Wednesday, October 12, 2011

ஆஷிஷ் பர்த்டேக்கு எங்க போனோம்??!!!

ஆஷிஷுக்கு பிடித்த சாக்லேட் ட்ரஃபிள் கேக் ஆர்டர் செய்திருந்தோம்.
மாலை 6 மணிக்கு கேக் வெட்டி, ஊட்டிய பிறகு கோவிலுக்கு அழைத்துச்
சென்று சுவாமி தரிசனம் செய்தோம். டின்னர் யாருக்கு பிறந்தநாளோ
அவர்கள் சாய்ஸ் தான்.


பெருமைக்காக சொல்லவில்லை ஆஷிஷ் எப்பொழுதும் டிஃபரண்ட் ஸ்டைல்
ரெஸ்டாரண்டை தேடி கண்டுபிடித்து வைத்திருப்பான். இந்த முறை அவன்
போக விரும்பியது ஓரிஸ் பஞ்சாரா. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும்
ohris ஹோட்டலுக்கு. பஷிர்பாக், நெக்லஸ்ரோட் என இந்த ரெஸ்டாரண்ட்
இருக்கும் இடம் அமைப்பு வித்தியாசமாகவே இருக்கும். பாலிவுட் ஸ்டைல்,
ஹோட்டல் பற்றி கூட ஒரு முறை சொல்லியிருந்தேன்.


ஓரிஸ் பஞ்சாராவில் ஒரு தளத்தில் ஒரு வகை உணவு. க்ரவுண்ட் ஃப்ளோரில்
சாட். முதல் தளத்தில் வட இந்திய உணவு. இரண்டாம் தளத்தில் சைனீஸ்.
ஆஷிஷ் போக விரும்பியது 3 & 4 ஆம் தளத்தில் இருக்கும் உணவகத்துக்கு.
சரி போவோம் என டேபிள் புக் செய்தேன். அன்று வெள்ளிக்கிழமைதான். ஆனாலும் இருக்கட்டும் என டேபிள் புக் செய்தேன். செம கூட்டம்.
சர்வர்கள் காட்டிலாகா போலீஸ் மாதிரி உடையணிந்திருந்தனர்.


கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் செரங்கட்டி காடுகள் போல ஒரு செட்டப்.
அங்கே கிடைக்கும் உணவோ பெஷாவரி, லக்னோவி & வட இந்திய வகை. எப்படி
கலக்கலா இருக்குல்ல?? அதுதான் ஆஷிஷின் கண்டுபிடிப்பு. குண்டன்
எங்கேயிருந்துதான் இன்பர்மேஷன் கலெக்ட் செய்வானோ. கார்களுக்கு அடுத்து
ஐயா ஆராய்ச்சி செய்வது ஹோட்டல்கள் பற்றிதான்.



அன்னைக்கு எப்பவும் ஆர்டர் செய்யும் சப்ஜீக்கள் இல்லாமல் வித்தியாசமா
ஆர்டர் செய்யணும்னு முடிவு செஞ்சிருந்தோம்.

திரங்கா பனீர் டிக்கான்னு ஒண்ணு ஆர்டர் செஞ்சோம். செம ருசி.


கோவா, புதினா சட்னி & குங்குமப்பூ சேர்த்து 3 கலர்ல பனீர் டிக்கா.

மெயின் கோர்ஸுக்கு பாலக் கோஃப்தா & லெஹான் கா மேலா எனும்
மிக்ஸ்ட் வெஜிடபிள் சப்ஜி.

இண்டியன் ப்ரட் வகைகளில் ஆஷிஷ் ஆர்டர் செய்திருந்தது chopped paratha.
பராத்தாவை பிச்சி நெய்யில் பொறிச்சு சும்மா மொறு மொறுன்னு இருந்துச்சு.
அம்ருதம்மா லச்சேதார் பராத்தா. நான் ஸ்டஃப்டு குல்சாவும் அயித்தான்
புதினா பராத்தாவும் ஆர்டர் செய்தோம். உணவு டேஸ்டோ டேஸ்ட்.
ஓரிஸில் சாப்பிட்டால் உணவின் தரம் எப்படி இருக்கும்னு சொல்லவே
வேண்டாம்.


