வேலை வேலை வேலைன்னு அப்படி ஒரு வேலையாப்போச்சு நமக்கு.
ஆஷிஷ, அம்ருதா பரிட்சை அதற்கு பட்ட கஷ்டங்கள்னு போன பதிவுல
புலம்பியிருந்தேன். டிக்கெட் எல்லாம் புக் செஞ்சு வெச்சாச்சு. போகமுடியுமான்னு
தெரியலை!! எல்லாம் ரயில்ரோக்கோ நடத்தறாங்களேங்கற பயம்தான்.
ஆனா இப்ப விட்டா போகமுடியாது என்பதால கிளம்பியாச்சு. ஆஷிஷ்
அண்ணா குல்லு மணாலிக்கு எக்ச்கர்ஷன் கிளம்ப, அன்னைக்கே நான்,
அயித்தான், அம்ருதா மூணு பேரும் என் ஊருக்கு கிளம்பினோம்.
வர்ற ப்ளான் இருக்குன்னு சொன்னதும் அம்மம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
மாமாக்கள் குஷி. எஸ் எங்க ஊருன்னு சொன்னது “அம்ச்சி மும்பை”!
நவராத்திரியில் வரும் மூலம் நட்சத்திரத்தன்று என் அன்பு அம்மம்மா
ராஜலக்ஷ்மிக்கு பிறந்தநாள். அம்மம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு
சுகமில்லை. என்னை பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
சின்ன மாமா செப்டம்பர் 1 கிரஹப்ரவேசம் செஞ்சிருந்தாரு. அதுக்கும்
போக முடியாம பசங்க பரிட்சை வந்திருச்சு. ஆஷிஷ் அண்ணா ஊருக்கு
போயிருக்க, அம்ருதம்மாவுக்கும் ஒரு ஜாலி ட்ரிப் என ஒரே கல்லுல
மூணு மாங்கா அடிச்ச ட்ரிப் இது!!
ஹைதையிலிருந்து ஹுசைன்சாகர் எக்ஸ்பிரஸ்ஸில் கிளம்பியாச்சு.
எங்க போதாத நேரம்னு தான் சொல்லணும்! சமீபகாலமா ரயில்
பயணத்துல ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஒவ்வொரு இடத்துலயும்
நான் புலம்பும் பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்வது என்பதை
மக்கள் படிக்கவே இல்லைன்னு தோணுவது இந்த முறையும் நினைக்க
வெச்சிருச்சு. எங்க கூட பயணம் செஞ்சது 35 பள்ளிக்குழந்தைகள்!!!!!
சாமி ரங்கா!! வகுப்பறையிலேயே பிள்ளைகளை மேய்ப்பது கஷ்டம்.
இதில் மும்பைக்கு 5 ஆம் வகுப்பு மாணவர்களை எக்ஸ்கர்ஷன் அழைத்து
செல்கிறார்கள். ஆணும் பெண்ணுமாய் 35 குழந்தைகள். கூடவே 4
ஆசிரியர்கள்.
2.45க்கு ஹைதராபாத் ஷ்டேஷனில் ட்ரையின் ஸ்டார்ட் ஆனதிலிருந்து
ஸ்டார்ட் ஆனது நான் ஸ்டாப் சத்தம். சில பிள்ளைகளுக்கு குடும்பங்களின்
நடுவே சீட் வர ,”நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்துதான் உக்காருவோம்”
என இடம் தரவே அடம்பிடித்தது தனிக்கதை என்றால், காச் மூச் என்று
கத்திக்கொண்டே இருந்தார்கள். நேரம் ஆக ஆக சத்தம் கூடிக்கொண்டே
இருந்தது. ஆசிரியர்கள் பெண்குழந்தைகள் இருக்கும் பகுதியில் போய்
உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் கொஞ்சம் சாந்தமாக இருந்தார்கள்.
ஆனால் எங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆண்குழ்ந்தைகள்
“அப்பப்பா!!!” குழந்தைகளை எதுவும் சொல்லவும் முடியாது.
பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நேரத்தில் அந்த தனிமையை,
சுதந்திரத்தை அனுபவிக்க எண்ணுவது இயல்புதான். ஆனால்
நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம், உடன் மற்ற பயணிகளும்
இருக்கிறார்கள் எனும் நினைப்பே இல்லை. (சொல்லிக்கொடுக்கப்படவில்லை)
4 மணிக்கே பர்த்களை போட்டுக்கொண்டு ஏறிக்குதித்து அதகளம்
செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியைகள் கண்டுகொள்ளவே இல்லை.
ஓயாத சத்தத்தால் 6 மணிக்கே தலைவலி துவங்கி விட்டது.
