Wednesday, October 05, 2011

அன்பாலே அழகான வீடு!!!!!!!!

வசாய் ரோட் ஷ்டேஷனில் எங்கள் ட்ரையின் நுழைந்த பொழுது அதிகாலை 6.30 மணி ஆகியிருந்தும் இருள் பிரிந்தும் பிரியாமலும் இருந்தது. ஆட்டோ பிடித்து
வீடு சேர்ந்தோம். மாமா இன்னும் எந்திர்க்கவில்லை. மெல்ல பூனை போல
சென்று மாமா பக்கத்தில் படுத்துக்கொண்டு கட்டிக்கொண்டு குட்மார்னிங் மாமா
என்றேன். அடடே! வந்தாச்சா!! என கட்டிக்கொண்டவர் அடுத்த நிமிடத்தில்
காதை திருகினார். “வாடி ஷ்டேஷன்ல மசாலா சாய்! மசால் வடை சாப்பிட்டேன்னு
எஸ் எம் எஸ் அனுப்பி டெம்ப்ட் செய்யறிய்யா!!” என்று செல்ல திட்டு திட்டினார்
மாமா.

அப்பாவிடம் இருந்ததை விட கூடுதல் நெருக்கம் என் மாமாக்களுடன்
எனக்கு. வீட்டில் பெரிய்ய பேத்தி. எல்லாரிடமும் வளர்ந்திருக்கிறேன்.
இதுவே எனக்கு பெரிய்ய நெருக்கம். ராம்மாமா(அம்மாவின் பெரியம்மா
மகன்) ரொம்பவே ஷ்பெஷல். அம்மாவின் சொந்தத்தம்பியான இந்த
சத்யாமாமா பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
நான் மருமகள் அல்ல மாமாவுக்கும் அத்தைக்கும் முதல் குழந்தை
நான் தான். அதனால் மும்பை வீடு எனக்கு பிறந்த வீடு. அம்மம்மாகூட
என்னை தன் பேத்தி என்று சொல்லிக்கொள்வதை விட மகள் என்றே
சொல்வார்.

நானும் தம்பியும் மட்டும்தான் வீட்டில். இங்கே மாமாவீட்டில் மாமாவின்
மகள்கள் இருவரும் கூட எனக்கு உடன்பிறப்பு போல. பெரியவள்
ஆயுர்வேதா டாக்டருக்கு படிக்கிறாள். சின்னவள் +2. அம்மம்மாவுக்காக
எனக்கும் பெரியவளுக்கும் போட்டாபோட்டி நடக்கும். ரொம்ப சின்னது
அது. ஆனாலும் அம்மம்மா என் பக்கம் திரும்பி படுக்கக்கூடாது,
எனக்கு தலை வாரக்கூடாது என ரொம்ப படுத்துவாள். இப்போது
கூட நான் அம்மம்மாவை கட்டிக்கொண்டாள் தானும் போட்டிக்கு
வந்துவிட்டாள். ராட்சசி. எஸ் என் அன்பான எதிரி சசி. :)))

அதே சமயம் வேறு யாரும் அம்மம்மாவுடன் போட்டி வந்தால் நானும்
சசியும் ஒன்று சேர்ந்து விடுவோம். என் பிள்ளைகளுக்கும் பாம்பேஅவ்வா
என்றால் உயிர். அத்தை அன்று நான் வருகிறேன் என்று சுவாசினி
பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். 9 பெண்கள், 2 குட்டி பெண்கள்
அழைத்து புடவை கொடுத்து, சாப்பாடு போட ஏற்பாடு. அந்த 9
பெண்கள் லிஸ்டில் நானும் உண்டு. தேங்காய்சாதம், சர்க்கரைப்பொங்கல்,
அவியல், பிசிபேளாபாத், வடை, என நான் பெரிய அத்தை, சின்ன
அத்தை 3 பேரும் சேர்ந்து சமைத்தோம். வந்தவர்களிடம் எல்லாம்
மாமாவும் அத்தையும் என் அக்கா மகள், ஆனால் எங்கள் மகள்
போலத்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

அம்மா என்னை “ட்ரில்” வாங்கியது, திட்டியது எல்லாம் பிள்ளைகளுக்கு
சொல்லிக்கொண்டிருந்தார். என் சொன்னப்பேச்சை கேட்டது கலாதான்.
அதனால்தான் திரம்பட தன் வேலையை செய்கிறாள் என பெரிமிதத்துடன்
சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு தகப்பனுக்கே உரிய பெருமிதம் அதில்
தெரிந்தது.

ஆனாலும் மாமா என்னிடமிருந்து தப்பித்துவிடவேண்டும் என்று நான்
கிளம்பும் வரை ஷேவிங் செய்து கொள்ளாமல் இருக்கப்பார்த்தார்.
கடைசிநாள் கிளம்புவதற்கு சற்று முன் ஏதோ மாற்றம் தெரிய
”மாட்டீட்டீங்க மாமா! ஷேவிங் செஞ்சாச்சா!!”” என சந்தோஷமாக
கத்தினேன். கண்டுபிடிச்சிட்டியா!! என மாமா இருகைகளாலும் தன்
கன்னத்தை மூடிக்கொள்வதற்குள் இரண்டு கைகளாலும் கன்னத்தை
கிள்ளிவிட்டேன்(செல்லமாகத்தான்) எஸ் க்ளீன் செய்து கொண்டு
மாமா இருந்தால் இப்படித்தான் நடக்கும் :))))))))))))))))

நம்ம கிட்டயும் பயப்பட வைப்போம்ல!!!!!!!

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

படிக்கும்போதே மனதில் மகிழ்ச்சி... நமக்குப் பிடித்த சொந்த-பந்தங்களுடன் இருப்பதில் தான் என்ன ஒரு அலாதியான இன்பம்....

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

Appaji said...

எல்லோருக்கும் இப்படி ஒரு குடும்ப சூழல் இருந்தால்...அப்புறம் எதற்கு BP, Sugar...etc.,
எல்லோர் அன்பாலேயும் அழகானது வீடு......நீங்கள் ஸ்பெஷல் தான்...
எனக்கு ஒரு மசால் சாய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!!!

pudugaithendral said...

வாங்க சகோ,

அலாதியான இன்பம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத ஒரு உணர்வு.

ஆண்டவனருள்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

சத்தியமாய் நான் ஷ்பெஷலாக ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று நினைப்பேன். அம்மா,அப்பாவைத் தவிர, சித்தி, மாமா, அம்மம்மா, என எல்லோரும் என்னிடம் உரிமையுடன் இருப்பார்கள். பல சமயம் இதனால் பிரச்சனையும் வரும் :)))

வருகைக்கு நன்றி