டெசர்ட் எதுவும் வேணாம்னு முடிவு செஞ்சிட்டாரு ஆஷிஷ். நானும்
அம்ருதாவும் லஸ்ஸி குடிச்சோம். அவ்வளவுதான். பில் கொடுக்கும்
முன் பான் ட்ரிங்குன்னு ஒண்ணு குட்டி கிளாஸ்ல கொடுத்தாங்க. பாங்கா
இருக்குமோன்னு பயந்தேன். பானை கரைச்சு குடிச்சா எப்படி இருக்குமோ
அப்படி இருந்துச்சு. டேஸ்டும் நல்லாவே இருந்துச்சு.

எங்க 4 பேருக்கும் சேர்த்து வரியோட 1200 தான் பில். ஓரிஸில்
சாப்பிட்டால் வயிற்றுக்கும் பெஸ்ட், பர்ஸுக்கு பெஸ்ட்.

டைம்ஸ் ஃபுட் காண்டெஸ்டில் இந்த ஹோட்டலுக்கு விருது
கிடைச்சிருக்கு. இந்த ஹோட்டலின் வலைத்தள முகவரி




14 comments:

ILA (a) இளா said...

பன்னீர் அருமை...

இராஜராஜேஸ்வரி said...

கலக்கலா இருக்குல்ல?? அதுதான் ஆஷிஷின் கண்டுபிடிப்பு.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

ஆஷிஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... நல்லா இருக்கும்போல இருக்கே.. எங்களது அடுத்த ஹைதை விசிட் அப்ப அங்கதான் கூப்பிட்டுப் போவீங்களா? ஹை....

pudugaithendral said...

:) நன்றி இளா

pudugaithendral said...

சொல்லிடறேன் இராஜராஜேஸ்வரி

pudugaithendral said...

மெசஜ் சொல்லிடறேன் ராமலக்‌ஷ்மி நன்றி

pudugaithendral said...

அதுக்கென்ன சகோ,

நீங்க ஹைதை வாங்க விருந்தோ விருந்துதான்

:))

குறையொன்றுமில்லை. said...

ஆஷிஷுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

வாங்க லட்சுமிம்மா,

ஆஷிஷ்கிட்ட சொல்லிடறேன்.

உங்க ஆசிர்வாதத்திற்கு நன்றி

Appaji said...

சாப்பிட்டதெல்லாம் சரி....பில்லும் ok.....Restarauant ..something different...environment...அ இருக்கு...(ஹைதை வந்தது இல்லை..பார்போம்.)
<<<<<<>>>>>>>>> கவனிக்க: "ஆஷிஷ்"...அம்மா...உன்னை குண்டன்....அப்புறம்...ஒல்லிபிச்சான்...அப்படி மாத்தி மாத்தி..சொல்றாங்க..எது correct:(((((((((((((((

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

ஹைதை வந்தது இல்லை..பார்போம்.)
வாங்க ஹைதை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஆஷிஷ், அம்ருதாவுக்கு நாமகரணமாக வைத்த பெயர்களைத் தவிர நான் எப்படி எல்லாம் கூப்பிடுகிறேன் என்று அவர்கள் தனி சோகக்கதை பாடக்கூடும். :))

ஆஷிஷிடம் நான் அடிக்கடி சொல்லும் விஷயம் ஒன்று. ஆஷிஷ் நன்கு படித்து, பெரிய்ய்ய் ஆளாகி வேலையில் அமர்ந்த பின் அங்கே சென்று சின்னீஈஈஈ என்று கத்தி அழைக்க வேண்டும். :))) சின்னி என்பது நாங்கள் செல்லமாக வைத்த பெயர். நான் இப்படி சொல்லும் பொழுதெல்லாம் ஆஷிஷ் தலையில் கைவைத்துக்கொண்டு ஏம்மா இப்படி என்று கேட்கும் ஸ்டைலை பார்க்கணுமே. :))

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

ஆர்டர் செய்த ஐட்டம் எல்லாமே சூப்பர் போல...
ஆஷிஷின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள்.

pudugaithendral said...

நன்றி ஆதி :)