி வீட்டைப்பூட்டிக்கிட்டு போயிட்டாரு!!! இவங்கதான் கஞ்சப்பிசினாரிங்க.
ஆச்சே!! திவானை அப்படியே விட்டுட்டானுங்க. அயித்தான்
பெங்களூர் போயிருந்த பொழுது பெங்களூரில் இருக்கும் சென்னை
பேக்கர்ஸ் ஆபிஸில் பேசி அந்த கஸ்டமர் போன் நம்பர் வாங்கி
அவரிடம் பேசினால் அவர்தான் மேலே சொல்லியிருக்கும் விவரத்தை
சொன்னது!! அப்புறம் அயித்தான் பெங்களூர் ஆபிஸ்காரங்களுக்கு
கெடு கொடுத்து” இன்னைக்கு சாயந்திரம் எனக்கு திவானை அவங்க
வீட்டிலேர்ந்து எடுத்து அனுப்புற வழிய பாருங்க!! அதுக்கு மொதல்ல
அந்த கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அவரு
எனக்கு போன் செய்யணும்” அப்படின்னு சொல்ல நல்ல புள்ளைங்க
மாதிரி அவருக்கு பணத்தை கொடுத்து திவானை கொண்டு வந்திட்டாங்க.


அப்புறமும் உடனே திவானை அனுப்பலை!!!! சேலம் அனுப்புறேன்னாங்க,
திருச்சிக்கு அனுப்புறேன்னாங்க. திரும்ப சென்னைக்கே அனுப்பிட்டோம்னாங்க.
போன் மேல போன் செஞ்சுகிட்டே இருந்தோம். இந்த சமயத்துல
நம்ம புதுகை ப்ளாக்கர் சுரேகா அவர்கள் பதிவு பாத்து என்னோட
சோகத்தை சொன்னேன். விவரம் தாங்க. கண்டிப்பா செய்வோம்னாரு.

அவரு நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலச் செயலாளர்!. எங்ககிட்ட கம்ப்ளையெண்ட் கொடுத்திருக்காங்கன்னு!! அவர் ஆரம்பிக்க அதுவரைக்கும் போலிஸ்
ஸ்டேஷன் போனா போன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க. இந்தா
அந்தோன்னு புதுகைக்கு பக்கத்தாப்ல ஊருக்கு ஏதானும் வண்டி
போகுதான்னு பாத்து 15 நாள் முன்னாடி மதுரைக்கு அனுப்பிட்டாங்க.
புதுகை-மதுரை 3 மணிநேரம் தான் பயணம். ஆனா புதுகைக்கு
இந்த திவானை அனுப்ப அவங்களால முடியலை.

அப்புறம் சுரேகா ஐடியா கொடுத்து திவானை கேபிஎன் பார்சல்
சர்வீஸ்ல போட்டு அனுப்புங்கன்னு சொன்னா. அனுப்பிடறேன்
சார்! அவங்களை போய் எடுத்துக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க.
“இந்த பாரு! வீட்டு வரைக்கும் கொண்டு போய் கொடுக்கறேன்னுதான்
காசு வாங்கியிருக்க! இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ நஷ்ட
ஈடு கொடுத்துக்கறேன்னு நினைக்கும்பொழுது நான் ஒண்ணும்
செய்ய முடியாதுன்னு சொல்ல” ஆஹான்னு ஆகியிருக்கு அவங்களுக்கு.

இதுக்கு நடுவுல நாங்களும் திரும்ப எங்க திவான் என்னாச்சுன்னு
கேட்டுகிட்டே இருக்க. ஹைதை ஆபிஸில் அந்த ஆளு டென்ஷன்
ஆகிட்டாம்.”என்ன அதுக்குள்ள(!!!)) ஃபேஸ்புக்ல் எல்லாம்
எழுதிட்டீங்க(பதிவு போட்டது சொல்றாப்ல) கன்ஸ்யூமர் கோர்டுக்கு
ஏன் போனிங்கன்னு கத்த, சுரேகா சொல்லிக்கொடுத்த படி பேசினதை
அயித்தான் ரெக்கார்ட் செஞ்சு வெச்சுகிட்டாரு.

