Friday, November 18, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 18/11/11

ரயில்வே நிர்வாகம் எதையும் கண்டுக்கறதே இல்லை. ஏனோ தானோ
மனப்பான்மையிலேயே வேலை செய்வாங்க போல. எப்பப்பாரு ஏதாவது
எடக்கு மடக்கா செய்வதுதான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல.
இப்ப திரும்ப ரயில்வே சிக்கலில் மாட்டியிருக்கு. ரயிலில் டாய்லட் இருப்பதே
பெருசு. (இருக்கும் ஆனா உபயோகிக்க பயப்படுற அளவுல இருக்கும்)
இதுல ரயில்வே துறை டாய்லட் பேப்பரை வேற வெச்சு சிக்கலில் மாட்டியிருக்கு.




டாய்லட் பேப்பரில் தேசிய சின்னத்தை எப்படி அச்சிட்டாங்க?
இப்ப ரயில்வேத்துறை இதற்கு என்ன சொல்லப்போகுதுன்னு தெரியலை.

சிரத்தையே இல்லாம எப்படித்தான் இருக்காங்களோ!!! :((


*******************************************************************************
இந்த அழகுப்போட்டிகளில் எப்படித்தான் தேர்ந்தெடுக்கறாங்களோ தெரியலை.
அறிவுப்பூர்வமான பதில் சொல்லி எப்படியோ பிரைஸ் வாங்கிடறாங்க.
ஆனா அடிப்படை விஷயம் கூட தெரிவதில்லை. கேவலமா இருக்கு.

சமீபத்தில் நடந்த குழந்தைகள் தின விழாவில் முதல்வர்
கிரண்குமார் ரெட்டி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலக அழகி 2011
வாசுகி சுன்காவல்லி (ஆந்திரா பொண்ணு) பங்கேற்றிற்கார்.



தேசிய கீதம் பாடி முடித்ததும் புள்ளைங்கல்லாம் அமைதியா இருக்க
இந்தம்மா கையைத் தட்டியிருக்காம்!!!! என்ன கொடுமை சரவணன்!!!
************************************************************************************

இப்பொழுது பாலியல் பலாத்காரம் என்பது ரொம்ப சர்வ சாதாரணமா ஆயிடிச்சு.
பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கே பயமா இருக்குன்னு சொல்ல
வெச்சிடுவாங்க போல இருக்கு. தினம் தினம் பேப்பரில் இது பத்திய ந்யூஸ்தான்.
ஆசிரியர், பிரின்ஸ்பால் இப்படி என்றால் பள்ளிக்கூடத்தில் பெருக்கும் ஒரு ஆள்
இரண்டாவது படிக்கும் பிள்ளையை.......... கடவுளே!!!

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி கஷ்டப்பட வேண்டுமோ!!
************************************************************************************
ஒரு வழியா ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்துவிட்டது.
அழகு தேவதைக்கு ஒரு குட்டி தேவதை. மீடியாக்கள் வாயை மூடிக்கிட்டு
இருந்தது தான் ஆச்சரியம் ( பத்து அம்ச கொள்கை மாதிரி
ஏன்னோ ஒண்ணு பத்திரிகை துறைக்கு போடப்பட்டிருந்ததாம். ஐஸ்வர்யா
ராய் டெலிவரி பத்தின ந்யூஸை அதிகம் போடக்கூடாது, ஹெட்லைன்ஸா
போடக்கூடாதுன்னு )ம்ம்ம்ம்
************************************************************************************மாயாவதி அக்கா upயை 4 ஆ வெட்டி கூறு போடப்போறாங்க.
தெலங்கானா பிரச்சனை என்னவோ சத்தம் இல்லாம இருக்கு.
ஆசாத் எல்லோரும் பேசி கலந்து முடிவெடுக்கணும்னு ஏதோ
சொல்லியிருக்கற நிலையில் மாயாவதி கொடுத்திருக்கும் திட்டம்
ஓகேவானா தெலங்கானா கொடுக்க வேண்டிய சூழல் வந்திடும்.
ஆண்டவா ஹைதையை காப்பாத்து!!!
***********************************************************************************

தங்கத்தமிழ் நாட்டில் பால் விலை, பஸ் டிக்கெட் விலை எல்லாம் ஏத்திப்புட்டாங்களாமே!!
கரண்ட் ரேட் கூட ஏத்தப்போறாங்களாம். இதுக்காக கவலைப்படாதீங்க. எங்களுக்கு
ஏற்கனவே எல்லாம் ஏத்தியாச்சு. பால் லிட்டர் 34 ரூவாய், பெட்ரோல்
ஜனவரில 65 ரூவா இருந்தது இப்ப 73, கரண்ட் ரேட் ஏத்தி இரண்டு மாசம்
ஆச்சு. லேட்டஸ்டா தண்ணிவரிப்பணத்தையும் அதிகரிச்சிட்டாங்க. சிலிண்டர்
410 ரூவா.

