இந்தத் தெலங்கானா பிரச்சனையால தினமும் 4 மணிநேரம் கரண்ட் கட்.
காலையில் 2 மணிநேரம், மாலையில் இரண்டு மணிநேரம். அந்த சமயம்தான்
நான் பதிவுகளுக்குன்னு ஒதிக்கி வெச்சிருக்கற நேரம்.:(( அதனால
தொடர்ச்சியா பதிவு போட முடியறதில்லை. வழக்கத்துக்கு மாறாக
இரவில் இந்தப் பதிவை போடுறேன்.
மஹாலட்ச்மியில் வடாபாவ் சாப்பிட்டுவிட்டு அடுத்த ப்ளானாக
சர்னி ரோட் கோவிலுக்கு போகணும். இங்கயே இம்புட்டு நேரமாயிடிச்சே
கோவில் திறந்திருக்குமான்னு தெரியலை. மாமாவுக்கு போனைப்போட்டா
12மணிக்கு கோவில் மூடிடும்னாரு! மஹாலட்சுமி கோவிலிலிருந்து
சர்னி ரோட் கோவிலுக்கு போக 40 நிமிஷமாகும்னு சொல்ல ஐடியாவை
ட்ராப் செஞ்சோம். அதென்ன கோவில்?
சர்னி ரோட் ஷ்டேஷனை ஒட்டி இருக்கும் இந்தக்கோவில் பெருமாளுடையது.
மிக அழகாக இருக்கும். வானஸ்வாடி கோவில்னும் இதை சொல்வாங்க.
அந்த ப்ளான் ட்ராப் ஆனதால அடுத்து போக இருந்த கோவிலுக்கு
டாக்ஸி பிடிச்சோம்.
மும்பையில் நான் இருந்தப்ப கூட இந்தக்கோவிலுக்கு போனதில்லை
என்பது ரொம்பவே வேதனை தரும் விஷயம். எத்தனையோ வாட்டி
ட்ரை செஞ்சும் அதென்னவோ அவனுக்கு அப்போ தரிசினம் கொடுக்கும்
எண்ணமில்லை போல. பாந்த்ரா மாதாகோவிலுக்கு கூட போயிருக்கேன்.
வஜ்ரேஸ்வரி கோவிலுக்கும் போயிருக்கேன். ஆனா பாருங்க சித்தி
விநாயக் கோவிலுக்கு போனதே இல்லை. அதனால இந்த வாட்டி
கண்டிப்பா ஒரு விசிட் போட்டே தீரணும்னு முடிவு செஞ்சிருந்தோம்.
(அடுத்த வாட்டி ப்ரத்யேகமா டிட்டிவாலா போகணும்னு அயித்தான்
முடிவு செஞ்சிட்டாரு)
ஓரளவுக்கு கூட்டம்.ரொம்ப ஜாஸ்தி இல்லை. சித்திவிநாயக் கோவிலுக்கு முன்னாடி
அழகழகா மாலைகள் தொடுத்து வெச்சிருப்பதை பார்த்துக்கிட்டே
இருக்கலாம். மோதக் பேடா, தேங்காய்த்தட்டு மாலையோட வாங்கிக்கிட்டு
போனோம். சீக்கிரமே தரிசனம் முடிஞ்சது. ஆனா குறைவான கூட்டம் இருந்தும்
தள்ளுமுள்ளு ஏனோ புரியலை. அன்னைக்கு சனிக்கிழமைதான். கொஞ்சம்
நிதானமா தரிசனம் செய்ய விட்டிருக்கலாம்.
எதிர்பார்த்ததை விட சீக்கிரமா தரிசனம் முடிஞ்சிருச்சு. அயித்தானோட
நண்பர்களை சந்திப்பதா திட்டமிருந்தது. ஆனா அவசர மீட்டிங் வந்திருச்சு
என பல காரணங்களால் யாரையும் மீட் பண்ண முடியலை. இனி
வண்டியை நேரா வசாய்க்கு விட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சு
வீட்டுக்கு போனைப்போட்டு லன்சுக்கு வந்திடறோம்னு சொல்லிட்டு
தாதர் ஷ்டேஷனுக்கு டாக்ஸி பிடிச்சோம்.
மும்பையில் மாறாம இருக்கும் ஒரு விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு.
சென்னையில் இறங்கினதும் ஆட்டோ காரங்ககிட்ட போராடரது ஒரு
மஹாபாரதம். இப்ப ஹைதையில் இதே சூழல் உருவாகியிடிச்சு. ஆனா
மும்பையில டாக்ஸி மீட்டர் போட்டு எந்த பிரச்சனையுமில்லாம வருது.
வசாயில் கூட இன்னமும் அதே மாதிரிதான் இருக்கு. மும்பை டப்பாவாலாக்கலை
கொண்டு ஏதோ பாடமெல்லாம் எடுக்க வெச்சிருக்காங்க. மற்ற ஊர் வாடகை
கார் காரர்களையும், ஆட்டோகாரர்களையும் ஒருங்கிணைச்சு மும்பை
ஆட்டோ/டாக்ஸி காரங்ககிட்ட ட்ரையிங் எடுத்துக்க விடணும். நல்லதெல்லாம்
செய்ய நம்ம ஆளுங்களுக்கு எங்க நேரம் இருக்கு.
தாதர் ஷ்டேஷன் வந்ததும் வசாய் ட்ரையின் வந்திச்சு. ஏறி உட்கார்ந்து
1 மணிநேரத்தில் வசாய் போய்ச் சேர்ந்தோம். 10ஆவது நிமிடம் வீட்டில்.
அனைவருடனும் கலந்து பேசி சாப்பிட்டு கட்டையைச் சாய்த்ததுதான் தெரியும்.
இரவு வசாயிலேயே இன்னொரு பக்கம் வீடு வாங்கி கிரஹப்ரவேசம் செய்திருக்கும்
சின்னமாமாவீட்டுக்குப் போய் தங்கி ஞாயிறு மதியம் அங்கேயிருந்து கிளம்பி
பெரியமாமாவீட்டுக்கு வந்து பொட்டி எடுத்துகிட்டு 6.30 மணிக்கு லோக்கல்
ட்ரையின் பிடித்து, சர்ச்கேட் வந்து அங்கேயிருந்து வீடி சென்று ப்ளாட்பாரத்தை
அடைந்த பொழுது எங்க ட்ரையின் ப்ளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருந்தது.
சாப்பிட்டு படுத்ததுதான் தெரியும். வளமைக்கு மாறாக நிசப்தமாக, ஆனந்தமாக
உறக்கம் கிடைத்தது மஹா மஹா ஆச்சரியம்.
8 comments:
மற்ற ஊர் வாடகை
கார் காரர்களையும், ஆட்டோகாரர்களையும் ஒருங்கிணைச்சு மும்பை
ஆட்டோ/டாக்ஸி காரங்ககிட்ட ட்ரையிங் எடுத்துக்க விடணும். நல்லதெல்லாம்
செய்ய நம்ம ஆளுங்களுக்கு எங்க நேரம் இருக்கு./
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பிரபாதேவி சித்தி விநாயகர் கோவில் சிலை கடலிலிருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். பக்கத்தில் மகாலட்சுமி வேறு! இருவரின் தரிசனமும் எல்லா வளங்களையும் வழங்கும்!
இனிய பயணம்....
நன்றாக இருந்தது பயணப் பகிர்வுகள்...
முன்பு மும்பையில் இருந்த போது....
சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்றதில்லையா...என்னடா இது ...ஆச்சரியம்...
விடுங்க...இப்பவாது அந்த பாக்கியம் கிடைத்ததே!!! <<<<<<<<>>>>>>>கேள்வி பட்டதில்லை...எனக்கு இது புதிய தகவல். மிக்க நன்றி....
அடுத்த முறை மும்பை செல்லும்போது பார்த்து விட வேண்டியதுதான்..<<<<<<<<<<<<< வளமைக்கு மாறாக நிசப்தமாக, ஆனந்தமாக உறக்கம் கிடைத்தது >>>>>>>> இவ்வளவு அலைச்சலில் ...அதே பிள்ளைகள் கூட பயணி த்திருந்தாலும் ..உறக்கம்...ஆனந்தமாக தான் வரும்..:(
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி
வாங்க சேட்டைத்தம்பி,
இருவரின் தரிசனமும் எல்லா வளங்களையும் வழங்கும்!//
ஆமாம் அப்படித்தான் ஒரு நம்பிக்கை இங்கே இருக்கு
வருகைக்கு நன்றி
நன்றி சகோ,
தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
வாங்க அப்பாஜி,
காலில் கஞ்சிக்கொட்டிக்கொண்டது போல ஒரு பயணம் வந்திருக்கன்னு அம்மம்மாவிடம் திட்டு வாங்கியது தனிகிளைக்கதை.
:)) வருகைக்கு நன்றி
Post a Comment