10 நாளைக்கு முன்னாடி சுரேக்கா கேட்டபொழுது நாளைக்கு காலேயில்
டெலிவரி ஆகிடும் சார்னு சொல்லியிருக்காங்க. எத்தத்தினா பித்தம்
தெளியும்னு தெரியாத நிலைன்னு சொல்வாங்க. அதுபோல என்ன
செய்வதுன்னே தெரியாத ஒரு நிலையில இருந்தோம். சுரேகாவும்
அடிக்கடி போன் போட்டு அவங்களை காய்ச்சிகிட்டே இருந்திருக்காரு.
(அவரோட வேலைப்பளுகளுக்கு இடையே இதுவும் ஒரு பாரம்னு
எங்களுக்கும் ரொம்ப வருத்தம்)

போன வாரத்துல ஒரு நாள் திடும்னு சுரேகா போன் செஞ்சு
“அவங்க நீங்க கொடுத்த அட்ரஸ், சலான் எல்லாம் தொலைச்சிட்டாங்க.
அப்பா வீட்டு அட்ரஸ் கொடுங்கன்னு சொன்னாரு!!!” அடக்கொடுமையேன்னு
ஆகிப்போச்சு. அப்பா அட்ரஸ், போன் நம்பர் அனுப்பியிருந்தேன்.

சனிக்கிழமை அனுப்பிடறதா திரும்ப சொல்லியிருக்காங்க மதுரை
ஆபிஸ்ல. கடைசியில சுரேகா மதுரை ஆபிஸ்ல யாரை தொடர்பு
கொள்ளணுமோ அவரு நம்பர், கேபிஎன்ல போட்டு அனுப்பினாங்களே!
அந்த நம்பர் எல்லாம் அயித்தானுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினாரு.
அந்த நம்பர்ல தொடர்பு கொண்டு பேசினோம். சனிக்கிழமை ராத்திரி
9.30க்கு போன் செஞ்சு சார் இப்ப கொண்டு போய் டெலிவரி கொடுக்கவா!!
கேட்க “சாமிகளா! அவங்க வயசானவங்க. இந்நேரம் படுத்திருப்பாங்கன்னு”
சொல்ல நேற்று 29-8-11 திங்கள்கிழமை சுபயோகசுபதினத்தில் மதியம்
1.30 மணிக்கு திவான் அம்மா வீட்டுக்கு போய் சேர்ந்திருச்சுங்க.

அங்க தூக்கிப்போட்டு இங்க தூக்கிப்போட்டுன்னு கேபி என்ல போடும்
வரைக்கும் நல்லா இருந்த திவானின் 2 புஷ் போய் கொஞ்சமா
டான்சாடிகிட்டு ஓரளவுக்கு பத்திரமாவே வந்து சேர்ந்திருக்கு.
சுரேகாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

தட்டிகேட்டால் கிடைக்கும்னு அவர் சொன்னது நிஜமாயிடிச்சு.
விழிப்புணர்வு வரணும். உபயோகதராரா நம்மளூடைய உரிமையை
நாம தெரிஞ்சுகிட்டு உரிமை மறுக்கப்பட்டால் தட்டுவதில் தப்பே இல்லீங்க.




திவான் புதுகைக்கு பத்திரமா ஒரு வழியா போய்ச்சேர்ந்த சந்தோஷத்தோட
இன்னொரு சந்தோஷமும். எங்க வீட்டுக்கு ஹேப்பி பர்த்டே!!! :))

சென்ற வருஷம் ஆகஸ்ட் 30தான் இந்த வீட்டுக்கு கிரஹப்ரவேசம் செஞ்சோம்.
அதுக்கும் சேர்த்துதான் ட்ரீட்.

33 comments:

நட்புடன் ஜமால் said...

பல விடயங்கள் இப்படித்தாங்க

உரிமைய கேட்டுத்தான் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம், சில நேரங்களில் உதைத்தும் பெற வேண்டியுள்ளது ...

நம் வீட்டு கண்ணாடி ஆனாலும் ...

சுரேகா.. said...

வாழ்த்துக்கள்.. மற்றும் நன்றி!

Facebook - ல் ஒரு குழு ஆரம்பிச்சிருக்கோம். கேட்டால் கிடைக்கும் என்று! அதிலும், உங்கள் அனுமதியுடன் இதைப் பதிகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வீட்டுக்கு ஹேப்பி பர்த்டே.. வாழ்கவளமுடன்..

தட்டிக்கேட்டு வெற்றிகண்ட உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்..

சுரேகா.. said...

//அவரு கன்ஸுயுமர் கவுன்சிலில் மெம்பர். //

ஒரு சிறு திருத்தம். நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலச் செயலாளர்!

வெள்ளிநிலா said...

:-)

KSGOA said...

திவான் பதிவு படித்து நீண்ட நாட்களான
நினைவு.இப்போதான் போய் சேர்ந்ததா?
கடவுளே!!!

ADHI VENKAT said...

அப்பாடா!!!! ஒரு வழியா திவான் போய் சேர்ந்துடுச்சுன்னு படித்ததும் மகிழ்ச்சி.

தட்டிக் கேட்டதால் வெற்றி கிடைத்து விட்டதா!!!!

வெங்கட் நாகராஜ் said...

கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்.... என்பது இதுதான்.

ஒருவழியாக போய்ச் சேர்ந்தது என்பது மகிழ்ச்சி...

புது மனை சென்று அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா! வாழ்த்துகள்.....

காலம் பறக்கின்றது சகோ.....

மங்களூர் சிவா said...

அப்பாடா!

மங்களூர் சிவா said...

புதுவீட்டு பொறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

அடப்பாவமே இவ்வ்ளோ ஒரு பரிசு அனுப்ப இவ்வ்ளோ கஷ்டமா???சுரேகாவுக்கு ஒரு பூங்கொத்து!

ILA (a) இளா said...

திவான் புதுகைக்கு பத்திரமா ஒரு வழியா போய்ச்சேர்ந்த சந்தோஷம்//
அடி தூள்


எங்க வீட்டுக்கு ஹேப்பி பர்த்டே!!! :))//
ட்ரீட்???

Appaji said...

வணக்கம்...

இப்பொழுது தான் பார்த்தேன்...தங்களது ப்ளாக் -ஐ ....மிக அருமை..
சில நாட்களாக வேலைகளுக்கு இடையில்
(அப்புறம் படித்து கொள்ளலாம் என்றால் ...மனது அடங்க மறுக்கிறது ...)
படித்து கொண்டே இருக்கிறேன்....2009 வரை வந்துள்ளேன்..

என்ன சொல்வது? வாழ்வியலில் ...டிகிரி படிப்பது போல் உள்ளது...
(நான் படிப்பில் ௦௦ 0....அது வேறு விஷயம்..)

அதோடு...தங்களது பதிவுகளுக்கு ....சுகாசினி மணிரத்தினம் ...டப்பிங் கொடுத்தால் எப்படி இருக்கும்...
என நினைத்து பார்த்தேன்....மிக அருமை...

தாங்கள் புதிய இல்லத்தில் குடியேறி ஒரு வருடம் ஆகிறது...என கூறி உள்ளீர்கள்.
எனது வாழ்த்துக்கள்...மனதார பிரார்த்திக்கிறேன்.
தொடரட்டும்...பதிவுகள்...

உங்கள் பதிவின் ரசிகன்
அப்பாஜி

சதீஷ் மாஸ் said...

முயற்சி திருவினையாக்கும் எனபதற்கு சாட்சி இது...

pudugaithendral said...

நம் வீட்டு கண்ணாடி ஆனாலும் ...//

களவாணி படத்து ஹீரோ செங்கலை கையில வெச்சுகிட்டு டீவியை உடைச்சிடுவேன்னு சொல்றமாதிரியா ஜமால் :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேகா,

தாரளமா போடுங்க. அந்த ஃபேஸ்புக் லிங்கையும் கொடுத்தா பலருக்கும் உதவியா இருக்கும்.

மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கயல்,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

ஒரு சிறு திருத்தம். நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலச் செயலாளர்!//

ஆஹா சரியா தெரியலை. இப்ப மாத்திடறேன்.

நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி வெள்ளிநிலா

pudugaithendral said...

வாங்க கேஎஸ்கோ,

சுரேகா சார் மிரட்டி இருக்காட்டி இன்னும் இரண்டுமாசம் கூட ஆக்கியிருப்பாங்க. :((

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

தட்டிக் கேட்டதால் வெற்றி கிடைத்து விட்டதா!!!!//

ஆமாம் கோவை2தில்லி.

ஒரு வழியா போய் சேர்ந்திருச்சு. அம்மாவை வெப்கேமில் திவானை கண்ணுல காட்டச் சொல்லி அப்புறம்தான் நிம்மதியானச்சு. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

காலம் பறக்கின்றது சகோ.....//
ஆமாம் சகோ,

போனவருடம் கிருஹப்ரவேசம் முடிஞ்சு போராட ஆரம்பித்து நவம்பர் 27 குடி புகுந்தது வரை நினைச்சு பாத்தா மலைப்பாவும் இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி சிவா,

நலம் தானே?

pudugaithendral said...

ஆமாம் அருணா,

ஒரு ஸ்டேஜில் வெறுத்துப் போய் திவான் நமக்கில்லைன்னு அப்பா அம்மா நினைக்கும் அளவுக்கு வெறுத்து போச்சு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க இளா,

இங்க வாங்க கண்டிப்பா ட்ரீட் தர்றேன்.

pudugaithendral said...

வாங்க அப்பாஜி

என் பதிவுகளை படிச்சுகிட்டு இருக்கீங்கன்னு சொல்லும்போது மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கு.
//என்ன சொல்வது? வாழ்வியலில் ...டிகிரி படிப்பது போல் உள்ளது...

ஹஸ்பண்டாலஜி பதிவுகளும் மாண்டிசோரி பதிவுகளும் தான் என்னுடைய பெஸ்ட்ன்னு நான் நினைப்பது.

அதோடு...தங்களது பதிவுகளுக்கு ....சுகாசினி மணிரத்தினம் ...டப்பிங் கொடுத்தால் எப்படி இருக்கும்...
என நினைத்து பார்த்தேன்....மிக அருமை...//

ஆஹா!!! தங்களின் பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி.
அடிக்கடி வாங்க கண்டிப்பா தொடர்வேன்

வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி

pudugaithendral said...

ஆமாம் சதீஷ்,

வருகைக்கு மிக்க நன்றி

Cable சங்கர் said...

புதுகை மேடம் இதுதான் எங்கள் கேட்டால் கிடைக்கும் ASK குழுமத்தின் ஃபேஸ்புக் இணைப்பு. இதில் உங்கள் பதிவையும் இணைக்கிறோம் உங்கள் கருத்துக்களை அங்கே பகிருங்க..நிச்சயம் கேட்டால் கிடைக்கும் ASK> நமது உரிமைகளை என்று விட்டுக் கொடுக்ககூடாது. http://www.facebook.com/groups/249616055063292/

pudugaithendral said...

thanks cable shanker

காற்றில் எந்தன் கீதம் said...

கேட்டால் தான் கிடைக்கும் ..... அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்...... அதுக்கு இன்னும் ஒரு நிரூபணம் இது வாழ்த்துக்கள் அக்கா...

புது வீட்டு பர்த்டே க்கு வாழ்த்துக்கள்...

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

அவங்க செய்ய வேண்டிய கடமையைக்கூட நாம சொல்லித்தான் செய்ய வைக்க வேண்டியதா இருக்கு. இதுதான் கலிகாலம்!!!

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

திவானுக்கும், வீட்டுக்கும் வாழ்த்துகள்.

pudugaithendral said...

நன்றி ஹூசைனம்மா