ஆஷிஷும் அன்று காலை 6.50 ஏபி எக்ஸ்பிரஸ்ஸில் டில்லி கிளம்பியதால்,
அண்ணாவுக்கு சாப்பாடு செய்து கொடுத்து, தயார் செய்ய வேண்டி
3 மணிக்கே எழுந்துவிட்டேன். 3 மணிக்கு தூங்கிவிடக்கூடாது என
நினைத்துக்கொண்டே இருந்ததால் 1.30 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது.
ஆஷிஷை ஏற்றிவிட்டு வந்து படுக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால்
1.30க்கு நாங்கள் ஹைதரபாத் ஷ்டேஷன் செல்ல வேண்டியிருந்ததால்
வேலைகளை முடித்து, சாப்பிட்டு என சரியாக இருந்தது. ட்ரையினிலாவது
படுக்கலாம என நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகளின் கொட்டத்தில்
தலைவலி அதிகமாகிவிட்டது. 7 மணிக்கு பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு
கொடுத்து 8 மணிக்கெல்லாம் படுக்க வைத்துவிடுவதாக ஆசிரியை சொல்ல
காத்திருந்தேன். 8.30 மணியாச்சு. சத்தம் கொஞ்சமும் குறைவில்லாமல்
வர டீச்சரிடம் போய் பேசினேன். இதோ சொல்றேங்க என்றார்.
வந்தார் ஏதோ பேருக்கு சொன்னார். போய்விட்டார். :(
9 மணிக்கு பெண் குழந்தைகள் படுத்துவிட்டார்கள் போலும் அந்தப்
பக்கத்திலிருந்து சத்தம் ஏதும் வரவில்லை. எனக்கு அடுத்த
பர்த்லிருந்து ஆண்குழந்தைகள் கத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள்.
“இன்னும் ஒரு சத்தம் வந்தால் டீடியை கூப்பிட்டு க்ம்ப்ளையெண்ட்
செய்து விடுவேன்! என மிரட்டியதில் சில குழந்தைகள் படுத்துக்கொண்டனர்.
ஆனாலும் ஒரு பையன் இரவு 11 மணிக்கு படுத்துதான் பழக்கமாம்!!
அதனால் 4 பையன்களை கூட சேர்த்துக்கொண்டு பேசிக்கொண்டே
இருந்தான். டெசிபல் அதிகமாக இருந்தது. ஏசி கம்பார்ட்மெண்ட்
என்பதால் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது.
10மணிக்கு அயித்தான் எழுந்து போய் ஆசிரியைகளிடம் பேசினார்.
“உங்களால் அடக்கி வைக்க முடியாவிட்டால், எக்ஷ்கர்சன், டிரிப்
என ஏன் அழைத்து வருகிறீர்கள் என்று” கத்த தன் சக ஆசிரியைகளிடம்
பேசிக்கொண்டு கடமை ஆற்றிக்கொண்டிருந்த ஒரு ஆசிரியை வந்து
அந்தப் பையனை படுக்க வைக்க அதன் பிறகு தூங்கி 4.30 மணிக்கு
தாதர் ஷ்டேஷனில் இறங்க 3.30க்கே முழித்தது தனிக்கதை.
எனக்கு அந்த தலைவலியிலும் ஒரு விஷயம் மண்டையைக்
குடைந்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளைகள் ரிடர்ன் ஃப்ளைட்டிலாம்.
அந்த ஏர்ஹோஸ்டஸ் பாவம் என நினைத்தேன்!!!
5 மணிக்கு தாதர் ஷ்டேஷனில் இறங்கிய நிமிடம் எனக்குள் கொசுவத்தி
சுத்த ஆரம்பித்தது. (எல்லாம் வலைப்பூவில் ஏற்கனவே சுத்தியதுதான்)
ஹா! அம்ச்சை மும்பை. நான் இருந்த மும்பை என ஒரே சந்தோஷம்.
லோக்கல் ட்ரையின் டிக்கெட் வாங்கிக்கொண்டு ட்ரையின் ஏற ப்ளாட்பார்ம்
வந்தோம். மறந்த போச்சு ரொம்ப நாளாச்சு எனும் பாட்டை ஞாபகத்தில்
கொண்டு வருவது போல எந்த ப்ளாட்பாரத்தில் ட்ரையின் வரும் என்பதை
மறந்து போயிருந்தேன். அதாவது 1,2 ப்ளாட்பார்ம் ஸ்லோ ட்ரையின்.
(எல்லா ஷ்டேஷன் களிலும் நிற்கும்) 3,4 ப்ளாட்பார்ம் ஃபாஸ்ட் ட்ரையின்.
குறிப்பிட்ட ஷ்டேஷன் களில் தான் நிற்கும்) இதைத்தான் மறந்துவிட்டேன்.
தினம் தினம் மும்பை லோக்கலில் பயணித்த நான் இதை மறந்தது எப்படி?
திருமணம் ஆகிச்செல்லும் சில வருடங்கள் கழித்து பிறந்த வீடு
வரும்பொழுது ஏதோ அன்னிய வீட்டுக்கு வந்தது போல (அதாவது
சாமான்கள் எது எங்கே இருக்கு என்று தெரியாமல் போகுமே!)