இதுக்கு முன்னாடி தமிழகத்தின் நிலை ஜுஜுபி. அதனால அழப்ப்டாது.
கண்ணைத் தொடச்சுக்கோங்க.
*******************************************************************************
மனச்சோர்வு அதிகமா இருக்கும் பொழுது உணவில் அரிசி கண்டிப்பா இருக்கணுமாம்.
தினமும் அரிசிதான் சாப்பிடறோம்னு சொல்வீங்க. நான் அதைப்பத்தி சொல்லலை.
இரவு உணவில் சிலர் டிபன், சப்பாத்தின்னு இருப்பாங்க. (மீ டூ :) )

எங்க டயட்டீஷன் சொல்லிக்கொடுத்தது என்னன்னா பசங்க பரிட்சை,
சில முக்கியமான வேலைகள்னு டென்ஷன் அதிகமா இருக்கக்கூடிய சமயங்களில்
இரவு 1 கப் சோறு சாப்பிடுவது மனச்சோர்வை கண்ட்ரோலில் வைக்கும் என்பது
தான். பசங்களுக்கு அந்த மாதிரி கொடுப்பதால அவங்களும் ஸ்ட்ரெஸில் இருந்து
எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு. நாம் உண்ணும் உணவே மருந்துதானே!

பாத்து பதமா இருந்துக்கோங்க. ஹேப்பி வீக் எண்ட்
*********************************************************************************

14 comments:

பால கணேஷ் said...

சுவையான அலசலுடன் போகிற போக்கில் டிப்ஸ்களும் அள்ளி வழங்கிய ஆவக்காய் பிரியாணி நல்ல டேஸ்ட்!

ஷர்புதீன் said...

அட கதம்பம்!

Appaji said...

<<>><<>>>><<<>>><<>>>.......................................................................எப்படி.....இப்படி எல்லாம் எழுத முடிகிறது...உங்களது எழுத்து நடை...அருமையாக...இருக்கிறது..!! உங்களுக்கு...."தானா வருது".....தொடர்க....அப்புறம்......." சுஜாதா.மற்றும் ..ராஜா நாராயணன்...அவர்களது புத்தகங்கள்...நிறைய வாசிப்பீர்களா?

ADHI VENKAT said...

ஹைதை ஆவக்காய பிரியாணி இந்த முறை காரசாரமா தான் இருக்கு.

இங்கயும் எல்லாமே விலை ஏறி தான் கிடக்குது.

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

ஆவக்காய் காரமாய் இருக்கும். ஹைதை ஷ்பெஷல் பிரியாணி ப்ளண்ட்டா இருக்கும். ரெண்டையும் சேத்து சாப்பிட்டா எப்படி இருக்குமோ அப்படி கதம்பமா செய்தி தொகுப்பு அதான் இப்படி :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஷர்புதீன்,

கதம்பமே தான். ஆளுக்கு ஒரு பேர்ல எழுதறாங்க. நான் ஆவக்காய் பிரியாணின்னு எழுதறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

நல்ல வாசிப்புத்தான் எழுத்தை வெளிக்கொணரது என்பது நிஜம். எல்லாம் படிப்பேன். ஆனா நீங்க சொல்லியிருப்பதில் சுஜாதாவாவது 2 படிச்சிருப்பேன் மத்தவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. :(

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Appaji said...

சிறு திருத்தம்......"கி. ராஜ நாராயணன் " என வாசிக்கவும். அவசரத்தில் தவறுதலாக டைப் செய்து விட்டேன்.

சாந்தி மாரியப்பன் said...

டேஸ்ட்டி பிரியாணி :-)

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

தில்லியில் விலைவாசி ஜாஸ்தின்னு தெரியுமே. தலைநகரம் அப்படித்தான் இருக்கும். :)) ஹைதையில் பொதுவா விலைவாசி கம்மிதான். ஆனா சில விஷயங்கள் ஜாஸ்தி. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

பிரியாணி ருசியா இருக்குன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ஹைதை பிரியாணி.... சொன்ன விஷயங்கள் .... ம்ம்ம்ம்.....

தில்லி விலைவாசி பத்தி ஏற்கனவே என்ற அம்மணி ஏற்கனவே சொல்லிட்டாங்க.... :)

CS. Mohan Kumar said...

உங்க ஊர் விலை வாசியை கேட்டா எங்க ஊர் விலை வாசி பரவாயில்லை தான் !

புதுகை.அப்துல்லா said...

:)