தீபாவளி எப்படி கொண்டாடினேன்னு பதிவு போடறேன்னு சொல்லிட்டு
பதிவு பக்கமே வரலியேன்னு திட்டிகிட்டு இருந்திருப்பீங்க. ரொம்ப
சாரி. தம்பி வந்து போன சமயம், தீபாவளிக்கு ஊருக்குப்போன
வேலைக்காரம்மா தீபாவளிக்கு மறுநாள்தான் வந்தாங்க. ஆல் இன்
ஆல் அழகுராணியா நாம் வேலைப்பாத்தா கை சும்மா இருக்குமா?
செம வலி. க்ரேப் பேண்டேஜ் கட்டி ரெஸ்ட் கொடுத்தே ஆக
வேண்டிய கட்டாயம்.
தீபாவளிக்கு பலகாரம் செஞ்சதை எல்லாம் படம் பிடிச்சு
போடணும்னு நினைச்சிருந்தேன். இருந்த வேலைப்பளுவில
முடியவே இல்லை. படம் இல்லாட்டி என்ன செஞ்சதை
சொல்றேன். கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர், ஆந்திரா தட்டை,
அம்மா அனுப்பியிருந்த ரவாலாடு பொடியை வைத்து
ரவா உருண்டை, தீபாவளி லேகியமும் அம்மா பொடியா
அனுப்பியிருந்தாங்க. சரியான பதத்துல சூப்பரா லேகியம்,
மைக்ரோ அவன்ல மொறுமொறுன்னு, அப்புறம் சாஃப்டா
இரண்டு வகை மைசூர்பாக் செஞ்சேன். அயித்த்தான்
செம பாராட்டு. கோதுமை மாவில் லட்டு செஞ்சேன்.
தீபாவளிக்கு முதல் நாள் உக்காரை, வெங்காய,உருளை,
வாழைக்காய் பஜ்ஜி. அம்புட்டுதான்.
இனி தொடர்ந்து பதிவு எழுதுவேன்னு நினைக்கிறேன்.
ஆண்டவனருள் வேணும். இந்த சமயத்துல ஒரு சந்தோஷமான
செய்தியை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுறேன்.
ஆஷிஷ் அண்ணா போன மாதம் 9ஆம் தேதி FIITJEE
நடத்திய NATIONAL SCIENCE TALENT SEARCH EXAMல
கலந்துகிட்டாரு. 5ஆம் தேதி ராத்திரிதான் குல்லுவிலிருந்து
அண்ணா வந்தாரு. இருந்த கொஞ்ச நேரத்துல பரிட்சைக்கு
ரெடியானாரு. இன்னைக்கு கொரியர் வந்திருக்கு. ஆஷிஷ்
அண்ணா தேசிய அளவில் 12092ஆவது ரேங்கில் பாஸ்
செய்திருக்காரு. FIITJEE ல் கோர்ஸ் சேர்ந்து படிக்கும்
வாய்ப்பு வந்திருக்கு. இறைவனுக்கு நன்றி.
ஆஷிஷ்ற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திக்கிறேன்.
14 comments:
ஆஷிஷ்-க்கு எங்களது வாழ்த்துகளையும் சொல்லிடுங்க சகோ....
எங்க ரொம்ப நாளா காணோமேன்னு நினைச்சேன்.....
நிறைய வகைகள் செய்து உள்ளீர்கள்...தீவாளிக்கு...ம்ம்..சந்தோசம்...(வேற என்ன ...சொல்ல முடியும்..அனுபுகன்ன சொல்ல முடியும்) ஆஷிஷ்...க்கு...வாழ்த்துக்கள்....வளர்க...வாழ்க வளமுடன்.
கைவலி தேவலையா.
அன்புக் குழந்தை ஆஷிஷுக்கு மேல் படிப்புக்கான இடம் கிடைத்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷம்.
நிறைய எழுதுங்கள்.
வாங்க சகோ,
கண்டிப்பா சொல்லிடறேன்.
எங்க ரொம்ப நாளா காணோமேன்னு நினைச்சேன்.....//
பதிவு வரலைன்னா பேட்டரி டவுன்னுதான் அர்த்தமா இருக்க முடியும் :)))
வருகைக்கு நன்றி
வாங்க அப்பாஜி,
கொரியர் அனுப்பிட்டா போச்சு :))
ஆஷிஷுக்கு வாழ்த்தை சொல்லிடறேன்.
வருகைக்கு நன்றி
வாங்க வல்லிம்மா,
இப்ப வலி பரவாயில்லை. ஃபிட்ஜீயில் சேரும் நுழைவுத்தேர்வு இன்னும் எழுதவில்லை. ஆனால் தேசிய அளவு தேர்வு எழுதவேண்டும். ஆனால் அதற்குள் இந்தத் தேர்வு எழுதி இடம் கிடைததிருக்கு.
கண்டிப்பா எழுதறேன்
வருகைக்கு நன்றிம்மா
ஆஷிஷ்க்கு இடம் கிடைச்சதுலயே உங்க பேட்டர் சார்ஜ் ஆகியிருக்கணுமே :-)))
மனமார்ந்த வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் ப்பா..:)
ஆஷிஷ்-க்கு வாழ்த்துக்கள்! :)
தீபாவளி பலகாரம் எல்லாம் சூப்பரா செய்திருக்கீங்க.போட்டோவும் போட்டிருந்தா கொஞ்சம் ஜொள்ளுவிட்டுப் பார்த்திருப்போம்,அது மிஸ் ஆகுது இப்ப! ;)
தேப்லா ரெசிப்பி உங்களோடதுங்கறத சமீபத்தில்தால் பார்த்தேன். ரெசிப்பிக்கு நன்றி!:)
வாங்க அமைதிச்சாரல்,
நீங்க சொல்வதும் சரிதான். :))
வருகைக்கு நன்றி
நன்றி கயல்
வாங்க மகி,
கவலையை விடுங்க இன்னொரு வாட்டி செஞ்சு போட்டோ எடுத்து போடறேன்.
வருகைக்கு நன்றி
ஆஷிஷ்க்கு வாழ்த்துகள்..
Post a Comment