”மணி 7.45 ஆயிடிச்சு!! இன்னும் அப்பா வர்லை. அவங்க ஃப்ரெண்ட்
வரும் நேரம் ஆகிடிச்சே! அப்பாவுக்கு போன் போடுங்க” என்றால் ரம்யா.
சொன்ன நேரம் வாசலில் காலிங் பெல் அடித்தது. அம்மா கிச்சனில்
பிசியாக இருக்க பிள்ளைகள் ஓடினர் கதவு திறக்க, நின்றது மனோஜ்.
ரம்யாவின் கணவன். “அப்பா வந்தாச்சும்மா!!” என்றனர் பிள்ளைகள்.
ரம்யா- மனோஜ் ஜோடிக்கு ஒரு மகனும் மகளும்.
அடுக்களையிலிருந்து ஒரு நொடி வெளியில் வந்தவள்
“காபியா? டீயா? என்ன குடிக்கறீங்க?” என கேட்க,
“தண்ணி போதும், ரகு வரும் நேரம் ஆயிடிச்சு. சமையல்
ரெடியா?!” என கேட்டான்.
எல்லாம் ரெடி!! என்று சொன்னவள் அடுக்களையில் ஒரு ரவுண்ட்
பார்த்து விட்டு வந்து அமர்ந்தாள்.
மனோஜ் ஒரு கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறான். வெகு நாள்
கழித்து சந்தித்த அவன் நண்பன் ரகுவையும் அவன் குடும்பத்தினரையும்
டின்னருக்கு அழைத்திருந்தான். அப்பாவின் பால்யகால நண்பனைப்
பார்க்க பிள்ளைகளும் ஆவலுடன் இருந்தனர்.
8.15 இருக்கும். ரகு குடும்பத்தினருடன் ஆஜர்.ரகு-உஷா தம்பதியருக்கும்
ஒரு மகன் மகள். மனோஜ் ரம்யா பிள்ளைகள் வயதுதான். பரஸ்பரம் அறிமுகத்துக்குப்
பின்னர் மனோஜ் புதிதாக வீடு வாங்கி குடி போயிருப்பதால் வீட்டைச்
சுற்றிக்காட்டினர்.
பளிச் பளிச்சுன்னு ஒரே சுத்தமாக இருந்தது வீடு. புழங்கவே மாட்டார்களோ!
என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருந்தது. அந்த வீட்டிலும் இரண்டு
குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த ரகு தன் மனைவியிடம்,
“நல்லா பாரு உஷா! எவ்வளவு சுத்தமா வெச்சிருக்காங்க வீட்டைன்னு!
நீயும் கத்துக்க!!”.என்றவன் ரம்யாவிடம் திரும்பி,”
உங்க டெக்னிக்கை கொஞ்சம் உஷாவுக்கு சொல்லிக்கொடுங்க!” என்றான்.
இதையே குறைந்தது 4 தடவையாவது சொல்லியிருப்பான் ரகு.
மனோஜும் ரம்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட வேளையில்,
முகம் சுருங்கிப்போன உஷாவையும் பார்க்கத் தவரவில்லை.
”டேபிள் செட் செய்யறேங்க!” என்று அங்கிருந்து நகர்ந்த ரம்யா
பிள்ளைகளை அழைத்து உதவி செய்யச் சொன்னாள். ரம்யா சமையல்
கலையிலும் கில்லாடி. நார்த் இண்டியன், சொளத் இண்டியன் எல்லாம்
அருமையாக செய்வாள். அன்று ரகுவின் குழந்தைகளும் விரும்பும்
வகையில் சைனீஸ் நூடில்ஸும், பாஸ்தாவும் கூட செய்து வைத்திருந்தாள்.
எல்லாம் பேசி மகிழ்ந்து ஆனந்தமாக உண்டார்கள்.
நண்பர்கள் சேர்ந்தால் பேசி மகிழ்வது பற்றி சொல்லவா வேண்டும்.
டின்னர் முடிந்தது. மனோஜும் ரகுவும் பால்கனியில் போய் உட்கார்ந்தார்கள்.
ப்ளேட்டுக்களை எடுத்துப்போட்டு மிஞ்சிய சாப்பாட்டை டப்பாவில்
எடுத்துப்போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்த ரம்யாவுடன் அவளின்
குழந்தைகளும் உதவிக்கொண்டிருந்தனர்.
“நான் ஏதும் ஹெல்ப் செய்யவா? ”என வந்தாள் உஷா. வேணாம்!
நீங்க வாங்க, நாம டெசர்ட் சாப்பிடலாம். பசங்க பாத்துப்பாங்க என்ற
ரம்யா, “ கண்ணுங்களா, டேபிள் மேட் எடுத்து கழுவி விட்டு
நல்லா துடைச்சிட்டு, கை கழுவி விட்டு வாங்க டெசர்ட் சாப்பிடலாம்!”
என்றாள். ட்ரேயில் அழகான கண்ணாடி கிண்ணத்தில் சுடச்சுட
குலாப்ஜாமுன் பார்க்கவே அழகாக இருந்தது.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரகு,” என்னடா இது சின்னப்பசங்களை
வேலை வாங்கறாங்க உன் மனைவி?” என்று சொல்ல.
அவங்க ரொம்ப சின்ன பசங்க இல்லப்பா, மகனுக்கு 12 வயசு, மகளுக்கும்
10 வயசு ஆகுது!” என்று சொல்லிக்கொண்டு இருக்க ரம்யா குலாப் ஜாமுனை
நீட்டினாள். அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
அதற்குள் குழந்தைகளும் வர, டெசர்ட் கிண்ணத்துடன் பிள்ளைகள் நால்வரும்
டீவி முன் போய் அமர்ந்தனர்.
உஷாவின் முகம் வாட்டத்துடனே இருந்தது ரம்யாவிற்கு என்னவோ செய்தது.
ஏதாவது செய்யுங்களேன்! என்ற அவளது பார்வைக்கு சிரிப்பை பதிலாக
தந்த மனோஜ் மெல்ல ஆரம்பித்தான்.
“ரம்யாவும் படிச்சிருக்கா, நல்ல வேலையில் அமரும் சாத்தியம் இருந்தும்,
பிள்ளைகள் வளர்ப்புக்காக ஹோம் மேக்கரா மட்டும் இருக்க சம்மதம்
தெரிவிச்சா. ஹோம் மேக்கர்னா வீட்டுல அவங்களுக்கு வேலை இல்லாம
இருக்குமா! அதனால எங்க வீட்டுல எழுதப்படாத சட்டம் ஒண்ணு இருக்கு!
அதாவது அவங்க ரூமை அவங்க அவங்க சுத்தம் செஞ்சிடணும். இது பசங்களுக்கும்
பொருந்தும். சமையற்கட்டையும்,ஹாலையும் மனைவி பாத்துப்பாங்க.
இப்படி நாங்க வேலையைப் பிரிச்சு பாத்துக்கறதால எங்க வீட்டை சுத்தமா
வெச்சிருக்க முடியுது. எல்லா வேலைகளையும் நாங்க 4 பேரும் பிரிச்சு
செய்வதால ரம்யாவுக்கும் அதிக சுமை இருக்காது, பசங்களுக்கும்
கத்துக்க முடியும்,” என்றான்.
பிள்ளைகளிடம் உதவி கேட்டாலே “ பிள்ளைகளை வேலை
சொல்லாம இருக்க முடியாதா உன்னால,
நீயே செய் என்று” கத்துவான் ரகு.
உஷா இப்பொழுது கணவனைப்பார்த்த பார்வையில்,” கத்துக்க வேண்டியது,
நீங்களும் தான்!” என்றது போல இருந்தது.
14 comments:
நல்ல கதை சகோ... கதையில் கத்துக்க வேண்டியது யாருன்னு சரியா சொல்லிட்டீங்க ... :)
வாங்க சகோ,
:))
வருகைக்கு மிக்க நன்றி
எக்ஸலண்ட். வீட்டு வேலை எல்லாத்தையும் மனைவிதான் பாத்துக்கணும்னு நினைக்கிற கணவர்கள் நிறைய. (நிஜமா நான் அப்படி இல்லங்க தென்றல்) அழகா ஒரு கதை மூலம் எடுத்துச் சொல்லிருக்கீங்க. குழந்தை வளர்ப்புக்கும் இதிலேயே டிப்ஸ் கொடுத்தது இன்னும் அருமை.
உண்மை உண்மை.
கலக்கல்...
வாங்க கணேஷ்,
(நிஜமா நான் அப்படி இல்லங்க தென்றல்)//
ரொம்ப சந்தோஷம்.
அழகா ஒரு கதை மூலம் எடுத்துச் சொல்லிருக்கீங்க. குழந்தை வளர்ப்புக்கும் இதிலேயே டிப்ஸ் கொடுத்தது இன்னும் அருமை.//
பாராட்டுக்கு மிக்க நன்றி. நல்லதொரு குடும்பம் தானே பல்கலைக்கழகமாக முடியும்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க துளசி டீச்சர்,
மிக்க நன்றி. :))
வாங்க தராசு அண்ணேன்,
நலமா?
கலக்கல்...//
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
simple and super kadhai.. :)
மிக்க நன்றிBRAGI
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக ...
நல்லா சொல்லியிருக்கீங்க அக்ஸ்
நல்லா இருக்குங்க கதை! கத்துக்கவேண்டியது பிள்ளைங்க இல்ல, பலவீடுகள்ல பெற்றவர்கள்தான்!:)
நன்றி ஜமால் :)
ஆமாம் மகி,
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment