Thursday, September 01, 2011

கடனே இல்லாத வாழ்க்கை வாழ!!!!

எங்க வீட்டு வரலக்‌ஷ்மி போட்டோ அப்ப அப்லோட் செய்ய முடியலை.
இன்னைக்கு உங்களுக்கு தன் முகம் காட்ட வந்திருக்கா லட்சுமி.
தேங்காய் இல்லாத இந்த கலச அலங்காரம் அடியேன் செய்தேன்.
கிருஹப்ரவேசத்திற்கு வாங்கியிருந்த தஞ்சாவூர் பெயிண்டிங் லட்சுமி
போட்டோவுடன் அம்மன் முகம் வைத்து வரலட்சுமி நடந்தது.
(இந்த முறை கலசம் வைத்து பூஜை செய்யக்கூடாத சூழல்.
ஆனால் புதிதாக வாங்கியிருக்கும் முகத்தை பூஜையில் வைக்க
ஆசை. சொம்பில் ஸ்கேலை வைத்து அதில் அம்மன் முகம்
கட்டி அலங்காரம் செய்தேன்)
கடன் பெற்றார் நெஞ்சம் போல அப்படின்னு சொல்வாங்க.
வாங்கிய கடனை அடைத்து நிம்மதியான வாழ்வு வாழ தான்
எல்லார் மனசும் இருக்கும். குறைஞ்ச பட்சம் வீட்டு லோனாவது
நமக்கு இருக்கும்.

இதற்கு எவ்வளவோ ஸ்லோகங்கள் இருப்பதா பெரியவங்க
சொல்லியிருக்காங்க. அமாவாசை அன்று கொழுக்கட்டை
செய்து படைத்தால் ரொம்ப விசேஷமாம். என் அத்தை
(அப்பாவின் சகோதரி) சொல்லிக்கொடுத்தார். கிரஹ
தோஷம் நீங்க கூட இது நல்லதாம். என் அம்மம்மா
சொன்னது அமாவாசை அன்று கொழுக்கட்டை செய்து
நிவேதனம் செய்தால் கடனே இல்லாததொரு வாழ்க்கையை
மோதகப்பிரியன் நமக்கு அருள்வானாம்.

அமாவாசை கொழுக்கட்டை அவனுக்கு செய்து படைப்பது
கஷ்டமில்லை. பூர்ண கொழுக்கட்டைதான் வேண்டும் என
அடம் பிடிக்க மாட்டான். உப்பு கொழுக்கட்டை(உப்புமா
கொழுக்கட்டை, திதிப்பு கொழுக்கட்டை செய்தால் கூட போதும்)

இதுதான் அந்தக்கோலம். இந்தக்கோலத்தை போட்டு நமக்குத்
தெரிந்த கணபதி ஸ்லோகம் சொல்லி கொழுக்கட்டை நிவேதனம்
செய்ய வேண்டும்.


இன்றைக்கு விநாயக சதுர்த்தி பூஜை சிறப்பாக நடந்தது.
அம்மா கொளரி முதலில் வந்தாள்.(ஸ்வர்ண கொளரி விரதம்)
கூடவே மகனும் வந்துவிட்டான்.
அம்மாவை விட்டு பிரிந்து இருக்க முடியாதாம்!!அம்மாவுக்கு கடலைப்பருப்பு பாயசம் செய்தேன். மகனுக்கு திதிப்பு
கொழுக்கட்டை, வடை போதும்னு சிம்பிளா செஞ்சேன். (ஏற்கனவே தொப்பை கணபதி.
இப்போ எல்லார் வீட்டுக்கும் போய் சாப்பிட்டு வந்தால் ஜீரணம்
கஷ்டம்!)ரெசிப்பி தட்கா கார்னரில் வரும்

டிஸ்கி:

இது என்னுடைய 800ஆவது பதிவு. :)) இந்த கணேசனுக்கு அர்ப்பணம்


22 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

800 க்கு வாழ்த்துக்கள்..:)

ஹை அது நாம சின்னதா இருக்கும்போது போடுவமே ஈஸி கோலம் அது தானே
அதையே பிள்ளையாராக்கிட்டாங்களா ? :))

Appaji said...

800வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
பதிவை எண்ணி வைத்து இருந்தீர்களா? இல்லை தற்செயலாக இன்று அமைந்ததா !
>>>>போதும்னு சிம்பிளா செஞ்சேன்>>>> ரொம்ப சிம்பிள் தான்..
<<<<<<<<<<<<<<பிள்ளையாருக்கு அருகில் இருப்பது...என்ன தெய்வம்..?

fundoo said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

KSGOA said...

வாழ்த்துகள் 800 -வது பதிவுக்கு.

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்,

ஆமாம். சிம்பிள் பிள்ளையார்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்பாஜி,

தினம் பதிவு போடும்பொழுது எம்புட்டு ஆகிருக்குன்னு பாத்துக்கறது பழக்கம். (அதான் டேஷ்போர்டுல வந்திடுதே)
800 ஏதாவது சிறப்புபதிவா இருந்தா நல்லா இருக்கும்னு யோசனையா இருந்தேன். நேத்து நல்ல நாளும் அதுவுமா 800 அடிச்சிடலாம்னு யோசிச்சா விநாயகன் பதிவே போட்டுடலாம்னு தோணிச்சு.

பிள்ளையார் பூஜை செய்வதற்கு முதல் நாள் ஸ்வர்ணகொளரி விரதம் செய்வோம். கொளரிதான் அந்த சின்ன சாமி.அம்மாவுக்கு பக்கத்துலேயே மகனை வைத்து மறுநாள் பூஜை.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி ஃபண்டூ

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கேஎஸ்கோ

வெங்கட் நாகராஜ் said...

800-வது பதிவிற்கு வாழ்த்துகள்... சீக்கிரமே ஆயிரம் பதிவுகள் வரவேண்டும் என்ற வாழ்த்துகளும் கூடவே...

படங்கள் அழகு...

நானானி said...

வாழ்த்துக்கள்!!!1000-த்துக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!சேரியா?

பூஜை ரொம்ப நிறைவாயிருந்தது.

சேரீ.....'என்னை மறந்ததேன் தென்றலே...!'

Lakshmi said...

800- வது பதிவு சிறப்பாக அமைந்ததற்கு
வாழ்த்துக்கள்.

சதீஷ் மாஸ் said...

800 பதிவா??? எனக்கு தல சுத்துது... நான் ஒவ்வொரு பதிவும் போட எவ்ளோ கஷ்டபடரேனு சொல்லி மாளாது.. ஆனா பதிவு போடரதுல ஒரு சந்தோஷம் எனக்கு யாரவது கமெண்ட் போடும் போது தான் தெரியும்....

சாகம்பரி said...

கடனே இல்லாத வாழ்க்கைக்கு ஒரு டிப்ஸா? நல்லது. யாராவது கேட்டால் கண்டிப்பாக சொல்வேன். நன்றி

நட்புடன் ஜமால் said...

:)

199 to go

hurry up ...

கோவை2தில்லி said...

வரலட்சுமி முகம் ரொம்ப அம்சமா இருக்கு.

800க்கு வாழ்த்துக்கள். விரைவில் 1000 எட்டிடவும் வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

வாழ்த்துக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

மிக்க நன்றி நானானிம்மா,

பாட்டு சூப்பர்

புதுகைத் தென்றல் said...

வாங்க லக்‌ஷ்மிம்மா,

எல்லாம் அந்த ஆனைமுகன் அருள்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சதீஷ்,

பேச்சாளர்களுக்கு கைத்தட்டல்தான் உற்சாகம் தரும். பதிவர்களுக்கும் பின்னூட்டம்தான் ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.

மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சாகம்பரி,

ரொம்ப சந்தோஷம். வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

ஹா ஹா,

அடிச்சிடுவோம். கவலைவிடுங்க. நன்றி ஜமால்

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி