Friday, October 14, 2011

BUDDA HOGA TERA BAAP

அமிதாபின் அட்டகாசம் தாங்கவில்லை. வயதானாலும் இன்னும் அழகாக
இருக்கேன்னு நீலாம்பரி ரஜினிகாந்துக்கு சொல்லும் வசனம் அமிதாப்புக்கு
பக்காவா சூட்டாகுது. இப்பொழுதும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள்,
கோன் பனேகாவில் கலக்குவதுன்னு ஐ ஆல்வேஸ் லைக் ஹிம்.

BUDDA HOGA TERA BAAPA படம் வெளியான போது பாக்கவேண்டுமென
நினைத்திருந்தேன். தியேட்டருக்கும் போகும் சூழல் இல்லை. செம பிசி.
மிஸ் செய்து விட்டேனே என்று நினைத்தேன்.

ஸ்டார் ப்ளஸ்ஸில் இந்தப் படம் போட்டார்கள். ரசித்தேன்.
தெலுங்கு டிரைக்டர் பூரி ஜெகன்னாத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது
இந்தப்படம். அதனாலேயே ஹிந்தியில் சான்ஸ் கிடைக்காமல்
தெலுங்கில் கவர்ச்சி பாமாக இருக்கும் பஞ்சாபி பொண்ணு சார்மி,
வில்லன் சுப்பிரமணியம் என தெரிந்த தெலுங்கு முகங்கள்.

அந்தக்கால ட்ரையின் டிக்கெட்டில் எழுதிவிடக்கூடிய சின்ன வரிக் கதைதான்.
ஆனால் படமாக்கியதை விட அமிதாப்பின் நடிப்பிற்காக பார்க்கலாம்.
அசால்ட்டாக அலட்டிக்கொள்ளாமல் சூப்பர் அமிதாப். ஐட்டம் சாங்க்
ஒன்று ஆடுவார் பாருங்கள். சான்சே இல்லை. மனதில் உறுதி வேண்டும்
படத்தில் ”கெட்ட வார்த்தையில் வெய்யலாமான்னு வருதுன்னு” ஒரு
டயலாக் வரும். அதுபோல செல்லமாக வெய்யலாம்மான்னு தோணுது
அமிதாப்பை. அப்படி பார்த்தா படத்தோட தலைப்பே ஒரு விதத்தில்
திட்டுவது போலத்தான். இப்படி யார்கிட்டயாவது சொன்னால் தெரியும்!!

அமிதாப்பின் பாடல்களையே ரீமிக்ஸ் மெட்லி ஆக்கி அமிதாப் ஆடும்
ஐட்டம் பாடல். யாராவது 69 வயது கிழவன் என்று சொல்ல முடியுமா!!அமிதாப்பின் நடிப்போடு இந்தப்படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம்.
சோனி சூத். பாவம் வில்லனாகவே பல படங்களில் அடிவாங்கிக்கொண்டும்
ஆக்ரோஷமாக கத்திக்கொண்டும் இருந்த இவரை போலீஸ் இன்ஸ்பெக்டராக்கி
இருக்கிறார்கள். கம்பீரமான உடையில் கம்பீரமாக தெரிகிறார்.
ரொமான்ஸும் நன்றாகவே இருக்கிறது. சீக்கிரமே ஹீரோவாக வாய்ப்புக்கள்
இருக்கு.

இந்தப் படத்தை ANGRY MAN ரோல்களில் நடித்த அமிதாப்பிற்கு காணிக்கையாக்கியிருக்கிறார்
இயக்குனர் பூரி. தப்பே இல்லை. அமிதாப் ரசிகர்களுக்கு ஃபுல் பைசா வசூல்.
டீவியில் பார்த்ததால் அமிதாப் பர்த்டே ட்ரீட் கொடுத்தாக நினைத்துக்கொண்டேன்.
அக்டோபர் 11 அமிதாப்பின் பிறந்தநாள்.

லேட்டஸ்டாக தனிஷ்க் விளம்பரங்களில் அமிதாப், ஜெயா ஜோடி
கலக்குவது ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. நெக்லஸ் வாங்கி வரும்
அமிதாப்.


மனைவிக்கு தீபாவளி பரிசுவாங்கி பல்பு வாங்கும் அம்தாப்.
லவ்லி...


இந்த வயதிலும் துள்ளும் இளைமையுடன் கலக்கும் அமிதாப்
என்றும் இதே போல வைத்திருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.


17 comments:

Appaji said...

அமிதாப் நடிப்பை ஷோலே வில் இருந்து பார்த்து வருகிறேன்...dialogue delivery....timing காக இருக்கும்..இருப்பினும்...கடந்த சில வருடங்களாக டிவி பார்க்க நேரம் இருப்பதில்லை.

கணேஷ் said...

அமிதாப்பச்சனின் பரம விசிறி நான். நீங்கள் கடைசிப் பாராவில் சொல்லியிருப்பதுதான் என் குரலும். நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இந்த வயதிலும் துள்ளும் இளைமையுடன் கலக்கும் அமிதாப்
என்றும் இதே போல வைத்திருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்பாஜி,

நானும் பொதுவா டீவி முன்னால உட்கார மாட்டேன். அமிதாப்பின் சில படங்கள் உட்கார வைத்துவிடும் :))

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கணேஷ்,

முதல் தடவை என் ப்ளாக்குக்கு வந்திருக்கீங்க போலிருக்கு. நீங்களும் அமிதாப்பின் விசிறி என்பதில் ரொம்ப சந்தோஷம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

அமிதாபின் screen presence, dialogue delivery எல்லாமே நன்றாக இருக்கும். நடிக்கத் தெரிந்த super star. கதைத் தேர்வு தான் முக்கியம். இன்னமும் தான் இளமையான கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என்ற பிடிவாதத்தை “குதா (க)வா”க்கு பிறகு (ABCL நஷ்டமடைந்து வேறு வழியின்றி என்றாலும்) விட்டதும் காரணம். கமல் அதை இன்னமும் செய்யவில்லை. ஒருவேளை, அமிதாப் போல 60 வயதுக்குப் பிறகு செய்வாரோ என்னவோ? பார்க்கலாம்

கோவை2தில்லி said...

அமிதாப்பின் குரலில் என்ன ஒரு வசீகரம்....தொடர்ந்து கலக்கட்டும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்,

கோலிவுட்டில் ரிட்டயர் ஆகவேண்டிய நடிகர்கள் லிஸ்ட்டே இருக்கு. சிவக்குமார் மெஜஸ்டிக்கா விலகின மாதிரி, ரோல்களை மாத்திய மாதிரி யாருமே செய்யலைன்னு நினைக்கிறேன்.

டோலிவுட்டும் அப்படித்தான் சிரஞ்சிவி, வெங்கி, நாகின்னு லிஸ்ட் இருக்கு. நாகி பையன் நடிக்க வந்தப்பிறகும் நாகிதான் ஹீரோ!!
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் கோவை2தில்லி,

வசீகரம் தான்.

வருகைக்கு நன்றி

Lakshmi said...

அமிதாப்பை யாருக்குத்தான் பிடிக்காது வயசுக்கேத்தரோல்களை செலக்ட் பண்ணி அழகாக நடிக்கிரார்,

வெங்கட் நாகராஜ் said...

அமிதாப் - என் நண்பர் சீனு சொன்னது போல அவர் வயதுக்கேற்ற பாத்திரங்கள் ஏற்று நடிப்பதால் இன்னும் நன்றாக இருக்கிறது.

குரல்.. என்னவோர் வளம் அவரது குரலில்....

தொடரட்டும் உங்கள் பல்சுவைப் பகிர்வுகள்!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லட்சுமிம்மா

புதுகைத் தென்றல் said...

தமிழ்மண நட்சத்திரமா கலக்கல் பதிவுகள் தொடர்ந்து போட்டு பிசியா இருக்கும் வேளையிலும் என் பதிவு பக்கம் வந்ததற்கு நன்றி சகோ

அமைதிச்சாரல் said...

பழைய அமிதாப்பை விட இப்பத்திய அமிதாப்தான் கலக்கறார்..

புதுகைத் தென்றல் said...

நேத்து யாரானா பார்த்தேன். கலக்கல்.

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

வல்லிசிம்ஹன் said...

பழைய அமிதாபை விட இப்பத்த அமிதாபை எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அவருக்காக பதிவு போட்ட உங்களையும் ரொம்பப் பிடிச்சிருக்கு.:)
ஹ்ம்ம்ம்ம் அந்தக் குரல்....