அது போல இதுவும் நடந்தது என நினைக்கிறேன்.
பதிவு பெரிசா போச்சு. மீதி தொடரும்....
11 comments:
பதிவு அருமை. ரசித்தேன்.
பொது இடங்களில் எப்படி இருக்கணுமுன்னு பிள்ளைகளுக்குச் சொல்லித்தர யாரும் மெனெக்கெடறதில்லை. ஷாப்பிங் செண்டர்களிலும் மால்களிலும் பார்த்து நொந்து போயிருக்கேன்.
தாய்தகப்பன் பார்த்தாலும் ஏதோ அதிசயமான விஷயம்போல் ரசிக்கிறாங்கன்றது ஒரு கொடுமை.
இதையெல்லாம் பார்த்தால் நம்ம பிள்ளைகளுக்கு ஒரு கோவில் கட்டிக் கும்பிட்டுடலாம்:-))))
ட்ரெயினில் குழந்தைகள் போடும் சத்தம்.... குழந்தைகள் பரவாயில்லை. நான் ஒரு முறை செல்லும் போது கல்லூரி மாணவ/மாணவிகள் - இரவு முழுக்க கொட்டம் அடித்தார்கள்....
அம்ச்சி மும்பை.... நல்ல பயணம் பற்றிய உங்கள் தகவல்களை அறிந்து கொள்ள ஆவல்.... தொடருங்கள்....
நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
:)
அடுத்த பாகத்தையும் படிச்சிட்டு கமெண்ட்டிங்ஸ்ஸ்ஸ் ...
என்னடாயிது மும்பை திடீர்ன்னு குளுந்து போயிருக்குன்னு நினைச்சா.. தென்றல் வந்துட்டுப் போயிருக்கா :-))
(நானும் இங்கேதான் இருக்கேன் :-))
தாங்கள் முன்பு கண்ட மும்பைக்கும், இப்போதிருக்கும் மும்பைக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களைக் கூறுக ;-)
பயணங்களே சில நேரம் இனிமையாய்...சில நேரம் இம்சையாய்..என்ன செய்வது?
அந்த பொழுதுகளையும் தாண்டி...மும்பை வாசம் எப்படி ?
பழைய உங்கள் அலுவலக அண்ணனை கண்டு பிடித்தீர்களா?
விழா கால வாழ்த்துக்கள் ...அனைவருக்கும்...
வாங்க துளசி டீச்சர்,
இந்த இங்கிதம் இங்கிதம்னு சொல்வாங்களே அது என்னான்னு பல பெரியவங்களுக்கேத் தெரியலை. அப்புறம் தானே பசங்களிடம் எதிர் பார்க்க!!
இதையெல்லாம் பார்த்தால் நம்ம பிள்ளைகளுக்கு ஒரு கோவில் கட்டிக் கும்பிட்டுடலாம்//
சாமி சத்தியமா, சுத்தமான நிஜம். அயித்தான் அடிக்கடி இதைச் சொல்வாரு. நானும் ஆமோதிப்பேன்.
உங்க வருகைக்கு நன்றி
வாங்க சகோ,
குழந்தைகள், கல்லூரி மாணவமணிகள், வேலைக்கு போபவர்கள் என பலரும் இப்படித்தான் பொது இடத்தில் தங்கள் இஷ்டப்படி நடக்கிறார்கள்.
வருகைக்கு நன்றி
வாங்க தம்பி,
வருகைக்கு நன்றி
வாங்கப்பா அமைதிச்சாரல்,
உங்களுக்கு ஒரு மெயில் தட்டலாம்னு நினைச்சேன். வெள்ளிக்கிழமை வீடு சேர்ந்து ஞாயிறு இரவே கிளம்பும்வகையில் ஷார்ட் ட்ரிப். இதற்கே மாமாக்களிடம் பயங்கர திட்டு. இதில் வசாயிலிருந்து வாஷிக்கு பயணம் என்றால் அம்புட்டுதான் என பேசாமல் இருந்துவிட்டேன்.
வருகைக்கு நன்றி
வாங்க அப்பாஜி,
மும்பை வாசத்தைப் பத்தி பதிவுகள் வருது. எங்கண்ணனைப்பத்தி யாரிடம் கேட்க. நான் வேலை செய்த அலுவலகத்தில் பழைய ஆட்கள் இருக்கிறார்களா என்று கூடத்தெரியாது. என்றாவது ஒரு நாள் அண்ணனை சந்திப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது. எதிர் படும் முகத்தில் என் அண்ணன் சாயல் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே இருக்கிறான். கிடைத்தால் அன்று இருக்கிறது அந்த அண்ணனுக்கு கச்சேரி :)))
வருகைக்கு நன்றி
Post a Comment